03012021தி
Last updateவெ, 26 பிப் 2021 11pm

தமிழ்மக்களைக் கொல்வதையே நியாயப்படுத்துகின்றான் ஒரு ஜனாதிபதி

நீ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களை கொல்லலாம் என்றால், நான் ஏன் என் மக்களை கொல்;லக் கூடாது. நீ அதைக் கேட்கக் கூடாது. அதைக் கேட்கும் உரிமை உனக்கு இல்லை என்கின்றான், மாண்புமிகு கொலைகார ஜனாதிபதி. கொல்வது என்பது, ஜனாதிபதியின் உரிமை. இந்தக் கொல்லும் உரிமையை எப்படி செய்வது என்பதில், 'எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்" என்கின்றான்.

 

இப்படி நாங்கள் வரைமுறையின்றி தமிழ் மக்களை கொல்கின்றோம், இதைக் கேட்கும் உரிமை உனக்கில்லை. இது தான் ஏகாதிபத்திய நாட்டுத் தலைவர்களுக்கு, எமது அதி உத்தம பாசிச ஜனாதிபதி வழங்கிய பதில். தம்பி கோத்தாபாய மட்டுமல்ல அண்ணன் ராஜபக்சவும் தன் வேஷத்தைக் களைந்து கர்ச்சிக்கின்றான். கையெடுத்து கும்பிட்டு, இரந்து  வாக்கு பிச்சை கேட்டு நடித்த நடிகன், இன்று ஒரு பாசிட்டாகவே கொக்கரிக்கின்றான்.  

 

கொலைகார ஜனாதிபதி உலகுக்கு  கூறும் தத்துவம் என்ன, நீங்கள் கொல்லலாம் என்றால் நாங்களும் கொல்லலாம். இது தான் ஒரு நாட்டின் இறைமை. இதை உலகம் கண்டு கொள்ளக் கூடாது. இப்படித்தான் பேரினவாத ஜனாதிபதி, உலகுக்கு சவால் விடுக்கின்றான்.

 

இதை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று கூறி, தலையில் தூக்கி வைத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். இப்படி சவால் விட்டே, தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கும் திரோஸ்க்கிய அன்னக் காவடிகள் முதல் ஜனநாயக விபச்சாரிகள் வரை, இந்தப் பாசிட்டை தமிழ் மக்களின் 'மீட்பு" நாயகனாக காவிக்கொண்டு திரிகின்றனர்.

 

இப்படி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை புலியழிப்பாக, ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டும் அரசியல், இன்று ஒரு எதிர்ப்புரட்சி அரசியலாக அரங்கேறிவருகின்றது. 

 

இவர்களுக்கு தலைமை தாங்கும் கொலைகாரன் எப்படி கொக்கரிக்கின்றான் என்று பாருங்கள் 'ஈராக் எவ்வாறு குண்டு வீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்” என்கின்றான். ஈராக், ஆப்கானிஸ்தானில் கொலை வெறியாட்டத்தை நடத்திய போது, இதற்கு உதவி செய்தவர்கள், இன்று நாங்கள் அது போல் கொல்லும் போது ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். நீங்கள் கொல்லும் போது, நாங்கள் உங்களை ஆதரிக்கவில்லையா என்பது தான், இந்த பாசிட்டின் தர்க்கமும், அங்கலாய்ப்பும்.

 

இப்படி திமிரெடுத்து வீரம் பேசும் பேரினவாத பாசிட், தமிழ் மக்களை வேண்டிய மட்டும் நாங்கள் கொல்வோம் என்று வெளிப்படையாகவே இன்று கொக்கரிக்கின்றான். இதைத்தான் நாட்டின் இறைமை, பயங்கரவாத ஒழிப்பு என்கின்றான். நீங்கள் ஈராக், ஆப்கானிஸ்தானில் எதை பயங்கரவாத ஒழிப்பு என்று கூறி மக்களை கொன்றீர்களோ, அதைத்தான் நாங்கள் செய்கின்றோம் என்கின்றான்.

