சந்திரிகா அரசானது ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தீர்வு வைப்பதிலும் , தேடுவதிலும் அரசுக்கு அப்பால் பலர் போட்டி போடுகின்றனர். அந்த வகையினரில் 37 பேர் கையெழுத்திட்ட ஒரு ‘ சமஷ்டி அரசியல் அமைப்பு’ தீர்வுத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை ‘ சரிநிகர்’ 75 வது இதழில் பிரசுரித்திருந்தனர்.

இந்த வரைவை பல்கலைக்கழக ஆசிரியர்கள் , சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள் என இலங்கையிலுள்ள பூர்சுவா வாக்க புத்திஜீவிகள் கூட்டமும், தம்மைத் தாமே ‘ மார்க்ஸ்சிஸ்ட் ‘ என நினைத்துக் கொண்டிருக்கும் சிலரும் கூடி , வரைந்து பிரகடனம் செய்துள்ளார்கள்.

 

இச் சமஷ்டி வரைவு என்பது பெருந்தேசிய இனவெறிக் கனவுகளுடன் , அதன் உள் உடலுடன், இச் சமூக அமைப்பை தாரளமாக பேணிப் பாதுகாக்கும் வகையில் முன்வைக்கும் முன் மொழிவாகும். இதன் மூலம் பேரிவாத சிறிலங்கா அரசை ஆட் ட அசைவின்றி எதிர்காலத்தில் பாதுகாக்கும் வகையில் இவ் முன்மொழிவானது இவர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக உள்ளது.

 

இச் சமஷ்டி அரசு என்று கூறியபடி இலங்கையை ஆறு பிரிவாக பிரிக்கின்றனர் இவர்கள். இலங்கையில் சுயநிர்ணயத்தை ஒரு தேசிய இனம் பெற்றுக் கொள்வதற்காகவே யுத்தம் நடைபெறுகின்றது. இதை வெறும் அதிகாரப் பரவலாக்கமென கொச்சபை;படுத்துவதும், பல பத்து ஆயிரமாய் மக்கள் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்டதும் இந்த பூச்சாண்டி காட்டும் வெறும் சமஷ்டி அலகுப் பிரிவுகளுக்காக அல்ல. மாறாக ஒரு தேசிய இனம் தனது இறைமையை சுயநிர்ணயத்தைப் பெற்றுக் கொள்வதில் தான் பூரணமடைகின்றது. அதற்கும் அதிகார பரவலாக்க அமைப்புகள் இருப்பது அவசியமானதே. அது ஒரு விடயம். ஆனால் வெறும் அதிகாரப் பரவலாக்கம் என்ற வகையில் சமஷ்டியை பிரகடனம் செய்வதும், அதை சிங்கப் பிரதேசத்திலும் பிரிப்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தைக் கொச்சைப்படுத்துவதும் , கேலி செய்வதுமாகும்.

 

இந்த பேரினவாத புத்திஜீவிகள் குடியேற்றம் , குடியகழ்வு போன்றவைகளை இந்த சமஷ்டி அரசிடம் ஒப்படைக்கத் தயாராக இல்லை. இது போன்று அம்பாறையை வடக்குக் கிழக்கில் இருந்து வெளியேற்றி விடுகின்றனர். இவற்றை ருNPஇ ளுடுயுP கூட வைக்கத் தயாராக உள்ளன. பேரினவாதிகள் இதைச் சாதகமாகக் கொண்ட பேரினவாத புத்தி ஜீவிகள் வடக்குக் கிழக்கிலிருந்து அம்பாறையை வேறுபடுத்துகின்றனர். போகிற போக்கில் நாளை திருமலையைக் கூட இந்நிலைக்கு ஆளாக்கி வருகின்றனர் இந்தப் பேரினவாதிகள்.

 

வரலாறு அதன் மீதான ஒடுக்கு முறையையும் நிராகரித்து , இன்று ஒரு மாதிரி ஒரு தீர்வை திணித்து தமிழ்த் தேசிய இனத்தின் அடிச்சுவடியை முற்றாக ஒழித்துக்கட்டும் வகையில் வரையப்பட்டதே இந்த சமஷ்டி வரைவாகும். தமிழ்த் தேசய இனம் 85 களில் திம்புப் பேச்சு வார்த்தைகளில் முன்மொழிந்த


• வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பகுதி அங்கீகரிக்கப்படல் வேண்டும்.


• தமிழ் மக்கள் தனியான தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்படல் வேண்டும்.


• தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.


• நாடற்றவர்களாக உள்ள அனைத்து தமிழர்களுக்கும் குடியியல் உரிமை வழங்கப்படல் வேண்டும்.

 

இவ்வடிப்படைப் பிரச்சனை முதன் முதலில் அங்கிகரிக்கப்படல் வேண்டும். இதுவே எந்தப் பேச்சு வார்த்தை நிகழ்ந்தாலும் அதன் மிக முக்கியமான அடிப்படை அம்சமாக இருக்க வேண்டும். இத்துடன்


• மலையக மக்கள் ஒரு தனித்துவம் மி;க்க ஒரு தேசிய இனம் என அங்கிகரித்தல்.

 
• முஸ்லிம் மக்கள் ஒரு தனித்தவம் மி;க்க ஒரு தேசிய இனம் என அங்கிகரித்தல்.

 

இதுவே பேச்சு வார்த்தை நடாத்தும் இரு பிரிவினருக்கும் அடிப்படையானதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுமாகும். இதை நிராகரித்த அனைத்தும் பேரினவாதத்தை தக்கவைக்கும் வகையில் முன்மொழியும் ஒரு கபட நாடகமேயாகும்.