Language Selection

சமர் - 9 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதம் இதழ் 22 இல் சி.வசந்தன் தேசிய சக்தியும் என்ற தலைப்பில் ஒரு அவசரக் குறிப்பு எழுதியுள்ளார். இவர் இக்கட்டுரையில் தேசியசக்தி பற்றி ஒரு பார்வையை பார்த்ததுடன், நடைமுறை பற்றியும் சொல்ல முற்பட்டுள்ளார். விமர்சிப்பவர்களை மக்கள் விரோதிகள் என்று, ஜக்கியம் நடைமுறை பற்றி கதைப்பதன் ஊடாக கூறியுள்ளார்.

 

இவர் தேசியசக்தி தொடர்பான விவாதம் தேவையற்றது எனக் கூறியதுடன் மட்டுமின்றி, புலிகளை எந்த வர்க்கமுமற்ற குழு எனவும் கூறியுள்ளார். மிகவும் அகதியாக கதைக்கப்பட்டு முடிவேயில்லாது தொடர்ந்து சலிப்பூட்டும் வகையில் விவாதிக்கப்படுவது என கட்டுரையில் ஆரம்பத்தில் இருந்தே எழுதுகின்றார். இது மாற்றுக்கருத்தை மறுக்கும் போக்கு மட்டுமின்றி விவாதிக்காது திணிக்கும் போக்குகூட. இதைப்போல் முன்பு கரிகாலன், சிவகுமாரன் மனிதம் என எல்லோரும் மாற்றுக்கருத்தைக் கண்டு கிலியடைந்ததுடன், அதனை விமர்சிக்க முன்வராமல் விமர்சனத்தை சலிப்பூட்டுவதாகவும், முடிவேயில்லாததும், விவாதப் பண்பு அற்றதும்.... என கூறி தாம் ஆராய்கின்றோம் என்பதைக் கேள்விக்குட்படுத்தியபடி கருத்தை திணித்துவிட முனைகின்றனர். இதில் முடிவேயின்றி தொடர்ந்து என்ற கூற்றினூடாக மாற்றுக்கருத்தை விவாதிக்க தயங்கி திணித்துவிட முயன்றுமுள்ளனர்.

 

இவர் தொடர்ந்து கட்டுரையில் மற்றவர்கள் நினைத்த, தெரிந்த விடயங்களை சொல்வதை பிழையென கூறியபடி தான் மட்டும் நினைத்ததை திணித்துவிட முனைந்துள்ளனர். இது போன்ற நடைமுறை கடந்தகால போராட்டங்களில் பொதுவான இயல்பாக இருந்தது. தாம் நினைத்தவைகளை அமுல் செய்யக்கோரி அமைப்பிலும், மக்கள் மீதும் அடக்குமுறையை கையாண்டனர். இவைக்கும் வசந்தனின் கூற்றுக்கும் எந்த வேறுபாடும் இல்லை நாம் உடன்படும் திட்டத்தில் இன்று பலர் உடன்படுகின்றனர். ஆனால் மனிதம் எதிலும் உடன்படாதவொரு கதம்பகூட்டமே. இதைப் பார்த்து ஏன் வசந்தனால் கேட்கமுடியவில்லை. முடிவேயில்லாது தொடர்ந்து என்று கதம்பக்கூட்டத்தின் இருப்பில் தாக்கங்கள் (எமது விமர்சத்தினால்) ஏற்படும் போது அதை சலிப்பூட்டுவதாகவும், விமர்சனப் பண்பற்றதும் எனக்கூறி எப்படியாவது கதம்பக்கூட்டத்தை பேண முயல்கின்றீர்கள்.

 

