புலிகளை மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்பட வேண்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எம்மிடம் இல்லை. இது எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பதில் பாரிய மாறுபாடுடைய சிந்தனைகள் இருக்கின்றன.

 
*புரட்சிகர சிந்தனை 
 
*எதிர்ப்புரட்சிகர சிந்தனை
 
புரட்சிகர சிந்தனை என்கின்ற போது மக்களின் அனைத்;துவிதமான ஒடுக்குமுறைவடிவங்களையும் எதுவித சமரசம் இன்றி எதிர்த்துப் போராடுவதாகும். இந்தப் பொருளாதார அமைப்பின் மேல் உருவாகியிருக்கின்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் நிகழ்கால பொருளாதார அமைப்பை கட்டிக் காத்து வருகின்றது. இந்தச் சமூகக் கட்டுமானத்தை பாதுகாக்கும் சிந்தனைகள், செயற்பாடுகள் எல்லாம் இந்தப் பொருளாதார அமைப்பிற்கு ஏற்றவாறே மறுவுற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்;ட சிந்தனைகளின் இருந்து தோன்றியதுதான் ஆயுதக்குழுக்களாகும். இவைகள் விடுதலைக்காக போராடுவாதாக கூறிக் கொள்கின்ற போதிலும் உள்ளிருந்தே குழிபறிக்கும் வேலைகளையும் இந்த அமைப்புக்களை தலைமைதாங்குபவர்களின் வர்க்கப் பலவீனங்களை பயன்படுத்தி சர்வதேச உளவு, உள்@ர் ஆட்சியாளர்களுக்கு விலைபோவதும் கூட ஆச்சரியப்படுபவைகள் அல்ல.
 
புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் புலிகள் எந்தவர்க்கத்தை பிரநிதிதித்துவப்படுத்துகின்றார்கள்;. புலிகளின் வர்க்க குணாம்சம் எவ்விதமான சமூக நீதியை முன்வைக்கின்றது என்பதில் இருந்து ஆய்வை ஆரம்பிக்கின்றார்கள். புலிகள் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்திருந்தார்கள். மக்களை வெறும் கைதட்டுத் பார்வையாளர்களாக வைத்திருந்திருந்ததுடன் அவர்களை உண்ணமட்டுமே அவர்களை அனுமதித்திருந்தனர். இவைகளை மக்கள் விரோதம் என்கின்றோம். உழைக்கும் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியலை இவர்கள் கைக்கொள்ளவில்லை. இவர்கள் தமது பொருளாதாரமானது திறந்த சந்தையை அடிப்படையாக இருக்கும் என்று பிரகடனப்படுத்தினர். இதனை உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றோம்.
 
இவ்வாறு இவர்களின் மக்கள் விரோத அரசியலை அடிக்கிக் கொண்டே போகலாம். இவர்களை எவ்வாறு மக்கள் மத்தியில் இருந்து அகற்றுவது? சரீரரீதியாக அழிவா அல்லது கருத்துரீதியாக மக்கள் புலிகளை தூக்கியெறிவதா? இவைகளில் இருந்தான் சிந்தனை மாற்றம் கொள்கின்றது.
 
எதிர்ப்புரட்சிர சிந்தனையாளர்கள் என்ன செய்கின்றார்கள் எனில் புலிகளை உடல்- சரீரரீதியாக அழிப்பதில் குறியாக இருந்தார்கள் - இருக்கின்றார்கள்.
 
புலியெதிர்ப்பாளர்களின் http://www.vimarsanam.net/ கருத்தைப் பார்ப்போம் ‘‘அன்று போராட்டதிற்கு புது வடிவம் கொடுத்த எமது தோழர்களையும் தலைவரையும் புலிகள் வாகனத்தோடு வைத்தும்இ டயர் போட்டும்இ உயிரோடும் கொளுத்தி நூற்றுக் கணக்கில் கொடூரமாகப் படுகொலை செய்தார்கள். அதை நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை...!
 
-மற்ற இயக்கங்களைப் படுகொலை செய்தார்கள்-நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை..!!
 
எமக்கு ஆதரவாக வந்த இந்திய அரசை எக்காரணமும் இன்றிப் பகைத்தார்கள்-நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை...!!!
 
