இப்போது நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில், தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு முடிவு கட்டப் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லி கொண்டிறுக்கிறது. ஆனால், இதுவரை வந்த புகார்களுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று இப்போது பார்ப்போம்.
பல லட்சங்கள் வாங்கும் தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எங்கே?
17/06/2009 அன்று ஜுனியர் விகடன் இதழ் ‘முடிவுக்கு வராத கல்விக் கொள்ளை!’ என்ற தலைப்பில் “ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில்” நடக்கும் கல்வி கொள்ளையை ரகசிய கேமரா முலம் அம்பலப்படுத்தி இருந்தது. அதற்கான தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
இதேபோல் தான் எல்லா தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் “கல்வி கட்டண கொள்ளை” நடைபெற்று வருகிறது என்பது ஊரே தெரிந்த சேதி. இப்படி இருந்தபோதும் தமிழக அரசு இதை பற்றி வாயே திறக்காதது ஏன்? நடவடிக்கை எங்கே?
நக்கீரன் இதழ், 24/06/2009 அன்று தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கட்டண கொள்ளை நிலவரத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி இருந்தது.
இந்த கல்வி கட்டண கொள்ளையை பற்றி தமிழக அரசு வாயே திறக்கவில்லை. ஏதோ 1, 2 கல்லூரிகளில் நடக்கும் கண்காணிப்பு குழு சோதனை என்பது கண் துடைப்பு நாடகமே. அதை தவிர வேறுறொன்றும் இல்லவே இல்லை. இப்போது கல்வி கட்டண கொள்ளை என்பது பல லட்சங்களில் நடைபெறுகிறது, ஏன் அது கோடியையும் கூட தொடுகிறது.
நடக்கும் சட்டசபை தொடரில், தமிழக அரசுசின் பேச்சும், கொடுக்கும் கொடுக்கும் வாக்குறுதியும் வெறும் கானல் நீரே. தமிழக அரசின் ‘தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு’ எதிரான நடவடிக்கை என்பது கபட நாடகமே.
இனியும் அரசு கல்வி கொடுக்கும் என்று நம்பலாமா?
கல்வி வியாபாரமாவதை இனியும் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது எதிர்த்துப் போராட போகிறோமா?
அரசுக் கல்வியை அதிகப்படுத்த வீதியில் இறங்கி போராடாமல் வேறு வழி உண்டோ?
http://rsyf.wordpress.com/2009/06/25/தமிழக-அரசின்-தனியார்-கல்/