தேயிலை செடிகள் மீது

தென்றல் இல்லை

இலைகளும், பூக்களும்

இறந்து விழுந்தன.

இன்னும் என்ன?

 

செடிகள் மாத்திரம்

விறைத்து நிற்கும்

பன்றிகள் வந்து

வேர்கள் பறிக்கும்

குன்றுகள் நோக்கி

புறாக்கள் பறக்கும்.

காகங்கள் சிலது

சிறகுகள் விரித்து

சற்றே கரையும்

காலங் காலமாய்

தங்கள் மீது

எச்சங்கள் விட்டதை

தேயிலை செடிகள்

திரும்பிப்பார்க்கும்

பாடல் ஒன்று

மனதில் புரளும்.

தொண்டமான் கோழி கூவி.

இனி

யாரின் வரவு

எங்களை துளிர்விக்கும்?

எம்

பூக்களை ஆக்கும்?

கேள்விக்கு பதிலாய்

நாங்கள்! நாங்கள்!

என்றே பதில் வரும்.

தேயிலைச் செடிகள்

திரும்பிப் பார்க்கும்.

யாருமல்ல:

குனிந்து பார்க்கும்

ஆங்கே

புதிய நாற்றுக்கள்

புடைத்துக் கிளம்பும்!

 

வண்ணச் சிறகு