பின்னர் மக்களையே அடிமகைளாக்கினார்கள்- பணயம் வைத்தர்கள்இ சுட்டுக் கொலை செய்தர்கள்இ கப்பம் வசூலித்தார்கள்இ கட்டாயமாக சிறுவர்களையும்இ இளைஞர்களையும் தம்மோடு இணைத்தார்கள்இ பலிக்கடாக்கள் ஆக்கினார்கள்- நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவே இல்லை...!!!!
 
மேலாகஇ புலிகள் இயக்கத்தில்நியாத்தை தட்டிக் கேட்ட தமது உறுப்பினர்களை காலத்துக்குக் காலம் நூற்றுக் கணக்கில் படுகொலை செய்தார்கள். துரோகிகள் என்றார்கள். மக்கள் தட்டிக் கேட்கவே இல்லை...!!!!!
 
மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல் தலைவர்களயும் கொலை செய்தார்கள். மக்கள் தட்டிக் கேட்கவும் இல்லை. புலிகள் காரணம் கூறவும் இல்லை.
 
இன்று வன்னி மக்களை கேடயமாக்கினார்கள். எவரும் கேட்கவில்லை. அதை விடக்கொடுமை புலம் பெயர் மக்கள் இதை ஆதாரித்ததுதான்.
ஆனால் தமது மக்களையே தற்கொலை குண்டுதாரியால் கொலை செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
 
மக்களே இனிமேலும்மெளனிகளாக இருக்காதீர்கள்.
 
உங்களையும் உறவுகளையும் கொலை செய்யும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?
 
எம்மக்களின் தலைவிதியை இந்த நயவஞ்சகர்களிடம் ஓப்படைக்கதீர்கள்.
 
தம்மைத் தாமே தமிழ் மக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொண்டுஇ தமக்கு தாமே தேசியத் தலைவர் போன்ற பட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் ஒரு மன நோயாளிகள்.’’
 
இவர்கள் மக்கள் தட்டிக் கேட்கவில்லை எனக் கூறுகின்றனர். சரி மக்கள் தட்டிக் கேட்கவில்லை என்றால் எவ்வாறு ஒரு இனத்திற்கான உணர்வு மேல் ஒங்கி இருக்கும். இனத்துவ சிந்தனை யாரால் ஏற்படுத்தப்பட்டது? சரியோ பிழையயோ மக்கள் தெருவிற்கு வந்தார்கள். மற்றைய இயக்கங்கள் தடைசெய்யப்பட்ட காலத்தில் அதற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கவில்லையா? 1986களில் பல சம்பவங்கள் நடைபெற்றது. புலிகளின் அராஜகத்திற்கு எதிராக ஊர்வலங்களில் மக்கள் கலந்து கொள்ளவில்லையா? விஜிதரனை விடுதலைசெய்யக்கோரிய போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளவில்லையா? மக்கள் போராடத்தயாராகத் தான் இருந்தார்கள்- மக்கள் போராடினார்கள்.
 
இன்று இனத்திற்கான (முதலாளித்துவ) ஜனநாயக உரிமைகளை மறுதலித்த நிலையில் அவர்களை அடிமைகளாக நடத்தும் இனவெறி அரசிற்கு பின்னால் நிற்கும் எந்த அரசியல்? ஜனநாயக உரிமை இழந்து வாழும் மக்களை விட எந்த மக்களின் பெயரைச் சொல்லி அரச ஆதரவுக் குழுக்கள் இயங்குகின்றன?
 
பல்வேறு சிந்தனைவட்டம் கொண்ட அமைப்புக்கள் இயங்கிய காலத்தில் புரட்சிகர சக்திகள் இயங்கி வந்திருக்கின்றன. இந்தக் காலத்தில் பெரும்பான்மையான அமைப்புக்கள் இந்திய பிராந்திய வல்லரசின் ஆதரவுடன் இயக்கிக் கொண்டிருந்தன. இந்த இயக்கங்கள் ஒவ்வொன்றும் சுய அடையாளத்தின் படி ஒடுக்கும் மக்கள் அரசியலை முன்வைப்பதாக கூறிக் கொண்டதுடன் பிரகடனப்படுத்தியிருந்தனர். ஆனால் இவர்கள் எல்லோரும் சுயமாக முடிவெடுக்கக் கூடிய வகையில் இருக்கவில்லை. பிராந்திய அரசின் நலனை பாதுகாப்பதில் முனைப்புடன் இருந்தனர். (இன்றுவரை தமிழர்களின் நலன் என்பது இந்தியாவின் நலன் என பிரகடனப்படுத்துகின்றனர்) இந்த இயக்கங்களை மக்களிடையே இருக்கின்ற முரண்பாடுகளை அணுகி ஆராய்ந்து செயற்படும் திறனையும் அவர்களை சமூக முரண்பாடுகளுடன் காரியமாற்றக் கூடிய வகையில் மக்களை அணிதிரட்டவும் முனையவில்லை. இந்திய ஆதிக்கவாதிகளின் உதவியுடன் செயற்கையான வகையில் தம்மை வளர்த்துக் கொண்டனர்.
 