ஒரு அணியின் தேவை குறித்து வாதப்பிரதிவாதங்கள் துரதிஸ்டவசமானது எம்மவரிடையே ஒரு மார்க்ஸ்சோ, லெனிலினோ, மாவோவையோ ஒத்த தத்துவத்துறையில் மிகவும் சிறந்த நடைமுறையில் சரியான வேலைமுறைகளை ஏற்படுத்தகூடிய மேதைகள் இல்லாததுதான் எம்மவர்களிடம் சிதறல்களுக்கு காரணமோ என எழுதும் இவர் வரலாற்றை புரட்டிவிடுகின்றார். வரலாறுகளை கவனித்து படிக்கவேண்டிய இவர் அவைகளை கவனியாது விட்டபடி மார்க்ஸ், லெனின், மாவே எனக் கூறிவிட்டால் எல்லாம் உண்மையாகிவிடும் என்ற ரீதியில் (முற்போக்கு என ஒருவன் தன்னைச்சொன்னால் அவன் முற்போக்காக இருக்கவேண்டும் என்றில்லை) இவர்களைக் கூட அழைத்துள்ளார். மார்க்ஸ், லெனின், மாவோவின் பெரும்பாலானானவை அரசுக்கு எதிராக இருந்ததைவிட இடதுசாரிகள் என சொன்னவர்க்கு இடையிலேயே எப்போதும் நிகழந்துள்ளது அதாவது நாம் விமர்சிப்பதுபோல்; இதை அவர்களின் அனைத்துப் புத்தகங்களிலும்; பார்க்கலாம். நாம்எப்படி புலிகளின் வர்க்கம் தொடர்பாக விவாதிக்கின்றோமோ அதேபோல் அவர்கள் அன்று விவாதித்தது மட்டுமன்றி திரிபுக்கு எதிராக விடாப்பியாக போராடினார்கள். அதனால் மட்டுமே அவர்கள் புரட்சியை வென்றெடுக்க முடிந்தது. எமது விமர்சன பண்பு (மனிதம் கருதும் பண்பற்ற) மேற்குறித்த மேதைகளின் விமர்சனப்பண்பில் மிகச்சிறிய பகுதியே. இவ்மேதைகளின் காலத்தில் எம் மத்தியில் இன்று இருப்பதைவிட பல சிறிய பல்வேறுபட்ட குழுக்கள் இருந்தன. அவை ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்தன.

 

இம் மேதைகளின் கருத்து சரியாக இருப்பதால் இன்று அவர்களை சொன்னபடியே அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றீர்கள். கரிகாலனோ, சிவகுமாரனோ, மனிதமோ இவர்கள் கருத்துக்களை தவறு எனச் சொல்லுவதால் (இதை இவர்களின் கட்டுரையில் பார்ககவும்) எப்படி லெனின் போன்றோர் தலைமையின் கீழ் அணிதிரள்வர். இதுவே இன்று பிரச்சனை. இதை முதலில் புரிந்துகொள்ள முயலவும். தத்துவார்த்த சமரில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவினரும் நாம் அறிந்தவைகள், எழுதுபவைகள் மட்டும் சரியானவை, மற்றவர்களை பிழையாகவே பார்க்கின்றனர் என்பதும் வேறு சிலர் பிரச்சனைகளில் மையங்களைப் புரிந்து கொண்டாலும் சரியான கருத்துக்காக போராடுகின்ற முன்முயற்சி இல்லாமலும் அவரவர் தங்கள் கருத்துக்காக இpடையிடையே எழுந்து குரல் கொடுத்து விட்டு அடங்கும் .. எனக்கூறி இவர் தான் அறிந்தவைகளை திணித்துவிட முயல்கின்றார். அத்துடன் இவர் இதில் சிலர் பிரசசனைகளின் மையங்களைத் தொட்டபோதும் மௌனமாகிவிட்டனர் என்பதற்கு ஊடாக புலிகளை வர்க்கமற்ற ஒரு குழுவென திணிக்க முயன்றுள்ளார். ஒரு மனிதன் தனக்கு தெரிந்தவை மட்டுமே சொல்லமுடியும். அதுவே அவனுக்குச் சரியாகவும் உள்ளது. இதற்கு அப்பால் கற்பனையில் பெறமுடியாது. அதனால் தான் விவாதம் என்ற விடயம் நிகழ்கின்றது. விவாதத்தில் தாம் சரியென வைக்கும் விடயங்களையே விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றது. அங்கு ஆய்வு நிகழ்கின்றது. (இவைகளை இவர் இக் கட்டுரையில் நிராகரிக்கின்றார்.) இதற்க்கூடாக சரியான ஒன்றை கண்டுபிடிக்க முயல்கின்றார்.

