ரோசாவசந்த் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கத் தள்ளுவதாகவே நமது தேர்தல் முறை இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். எதிர்க்கட்சிக்கான வாக்கினை ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதுபோன்ற குழப்பம் என்னிடமும் உண்டு.

ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிக்கு வாக்களி என்று சொல்வதாகவே இந்த வரலாறு நீளப்போகிறது.

  

கட்சிகளைத் தோற்கடிப்பதை விட மக்களை ஏமாற்றும் சதிவலையான கட்சி ஜனநாயகத்தையே தோகடிப்பது என்ற வகையில் தேர்தல் புறக்கணிப்பு சிறந்த அரசியல் நிலைப்பாடு.

  

ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்பழக்குவதை விட, தேர்தல்களூடு படிப்படியாக கட்சி அரசியலுக்கு எதிரான அரசியற்சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமானால் அதன் அறுவ்டை பெரியது.

  

ஈழஅவலத்தால் எழுந்த அரசியற்கொதிப்பை அப்படியே காங்க்ரஸ்-திமுக எதிர்ப்பு என்று அடித்துக்குறுக்கி திசைமாற்றிவிடும் நாடகமே தமிழகத்தில் அரங்கேறுவதாக அவதானிக்கிறேன்.

  

தூரநோக்கோடு சிந்திக்கும் போது மகஇக வின் நிலைப்பாட்டின் பக்கமே எனது சாய்வு. 

  

எவனைதோற்கடிப்பதையும் விட கட்சி அரசியலையே தமிழ்நாட்டில் தோற்கடித்துவிடக்கூடிய தூரநோக்கிலான அரசியற் செயற்றிட்டத்தை படிப்படியாக முன்னெடுத்தல் ஆரோக்கியமானது.

  

//போராடு, புரட்சி செய் என்ற இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் மக்களிடம் அந்நியப்பட்டு நிற்கிறது. //

  

புரட்சி என்ற ஆழமான வார்த்தையை இவ்வாறு பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடின்மைகள் உண்டுதான். ஆனால் "போராடு" என்பது சரியான கோரிக்கையே.

 

போராடி மட்டுமே எதயும் மக்களால் உண்மையாகவே சாதிக்க முடிகிறது. பெரியார் தி.க செய்ததும் அதுவே. நேரடியாக தமது கோரிக்கைகளுக்காக மக்களே போராடுவது. இடைத்தரகர்களை அகற்றிவிடுவது.

  

//இந்த இயக்கங்கள் இருக்கின்ற வாழ்க்கையை கெடுத்து விடுவார்களோ என்ற பதட்டம் மக்களுக்கு ஏற்படுகிறது. //

  

இது நகர்வாழ், நடுத்தர வர்க்க, உயர்வர்க்க ஆட்களுக்குப் பொருந்தலாம். விளிம்புகளில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அப்படி இருக்குமா என்று சற்று ஆறுதலாக சிந்தித்துப்பாருங்கள்.

  

அந்த மக்களை சினிமா தொடக்கம் அரசியல்வாத மாய்மாலங்களுக்குள் ஆழ்த்தி ஒடுக்கி வைத்திருக்கிறார்களே, அவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லையே... அடுத்தநேர சாப்பட்டுக்கே வழியில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே... அவர்களை போராடச்சொல்லி, அவர்களோடு நின்று போராடும் இயக்கம் தானே தேவையாக இருக்கிறது? எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கச்சொல்வதிலும்பார்க்க.

  

மக்களின் உண்மையான எதிரிகளை இனங்கண்டு தனிமைப்படுத்தி அகற்றும் அரசியல் தூரநோக்கம் முக்கியமானது.. அது நேபாளத்துக்கு மட்டுமல்ல, "ஒரே முட்கம்பி வேலியால் இரண்டாகப்பிரிக்கப்பட்டுள்ள" இந்த முழு உலகத்துக்கும் பொருந்தும். இந்தத் தூரநோக்கத்தோடு அரசியல் வேலைத்திட்டங்களை ஒன்றிணைந்து மக்கள் சார்பாக முன்னெடுப்பதே அவசியமானது. ஆக்கபூர்வமனது.