இங்கு அன்னிய நலனை பாதுகாப்பது கடமையாகின்றது. மக்களின் தேவைகள் அவர்களிடையே இருக்கின்ற முரண்பாடுகளை இனம் கண்டு அதன் பாலான மக்கள் திரள் அமைப்புக்கள் கட்டப்படவில்லை. மக்கள் திரள் அமைப்பிற்கு பதில் ஆயுத மோகம் முன்வைக்கப்படுகின்றது. எமக்கு இந்தியா உதவும் என்ற சிந்தனை வளர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் யார் உண்மையாக ஒடுக்குபவனின் (உலக நிதிநிறுவனங்களின் நலனை, பிராந்திய மூலதனத்தை) தமக்கு சேவை செய்யக் கூடியவர்களை ஒடுக்குபவர்கள் இனம் காண்கின்றனார். இதனடிப்படையில் புலிகளை உலக எதிரிகள் தத்தெடுத்தனர்.
 
ஒடுக்குபவர்களே புலிகளின் நட்பு சக்தியாகியது. புலிகளை வளர்த்து விட்டது. இன்றைய உலக நிலையில் புலியைப் போல ஆயுதப்படை அவசியம் இல்லை என்பதால் புலிகளின் தலைமையை உலக வல்லரசுகளின் உதவியுடன் சீன-இந்திய மூலதனம் இனவழிப்பின் ஊடாக புலிகளின் தலைமையை கொண்றொழித்தது.
 
இங்கு புலிகளை எந்த அரசியல் இயக்கிய என்பதே. இதில் புலிகள் என்ன ஏன் அன்று ஆட்சியேறிய இ.பி.ஆர்.எல்.எவ்- இ.என்.டி.எல்.எவ் புலிகளைப் போல வளர்ச்சியடைந்திருக்கலாம். இ.பி.ஆர்.எல்.எவ்- இ.என்.டி.எல்.எவ் தமது எஜமான் இந்தியாவினால் வேட்டையாடப்பட்டிருக்கலாம்.
 
முன்னர் கூறியபோல புலிகளின் வர்க்கம் என்ன என்பதில் இருந்தே ஈழப்போராட்டம் கடந்து வந்த பாதையைப் பார்க்க வேண்டும்.
  
இனவொடுக்குமுறை இறுக இறுக மக்களின் உணர்வும் அதன் ஒடுக்குமுறைமீதான கோபமும் அரசிற்கு எதிராக மாறுகின்றது. ஏனெனில் தனது இரத்தத் உறவை வேட்டையாடுவது மாற்றினத்தவன்.
 
இங்கு இரண்டுவிதமான போக்குகளை பார்க்க வேண்டும் இனவொடுக்குமுறையின் மூலமாக புலிகளின் நலனைக் கொண்ட எழுத்துவகை
 
புலிகளின் ஜனநாயக மீளல்களை ஒடுக்குமுறையாளனுடன் சேர்ந்திருந்து கொண்டு எழுதும் எழுத்துவகை
 
இவை இரண்டுமே மக்களின் நலனில் இருந்தோ புரட்சிகர வடிவம் கொண்டே அமையவில்லை.
 