 

இது உங்களுக்குப் புரிய நியாயம் இல்லைத்தான். ஏனெனில் உங்களுக்கு விவாதம் என்பது சலிப்பூட்டுவதே. சிலர் சரியானதை கூறிவிட்டு மௌனம் சாதித்ததென்பது உங்களுக்கு சரியானதும் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவைகளே. இதை எப்படி விமர்சிக்காமல் சரியாக ஏற்கமுடியும். எமது விமர்சனம் உங்கள் கருத்தை தகர்த்துவிடுவதால் இது எமக்குத் தெரிந்தவை மட்டும் எனச்சொல்லி மீண்டும் திணிப்பை நிகழ்த்த முயன்றுள்ளார். கடந்தகாலங்களில் புரட்சிகள் போராட்டங்கள் தோல்விகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாறாக இத்தகைய சம்பவங்களுக்கு அவரவர் கற்றுக்கொண்டவைகளில் இருந்து விளங்கி வியாக்கியானங்கள் செய்வது எதிரணியினருக்கு மடக்கிப் பதிலளிப்பது மட்டுமே பிரச்சனையை சரியாகப் புரிந்துகொண்டவர் என்று நினைத்து கொலரை உயர்த்தி கொள்வதுமே நடைமுறையாகவுள்ளது... இவைகளே எதிர்காலத்தில் தொடருமெனில் எத்தகைய காட்டுக் கூச்சல் இட்டாலும் அடக்கிவிடமுடியாது என உச்சக்குரலில் காட்டுக்கூச்சல் இட்டுள்ளார். இங்கு மடக்கி பதிலளிப்பதும் அதுவே சரியென நினைத்து கொலரை உயர்த்துவது என்ற இவரின் வாதத்தில் மடக்கியென்பது ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தமது கருத்தை நியாயப்படுத்த பயன்படுத்திய சொல். இவர் அவர்களின் கருத்துகளுக்கு சமரில் பதில் அளிக்கப்பட்டுள்ளதை ஏற்றுள்ளார். (ஆனால் இதை மனிதம் ஆசிரியர் குழு மறுக்கின்றனர். ) வசந்தன் இதை அவரவர் கற்றுக்கொண்டதென ஒப்பாரிவைத்துள்ளார்.

 

இவர் போன்ற அனைவரின் கருத்துக்கும் சமர் பதிலளித்துள்ளது. அது சரியாக உள்ளது(சமருக்கு மடடும் சரியானது என வசந்தன் குறிப்பிடுகிறார்) என கூறியவர் தாம் ஏற்கவில்லை ஏன் எனில் அது அவரவர் கருத்தென்பதால். எவ்வளவு வேடிக்கை. இங்கு இவர்கள் ஆய்வு செய்கிறார்களாம், தேடுகிறாhகளாம். இவைகூட நகைப்புக்குரிவையே. கடந்தகாலப் போராட்டங்களில் வெற்றி தோல்விகளின் (இங்கு இவர்கள் ஆராயத் தயாராகவில்லை ஏன் எனில் சமரின் சரியான பக்கம் கொலரை உயர்த்துவதாம்) வெளிப்பாடுகளாகும். ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்கிறான். இது சரியாகவோ, பிழையாகவோ நிகழ்கின்றது. இதை வசந்தன் தீர்மானித்துவிட முடியாது.

 

ஒவ்வொரு மனிதனும் தான் கற்றுகொண்டதை மற்றவர்க்கு கூறுகின்றனர். இது ஒரு விவாதத்தை உருவாக்குகின்றது. இந்த ஒருவரின் கருத்தின் மீது கருத்து கூறுவது மடக்கியது ஆகிவிடாது. இதுவே இயங்கியல் விமர்சனமுறை. இங்கு வசந்தன் வர்க்கமற்ற புலிகள் எனக் குறிப்பிடும் தான் கற்றதை மட்டும் நியாயப்படுத்தியபடி மற்றவைகளை மடக்கியதாக கூறி தனது கருத்தின் மீது விமர்சனத்தை தடுத்து, அதை திணிப்பாக நிகழ்த்த முயன்றுள்ளார். எமது விமர்சனத்துக்கு பதில் அளிக்க முடியாது வெகுண்டு எழுந்த ஒருவித பீதியுடன் இது அவரவர் கருத்து இது உண்மையல்ல, (இங்கு கவனிக்கவும் எந்த விளக்கமும் வசந்தன் வைக்கவில்லை) இது மடக்கல் எனச் சொன்னபடி கொலரை உயர்த்துவதாகவும், காட்டுக் கூச்சல் இடுவதாகவும் பிதற்றியுள்ளார். பிரமுகர்(பாலசிங்கம் போல்) எமக்கு வழிகாட்ட தீர்வு சொல்ல வருவார் என்ற அடிப்படையில் வசந்தனின் வாதம் அமைந்துள்ளது. அரசுக்கும், புலிகளுக்கும் எதிராக ஒரு ஜக்கிய முன்னணி இன்று சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இவை ஒரு கோட்பாட்டுக்கு உட்பட்டவையே. தேசியவிடுதலைப் போராட்டத்தில் பிரதான எதிரி அரசாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்யும் புலிகள் இரண்டாவது எதிரியாகவுமே; இருக்கமுடியும். இவர்களுக்கு எதிராகப் போராடும் போது முற்போக்குத்தேசியத்தை உயர்த்த கூடிய ஒரு திட்டத்தில் மட்டுமே ஜக்கியப்படுவதன் ஊடாக சரியான போராட்டத்தை வழிநடத்த முடியும். இதன் அடிப்படையில் மட்டும் சமர் ஜக்கியப்படும். அதுபோல் அனைவரையும் கோரும். இவை மீண்டும் புலியை உருவாக்காது. ஜக்கியம் என்பது ஒரு வடிவம் மடடுமானது அல்ல. அது பலவகைப்பட்டவையாக நிலைமைகளுடன் மாறக்கூடியதுமே.

