04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

அரசுக்கு ஆதரவு வழங்குவதே 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றனர் 'ஜனநாயகவாதிகள்"

சுத்திசுத்தி கடைசியில் புலியெதிர்ப்பு, தன் இலக்கு அரசை ஆதரிப்பதுதான் என்பதை வெளிப்படையாக சொல்லத்தொடங்கியுள்ளனர். புலிக்கு மட்டும் இன்று சேடமிழுக்கவில்லை, புலியெதிர்ப்புக்கும் வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. அரசின் பின்னால் அம்மணமாகவே பவனிவரத் தொடங்கியுள்ளனர்.

 

புலிகள் சேடமிழுத்தபடி தனக்கு தானே கட்டிய தன் சொந்த பாடையுடன் தனது இறுதி யாத்திரையைத் தொடங்கியுள்ளது. எதிரியுடன் சேர்ந்து குழிவெட்டிய கூட்டம், இன்று குழிக்குள் தானும் இறங்கி நிற்கின்றது. இந்த புதைகுழிக்குள் புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்புக் கும்பலும் சேர்ந்தே புதைகின்றது.

 

ஜனநாயகம் கிடைத்தால் மக்களுக்காக போராடப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்த புலியெதிர்ப்புக் கும்பல்தான், இன்று அரசுக்கு பின்னால் அணிதிரளுகின்றனர். தாம் மக்களுக்காக போராட முடியாதவாறு, புலிகள் ஜனநாயகத்தை மறுப்பதாக கூறித் திரிந்த கும்பல், இன்று பேரினவாதத்தை ஆதரிப்பதுதான் 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றது.

 

இன்று புலிகள் தன் யுத்த இறுதிக் காலத்தில் அரசுடன் சேர்ந்து மற்றொரு துரோகத்தை இழைக்காமல் முழுமையாக போராடி மடிந்தால், அரசுக்கு எதிரான உணர்வுடன் தமிழ் சமூகம் நீடிக்கும் என்ற கவலை புலியெதிர்ப்பு கும்பலுக்கு. அதுதான் 'பொறுப்புள்ள அரசியல்" என்பது, அரசை ஆதரித்து தமிழ் மக்களை அரசின் பக்கம் கொண்டு வருவதுதான் என்கின்றனர்.  இதையே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்றனர். 

 

இதற்காக மக்களின் அவலங்களையும், துன்பங்களையும் காட்டி கடைவிரிக்கின்றனர். நிவாரணம், இடைவெளி, உடனடித்திட்டம், நீண்டகாலத் திட்டம் என்று, அரசை ஆதரிக்கக் கோரும் மலிவு விளம்பரம். மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களை ஆதரிப்பதன் மூலம், நிவாரணம் பெறமுடியும் என்று காட்ட முனைகின்றனர். எல்லாம் புலிகளால் வந்த வினை என்ற சொல்ல முனைகின்றனர். இவை அரசால் அல்ல என்று கூறி, அதை ஆதரிப்பதுதான் 'பொறுப்புள்ள அரசியல்" என்கின்றனர்.

 

இன்று புலியெதிர்ப்பு புலம்பெயர்ந்த அரச எடுபிடிகள், இலங்கை அரசை சந்திதத்தைத் தொடர்ந்து இது முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களை ஏமாற்றி அரசுக்கு சேவை செய்யவைக்கும் அரசியல் கடமையை, அரசு இவர்களிடமும் ஒப்படைத்துள்ளது.   உடனே அகதிமுகாம் வாழ்க்கை, மக்கள் என்று, புதுப் புலுடா விடத் தொடங்கியுள்ளனர். புலியெதிர்ப்புத் தளங்கள், மக்கள் பற்றி கதைகள் பல சொல்லத் தொடங்கியுள்ளது.   

 

இந்த வகையில் எஸ்.மனோரஞ்சன் தன் புலியெதிர்ப்பு அரசியலுக்கு ஏற்ப, 'பொறுப்புள்ள புதிய தமிழ் அரசியல் தலைமை?" பற்றிப் பேசுகின்றார். சரி 'பொறுப்புள்ள" அந்த அரசியல் என்ன? அது வேறு ஓன்றுமல்ல, இலங்கை அரசுடன் கூடிநிற்றல் தான் தமது 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றார். தமிழ் மக்களுடன் கூடி நிற்றல் அல்ல. தமிழ் மக்களை அடித்தும், உதைத்தும், கொன்று குவித்தவனுடன் சேர்ந்து, 'பொறுப்புள்ள" வகையில் அடங்கியொடுங்கி இருக்க கற்றுக் கொடுப்பதுதான் இன்று 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றனர்.