 

****

 

//விளிம்பு நிலை மக்களும், தொழிலாளிகளும், விவசாயிகளும் இடதுசாரி இயக்கங்களையே நம்ப வேண்டியுள்ளது. மற்ற எந்த இயக்கங்களும் அவர்களுக்கு அந்த நம்பிக்கையை தருவதில்லை. ஒப்புக் கொள்கிறேன்.//

  

உங்கள் இந்தக்கருத்துத்தான்

  

//ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் எப்படி சென்றடைவது என்பதே என்னுடைய கேள்வி. குறைந்தபட்சம் அனைத்து விளிம்பு நிலை மக்களையும் கூட இடதுசாரி அமைப்புகளால் ஈர்க்க முடியவில்லையே ?//

  

இந்தக்கேள்விக்கான பதிலும்.

  

ஈழத்தில் புலிகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்று அவர்கள் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு பெரும்பாலானோர் சும்மாவே இருந்துவிட்டமாதிரி.. குறித்த இடதுசாரி இயக்கங்கள் ஈர்க்க வேண்டும், ஈர்க்கிறதில்லை, பிரசாரம்போதாது போன்ற கருத்துக்களும் அமைந்துவிடும் வாய்ப்புள்ளது.

  

இடதுசாரி அமைப்புக்களின் சித்தாந்தங்களோடு, அவற்றின் வர்க்கப்பார்வையோடு எம்மால் உடன்பட முடிகிறதானால், அவர்களது போதாமைகளை தீர்க்கும் வழிவகைகளைத்தேடி நாமும் இணைந்து அவர்கள் கைகளைப் பலப்படுத்தவேண்டியதுதான்.

  

அதிகாரங்கள் அளப்பரிய அடக்குமுறை இயந்திரங்கள். 

 (அதிகாரங்கள் தொடர்பான மலைப்பினை, புரிதலை உங்கள் அண்மைய இடுகைகளில் காணக்கூடியதாக இருந்தது)

 தனித்தனியாக யாரும் கேள்வி கேட்கமுடியாது. அதிகாரங்களின் கொலைச்சக்தியை மீறி எழும் மக்கள் சக்தியை இயக்க ரீதியாக கட்டியெழுப்புவதொன்றே என் அறிவுக்கெட்டியவரையில் இருக்கும் ஒரே வழி.

  

இவ்வாறு மக்கள் சக்தியை இயக்கரீதியாக கட்டுவது தானாகவோ, எவர் தயவிலுமோ, தெய்வச்செயலாகவோ நடந்துவிடாதென்பதுதான் யதார்த்தம். இது வேற்றுமைகளில் ஒற்றுமைகள் கண்டு கூடி ஆற்ற வேண்டிய பணி. ஒதுங்க முடியாது.

  

இடதுசாரி இயக்கங்கள் மக்களைச் சென்றடையவில்லை என்பதாக, வெற்றிபெறவில்லை என்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் என் மீதும் உங்கள் மீதுமே வைக்கப்படுகின்றன. நானும் நீங்களும் , மக்கள் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும்தான் இதற்குப் பதில் சொல்லிஆகவேண்டும்.

  

இது நல்லதொரு வாய்ப்பான அரசியற் தருணம். நேரடியாக, அனுபவத்தில் அதிகாரம் என்றால் என்ன, வல்லரசு என்றால் என்ன, பாராளுமன்ற ஜனநாயகத்தின் அழுகிய முகம் என்ன, கொலையந்திரங்களின் முகங்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம். 

  

இதத்ருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக்கொணு மக்களை அறிவூட்டி திரட்ட வேண்டிய பணியில் எம்மால் இயன்ற வழிமுறைகளினூடாக இணைய வேண்டியதுதான். 

  

எனக்கு வேறு வழிகள் தெரியவில்லை.

  

மக்கள் சார்ந்து சிந்திக்கும் தங்கள் நேர்மையும், மாற்று வழிகள் பற்றிய தங்கள் புரிதலும் மகிழ்ச்சி தருவன.

  

நன்றிகள்.

 

http://changefortn.blogspot.com/2009/05/change-periyardk-election-boycott.html#comment-6326961009366110637