 

இவை ஒரு தனிக்கட்டுரையாக அமைந்தபோதும் சுருக்கமாக பார்ப்போம். சமர் 7 இல் முன்வைத்த திட்டம் கீழ் இருந்து கட்டப்படக் கூடிய ஒரு முன்னணிக்கானது மட்டுமே. இது கீழ் இருந்து ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நபராக வென்று எடுத்து உருவாக்கப்படும் அமைப்புக்கானது.

 

இவ் ஜக்கிய முன்னணிக்கு முரணற்ற பல்வேறுபட்ட குழுக்கள்,மற்றும் வெகுசன அமைப்புக்களாக பெண்கள் அமைப்பு, மாணவர் அமைப்பு.... என அனைத்தும் இவ் ஜக்கிய முன்னணியுடன் கீழ் இருந்து இணைந்து செயற்பட முடியும். இத்திட்டத்தை ஏற்காத வேறுபட்ட வர்க்க நோக்கில் உருவாகும் அமைப்புகள், தனிநபர்கள் குறித்த ஒரு முரண்பாட்டின் அடிப்படையில் மேல் இருந்து ஜக்கியப்பட முடியும், குறித்த முரண்பாட்டின் இறப்ப்புடன் இவ் ஜக்கிய முன்னணி செயல் இழந்துவிடும். கீழ் இருந்து கட்டப்படும் ஜக்கிய முன்னணி, மற்றும் கட்சி என்பன தனக்கான ஸ்தாபனப்பலம்,

 

இராணுப்பலத்துடன் மட்டும் மேலிருந்து கட்டும் ஜக்கிய முன்னணியை உருவாக்கமுடியும். இன்று உடனடியாக மேலிருந்து கட்டும் ஜக்கியமுன்னணி சாத்தியம் இல்லை. இன்று ஒரு திட்டத்தின் அடிப்படையில் மட்டும் கீழ் இருந்து ஜக்கிய முன்னணியை கட்ட முடியும். எதிர்காலத்தில் கீழ் இருந்து கட்டும் ஜக்கிய முன்னணி தனக்கான இராணுவப்பலம், ஸ்தாபனத்தை கொண்ட ஒரு தளப்பிரதேசத்தை ஏற்படுத்தின் புலிகளுடன் கூட மேல் இருந்து ஜக்கியத்தை அரசுக்கு எதிராக கட்டமுடியும். இது எதிர்கால நிலைமைகளுடன் எமது பலத்துடன் மட்டுமே ஆராயப்படவேண்டும். மனிதம் இன்று இருக்கும் நிலையிலான அமைப்பு வடிவில் ஒரு கருத்தைக் கூட சரியாக கூறிவிட முடியாத ஒரு கதம்ப கூட்டமே. இதற்கு அப்பால் மனிதத்தை ஜக்கிய முன்னணி என்ன என்பதை தெரியாதவரே. மனிதத்தின் குறைந்த பட்சத்திட்டம் என்ன? இது மனிதத்துக்கே தெரியாது. நீங்கள் குறிப்பிட்ட வரட்டுதனம், கற்றுக்குட்டித்தனத்துக்கு அப்பால் உள்ளவர்கள் உடன் ஏன் நீங்கள் ஜக்கியப்படவில்லை. உங்களின் குறைந்த பட்சத் திட்டம் என்ன? முதல் அதை முன்வையுங்கள். உங்கள் மொத்த வாதமும் கருத்தியல் மறுப்பை நிலைநாட்ட கையாளும் ஒரு நரித்தத்துடன் கூடியவையே. சமர் எப்போதும் உங்கள் ஜக்கியத்துக்கு தடையாக இருக்கப்போவதில்லை.