இதேபோல தமிழர்களில் இரண்டுபகுதியினர் ஒடுக்குபவனையும் அவர்களை எதிர்க்கும் புலிகளையும் ஆதரிக்கும் நிலை உருவாகியது. ஒடுக்குபவனை ஆதரிப்பவர்கள் மக்கள் ஐக்கியம் பற்றி இவ்வாறு வேண்டுகோள் விடுகின்றனர். கடந்த கால அழிவு யுத்தத்தின்போது இழந்துள்ள அனைத்து வளங்களையும் மீளப் பெறுவதற்கு அனைத்து மக்களும் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அதற்கான காலம் கனிந்துள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரள்வதன் ஊடாக எமது இலக்கை கூடிய விரைவில் அடைய முடியுமென’’ மேதகு மந்திரி கௌரவ டக்கிளஸ் தேவானந்தா http://www.epdpnews.com/news.php?id=3974&ln=tamilontent&view=article&id=5876:2009-06-14-12-50-25&catid=277:2009
கூறினார். எதிர்பார்த்திருப்பவர்கள் எல்லாம் மக்கள் ஐக்கியம் பற்றிய பேச்சுக்கள், மக்களின் மீதான கரிசைகள் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒழித்துக் கொண்டே இருக்கும். மறுபுறத்தே திறந்தவெளிச் சிறையில் வாடும் மக்களின் உரிமைகள் பற்றி இவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. மக்களை பழிவாங்குபவர்கள் வாக்கு மாத்திரம் இவர்களுக்கு தேவை புலிகள் கொண்ற மக்கள் தொகை எவ்வளவு கரிசனைக்கு உரியதோ அதே இனவெறி அரசு கொண்ற மக்கள் தொகையும் முக்கியம் ஆனால் இந்த எதிர்ப்புரட்சிக்குழுக்களுக்கு இவைகள் அனைத்தும் பொழுதுபோக்கான அம்சமாக இருக்கின்றது.
  
ஒரு போராட்;டத்தில் உருவாகிய எதிர்ப்புரட்சிக்குழுகளில் ஓரு வகை மக்களை நம்பவைத்தே எதிரிகளிடம் சோரம் போனது.
 
மற்றையக்குழுவோ சக இனத்தின் வர்க்கப் பகைவனால் தோற்கடிக்கப்பட்டு அனைத்;து மக்களின் பொது எதிரியுடன் சங்கமமாகினர்.

புலிகள் மக்களுக்கான ஒரு தலைமையாக தன்மை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் எல்லோரும் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. இருந்த போதிலும் புலிகளுக்கு பெரும் ஆதரவுத் தளம் இருந்து கொண்டுதான் வந்தது இதனை மறுக்க முடியாது.
 
போராட்ட காலத்திலேயே எதிரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த போதிலும் இனத்தின் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு மக்கள் முகம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் தளத்தில் வாழ்ந்த மக்களோ தமது பொது எதிரியினை முகம் கொள்ளும் விடுதலைப்புலிகளை ஆதரித்தனர். அரச ஒடுக்குமுறை என்பது பரந்துபட்ட தளங்களில் விரிந்திருந்தது. இதனை மக்கள் தமது வாழ்க்கையின் ஊடாக உணர்ந்து கொண்;டனர். அரச ஒடுக்குமுறையை மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அதேவேளை புலிகள் ஒடுக்குமுறை என்பதைக் கூட மக்கள் முணுமுணுப்புடன் மௌன யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் இங்கு ஏற்றுக் கொள்ளவேண்டும்.
 
புலம்பெயர்தமிழர்கள் தாம்; பட்ட துன்பத்திற்கு மருந்து போடும் நிலை
 
தாய் நாட்டில் நடைபெறும் இனவழிப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வேறு காரணம் இன்றி புலிகளுக்கு ஆதரவளித்தவர்கள் பல சமூக பின்புலத்தவர்கள் ஆவர்.
 
இடதுசாரியம் பேசியவர்கள்
  
முன்னைய இயக்கத்தில் இருந்தவர்கள்
  
புலம்பெயர் பொதுமக்கள் முன்னர் புலியை எதிர்த்தவர்கள் ஆயினும் பின்னரான காலத்தில் வேறுவழியின்றி அரசை எதிர்த்துப் போராடுகின்றார்கள் என்ற காரணத்திற்காக ஆதரவைக் கொடுத்தார்கள்.
 
இந்தப் பிரிவினர்களின் நிலை என்பது விவாதிக்கின்ற பொழுது இனவெறி அரசிற்கு எதிரான மாற்று அரசியல் பாதையை கொடுக்கத் தவறியதன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தத் தவறினால் ஏற்பட்ட விழைவை ஏற்றுக் கொள்வதன் மூலமே இந்தப் பகுதியினரை மாத்திரம் அல்ல புலிகளின் ஆதிக்கத்தின் இருந்த மக்களை புரிந்து கொள்ள முடியும்.
 