 

நீங்கள் செய்தது சரி என்றால், நாங்கள் செய்வதும் சரி. இதுதான் இந்த தர்க்கத்தின் அடிப்படை. இப்படி பயங்கரவாதத்தின் பெயரில், தமிழ்மக்களை கொல்லும் உரிமைதான், நாட்டின் இறைமை ஜனநாயகம் என பிரகடனம் செய்கின்றான்.  

 

தங்கள் கொலைவெறியை மூடிமறைக்க செய்யும் பித்தலாட்டத்தை "உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? இதனை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் எதற்காக? உலகம் முழுவதற்குமே அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது தெரியும்.

 

எமது படையினர் தாய்மார்களையும், சிறுவர்களையும் எவ்வாறு மீட்டு வந்தார்கள் என்பதை புதுமாத்தளனில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வயதானவர்களை படையினர் தூக்கி வந்தார்கள். இவை அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் கூட அனைத்துலக சக்திகள் சில எம்மீது குற்றச்சாட்டைச் சுமத்துகின்றன." என்கின்றான். கொலைகாரக் கும்பல், தாங்கள் நடத்தும் இனவழிப்பு உலகுக்கு தெரியக் கூடாது என்பதால் தான், இராணுவ சூனிய பிரதேசத்தை நிறுவியுள்ளனர். பின் தம் சொந்த பிரச்சாரத்துக்கு ஏற்ப தாம் தயாரிக்கும் காட்சிகளை, நம்பு, பார் என்று கூறுகின்ற நியாயவாதமும் தர்க்கமும்.   

 

ஆனால் உண்மை என்ன? செஞ்சிலுவைச் சங்;கம் ஏற்றி இறக்கிய 15000 பேரை யார் காயப்படுத்தினர், அங்கவீனப்படுத்தினர். நீ தானே. இதையா!, உன் 'மனிதாபிமான" செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சியாக காட்டுகின்றீர்கள். உனது படையினர் கொன்று குவித்ததை காட்டாத நீ, பிரச்சாரத்துக்காக தயாரித்ததை மட்டும் உலகம் நம்பிவிடுமா!? பாசிட்டுகள் எப்போதும் மற்றவனை முட்டாளாக கருதி, முட்டாளாகவே எப்போதும் செயல்படுவார்கள்.

 

கடந்த நூறு நாட்கள் 5000 பேரை குண்டு போட்டுக் கொன்ற நீ, 15000 மக்களை காயப்படுத்திய நீ, அதை கப்பல் கப்;பலாக இறக்குமதி செய்த நீ, இவை அனைத்தையும் உன் தொலைக் காட்சி ஏன் காட்டவில்லை. ஏன் இப்படி படுகொலை செய்ததைக் கூட, என் உன் கொலைகார கும்பல் உட்பட நீ எற்றுக்கொண்டது கிடையாது. ஏன் உன் தமிழ் கூலிக் குழுக்கள் கூட இதைக் கண்டு மகிழ்சியுடன், இதற்கு பின்னால் சலசலக்கின்றனர். 

 

நீ உன் தொலைக்காட்சியில் காட்டுவது, ஊர் உலகத்தை ஏமாற்ற நடத்தும் பிரச்சாரப்படங்கள். உண்மை இதற்கு வெளியில் அம்மணமாக உள்ளது. முட்கம்பிக்கு பின்னால் உன்னால் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஒரு வேளைச் சோறு கூட கிடையாது. இதற்கான  நெருசலில் சிக்கி இரண்டு குழந்தைகள் மரணம். இதை உன் தொலைக்காட்சி; காட்டுகின்றதா!? இங்கு மனிதனின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யாமல், பல பத்து மரணங்கள். ஆம் தமிழனை பட்டினி போட்டும் கொல்லுகின்றான் இனவாதி. இந்த வதை முகாமில் இருந்து தப்பிச்சென்றவர்களைக் கூட, சரணைடையும் படி எச்சரிக்கின்றான் இனவாதி. உற்றார் உறவினர் சந்திக்க முடியாது. இதையா உன் பிரச்சாரப்படம் காட்டுகின்றது. உன்னை நக்கும் தமிழ் நாய்கள் கூட இதைக் காட்டுவதில்லை. 

