05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மகிந்தாவுக்கு குடைபிடிக்கும், திரோஸ்கிய அழகலிங்கத்தின் ஓட்டுண்ணித்தனம் - நன்றி - தேசம் வாசகர்கள்

கட்டுரையாளர் இங்கு கூற வருவது என்னவெனில் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இதனால் நாட்டில் ஜனநாயகம் மலரும். இது சோசலிசப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்பதுதான்.

 


 அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப்போராட்டம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளிவர்க்கம் அதன் பக்கத்து மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்து விட்டு அரசு அதிகாரத்தை முதலில் கைப்பற்ற வேண்டும். ” இந்த அடிப்படையில் இலங்கையில் தேர்தல்களை பகிஸ்கரித்த தோழர் சண்முகதாசன் அவர்களின் கூற்றையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக்கட்சியும் அல்லது எந்தக் கூட்டனிகளும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல்நாயாக செயற்படும். அடக்குமுறையான பூர்சுவா வர்க்க இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையும் தீர்க்கமுடியாது.”

 

தமிழ்க்கட்சிகள் அரசாங்கக்கட்சியுடன் சேரவேண்டும் என்ற கருணாவின் விருப்பத்தை கட்டுரையாளர் கொண்டிருப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அதை கருணாபோல் வெளிப்படையாக சொல்வதை விடுத்து தயவு செய்து மார்க்சிய சொற்களைப் பயன்படுத்தி மக்களையும் மார்க்சியத்தையும் ஏமாற்ற முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

 

kannan on June 10, 2009 7:39 am

-----

//ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.//

 

ஈபிடிபி எப்போது தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியல் என்ற பின்புலத்தில் வாக்குப் பெற்று வென்றது? தீவுப் பகுதிக் கள்ள வாக்குகள் இல்லாது அவர்கள் வென்றிருக்க முடியாது. ஆனாலும், டக்ளஸ் செய்த சில சேவைகளுக்காக (வேலை வாய்ப்பு போன்றன) சில விசுவாசமான் உண்மை வாக்குகளும் அவருக்கு விழுந்திருந்தன.

 

இனவாத குறுகிய வாத கட்சிகளைக் கலைக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளைக் கலைக்க சொல்லும் கோத்தபாய சிங்கள உறுமயவையோ அவ்வாறான மற்றவர்களையோ குற்றம் காணமாட்டார்.

 

சொல்ல வரும் விடயங்களைச் சாதாரண தமிழில் சொல்லுங்கள். பூர்ஷுவாவும் மண்ணாங்கட்டியும்

rohan on June 10, 2009 8:26 am

-----

 

தமிழ்க்கட்சிகள் சிங்கள தேசியக்கட்சிகளுடன் குறிப்பாக அரசாங்க கட்சியுடன் சேரவேண்டும் என்று சொல்வதால் கருணாவுக்கு மந்திரிப்பதவி கிடைத்தது. அதே கருத்தை வலியுறுத்தும் இந்த கட்டுரையாளருக்கு தனிப்பட்ட முறையில் என்ன நலன் கிடைத்தது என்று தெரியவில்லை ஆனால் தமிழ்மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது உண்மை. அன்று துரையப்பா சொன்னதை இன்று இவர் சிவப்பு வசனங்கள் கலந்து சொல்லியிருக்கிறார். இந்த “துரையப்பாயிசம்” காலத்திற்கு காலம் வெவ்வேறு நபர்களால் உச்சரிக்கப்படுவதை நாம் கண்டுவருகிறோம். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் நலன்களை பெற்றுக்கொண்டார்களேயொழிய தமிழ்மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதை கண்டுகொண்டோம். ஆனால் “துரைய்யப்பாயிசத்தை” மார்க்சியத்தின் பேரால் ஒருவர் சொல்வதை இப்போதுதான் முதல் முறையாக காண்கிறோம். மார்க்சியத்தை நேரிடையாக எதிர்க்கமுடியாத முதலாளித்துவாதிகளின் கைக்கூலிகள் சிலர் மார்க்சியத்தின் பேரால் எதிர்ப்புரட்கர கருத்துக்களை “ரொட்சியத்தில்”நாம் கண்டோம். அது உண்மை என்பதை மீண்டும் ஒரு முறை இந்த கட்டுரைமூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