 

முன்னைநாள் அரச பிரச்சாரப் பிரிவில் வேலை செய்த எஸ்.மனோரஞ்சன், அன்று அவர் வைத்த 'அழிவு அரசியல்" தத்துவத்துடன் மீண்டும் களமிறங்குகின்றார். அரசுடன் கூடிநிற்கும் எட்டப்பர் கூட்டத்தின் சார்பில், அவர்களின் அரசியல் கடமை பற்றி பேசுகின்றார். இதில் அவர் 'உடனடி வேலைத்திட்டமாக தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துதல் யுத்த மோதல் அற்ற சூழலொன்றுக்குள் அவர்களை வாழ வைத்தல். அடுத்த கட்டமாக கடந்த முப்பது வருட யுத்த சூழலால் சிதைந்து போயுள்ள பொருளாதார வாழ்வையும் அச் சமூகத்தின் அக ஜனநாயக கட்டுமானங்களையும் கட்டியெழுப்புதல். இந்த இரண்டு கட்ட வேலைத்திட்டங்களுக்கு சமாந்தரமாக முன்றாம் கட்டமான நிரந்தர தீர்வுக்கான முயற்சியாக அரசியல் அதிகாரப் பரவலாக்கத்துடனான யாப்பு மாற்றம் கொண்டுவரப்படுவதற்கான பணிகள் நகர்த்தப்படல் வேண்டும். இலங்கையில் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைவாக்குகள் அவசியம் என்னும் தடைக்கல் இருப்பதனால் அந்தச் சிக்கல் அவிழ்க்கப்படும் வரை 13ம் திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண சபை அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுவது அமுல்படுத்தப்படல் அவசியமாகின்றது. இந்தத் திசையை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களையும் ஆதரவையும் வழங்குவதே இன்றைய நிலையில் பொறுப்புள்ள தமிழ் அரசியல் தலைமைகள் செய்ய வேண்டியதாகும்." என்கின்றார். ஒரு அரசு தன் குடிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை காட்டி, இதற்காக நாம் அரசுடன் சேர்ந்து நிற்பதும், அதைப் பிரச்சாரம் செய்வதும் அவசியமென்கின்றார். சுத்த மோசடிகாரன் தான் இதை காட்டி பிழைப்பான்.

 

இப்படி இவை தான் இந்த புலியெதிர்ப்பு கும்பல்கள் கூறுகின்ற ஒரே தீர்வு. அரசுடன் கூடி பொறுக்கித் தின்னும் கும்பல் வைக்கும் அரசியலும் இதுதான். மக்களை அடித்தும், நொறுக்கியும், சிதைத்துவிட்டு, நிவாரணம் தீர்வு பற்றியெல்லாம் பேசுகின்றனர். இதை பயங்கரவாத அரசு செய்த போது, அதற்கு துணையாக நின்று இந்த மக்களை ஒடுக்க உதவியவர்கள் தான் இந்த மக்கள் விரோதிகள், இன்று புது வே~ம் போட்டு நாடகமாட முனைகின்றனர். அரசுக்கு விசுவாசமாக மக்கள் இருக்க வேண்டும் என்கின்றனர். அதற்கு நிவாரண நாடகம். பொலிசைக் கொண்டு மக்களை அடிக்கும் அரசுகள், விசாரணைக் கமி~ன் அமைப்பதும், நிவாரணம் வழங்குவது போன்ற கூத்து அரசியல்.   

 

அரசுக்கு 'ஆதரவையும் வழங்குவதே" அவசியம் என்று கூறுகின்ற பேரினவாத புலியெதிர்ப்பு எடுபிடிகள், மக்கள் பற்றிய வாழ்வு சார்ந்த சித்திரங்கள் அனைத்தும் அரசபயங்கரவாதத்தின் மொத்த விளைவாகும். சொந்தப் பிரதேசத்தில் இருந்து தமிழ்மக்கள் மேல் குண்டு போட்டு  துரத்தியடித்தவர்கள் இந்த அரச பயங்கரவாதம் தான். (இங்கு முஸ்லீம் மக்களை, புலிகள் துரத்தியடித்தனர்). தமிழ்மக்களின் பொருளாதாரத்தை தன் இனவொடுக்குமுறை மற்றும் யுத்த பயங்கரவாதம் மூலம் சிதைத்ததும், இந்த அரசுதான். இதைத்தான் 'பொறுப்புள்ள' வகையில் அரசை ஆதரித்து, பெறும் எலும்பைக் கொண்டு நிவாரணம் வழங்கப்போகின்றனராம். 

