நாங்கள் வாழ்க்கையை நேசிக்கின்றோம்

 

எனவே தான் மகிழ்ச்சியும் நிறைவும் சுதந்திரமும் கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும்போது குறுக்கிடும் தடைகளை தகற்தெறிவதில்  எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்நேரமும் தயங்குவதில்லை.

 

 

 

 

 

 

நாங்கள் மனிதனை நேசிக்கின்றோம்
எனவேதான் மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமையிலிருந்து,அதாவது பயங்கர போரின் துன்பதுயரங்கள்,வேலையில்லா திண்டாட்டம், சாதியம் ஆகிய கொடுமைகளிலிருந்து விடுவிக்கபட்டு மகிழ்ச்சியும்,நிறைவும்,ஆரோக்கியமும் சுதந்திர மனிதனுக்கு,இந்த பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்க்காக எங்கள் சுகபோகங்கள் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை.

நாங்கள் சுதந்திரத்தை விரும்புகின்றோம்
ஒரு சிலருக்கு மட்டும் சுதந்திரம் – கொள்ளையடிக்க ஒரு தாராருக்கு மட்டும் சுதந்திரம்;மற்றவர்களுக்கு பட்டினியால் மடிய சுதந்திரம். இவை சுதந்திரம் அல்ல,அடிமைத்தனம்! எனவேதான் உண்மையான சுதந்திரத்திற்காக, விரிவான சுதந்திரத்திற்காக எல்லாருடைய சுதந்திரத்திற்காக போராடுவதில், தங்கள் முழுவலிமையை பயன்படுத்தவோ எங்கள் உயிரையும் தியாகம் செய்யவோ ஒருபோதும் தயங்குவதில்லை.

நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம்
ஒருவாய்ச் சோற்றுக்காக,மனிதனை எதிர்த்து மனிதன் சண்டை போட வேண்டிய நிலைமை எங்கே இருக்கிறதோ, அங்கே சமாதானம் இல்லை. இருக்கவும் முடியாது. எனவேதான் உண்மையான சமாதானத்திற்க்காக, மனித சமூகத்தின் புதிய நிறுவனத்தால் உத்தரவாதம் செய்யப்படும் சமாதானத்திற்க்காக போராடுவதில் தங்கள் முழுவலிமையை பயன்படுத்தவோ,எங்கள் உயிரையும் தியாகம் செய்யவோ ஒருபோதும் தயங்குவதில்லை.

நாங்கள் ஆக்கவேலைகளை நேசிக்கின்றோம்
பல்லாயிரக்கணக்கான திறமையுடைய மனிதர்கள், மனித கலாச்சாரத்தை பலமடங்கு பெருக்கியிருக்க முடியும்; மனித சமூகத்தை சீர்த்திருத்தியிருக்க முடியும்; மனிதனின் தொழில் நுட்ப சாதனைகளை,கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்த்தியிருக்க முடியும்.அத்தகைய திறமைகள் பாழ்பட்டு கிடக்கின்றன. மனிதகுலத்திற்கு தேவையுள்ள அனைத்தையும் ஏராளமாக அளிக்கும் திறமையும் வலிமையும் படைத்த ஆயிரமாயிரம் கரங்கள், இன்று வேலையின்றி சோம்பிக் கிடக்கின்றன. எனவேதான் மனிதகுல படைப்பாற்றல் மிக்க சக்திகள் அனைத்தையும்,ஒவ்வொரு மனிதனின் படைப்பாற்றல் முழுமையையும் பயன்படுத்தி, முழுவளர்ச்சி அடையும்படி செய்யும் ஒரு அமைப்பைப் பெறுவதற்கான போராட்ட்த்தில், தங்கள் முழுவலிமையை பயன்படுத்தவோ எங்கள் உயிரையும் தியாகம் செய்யவோ ஒருபோதும் தயங்குவதில்லை.

நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கின்றோம்bhagat-singh
எங்கள் நாட்டை இழிவுபடுத்துகிற, கொள்லையிட விரும்புகிற, அதன் இரத்தத்தை உறிஞ்சுகிற, அதை பலவீனப்படுத்துகிற அனைத்தையும் நாங்கள் அழித்துவிட விரும்புகிறோம்.எனவேதான், உலகில் சுதந்திரம் பெற்ற சமத்துவ நாடுகளின் மத்தியில், சம அந்தஸ்தோடு சுயேச்சையாக வாழும் பொருட்டு, எங்கள் நாட்டின் பரிபூரண் விடுதலைக்கான் போராட்டத்தில் எங்கள் முழு வலிமையை ஈடுபடுத்தவோ, எங்கள் உயிரையும் தியாகம் செய்யவோ ஒருபோதும் தயங்குவதில்லை.

நாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் மகத்தானது..