புலிகள் மற்றைய குழுக்களை அழித்து தமது ஆதரிக்கத்தை அன்னிய சக்திகளின் உதவியுடன் உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒடுக்கப்பட்ட ஆயுதக்குழுக்கள் மக்களை நம்பியதான போராட்டப்பாதையை தெரிவு செய்யவில்லை. தடைசெய்யப்பட்ட பின்னரான காலத்தில் இந்திய இராணுவத்தின் தலையீடு இருந்தது. இந்திய இராணுவத்தின் தலையீட்டை ஆதரித்த குழுக்களும், எதிர்த்த குழுக்களும் வௌ;வேறு தரப்பினரை ஆதரித்தே தமது அரசியலை ஆரம்பித்தனர். ஆனால் மக்களை நம்பிக்கை கொண்டு எவரும் மாறுபட்ட அரசியலை கொடுக்கவில்லை.
 
மக்களுக்கான அரசியல் பாதை என்பது ஒடுக்குமுறையாளர்களுடன் கூடிக் குழாவிக் கொள்வதே எனபுலியை எதிர்க்கின்ற சக்திகள் வியாக்கியானம் செய்கின்றனர். புலியை எதிர்க்கின்ற சக்திகள் எவையும் புலிகள் இல்லாத தளத்தில் அரசிற்கு எதிராக காரியமாற்றவில்லை.
  
இன்று தேர்தல் பாதையில் அடியெடுத்துவைத்திருக்கும் சக்திகள் இந்த சமூக அமைப்பை புரட்சிகர போராட்டவடிவம் ஊடாக அனைத்து இன மக்களையும் அணிதிரட்டி போராடி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. ஆனால் தேர்தல் என்பதே இந்தச் சமூகத்தில் உருவாகியிருக்கும் அதிகாரவர்க்கத்தின் திண்ணை. அங்கு வெறும் அரட்டை மட்டும் தான் அடிக்க முடியும்;. மக்களின் உரிமைகளைப் பற்றி இவர்கள் பேசப்பேவதில்லை. இவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்பதே இவர்களை இன்னும் சுகபோகம் கொண்ட ஜந்துக்கள் ஆக்கிவிடுகின்றது. இவர்களே சட்டவாக்கம் மூலம் தீர்வு கிடைக்கும் என எம்மை நம்ப வைக்கும் கூலி பிரதிநிதிகளே. இவ்வாறான பிரதிநிதிகளை வைத்தே மக்களை இன்னும் முட்டாள்கள் ஆக்கின்றனர்.
 
இவ்வாறான தேர்தலில் போட்டியிடும் எதிர்ப்புரட்சிக்குழுக்கள் முன்னர் மக்கள் எதிர்த்துப் போராடவில்லை எனக் கூறிக் கொண்டவர்கள். இன்று தேர்தல் என்றதும் அல்லல்பட்ட மக்களிடம் சென்று வாக்குவேட்டைக்கு செல்கின்றார்கள். புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி வெற்றி கொள்ள முனையவில்லை. மக்களை புரட்சிகர சிந்தனையை கொண்டு வளர்க்க முடியவில்லை. ஆனால் இவர்கள் புலிகள் எவ்வாறு மற்றைய இயக்கத்தவர்களை கொலைசெய்தார்களோ. அதேபோல புலிகளும் கொல்லப்படவேண்டும் என செயற்படுகின்றனர்.
 
புலிகளின் சில எண்ணிக்கையான அதிகார வர்க்கத்தவர்களைக் கொண்ட அதனை இயக்கமுடிந்தது. ஆனால் அதில் விடுதலைக்காக புறப்பட்ட பல ஆயிரம் போராளிகளும் எமது உறவுகள், எமது பிள்ளைகள், உழைப்பாளிகளின் பிள்ளைகள். இவர்களின் தாய்தந்தையோர் வறுமைக்கோட்டுக்குள் வாழ்பவர்கள். இன்று அனைத்தையும் இழந்து வாழும் மக்களும் இவர்களே. புலிகள் மற்றைய இயக்கங்களை சரீர ரீதியாக அழிக்க எடுத்துக் கொண்ட முயற்சி எவ்வகையிலும் வெற்றிபெறவில்லை. புலிகளின் நடவடிக்கை துரோக அரசியலை இன்னும் பலப்படுத்தியிருந்தது ஒரு பக்கம் இருக்க.
 