 

சிலர் ஒரு திட்டத்தை விவாதித்து அதில் இன்று ஜக்கியபட்டுளளனர். அதை என்ன என்று சொல்லப் போகிறீர்கள். எங்கே வறட்டுவாதம் கற்றுக்குட்டித்தனம் உள்ளது என்பதை மீண்டும் ஆராயவும், அத்துடன் ஜக்கியத்துக்கு தடையாக உள்ளவை திரிபுவாதமே பிரதானமானது என்பதை மறந்து விடாதீர்கள். ஒவ்வொரு பிரச்சனைகளிலும் திருப்தியுறாத எவ்வளவோ மக்கள் திரளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. அப்படி இருந்தும் இலங்கையில் இடதுசாரிகள் தங்கள் பின்னே ஒரு பலமான அணியைதிரட்டி ஒரு புரட்சியை முன்னெடுக்க முடீயாமல் போனது ஏன? எப்பவுமே ஒரு10--15பேர் கொண்ட குழுவாக இயங்குவது பின்னால் அதில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் உடைவுகள் ஏற்படுவதும் அதற்கு கூட இயங்கியல் அது இது என்று தத்துவ முலாம் பூசுவது(வரலாற்றில் தேவைப்பட்ட முறிவுகளை தவறு என்று கருதவில்லை) பின்னர் பிரிந்த குழுக்கள்........ என தனது கண்டுபிடிப்பைத் தொடர்கிறார். இங்கு இவர் மறைமுகமாக மார்க்சிசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். எந்த உடைவு சரி, எந்த உடைவு தவறு, எந்த உடைவு தனிப்பட்ட நலன் சார்ந்தது என்று எந்த ஆதாரமோ விளக்கமோ இன்றி பொதுப்படையாக இடதுசாரிகளை தாக்கியதுடன் இன்று சரியான இடதுசாரிகள் மீதும் தனது தாக்குதலை நடத்தியுள்ளார். இங்கு இவர் எதைச் சரியென்கின்றார்.? தான் நினைப்பதை மடடும் இதற்கு ஊடாக சிலரை அங்கீகரிக்க கோருகின்றார். இவர் கரிகாலன், சிவகுமாரன், மனிதம் என இவர்கள் இந்தியாவில் உள்ள சில திரிபுவாத இன்டலெக்சுவல்(அறிஞர்கள்) பிரமுகராக உள்ள சில உதிரிகளை மட்டும் அங்கீகரிக்க, ஏற்க கோருகின்றார். அவர்களின் கருத்துக்களை எந்த ஆதாரமுமின்றி, விளக்கமுமின்றி திணித்துவிட முயல்கின்றனர்.

 

கடந்தகால போராட்டத்தில் இடதுசாரிகள் தவறு இழைத்தனர் என்பது உண்மையே. அது நீங்கள் குறிப்பிட்டது போல் அல்ல. இது தனியான விளக்கக் கட்டுரை ஆகவே அமைய முடியும். ஈழப் போராட்டத்தில் இடதுசாரிகள் என என்-எல்-எவ்-டி-, பேரவை மட்டும் தான் தம்மை இனம் காட்டின. இதில் என்-எல்-எவ்-டி ஒரு கட்சியல்ல. அது கீழ் இருந்து கட்டப்பட்ட ஒரு தேசிய விடுதலை முன்னணி. இவர்கள் பல தவறுகள்(முரண்பாடுகள்) இழைத்தபோது மீண்டும் மீண்டும் தேடியவர்கள். அவர்களின் இருப்புக்காக குறுகியகாலத்தில் மற்றைய இயக்கங்களின் வீக்கம் அவைகளின் பலத்தின் முன் இவர்கள் ஒரு அடியை எடுத்து வைக்கப்பட முன் அழிக்கப்பட்டுவிட்டனர். இவர்களின் தவறுகள் என்-எல்-எவ்-டி கட்டுரையின் ஊடாக ஆராயப்படுகின்றது.

