பாசிசம் தன்னை பாதுகாக்க உண்மைகளை சார்ந்திருப்பதில்லை. மாறாக இல்லாத ஒன்றை தனக்கு சார்பாக புனைகின்றது. தமிழ் மக்களை பேரினவாதம் வகைதொகையின்றி கொல்லுகின்றது. புலி கொல்லக் கொடுக்கின்றது. இதை வைத்து புலிப் பாசிசம் தாம் தப்பிப் பிழைக்க பிரச்சாரம் செய்கின்றது.
புலி பிழைக்க இந்த மனித அவலம் போதாது என்பது புலியின் அவலநிலை. இதற்காக அவர்கள் புனைந்த அரசியல் கேவலத்தைப் பாருங்கள்.
'பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை: திடுக்கிடும் தகவல்"
என்ற தலைப்பில் சில படத்தின் ஆணுறுப்பை மறைத்து
http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d1j0g0ecGG7B3b4j9EE4d3g2h2cc2DpY3d436QV3b02ZLu2e
'பொலநறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாக நேரில் பார்த்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத் திடுக்கிடும் தகவலை தந்திருப்பது ஒரு கத்தோலிக்க பாதிரியார். பாதுகாப்புக் கருதி அவர் பெயர், விபரங்கள் எதனையும் நாம் பிரசுரிக்கவில்லை. இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொன்று அவர்களின் உடல் உறுப்புக்களை (இருதயம், ஈரல், சிறுநீரகம் மற்றும் கண்கள்) என்பன எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையகத்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிங்கள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடயங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்."
இதன் மூலம் படமும், அதற்கான கட்டுரையும் இந்தியத் தலித்துகள் பற்றியது. அதை பாருங்கள்.
http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/
' Have you ever heard about forensic examination or autopsy using rusted knifes and hammers? In Indian hospitals, forensic surgeons rarely comes for medical examination of corpse. A postmortem is necessary to determine the cause of death and considered as a valuable document in legal disputes. However, autopsies in Indian hospitals are mostly carried out by unskilled employees.
These are some of the most disturbing lasting images of the terrible life and death in
If the reporters and news agencies of
Recently, Swedish forensic experts have said the two autopsies carried out in
They also expressed concern that her organs, found missing during a third autopsy in
Are we still lives in the pre-historic age of Hindu dharma? Is it respectful to leave a corpse on an open floor as a food to Indian gods like rats? Is it respectful to allow the body to decompose naturally in humid conditions? Only
In
Sir, this is
புலிகள் இதைத் திரித்து விடுவது கேவமானது. உண்மையான ஒரிஜினல் படத்தில் உடல் நிர்வாணமாக உள்ளது. உண்மையான மனித அவலத்தை பொய்யாகி விடுகின்ற கேவலம் நிகழ்கின்றது.
பி.இரயாகரன்
14.05.2009