06222021செ
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

பிரபாகரனின் மூன்றாவது மகனை படுகொலை படத்தை முதலில் வெளியிட்ட சிங்கள இணையம் இலங்கையில் தடை

இலங்கை அரசினால் லங்கா நியூஸ் வெப் தடைசெய்யப்பட்டுள்ளது

 இலங்கை அரசின் ஊடகங்கள் மீதான ஒடுக்குதலின் இன்னொரு கட்டமாக புகலிடத்ததை தளமாக கொண்டு இயங்கிய LANKA NEWS WEB. COM இனையத்தளம் இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக Lanka news web தளத்தின் செய்தி ஆசிரியர் எம்மிடம் பின்வருமாறு கூறினார்.


இலங்கை நேரப்படி 11ம் திகதி இரவு 7மணிக்கு தாங்கள் பிரபாகரனின் முண்றாவது பிள்ளை பாலச்சந்திரனின் கொலை தொடர்பான புகைப்பட ஆதாரத்தை பதிவிட்டதாகவும். அதேநாள் இரவு 8மணி அளவில் தமது இனையத்தளம் இலங்கையில் உள்ளவர்கள் பார்க்க முடியாதவாறு முடக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசினால் ஊடகவியளாளர்கள் மீது தொடுக்கப்படும் வண்முறையின் தொடர்ச்சியினால் பல ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேரியுள்ள இவ்வேளையில்  Lanka news web புகலிடத்தை தளமாக கொண்டு செய்தி ஊடகமாக மூண்று மொழிகளிலும் இயங்குகின்றது. 

May மாதம் இத்தளத்தை நிறுத்தும் நோக்குடன் இலங்கை அரசினால் இத்தளத்தின் கோப்புகளை பாதுகாக்கும் (HOSTING) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிற்பாடு இத்தளம் நிறுத்தப்பட்டது. இருந்த போதும் முண்று நாட்களுக்குள். புதிய HOSTING மூலமாக இத்தளம் இயங்க ஆரம்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்தளத்ததை இலங்கையில் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தற்காலிக முகவரியின் மூலம் பார்க்க முடியும்.

http://www.bbcproxy.info

இலங்கை அரசின் இன்நடவடிக்கையை நாம் வண்மையாக கண்டிக்கும் அதேவேளை இதை எதிர்த்து ஊடகங்களின் குறல் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பதையும் வழியுறுத்துகிறோம்.

- புகலி -

http://puhali.com/index/view?aid=260&catid=0 

 

  Lanka News Web இணையத்தை இலங்கையில் பார்வையிட, ராஜபக்ச அரசாங்கம் தடையேற்படுத்தியுள்ளது

 

தமிழர்களின் உரிமைக்கான நியாயத்தையும், சிங்கள அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதாரங்களுடன் விமர்சித்தும் மும்மொழிகளில் இயங்கிவரும் Lanka News Web , இணையத்தை இலங்கையில் பார்வையிட ராஜபக்ச அரசாங்கம் தடை ஏற்படுத்தியுள்ளது.

 

மக்களுக்கு தகவல்களை அறிந்துகொள்வதற்குள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையில் இலங்கையில் அரசாங்கத்தினால் நேற்றிரவு இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டது.

நேற்றிரவு(11) 7 மணிக்கு எமது இணையத்தில் பிரசுரமான செய்தியே இந்தத் தடைக்கான காரணமென இலங்கை வாசகர்கள் ஏராளமானோரின் கருத்தாகவுள்ளது. 'வவுனியா முகாமிலுள்ள மக்கள், மஹிந்தவின் மூத்த புதல்வருக்கு கல்வீச்சு மற்றும் சேறடிப்பு" என்ற தலைப்பில் வெளியான செய்தியே அதுவாகும்.

எமது இணையத்தை இலங்கையில் தடைசெய்வதற்கான உண்மையான காரணம் அதுவாகவிருக்குமாயினும், உண்மையான காரணத்தை, இதனைவிட ஆழமாக சிந்திப்பதன் மூலமே அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இலங்கையில் ஊடகங்கள், தமக்குத் தேவையான விதத்தில் செயற்படுவதையே ராஜபக்ச அரசாங்கம் விரும்புகின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமில்லாத சில ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்கேற்ற விதத்தில் தயார்படுத்திக் கொண்டுள்ளது.

இதனடிப்படையில், சில ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதை முழுமையாக தவிர்த்து, அரச ஊடகங்களை விடவும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு துதிபாடி வருகின்றன. சில ஊடகங்கள், அரசாங்கத்தை விமர்சிப்பதை மாத்திரம் தவிர்த்து வருகிறன. அதேபோலே சில ஊடக நிறுவனங்கள் நடாத்திவந்த இணையத்தளங்கள் முழுமையாக நிறுத்திக்கொள்ளப்பட்டுமுள்ளன.

