04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும், பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம்

ஒருபுறம் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாதத்தால் ஏன் எதற்கு என்று கேள்வியின்றி கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் புலிகளால் மக்கள் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தப்பி வரும் மக்களையே புலி சுட்டுக் கொல்லுகின்றது. இப்படி இரு பாசிசங்கள், மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதங்கள் எம் மண்ணில் கோலோச்சி நிற்கின்றது.

 

 

இதுவோ ஒரு குறித்த பிரதேசத்தில் நடக்கின்றது. மறுபுறங்களில் எத்தனையோ மனித அவலங்கள், சோகங்கள்.

 

இதையெல்லாம் அறுவடை செய்யும் வண்ணம், புலம்பெயர் 'ஜனநாயகக்" கும்பல் பேரினவாதத்தை நக்குகின்றது. இதற்காக சிங்கப்பூரில் இரகசியமாக ஒரு கூட்டம்  கூட்டப்படுகின்றது. இலங்கை அரசின் இன அழிப்புச் சதியுடன் கூடிய இந்த இரகசிய கூட்டம், இந்த மாத இறுதியில் எம்மக்களுக்கு தெரியாது அரங்கேறுகின்றது. பார்க்கவும், துரோகிகளுக்கு அரசு அனுப்பிய அந்த இரகசிய இனஅழிப்பு கூட்ட ஆவணத்தை. தமிழினத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் அழைப்பும் மற்றும் இரகசிய நிகழ்ச்சி நிரலும்.

 

{pdf=http://www.tamilcircle.net//document/GovtENDLF/GovtSingapore1.pdf|750|800}

 

{pdf=http://www.tamilcircle.net//document/GovtENDLF/GovtSingapore2.pdf|750|800}

 

இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்பு நடத்தும் அரசு, தமிழ் மக்களின் பெயரில், அவர்களின் உரிமையின் பெயரில், நடத்தும் கூத்து இது. 

 

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையே மறுக்கும் அரசு, இந்த உரிமை மறுப்பை எப்படி எந்த வழியில் நடைமுறைப்படுத்துவது என்பதுதான், இந்தக் கூட்டத்தின் அரசியல்  நோக்கமாகும். மக்களின் உரிமையை மறுப்பது பற்றி ஒரு அரசியல் சூழ்ச்சி இது. எந்த இரகசியமான சதிப் பாணியிலான அனைத்து அணுகுமுறையும், குறிப்பாக அந்த மக்களுக்கு எதிரானதே. இது எம் மக்களின் வாழ்வை நிர்ணயம் செய்ய முனைகின்றது. புலம்பெயர்ந்து வாழும் சில உதிரிகள், 'ஜனநாயகத்தின்" பெயரில் பொறுக்கித் தின்ன சிங்கப்பூர் செல்லுகின்றனர்.   

 

இதற்காக புலம்பெயர் 'ஜனநாயகம்" பேசும் பிழைப்புவாதிகள், தமிழ் மக்களுக்கு தெரியாது  இரகசியமாகவே இதை கூடிச் செய்கின்றனர். 'ஜனநாயகம்" பேசிய கிழட்டு நரிகள், இந்தச் சதித் திட்டத்தின் மூலம், தமிழ் மக்களுக்கு எதிராக மிக இரகசியமாக அரசுடன் சேர்ந்து செயல்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு குழிபறிப்பதில், தன்முனைப்புடன் செயல்படுகின்றனர்.

 

இதே போன்று  மற்றொரு கூட்டத்தை, அடுத்த மாதம் இந்தியாவில், இந்தியக் கைக்கூலிகளான ஈ.என்.எடி.எல்.எவ் நடத்துகின்றது. பார்க்க கூட்ட அழைப்பை.

 

{pdf=http://www.tamilcircle.net//document/GovtENDLF/EndlfBangalore.pdf|750|800}

 

இப்படி தமிழ் மக்களின் பெயரில், தமிழ் மக்களை சார்ந்து நிற்காத கும்பல்கள் எல்லாம், இரகசியமாக கூடி வருகின்றன. சதிகளையும் சூழ்ச்சிகளையும் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர். இதில் பங்கு கொள்பவர்களை இனம் காண்பதும்;, அரசுடன் கொண்டுள்ள துரோக உறவுகளையும் இனம் காட்டி, அம்பலப்படுத்துவதும் அவசியமானது.

 

பி.இரயாகரன்
22.03.2009
         

 

 


பி.இரயாகரன் - சமர்