மருத்துவ மனைகள்
மயான பூமிகளாய்
கல்வி நிலையங்கள்
கொலை களங்களாய்
மழலைகளின் பிஞ்சு
உடல்கள் ஊனங்களாய்
மக்களின் வாழ்வு மரண
போராட்டங்களாய்
பற்றி எரியும் ஈழம்
பதறி எழு என் தமிழகமே!அறுக்கப்பட்ட எம்
பெண்களின் மார்பகங்கள்வெடிகுண்டிகளால்
சிதைக்கப்பட்ட எம்
பெண்களின் யோனிகள்மின்சாரம் பாய்ச்சப்பட்டு
மரித்துபோன ஆண்குறிகள்விடாது துரத்தும்
சிங்களகொலைவெறிக் கூட்டம்வேடிக்கை பார்க்கும்
சர்வதேச சமூகம்
அநாதைகள் அல்ல
எம்மக்கள்
ஆர்ப்பரித்து எழு
என் தமிழகமே!இராஜபக்சேவுக்கு
நன்றி சொல்லும் ஜெயலலிதாபுலி பூச்சாண்டி காட்டும்
சுப்ரமணிய சுவாமிசந்திரிகாவிடம் விருது
பெற்ற இந்து ராம்ஷோபாசக்தியின்
கட்டுரை வரையும்
சி.பி.எம்தமிழன ஒழிப்பில்
சிங்களத்துடன்
கூட்டு சேரும்
பார்ப்பன கும்பல்பகைமுறிக்க
படை கொண்டு
எழு என் தமிழகமே!மகிழ்ச்சியை மறந்த மனம்
உடமைகள் இழந்த அவலம்உறவுகளை துளைத்த வலி
உணர்வுகள் மரித்துபோன இதயம்கேட்பாரில்லாத மக்கள் கூட்டம்
கூடவே அகதி என்ற பட்டம்கார் இருளாய்
கவ்விருக்கும்
சிங்கள இனவெறி கூட்டம்
பற்றி எரிகிறது தமிழீழம்அதில் பெட்ரோல்
ஊற்றுவது இந்தியம்எம்மக்கள் கொலுத்த
படுவது தெரிந்தும்
மவுனம் சாதிக்கிறான்
கருணாநிதிபதவி சுகத்துக்காக
இனத்தை விற்கும்
விபச்சார பன்றிகளை
கரிசமைக்க
ஓங்கி எழு என் தமிழ்கமே!சித்திரவதை முகாம்களில்
எம் இளைஞர்கள்பாலியல் வன்புணர்ச்சியில்
சிக்கும் எம் பெண்கள்செம்மணி புதைகுழிகளில்
ஈழத்தின் கிராமங்கள்
சிங்கள தாக்குதலால்
சிதைக்கப்படும் வன்னிகாடுகள்வாழவிரும்பும்
மக்களை குருரத்தில்
வதைக்கும் பேய்களை
ஓட்டிட விழித்தெழு
என் தமிழகமே!கிழந்தது கிளிநொச்சி
முரிந்தது முல்லைத்தீவு
அழிந்தது ஆணையிறவு
படுத்தது பரந்தன்இனி வன்னி
மண்டலம்
எங்களின் மண்டலம்
என்கிறான்
மகிந்தாஅவன் புன்சிரிப்பின்
பின் எம்மக்களின்
அழுகை ஓலம்அவன் மீசை திருகளின் பின்
கற்பழிக்கப்பட்ட
எம் தேசம் கதறும் சத்தம்
கேட்கவில்லையா?
கருணை கொண்டு எழு
என் தமிழகமே!வாழ்வதற்கு உத்ரவாதமற்ற
வன்னிகாடுகொட்டும் பேய்
மழையின் பெருவெள்ளம்கொடும் மிருகங்களின்
மாமிச பசிஏர் வரிசையில்
பட்டினி சாவுகள்
உதவி என்ற பெயரில்
ஏகாதிபத்தியங்களின்
ஊடுறுவல்எம்மக்கள் கேட்பது
உதவியல்ல
சுயநிர்ணய உரிமை என்ற வாழ்வைபெற்றுதர புறப்படு
என் தமிழகமே!முத்துக்குமார், ரவி
தியாகத்தின் வரிசை
நீள்கிறது
தமிழகம் பொங்கி
எழுகிறது.போராட்டங்களின்
வலிமை கூடுகிறது.தீ பரவட்டும். தீ பரவட்டும்
தியாகங்கள் பெருகட்டும்அரை நூற்றாண்டு கால
சிங்கள மேலாதிக்க
சிறையை விட்டு
எம் ஈழம் விடுதலை பெறட்டும்!-நக்சல்பாரியன்
விழித்தெழு என் தமிழகமே!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode