மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் "சிறையில் விசாரணை கைதிகள்" பற்றி ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

"விருத்தாச்சலம் தாலூகா சட்டப்பணிகள் குழுத் தலைவரின் உத்தரவுப்படி, அங்குள்ள கிளைச் சிறையில் விசாரணை செய்தேன். விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தினேன். அப்பொது, அந்தக் கிளை சிறையில் உள்ள அனைத்துக் கைதிகளுக்காகவும், சில விசாரணை கைதிகள் சமையல் செய்வது தெரிய வந்தது. விருத்தாச்சலம் கிளைச் சிறையில் சமையல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. அவர்களே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். இது குறித்து விசாரித்த பொழுது, தமிழகத்தின் அனைத்து கிளைச் சிறைகளிலும் இதே நிலைமை தான் உள்ளது என தெரிய வந்தது. இது குறித்து அறிக்கை தயாரித்து சட்டப்பணிகள் குழுவின் தலைவரிடம் அளித்தேன். என் மனு உள்துறைத் செயலருக்கும் அனுப்பப்பட்டது"

சிறை கூடுதல் டி.ஜி.பி.யிடம் இருந்து இதற்கு பதில் வந்துள்ளது.

"கிளைச் சிறையில் 116 சமையல்காரர்கள் நியமிக்க அதற்கான கோப்பு உள்துறைச் செயலரிடம் நிலுவையில் உள்ளது. அவர் உத்தரவு பிறப்பித்த உடன் சமையல்காரர் நியமிக்கப்படுவர்"

மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"கிளைச் சிறைகளில் தற்காலிக சமையல்காரர்களைக் கூட நியமிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சிறைக்கைதிகளின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. எனவே சிறை நடவடிக்கைகளில் விசாரணைக் கைதிகளை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். என் மனுவை பைசல் செய்ய உடனே செயலருக்கு உத்தரவிட வேண்டும். "

இதை விசாரித்த நீதிபதி பாஷா இதற்கான பதிலை "எட்டு வாரங்களில் அரசு பரிசீலித்து உத்தரவிட வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்குறிப்பு : சிறை திருந்துவதற்கான இடம் என ஏட்டுளவில் இருக்கிறது. ஆனால், கஞ்சா போன்ற போதை வஸ்துகள், மற்றும் செல்போன் என காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கக்கூடிய இடங்களாக சிறைகளாக இருக்கின்றன. இது குறித்து சமீபத்தில் சட்டமன்றத்தில் விவாதத்துக்கும் வந்தது. ஆனால், மக்கள் நலம் நாடும் அரசு என்றால், சரியாக நடக்கும். இது தான் அராஜக அரசு ஆயிற்றே! சிறையில் தான் எல்லா அராஜகங்களூம், அட்டூழியங்களும் நடக்கின்றன. தோழர் ராஜூ விசாரணை கைதிகளை தொல்லைப்படுத்தும் வேலைகளிலிருந்து விடுபட வைக்க முயல்கிறார். பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று?

நன்றி : மாலைமலர் (10/07/2009), தினமலர் (11/07/2009)