புலியெதிர்ப்பாளர்கள் சரீர ரீதியாக அழிக்க முயற்சி எடுக்கின்றதன்று காரணம் தமது தலைவர்கள் புலிகள் அழித்ததுதான். அதற்கு பழிதீர்ப்பதாயின் புலியெதிர்ப்பாளர்களின் இனவாத அரசுடன் கூடிக் குழாவும் இவ்வாறான எதிர்ப்புரட்சிகர சக்திகளை பழிவாங்கும் அரசியலை வளர்க்கப் போகின்றார்களா?
 
புலிகளை அழிப்பதன் ஊடாக மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க முடியாது. இளம் தேசபக்தர்கள், தேசவிடுதலைஆதரவாளர்கள் இவர்களை பாதுகாப்பதும். இவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய அரசியல் நடவடிக்கைகளை கற்றல் கற்பித்தல் முன்னேற வேண்டும். கடந்த காலப் படிப்பினைகளே எமது ஆசானாகின்றது.
 
1986களில் தடைசெய்யப்பட்ட பின்னர் பழிவாங்கும் அரசியலைத்தான் மேற்கொண்டு வந்தனர். புலிகள் இவ்வளவு தூரம் வளர்ந்தற்கு அன்னிய உதவிகள் என்பது ஒரு புறமிருக்க புலிகளின் பின்னாலான காலத்தில் கூட பேரம் பேசவல்ல ஒரு அமைப்பினை உருவாக்கிக் கொள்ளத் தக்கவகையில் உருவாக வில்லை. ஏனெனில் மக்கள் மீது நம்பிக்கை வைக்காது எதிரியுடன் சங்கமமாகி புலியை அழித்த பின்னர் தாம் பேசியோ? அல்லது போராடியோ பெற்றுக் கொள்ளலாம் என கனவுகண்டுகொண்டனர். புலியெதிர்ப்பாளர்களின் மக்கள் நலன் என்பது புரட்சிகர சிந்தனை கொண்டவர்களின் மக்கள் நலன் என்பது http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5876:2009-06-14-12-50-25&catid=277:2009
மாறுபட்டதாகும். அங்கு எதிரிகளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அங்கு மக்கள் நலன் என்பதை அனைத்து தளத்திலும் கொண்டு செல்லவேண்டும்.
 
நாம் கடந்து வந்த பாதையில் பல அனுபவங்களை பெற்றடைந்துள்ளோம். போராட்டம் என்று புறப்பட்ட இயக்கங்கள் எல்லாம் மக்களின் நலனைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்ட போதிலும் எதிர்ப்புரடசிகர குழுங்களாக எதிரிகளிடம் மக்களின் நலனை விற்று எதிர்ப்புரட்சிகர அரசியலை நடத்தி முடித்திருக்கிpன்றன – தொடர்கின்றன. நாம் மக்களின் விடுதலை பெற்றுத் தருவார்கள் என நம்பியிருந்த அமைப்புக்கள் ஒரு இனத்தின் சிறுபகுதியினரின் நலனைப் பாதுகாக்கும் அமைப்பாக உருவெடுத்து சிதைந்தது. இந்தச் சிதைவில் இருந்து மறுபடியும் புரனமைப்புச் செய்து ஒடுக்குபவனிடம் மக்களின் நலனை அடைவு வைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். இன்று மக்களுக்கு தேவையானது அரசுடன் கூடிக் குழாவுவதே அல்லது சர்வதேசத்திடம் இரங்கி வேண்டுவதோ அல்ல. ஜனநாயக விழுமியங்களை சமரசம் அற்ற வகையில் போராடக் கூடிய அமைப்பு வடிவமாகும். இதற்கு புலி- புலியெதிர்ப்பு என்ற பிற்போக்கு முகாம்களை தகர்ப்பதன் ஊடாகவே செயற்படுத்த முடியும். இரண்டு பேய்களிடம் இருந்து மக்களை விடுவிப்பது முதன்படியாகும்.
 
By Nathan