 

இந்த இடதுசாரிகளுக்கு அப்பால் உருவான இயக்கங்கள் இன்றைய மொத்த சீரழிவையும் உருவாக்கியவர்கள். அவர்களின் விளைவுகளை இடதுசாரிகளின் மீது (இன்று பல சஞ்சிகைகளில் எழுதுபவர்கள் இதையே செய்கின்றார்கள்.) குற்றம்சாட்டி தவறான ஆய்வுகளை செய்கின்றனர். இடதுசாரிகளின் உடைவுகள் எப்போதும் ஏதோ ஒரு வர்க்கம் சார்ந்ததே. தனிப்பட்ட நலன் சார்ந்த உடைவும் எப்போதும் வர்க்கம் சார்ந்ததே. ஏதோ ஒரு வர்க்கக் கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமே உடைவுகள் நிகழ்கின்றன. இதை முதல் புரிந்து கொள்ளுங்கள். பல முரண்பாடுகள் கருத்துக்கள் இருக்கும் போது உடைவுகளை ஏற்கவேண்டும். ஏற்க மறுப்பின் புலியின் தத்துவத்தை கோருவதாகும். ஒரு அமைப்பு ஜனநாயக மத்தியத்துவத்தை பேண வேண்டும். அப்போது அங்கு முரண்பட்ட கருத்துக்கள் போராடமுடியும். ஒரு அமைப்பு தவறான வழியில் செல்லும் போது அதிலிருந்து விலகுவது தவிர்க்க முடியாதது. எந்த உடைவுக்கும் தத்துவம், வர்க்க சார்பும் உண்டு. தத்துவமற்ற, வர்க்கமற்ற உடைவு என்று ஒன்று இல்லை. கடந்தகால இடதுசாரிகள் மார்க்சியத்தை ஏற்று சரியாக இருந்தார்களா? இவர்களின் தத்துவங்கள், செயற்பாடுகளை ஆராய்ந்து முதலில் யார் இடதுசாரிகள் என ஆராய்ந்து அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். சரியான இடதுசாரிகளே இல்லை எனில் எப்படி உடைவுகளை ஆராய முடியும். சிறுபிள்ளைத்தனமான எழுந்தமான ஆய்வுகள் அற்ற முடிவுகளை திணிப்பதை கைவிட கோருகின்றோம்.

 

இக் கட்டுரையில் மார்க்சினதோ, லெனினதோ...... வேறெந்த மார்க்சிய அறிஞர்களது மேற்கோள்களையோ உதாரணங்களையோ தவிர்த்துள்ளேன்..... ரசிய புரட்சியில் பங்கு கொண்ட சக்திமிக்க நபர்களாக லெனின், ஸ்டாலின், ரொக்ஸ்சி, புகாரின்...... ஆகியோர் விளங்கினார்கள். இவர்கள் ஒருமித்த எண்ணங்களையோ முடிவுகளையோ உடையவர்கள் அல்ல..... ரொஸ்க்கி செம்படைக்கு பொறுப்பாக இருந்தார். இத்தகைய நடைமுறை இல்லாது இருந்தால் ரஸ்சியப் புரட்சி வெற்றி பெற்றிருக்கமுடியுமா? கட்சிக்குள் மாற்று கருத்துக்களை வரவேற்றார். தொடர்ச்சியான தத்துவார்த்தப் போராட்டங்கள் கட்சிக்குள் நிகழ்ந்தன. லெனின் வரவேற்றார். தொடர்ச்சியான தத்துவார்த்தப்போராட்டங்கள் கட்சிக்குள் நிகழ்ந்தன. லெனின் மறைவு வரை இது தொடர்ந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை எம்மிடம் இல்லாது போனது ஏன்? என ஜக்கியத்தை நியாயப்படுத்த ரஸ்சியப் புரட்சி வரலாற்றை தலைகீழாக மாற்றி தனக்கு சாதகமாக திரித்துள்ளார். ஜக்கிய முன்னணி தொடர்பான எமது சுருக்கமான கருத்தை மேல் வைத்துள்ளோம.; எமது நிலைப்பாட்டையே லெனினும் கொண்டிருந்தார். அதனால் மட்டுமே போல்சுவிக் கட்சியை மட்டும் அவர் கொண்டிருந்தார். இதற்கப்பால் பல கட்சிகள் இருந்தும் அவர்களை தனது நிலையில் நின்று ஈவிரக்கமற்ற வகையில் விமர்சித்தார். லெனின் காலத்தில் பெயர் குறிப்பிட்டு சொன்ன நபர்களுடன் ஒட்டி சில விடயங்களை நாம் பார்ப்போம். அதற்கு முன் நீங்கள் குறிப்பிட்ட மார்க்சினதோ, லெனினதோ..... வேறெந்த மார்க்சிய அறிஞர்களது மேற்கோள்களையோ, உதாரணங்களையோ தவிர்த்துள்ளேன். இவ் விடயத்தை ஆராய்வோம். இது ஒரு சவடால் அடிப்பே. உங்கள் மேல் எழுந்தவாரியான மார்க்சிய விரோதக்கருத்துக்கு லெனின், மார்க்சை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்கள் வைத்துள்ளதாக கூறி அதை சொல்லவில்லையெனக் கூறி ஒரு திணிப்பை லெனினின், மார்க்ஸ் பெயரால் நிகழ்த்தினார்.

