
பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு வெவ்வேறுவிதமான வீடியோ ஃபார்மேட்டுகளின்(Format) ஃபைல்கள் தேவைப்படுகின்றன.தற்போது பல வீடியோ மாற்றிகள்(Video Converter) புழக்கத்தில் இருந்தாலும் FomatFactory(விண்டோஸ் மட்டும்) என்னும் இந்த இலவச வீடியோ மாற்றி மென்பொருள் நான் உபயோகித்து பார்த்தவரையில் சிறப்பானதாக தெரிகிறது.கிட்டத்தட்ட தற்போது கணினி உலகில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து விதமான வீடியோ பைல்களையும் கையாள்கிறது.
மேலும் வீடியோக்களை ஒன்று சேர்த்தல்,வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுப்பது என பல்வேறு வேலைகளை செய்கிறது.வீடியோ மட்டுமன்றி,ஆடியோ,புகைப்படம் மற்றும் டிவிடி ஃபார்மேட்டுகளையும் சிறப்பாக மாற்றுகிறது.டிவிடி இலிருந்து ஒரு படத்தை ஒரு வீடியோ ஃபைலாக மாற்றிவிட இயலும்.ஆனால் ஒரு வீடியோ ஃபைலை டிவிடி ஃபார்மேட்டிற்கு மாற்ற மற்றொரு சிறப்பானதொரு மென்பொருளை தற்போது உபயோகித்து வருகிறேன்.இந்த வாரத்தில் இன்னொரு பதிவாக அதை பார்க்கலாம்.
இந்த இலவச மென்பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட உரலை சொடுக்கவும்.
http://www.formatoz.com/download.html
DVD/VCD இலிருந்து ஆடியோவை பிரிப்பதற்கு Free DVD mp3 Ripper என்ற இலவச மென்பொருளை உபயோகித்து பாருங்கள்.தரவிறக்க இங்கே செல்லுங்கள்.
http://dvd-mp3.org/index.html