 

தமிழ்மக்களின் அரசியல் தீர்வை வழங்க மறுப்பதும் இந்த அரசுதான். கடந்த 60 வருடமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்க்காத இந்த அரசுக்கு, இவர்கள் 'பொறுப்புள்ள" ஆதரவு கொடுத்தவுடன் தீர்க்கும் என்று கூறுவது, தமிழ் மக்களை ஏமாற்றி அரசை நக்க வைப்பதாகும். இப்படி அரசு தம் அரசியல் பினாமிகள் மூலம், தமிழ் மக்களை ஏமாற்றும், சதி அரசியல் இன்ற அரங்கேறுகின்றது. இதை வைத்து புலம்பெயர் புலியெதிர்ப்புக் கும்பல், தங்கள் சொந்த அரசியல் பிழைப்பை நடத்த முனைவது வெளிப்படையானது.

 

1995 இல் சந்திரிக்காவை "விடிவெள்ளியாக" காட்டி அவரின் முந்தானையில் தொங்கிக் கொண்டு திரிந்தவர்தான் இந்த மனோரஞ்சன். பேரினவாத அரசின் பிரச்சார பிரிவில் வேலை செய்த காலத்தில் புலியின் 'அழிவு யுத்தம்" என்ற கோட்பாட்டை வைத்ததுடன், அதை அரசின் கெலியில் ஏறி யாழ் பல்கலைக்கழகத்தில் இறங்கி நின்று பிரச்சாரம் செய்தவர்தான். இன்று புலம்பெயர்ந்த 'புத்திஜீவிகள்" என்ற வே~த்தை அரசு அவர்களுக்கு கொடுத்துள்ளது. 'பொறுப்புள்ள" அரச கூலியாக களத்தில், மனித அவலத்தை வைத்து அரசியல். பிணத்தைக் காட்டி புலி அரசியல் செய்ததுபோல், மனித அவலத்தைக் காட்டி அரசியல். இதற்கு கட்டம்கட்டமான நிவாரண அரசியல் பேசத்தொடங்குகின்றனர். அன்று எம்முடன் இருந்தபோது மார்க்சியம் பேசியவர்கள், அந்த அறிவைக் கொண்டு அரசுடன் சேர்ந்து பித்தலாட்ட அரசியல் பேச முனைகின்றனர்.  

 

ஏமாற்றியே குழந்தைக்கு உணவூட்டும் எம் சமூகம் போல், எல்லாத்துக்கும் புலியைக் காட்டும் இந்தக் புலியெதிர்ப்புக் கும்பல். இதன் மூலம் அரசுக்கு சார்பாக, மக்களை வழிகாட்ட முனையும் கும்பல், உடனே மக்களைப் பார் என்கின்றது. கடந்த காலத்தில் மக்களைப் பற்றி அக்கறையற்று அரசின் பின் நின்ற இந்தக் கும்பல், இன்று அரசுக்காக மக்களைக் காட்டுகின்றது.  இப்படி அரசுக்கு சார்பாக 'விடுதலை தொடர்பான எல்லா அரசியல் நம்பிக்கைகளும் இழந்துபோன நிலையில், தங்களை நிம்மதியாக தங்கள் ஊர்களில், தங்கள் வீடுகளில், தங்கள் குழந்தை குட்டிகளுடன் வாழ விடுங்கள் என்கின்ற நிலைக்கு சாதாரண தமிழ் மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்" இதை எதற்காகக் சொல்லுகின்றனர். அரசுக்கு சார்பாக, தமிழ் மக்கள் கையேந்திNயு நிற்க வேண்டும் என்ற அக்கறையின் பால், இந்த வே~ம் இப்படி குலைக்க வைக்கின்றது. 