 

இப்படிப்பட்ட நீ உருவாக்கியுள்ள உன் வதைமுகாமில், இரத்த ஆறுகளாகவே ஓடும். இதை உன் வரலாறு காட்டுகின்றது. என் நடத்தை காட்டுகின்றது. உன் பாசிசத் திமிர் காட்டுகின்றது. உன் பாசிசம் கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜகம் இதை வெளிப்படுத்துகின்றது. இப்படி நீ காட்டிய மக்கள் 'மீட்பு" அம்மணமாகி கிடக்கின்றது. பேரினவாதக் கொட்டத்தின் பின் இவை சிதைந்து கிடக்கின்றது.

 

உனக்கு ஏற்ற வகையில் ஜே.வி.பி யால் புடம் போடப்பட்டு, உன்னிடம் வாலாட்ட விட்ட இனவாத நாய் விமல் வீரவன்ச உன்னைப்போல் அசலாகவே குலைக்கின்றான். 'அனைத்துலக சூழ்ச்சிக்காரர்கள் இங்கு வருவது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அல்ல. பிரபாகரனைப் பாதுகாப்பதே அவர்களின் பிரதான நோக்கமும் தேவையும் ஆகும்" ஏன், நீ மக்களை கொல்லுகின்றாய், பொதுமக்களை பாதுகாக்க வேண்டியதுதானே. கொல்வதால ;தானே, அவன் வருகின்றான். இது தெரியாமல், நீ எல்லாம் ஒரு மனிதனாக கதைக்கின்றாய். மக்களை கொல்வதை முதலில் நிறுத்துங்கள். பிறகு உங்கள் நியாயத்தை சொல்லுங்கள்.

 

இனவாதிகளான உங்களுக்கு, தமிழ் மக்களை கொல்லவேண்டும் என்ற அக்கறை, புலியின் பெயரால் அதை செய்ய வேண்டும் என்பதுதான், இந்த இனவாதிகளின் மைய அரசியல்.   

 

எப்படி தமிழ் மக்களை கொல்வது என்பதைத்தான், ஜே.வி.பி புடம்போட்டு வளர்த்த விமல் வீரவன்ச இப்படிக் கூறுகின்றான். 'எமது மக்களுடைய பிரச்சினைகளை எமது அரசும் இராணுவமும் பார்த்துக்கொள்ளும். இது தொடர்பாக பிரித்தானியா கவலைப்படத் தேவையில்லை" என்கின்றான். மகிந்தாவின் பாசிசத்தின் பின்னால் நின்று இப்படி கொக்கரிக்கின்றான். உனது அரசும், உனது இராணுவமும் கடந்த 60 வருடமாக தமிழினவழிப்பை நடத்தி வருகின்றது. இன்றும் தினம் தினம் கொல்லுகின்றது. உன் அரசு நடத்தும் வதை முகாமில், பலர் அழிகின்றனர். உன் இராணுவம் நடத்தும் பாலியல் வன்முறையில், பெண்கள் தம் கற்புரிமைக்காக கதறும் ஓலிகள், இராணுவ சூனிய பிரதேசத்தையே அதிரவைக்கின்றது. எங்கும் மரண ஓலிகள்;. இது தான் உன் இராணுவம், உன் அரசு, தமிழ் மக்களுக்கு செய்கின்றது. இதைத்தான் கடந்த 60 ஆண்டுகளாக செய்து வந்தது. தமிழ் மக்கள் இதைத்தான், தம் சொந்த வாழ்வாக அனுபவிக்கின்றனர்.

 

பி.இரயாகரன்
02.05.2009
  

 

 


பி.இரயாகரன் - சமர்