குழந்தைகள் உழைப்பதை தடை செய்யும் சட்டங்கள் இருப்பினும் , உத்திரப் பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் பெரோஸபாத் பகுதியிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. மிர்ஸாபூர் மாவட்டத்தில் மட்டும் கம்பளம் பின்னும் தொழில் ஒரு லட்சம் குழந்தை உழைப்பாளிகள் உள்ளனராம்.
முதல் மூன்று வருடங்களுக்கு சம்பளமில்லாமல் வேலை செய்யும் இவர்கள் அடுத்த வருடங்களில் 15 மணி நேர உழைப்புக்கு பெறும் கூலி 3 முதல் 5 ரூபாய்கள் வரை மட்டுமே.
பெரோஸாபாத் பகுதியில் கண்ணாடித் தொழிச்சாலைகளில் வேலை பார்க்கும் 50000 குழந்தைகள் , 700 டிகிரியிலிருந்து 1,800 டிகிரி சென்ரிகிரேட் வரை வெப்பமுள்ள சூளைகளின் அருகே அமர்ந்து தினமும் 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். இதற்கு இவர்கள் பெறும் கூலி 8 முதல் 11 ரூபாய்களாகும். இவர்கள் எங்குமே தப்பிபோக முடியாத அளவிற்கு மாஃபியாக்களின் கண்காணிப்பும் உள்ளதாம். ஆண்டு தோறும் நவம் - 14 ஐ குழந்தைகள் தினமாக கொண்டாடும் ஆட்சியாளர்களின் மண்டையில் இவ் உண்மைகள் ஏறுமா?
நன்றி : புதிய ஜனநாகம்