 

இது வாசகர்களை பேயர்களாக்கி ஏமாற்றும் ஒரு சதியே. லெனினோ மார்க்ஸ்சோ உங்கள் மார்க்ஸ்சிய விரோதக்கருத்துக்கு உதவப்போவதும் இல்லை. உங்களால் முடிந்தால் மார்க்ஸ், லெனின் கருத்துக்களை உங்கள் கருத்துக்கள் மீது வையுங்கள். வையாது ஏமாற்றி திணிக்க நினைப்பது ஒரு நரித்தனத்துடன் கூடிய சதியே. சக்திமிக்க நபர்கள் லெனின், ஸ்டாலின், புகாரின், ரொஸ்க்கி..... எனக் குறிப்பிட்டதென்பது தவறு. மக்களே தலைவர்களை உருவாக்குகின்றனர். அதிலிருந்தே புரட்சிக்கு தலைமை தாங்குகின்றனர். லெனின் 1917களில் ஒரு ஜக்கியமுன்னணியை உருவாக்கினார். அதற்கு முன் ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒரு கட்சியாக மட்டும் இருந்தபடி மற்றைய கட்சிகள், தனிநபர் கருத்துக்கள் மீது கடுமையான விமர்சனத்தை செய்தார். சோவியத்தில் லெனின், ஸ்டாலின் போன்றோர் உள்ளடங்கிய போல்சுவிக் கட்சி தனக்காக ஒரு திட்டத்தை கொண்டிருந்தது. மற்றவர்களை அதில் இணையக் கோரியது. நாம் அதையே இன்று கோருகின்றோம். 1917களில் மக்களின் புரட்சி அலையுடன் அந்நிய படையெடுப்புடன் லெனின் தலைமையிலான கட்சி சரியாக இருந்தால் சில கட்சிகள் தனிநபர்கள் ஒரு ஜக்கிய முன்னணிக்குள்ளும், சிலர் கட்சிக்குள்ளும் இணைந்தனர். இதுவே வரலாறு. அங்கு அரசுக்கு எதிராக ஒரு அமைப்பாக இருந்ததில்லை. 1907 களில் ரொக்ஸ்சி எந்த போல்சுவிக் கட்சியை கலைக்க கோரினாரோ அதே கட்சியில் 1917களில் இணைந்து கொள்கிறார். 1917களில் இணையும் போல்சுவிக் திட்டத்தை ஏற்றதும் கடந்தகால தனது கட்சியுடன் ரொஸ்கிக்கு எதிராக கடந்த கால தவறுகளை பயன்படுத்துவதை தவிர்க்க கோருகின்றனர். ரொஸ்கி பற்றி 1917 க்கு முன் லெனின் கூறிய ஒரு விடையத்தைப் பார்ப்போம். உதவிப்பணியாற்றும் திரோஸ்கி விரோதியை விடவும் ஆபத்தானவர். பக்கம் 91 -தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-

 

ரொஸ்கி கடந்தகால சுயவிமர்சனத்தை பாவமன்னிப்பாக மட்டும் செய்தபடி தனது கடந்தகால கருத்துக்களையே நிலைநாட்ட முனைந்தார். இதை செய்ய கட்சிக்குள் கட்சியைக் கட்டினார். .இதை 1921 களில் லெனின் தலைமையில் கட்சி எச்சரித்ததுடன் கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கப்பட்டார். இதை ரொக்;;ஸ்சி மாற்றிவிடவில்லை லெனின் மறைந்த பின்னும் தொடர்ந்தது மட்டுமின்றி கட்சிக்குள் கட்சியும், சட்டவிரோதமாக வெளியிலும் கட்சி கட்டினார். இதற்கு ஊடாக ஆட்சியை கைப்பற்ற முனைந்தார். சட்டவிரோத கட்சி தொடர்பாக ரொக்சியின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதியதுடன் தனது சுயசரிதை புத்தகத்தில் தனது மகன் பற்றி குறிப்பிடும் போது தனது மகன் 1922 க்கு பின் சட்டபூர்வ, சட்டவிரோத நடவடிக்கையில் புடம்போடப்பட்டார். எனக் கூறியுள்ளார்.