 

மக்கள் பெயரால் புலுடா விடாதீர்கள். மக்கள் இந்த நிலையை அடைந்துவிட்டனர் என்று சொல்லி, நாய் பிழைப்பு அரசியல் செய்கின்றனர். சரி நீ, நீங்கள் எப்படி 'விடுதலை தொடர்பான எல்லா அரசியல் நம்பிக்கையை" கைவிட்டு, அரசின் பின் நக்கும் துரோகியானாய், துரோகியாகினீர்கள். நீ, நீங்கள் பிழைக்க, மக்கள் பெயரில் கூத்தாடாதீர்கள். தமிழ் மக்களை இந்த நிலைக்கு தள்ளியவர்களில் முதன்மையானவர்கள், நீங்கள் ஆதரிக்கும் இந்த அரசுதான். இதற்கு துணையாக நீங்கள் நின்றீர்கள். இந்த நிலையை ஏற்படுத்தியதில், புலியின் பங்கு குறைவானது. மக்களை  இந்த நிலைக்கு உருவாக்கி அரசுடன் கூடி நின்று கொண்டு, மோசடி செய்கின்ற எழுத்துக்கள் மூலம் மக்களைச் சொல்லி பிழைப்பதுதான் அரசியல் ரீதியான சிதைவின் மற்றொரு அடிப்படையாகும். 

 

உனதும் உங்களதும் சொந்த துரோகத்தை மூடிமறைத்துக் கொள்ள 'தமிழ் சமூகத்தின் இன்றைய இந்த ஒருமுகப்படாத நிலைமைக்கு காரணமாக சிங்கள் அரசாங்கத்தையோ, இந்திய அரசாங்கத்தையோ வெளிநாட்டு சக்திகளையோ குறைகூறித் தப்பிக்கொள்ள முயலுதல் போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. எமது சமூகத்தின் இந்த அவல நிலைக்குப் பிரதானமான காரணம் தொலைநோக்கற்ற அதையும் மீறி பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளின் கடந்தகால செயற்பாடு என்றால் தவறல்ல. அதிலும் அன்றைய தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி வழிவந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளே என்றால் அதில் தவறில்லை. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போலே தமிழ் சமூகத்தின் ஏகப்பிரதிநிதித்துவப் பாத்திரத்தை சூடிக்கொண்ட புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்தன என்றால் அது மிகையாகாது." என்கின்றாய்.

 

இதைக் கூறும் நீ, நீங்கள் உன் அரசியல் நேர்மையை முதலில் உரசிப்பார். நீ, நீங்கள் யாருடன் நிற்கின்றீர்கள் என்பதைப் பற்றி முதலில் பேசு. நீ பாதிக்கப்பட்ட மக்களுடன், மக்கள் அரசியலுடன் தான் நிற்கின்றாயா? இல்லை. பிறகு எதற்கடா, உனக்கு உங்களுக்கு மக்கள் பற்றிய அக்கறை வேண்டிக்கிடக்கு. முதலில் மக்களுடன் நில். பின் அவர்களைப் பற்றி பேசு. அரசுடன் நின்று கொண்டு, மக்களைப் பற்றி பேசுகின்ற நீயோ, நீங்களோ மக்களை ஏமாற்றும் மாபெரும் மோசடிக்காரர்கள்.  

    

அரசுடன் நிற்கும் உன் மோசடிக்காகவே நீ இப்படி எழுதுகின்றாய் அதில் 'தமிழ் சமூகத்தினுள் அன்று கனன்றுகொண்டிருந்த சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் மற்றும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தையும் மிதித்து நொருக்கியபடியே அன்றைய தமிழர் தேசிய உரிமைப் போராட்டமானது ஒருவித தமிழ் வெறியுடன் தூண்டிவிடப்பட்டது." சரி இந்த உண்மையை நீ நீங்கள் சொல்ல, உனக்கு உங்களுக்கு இன்று என்ன அரசியல் தகுதி உண்டு. இதை வைத்து அரசுக்காக பிழைப்பு நடத்துகின்றீர்கள். 

 

நீ, நீங்கள் இந்த அரசியலுக்காகவா, உன் உங்கள் அரசியல் வரலாறு முழுக்க மக்களுடன் நிற்கின்றீர்கள்;? சொல்;. இல்லை என்பது தான் உண்மை. இதைப் பயன்படுத்தி பிழைக்க  நினைக்கின்றாய். அரசுடன் கூடி நிற்கும் நீ, 'அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களையும் ஆதரவையும் வழங்குவதே இன்றைய நிலையில் பொறுப்புள்ள தமிழ் அரசியல் தலைமைகள் செய்ய வேண்டியதாகும்." என்கின்றாய். பிறகு 'சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டம் மற்றும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை" பற்றி பேசுவது பிழைப்புவாத மோசடி. மக்களை ஏமாற்ற கையாளும் சுயவக்கிரம். 