இவ்வாறான நிலையில், இலங்கையிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளிலிருப்பவர்களினால் நடத்தப்படும் இந்த இணையத்தளத்திற்கும் அரசாங்கத்தினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் முயற்சி, வேறொரு ஊடகத்தின் ஊடாகவே கொடுக்கப்பட்டது. இதன்படி, இரண்டு நாட்களுக்கு மாத்திரம் எமது இணையத்தை தடைசெய்ய முடிந்தது.

அந்த முயற்சி வெற்றியளிக்காததை அடுத்து, ராஜபக்ச அரசாங்கம் எமது இணையத்தை முற்றிலும் செயலிழக்கச் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுப்பதாக கடந்த காலங்களில் எமக்கு அறியக்கிடைத்தது. எனினும், இலங்கைக்கு வெளியே இருந்து இந்த இணையத்தளம் இயக்கப்பட்டு வருவதால், இலங்கை அரசாங்கத்தின் அந்த முயற்சிகள் எமது இணையத்தை பெரிதாக பாதிக்கவில்லை.

இந்த நிலையில், ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி முயற்சியாக 11ம் திகதி இரவு முதல் எமது இணையத்தை இலங்கையில் பார்வையிட முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தொழில்நுட்ப ரீதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இணையத்தள ஊடகத் தடையாக, தமிழ்நெட் இணையத்தளம் இலங்கையில் முதற்தடவையாக தடைசெய்யப்பட்டது.

இதேவேளை, எமது இணையத்தை இலங்கையில் பார்வையிட தடைசெய்ததன் மூலம் மக்கள் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை ராஜபக்ச அரசாங்கம் மீறிவருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பார்வையிடுவதற்கு தொழில்நுட்பரீதியாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை மீறி, எமது வாசகர்களுக்கு http://www.bbcproxy.info என்ற இணையத்தின் ஊடாக எமது இணையத்தைப் பார்வையிடலாம் என்பதை அறியத்தருகிறோம்.

இதனைத்தவிர, பொக்சி இணையத்தளங்கள் ஏராளமாக தற்போது இயங்கிவரும் நிலையில், அதனூடாகவும் உள்நுழைய முடியும் என்பதை அறியத்தருகிறோம்.

எமது இணையத்திற்குத் தடை ஏற்படுத்துவதன் மூலம் தகவல் பரிமாற்றத்தையும், தகவல் அறியும் உரிமையையும் தடுக்க முடியும் என அரசாங்கம் நினைக்குமாயின் அது பகற்கனவாகவே இருக்கும்.

 

 

http://www.lankanewsweb.com/Tamil/news/TM_2009_07_12_005.html

 

Rajapakse government bans Lanka News Web in Sri Lanka
  The Sri Lankan government has banned Lanka News Web in Sri Lanka from yesterday (11) night in complete violation of the people’s right to information.
 

Lanka News Web viewers in Sri Lanka feel that the closest reason for the banning could be a story carried on the website at about 7 p.m. on the 11th. The story in question was carried under the title “A shower of stones for Namal from the IDPs in Menik Farm.”

Although this story could be considered as the closet reason for the banning of the news website, the real reason has to be look at more deeply.

The government has taken steps to silence media institutions and journalists who are not under government control to be engaged in news reporting in a manner that suits the Rajapakse government. As a result, some private media institutions have gone a step beyond and are now acting in favour of the government even more than the state media institutions. Some other media institutions have stopped being critical of the government. A few websites have even stopped operating.

Our website that was being operated outside the country due to these conditions in the country has now become a victim to the state media suppression. The first indication of the suppression being unleashed against website was first revealed by another media organization.

Our website was closed down for two days by the authorities after they got officials of the Lankadeepa newspaper to lodge a complaint against us.

Due to the government’s failure to close down the website even after that, we kept receiving information of various actions taken by the government in the past few days to shut down the website.

However, since our website was being operated from outside the country, the threat brought upon us was minimal.

The government finally decided to ban our website in Sri Lanka from the 11th. 

The first website to be banded in Sri Lanka was Tamil Net.

This incident proves yet again the Rajapakse government’s violation of the people right to information. 
Although our website has been banned in Sri Lanka, viewers could access the site by going through http://www.proxybrowsing.com/.

It is now time the government came out of the misconception that banning the website would prevent the news from flowing to the people.

 

http://www.lankanewsweb.com/news/EN_2009_07_13_003.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்