உருவத்தைக் கடந்த
ஏதோ ஒன்று இருந்திருக்கிறது.
மூடி மறைக்கப்பட்டு,
வானும் பூமியும் தோன்றுமுன்,
அவ்வளவு அமைதி; அவ்வளவு தனிமை,
எங்கும் வியாபித்து, எவ்வித மாற்றமும் இன்றி,
உலகின் தாய் என்றுதான் இதை
உருவகப்படுத்த முடியும்.

 

அதன் பெயர், நான் அறியேன்.
பெயரிட வேண்டுமானால் ´டௌ´ என்பேன்.
பிரபஞ்ச இயக்கம் என்பேன்.
அதன் விலாசம் விரும்பி நிர்பந்தித்தால்
´மகத்தானது!´ என்றுதான் சொல்ல முடியும்.

 

மகத்தான ஒன்று என்பது -
கலகலப்பானது - இயக்கம், அதன் பொருள்.

 

இயக்கம் என்றாலோ அப்பாலுக்கு அப்பால் செல்வது
என்பது அதன் அர்த்தம்.
அப்பாலுக்கு அப்பால் செல்கிறது என்றாலோ
திரும்பி வருவது என்பது அதன் பொருள்.

 

எனவே
இப்பிரபஞ்ச இயக்கம் மிகப் பெரிய விஷயம்.
வானமும் பூமியும் மிகப் பெரிய இயக்கள்கள் தான்.
தலைவனும் அப்படித்தான்.
இவைதான் இப்பிரபஞ்சத்தின் நான்கு பெரிய அம்சங்கள்.

 

அதில் தலைமைப் பண்பும் ஒன்று.

 

மனிதன் பூமியின் போக்கில் செயல்படுகிறான்.
பூமியோ வானின் இயக்கத்துக்கு ஏற்பச் செயல்படுகிறது.
வானமோ பிரபஞ்ச இயக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு.
பிரபஞ்ச இயக்கமோ தானே இயங்குகிறது - தன் திட்டபடி.


 சீனதத்துவஞானி ´லாட்சு.´