05052021பு
Last updateஞா, 02 மே 2021 10pm

ஆயிரம் கவிஞர்கள் கவிதைத் தொகுதியைப் படிக்கும் வேளையில்

அன்றைய கவிஞர்

இயற்கை அழகைப் பாடினார்

பனிப்படலங்கள், பட்டுப் பூக்கள்

பால் நிலா, பாடிவரும் தென்றல்

பொழியும் மழைத்துளிகள்

பச்சை வண்ணத் மலைத் தொடர்கள்,

பாயும் ஆறுகள்---அவர்களின் பாடல்கள்

இவைகளைத் தொட்டன

ஆனால்.........

இரும்பு எஃகுமே

இன்றைய நிலையில்--நமது

பாட்டின் இதயக் கருப்பொருட்கள்!

கவிஞனின் பணி--

கவிதை மட்டுமா.....?

ஒரு போராட்டத்தைத் தலைமை ஏற்று

நடத்தவும் வேண்டும்.

 

---ஹோ-சி--மின்-----

 

 


பி.இரயாகரன் - சமர்