தோழர்கள் வில் ஹெல்ட் , லிர்னெட்டும் , ரோசா லக்சம்பர்க் ஜெர்மன் பொதுவுடமைக் கட்சியைக் கட்டியதில் பெரும் பங்காற்றியவர்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டு தியாகியானவர்கள். லீப்னெக்ட் , மிகப் பிரபல்யமான பொதுவுடமை நூலான “ சிலந்தியும் ஈயும்” என்பதினை எழுதியவர்.

கடந்த ஜனவரி 15 ம் திகதி இவ்விரு தியாகத் தோழர்களின் 75 வது நினைவு தினம் வந்தது. என்றுமே கண்டிராத அளவு அந்நாளன்று 50,000 க்கும் அதிகமான ஜெர்மனிய மக்கள் தலைநகர் பெர்லினில் மக்கள் செங்கொடிகளோடு ஊர்வலமாக சென்று அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர். பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து அவர்களது சமாதிகளில் மலர் வளையம் வைத்து சிவப்பஞ்சலி செலுத்தியுள்ளனர். மேற்கு ஜேர்மனி கிழக்கை விழுங்கிய பின் இனி “ கம்யூனிச தலைவர்களை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள்” என்ற ஏகாதிபத்தியவாதிகளின் நப்பாசைகளுக்கு ஆப்பறைந்துள்ளது.


இந்நிகழ்ச்சி , நன்றி – புதிய ஜனநாயகம்