kamal on June 10, 2009 8:36 am

----


முதலில் புலிகளின் ஆயுதப்பேராட்டம் தவறு என்றும் அதனாலே தமிழருக்கு தீர்வு பெறமுடியாது உள்ளது என்றனர். பின் இப்போது தமிழ்க்கட்சிகள் தனியாக இருப்பது தவறு என்றும் அவர்கள் அரசாங்க கட்சியுடன் இணையவேண்டும் என்று கூறுகின்றனர். இனி நாளைக்கு தமிழர்கள் தமிழ் பேசுவது தவறு. இனி அவர்கள் சிங்களம் பேசி புத்த மதத்தை பின்பற்றினால் நல்லது என்றும் சொல்வார்கள். அதற்கும் நியாயப்படுத்த ஏதும் மார்க்சிய வசனங்களை அள்ளி வீசுவார்கள்………

kuna on June 10, 2009 8:47 am

---

புலிகள் அமெரிக்காவை நம்பினார்கள். பிரிட்டன் நோர்வேயை நம்பினார்கள். இந்தியாவை நம்பினார்கள்.கடைசியாக கனிமொழி கஸ்பார் கூட்டத்தின் மூலம் ராஜபக்சவை நம்பினார்கள். ஆனால் புலிகள் ஒருபோதும் கூட இருந்த மக்களை நம்பவில்லை.

 

புலிகள் நவீன துப்பாக்கிகள் வாங்கினார்கள். விமானம் வாங்கினார்கள். கப்பல் வாங்கினார்கள். அதி பயங்கர வெடிகுண்டுகள் வாங்கினார்கள். ஆனால் புலிகள் தமிழ்மக்களின் மனங்களை வெல்ல ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

 

மக்களுடன் கலந்திருந்து கொரில்லா போராட்டம் செய்தபோது புலிகளை இலங்கை இந்திய ராணுவங்களால் அழிக்கமுடியவில்லை. பலம் பொருந்திய எதிரிக்கு எதிராக மரபுவழிப் போராட்டம் என்னும் முட்டாள்தன முறைக்கு மாறியதால் இலகுவாக அழிக்கப்பட்டனர்.

 

புலிகளின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வி அல்ல. மாறாக தமிழ் மக்களின் போராட்டத்திற்கு இந்தியா நண்பன் அல்ல என்பது நிருபனமாகியுள்ளது. தமிழ்மக்கள் கொல்லப்பட்டால் ஜ.நா சபை உட்பட எந்த ஏகாதிபத்தியமும் குரல் கொடுக்காது என்பது தெரிந்துள்ளது. மாறாக தமிழ் மக்களை கொல்வதற்கு ஆயுதம் கொடுத்து உதவும் என்பது தெரிந்தது.

 

“தமிழீழம்” சிறந்த தீர்வு இல்லை என்பது உணர்ந்து கொள்ள கூடிதாக உள்ளது.இது தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதிலாக ஏகாதிபத்தியங்களின் ஊடுருவலுக்கு வழி சமைத்ததை கண்டோம்.

 

புலிகளின் தோல்வி ஆயுதப்போராட்டத்தின் தோல்வி அல்ல என்பதையும் மாறாக சரியான ஜக்கிய முன்னனி தந்திரோபாயத்தை பிரயோகிக்க தவறிய ஒரு குட்டி புர்சுவா தலைமையின் தோல்லி எனக் கண்டோம்.

 

எனவே தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மக்களுக்கு சரியான பாதையைக் காட்டுவதோடு உறுதியான தலைமையினைக் கொடுக்க முயலவேண்டும். அதை விடுத்து பாராளுமன்ற பாதை மூலம் உரிமை பெறலாம். அரசாங்க கட்சியுடன் சேர்வதன் மூலம் விடுதலை பெறலாம் போன்ற எதிர் புரட்சிகர துரோகங்களை அம்பலப்படுத்தி பரந்து பட்ட மக்களுக்கான புரட்சியை முன்னெடுக்கவேண்டும். இதுவே மக்களை நேசிப்பவர்களின் கடமையாகும்.

 

kural on June 10, 2009 9:22 am


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்