 

சட்டவிரோத் வழிமுறைகளை கைக்கொள்ள முற்பட்டபின் இரு வேறுபட்ட வர்க்கநலன் சார்ந்த போராட்டத்தின் வளர்ச்சியை இனம் காட்டிவிடுகின்றது. இது ரொஸ்க்கி, புகாரின் போன்றோரின் வாழ்வுவரை தொடர்ந்தது. கட்சிக்கு வெளியில் சட்டவிரோதமாக கட்சியை கட்டின் எப்படியொரு கட்சியாக இருக்கமுடியும். இரண்டு வர்க்கத்திற்கு இடையில் போராட்டம் நிகழ்கின்றது. இதில் ஒன்று அழிவது தவிர்க்கமுடியாதது. நிகழ்ந்த வர்க்கப் போராட்டத்தில் ஸ்டாலின் தலைமையிலான கட்சி எதிர்வர்க்கத்தை அழித்தபோது சில தவறுகளை இழைத்துள்ளது. வர்க்கப்போராட்டம் சட்டவிரோதவழிகளை கைக்கொள்ளும் போது ஒரு வர்க்கம் இன்னும் ஒரு வர்க்கத்தை அழிக்கும். இதுவே இயங்கியல். வசந்தன் இன்னும் ஒரு இடத்தில் லெனின் மறைவின் பின் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டது என அப்பட்டமான ஒரு பொய்யை திணிக்க முயன்றுள்ளார் .ரொக்ஸ்சி புகாரின் போன்றோர் சட்டவிரோதமாக இயங்கியபடி கட்சிக்குள் தமது வாழ்வு இருக்கும் வரை ஒரு குழுவாக இருந்து தமது கருத்தை வைத்துப் போராடினார். இவை சோவியத் அனைத்து ஆவணங்களிலும் உள்ளது. யுத்தகால இடைக்காலப் பொருளாதாரம், கூட்டுப்பண்ணை சோசலிசத்தை அமுல் படுத்துவது, .... என லெனின் மறைந்த பின் ஸ்டாலின் அமுல் செய்தபோது அதைத் தீவிரமாக எதிர்த்து கட்சிக்குள் போராடினார். இவையெல்லாம் இருக்க லெனினின் பின் கருத்து சுதந்திரம் இல்லை எனச் சொல்ல வருவது என்பது வரலாற்றை புதைத்துவிட முயல்வதே. ஸ்டாலின் சோசலிச கட்டுமானத்தில் தவறுகள் இழைத்தபோதும் மார்க்சியத்தை உயர்த்தி பிடித்தபடி மரணம் வரை வர்க்கப்போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர். ரொஸ்கி செம்படைக்கு தலைமை தாங்கினார். உண்மையே. அன்று ரொஸ்கி இல்லையெனின் வேறொருவர் தலைமை தாங்கியிருப்பார். இரண்டாம் உலகயுத்தத்தில் ஸ்டாலின் செம்படைக்குத் தலைமை தாங்கினார். தலைவர்கள் மக்களால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதான் உண்மை. நடைமுறைப்போராட்டத்தில் அனைத்தும் தீர்மானிக்கபடுகிறது என்பது உண்மையே. அதற்காக திட்டமின்றி நடைமுறையை நிகழ்த்த முடியாது. அரசு எதிரியாகத் தெரிந்த காலத்தில் நடைமுறைப்போராட்டத்தை முன்னெடுத்த அனைவரும் வாழ்வை நாம் பார்த்தும், ஏன் பார்க்காதது போல் நடிக்கவேண்டும். இன்று புலிகள், துரோகிகள் அரசுக்கு எதிராக போராட (எத்திட்டமுமின்றி) கோருவது மீண்டும் ஒரு புலியை உருவாக்க கோருவதே. புலிகள் எப்படி உருவானார்கள் என்பதை ஆராய்ந்து திட்டத்தை உருவாக்குவதன் ஊடாக நாம் மூன்றாவது பாதை உருவாக்கமுடியும்.