 

அன்று 'தமிழ் வெறியுடன்" அவர்கள் செய்தார்கள். இதை நீ, நீங்கள் உங்கள் காட்டிக் கொடுப்புடன் செய்கின்றீர்கள்;. இதில் அன்று இன்று, எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது. 'சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் மற்றும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தையும்" குழிபறிக்கும் இன்றைய சூழ்ச்சியே 'பொறுப்புள்ள" அரசை ஆதரிக்கும் அரசியல்.

 

இதை தம்மைப்போல் களத்தில் இறங்கி செய்யக் கோருகின்றனர். 'யுத்தத்தின் கிடுக்கிப்பிடிக்குள் பலவந்தமாக அகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் சமூகம் இன்று முகம் கொடுத்துள்ள கொடிய அவலமானது வெறும் கட்டுரைகளில், அறிக்கைகளில் எழுதியோ படித்தோ புரிந்துகொள்ளக்கூடியதல்ல. அந்த அவலத்திருந்து அவர்களை உடனடியாக மீட்பதே இன்று எமது கடமையாகின்றது. அந்த மூச்சுத்திணறல் நிலையிலிருந்து அம் மக்கள் சமூகத்திற்கு ஒரு சொற்ப அளவேனும்  விடுதலை கொடுப்பதே இன்றைய அரசியல் கடமையாகவும் எம்முன் முன்நிற்கின்றது" .

 

வாருங்கள், அரசுக்கு துணையாக களத்தில் நிற்போம் என்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்ற, உங்கள் அறிவைக் கொண்டு களத்தில் செயல்படுங்கள் என்கிறார். இதன் முதல் சுற்றுக் கூட்டத்தைத்;தான், அண்மையில் இலங்கை அரசு நடத்தியது. தமிழ் மக்களை தமக்கு அடிமையாக்க, புலம்பெயர் கைக்கூலி 'புத்திஜீவி"களுக்கு அழைப்பு. இதைத்தான் எஸ்.மனோரஞ்சன் 'தமிழ் சமூகம் இன்று முகம் கொடுத்துள்ள கொடிய அவலமானது வெறும் கட்டுரைகளில், அறிக்கைகளில் எழுதியோ படித்தோ புரிந்துகொள்ளக்கூடியதல்ல." என்கின்றார். வாருங்கள் 'பொறுப்புள்ள' வகையில் பாசிட் மகிந்தாவைப் பலப்படுத்தி, தமிழ்மக்களை ஓடுக்குவோம் என்கின்றார்.

 

தமிழ்மக்களை ஏமாற்ற, அதற்கான 'சூழலை உருவாக்குவதற்கான திசையில் நிலைமைகளை நகர்த்துவதற்கு வாய்ப்பாக உடனடி வேலைத்திட்டங்கள். இடைக்கால வேலைத்திட்டங்கள். நீண்டகால வேலைத்திட்டங்கள் என மூன்று கட்டங்களாக பணிகளை நகர்த்துவதற்கு வகை செய்தலே இன்றைய பொறுப்புள்ள அரசியல் பணியாக இருத்தல் வேண்டும்." என்கின்றார். இப்படித்தான் தமிழ்மக்களை ஏமாற்றி, அரசுக்கு எதிரான உணர்வில் இருந்து அரசுக்கு சார்பாக வெல்ல முடியும் என்கின்றார். இதைத்தான் இந்த அரச பிரச்சாரப் பிரிவு  கோமாளியான மனோரஞ்சன், தமிழ் மக்களுக்கு உரத்துச் சொல்கின்றான்.

 

நாயை கட்டிப் பட்டினி போடுவதும், பின் எலும்பைப் போடுவதும் படிப்படியாக  சதையைப்போட்டு வாலட்ட வைப்;பதுபோல், தமிழ்மக்களுக்கு முதலில் எலும்பைப் போட்டு கட்டம் கட்டமாக வளர்ப்பது பற்றிய தத்துவத்தை முன்வைக்கின்றார். தமிழ் மக்களை பேரினவாத அரசின் நாயாக வளர்ப்பது பற்றிய புலியெதிர்ப்பு 'ஜனநாயக" அரசியல் இதுதான்.

 

பி.இரயாகரன்
11.04.2009


பி.இரயாகரன் - சமர்