06222021செ
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

ஆரியர் - திராவிட உறவும், யூத பெருமையும்

வரலாறு பற்றிய பிரச்சனைகளுக்கு சில கருத்துக்கள் கூறவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக யூதர்களை உதாரணம் காட்டுவதையும்> ஆரிய திராவிட மோதல்கள் பற்றிய கருத்துக்கள் பல வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றுது. இவற்றை வரலாறு பற்றி தவறான புரிதலை போக்க வேண்டியதும் அவசியமான தேவையாக இருக்கின்றது.

 இறுதிக் கட்டம் என்று புலம்பெயர் புலிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்ற வேளையில் ஆரிய திராவிட முரண்பாடு என்பது 3500 வருட வரலாறு கொண்டதாக பிரச்சாரப்படுத்தப் படுகின்றது. இதுபற்றி புரிதல் சமூகத்தில் இல்லை. இவ்வாறான வேளையில் வரலாற்று திரிபுகள் சமூகத்தில் பல வேண்டாத பிரச்சனைகளைக் கொண்டுவந்துவிடும்.

திராவிட ஆரிய சிந்தனையை தற்பொழுது முதலில் கிளறிவிட்டது சிறிலங்கா இராணுவ அதிகாரியாகும். இவரே தற்பொழுது இலங்கை சிங்களவருக்கே சொந்தம் எனக் கூறினார். இவரின் வரலாற்றுக் கூறு கண்டிக்கப்பட வேண்டியதே. இத்துடன் இவர்களின் ஆரிய திராவிட இனக்கூறுபற்றிய மிகைப்படுத்தல் பற்றிய வெளிப்பாடு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ஊறியிருப்பதும் இனப்பிரச்சனை தீர்ப்பதற்கு பாதக இருக்கின்றது. ஆயுதங்களை விட ஆபத்தானது விசமத்தனமாக கருத்துக்களாகும். இவ்வகையாக விசக் கருத்துக்களை பல்முனைச் செயற்பாடுகள் மூலமே எதிர்த்துப் போராட முடியும்.

இன்று எம்மக்கள் மத்தில் இருக்கின்ற ஆரியச் சிந்தனை அல்லது ஆரியவகை உலகக் கண்ணோட்டம்> சமஸ்கிருதமயமாதல் இவைகளை எமது சமூத்தில் இருந்து எதிர்கொள்வதும்> இலங்கையில் இருக்கின்ற சிங்களவர்கள் எல்லோருமே ஆரிய இனத்தின் வழித்;தோன்றல்கள் என்ற கருத்தியலையும் எதிர்க் கொள்வதானது போராடும் சமூகமாகிய எமக்கு அவசியமானதாகும். இவை மாத்திரம் அல்ல யூதச் சிந்தனை எமது மக்கள் மத்தியில் மதம் மூலமாக எம்மிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது.
யூதர்களே தமிழர்களின் உதாரணம்??????

யூதர்களின் எவ்வாறு ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையை இங்கு முழுமையாக கொடுக்கவில்லை எனினும் சில சாரம்சத்தை இங்கு தருகின்றறேன். யூதர்கள் சர்வதேசத்தின் உதவியுடன் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்ட உண்மையைத் தான் நாம் தெரிந்து வைத்திருக்கின்றேம். அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றை நாம் எம்மவர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

யூதர்களின் இஸ்ரேல் -பலஸ்தீன வரலாறுயூதர்களின் உலகக் கண்ணோட்டும் எவ்வகையானதுஅவர்களின் வாழ்க்கை முறையூதர்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் வரலாறு


சமகால அரசியல் (எவ்வாறு கிறிஸ்தவ நெறியை பின்பற்றும் ஏகாதிபத்திய உலகத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் யூததேசம் இருக்கின்றது என்பதையும்> எவ்வாறு யூததேசம் எவ்வாறு மத்தியகிழக்கில் ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்கின்றது என்பதை தெரிந்திருத்தல் வேண்டும்)இவைகளை அறிவதன் மூலமே யூதர்களின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.
விவிலியத்தில் யூதரின் வரலாறு பற்றி பல ஆகமங்களாக பிரிக்கப்பட்டும்> பல ஆசிரியர்களை எழுத்தாளர்களாக் கொண்டும் உள்ளது. வரலாற்றினை தொகுத்த போது முன்னுக்குப் பின்னாக வரலாறு கூறப்படுவதினால்> அதன் காலமும் மாற்றம் கொண்டுள்ளது.
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்:

கடவுள் வாக்களித்த தேசம் எனதமது மேலான்மைக் கருத்தை முன்வைக்கின்றனர்.

காயின் ஆபேல் ஆகிய சகோதரர்களுக்கிடையேயான முரண்பாடு கூட இரண்டு வகை சமூகத்தின் உலகக் கண்ணோட்டத்திற்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றது. மக்கள் பொருளாதார வளர்ச்சியடைந்த பிற்பாடு ஏற்பட்ட மாற்றாத்தினால் ஏற்படும் வர்க்க வர்க்க வளர்ச்சியினால் கீழ் நிலைக்கு வருகின்றனர்.

இவற்றிற்கு எகிப்து தேசத்தில் உருவாகிய நிலப்பிரபுத்துவச் சமூதாயத்தின் அரசியல் பொருளாதார அமைப்பானது யூதர்களின் இருப்பை கேள்விக் குறியாக்கியது.
'எந்த நாட்டில் நீ புகுவாயோ> அந்த நாட்டுக் குடிகளை எல்லாம் கலங்கடித்து> நீ வரக் கண்டவுடன் உன் பகைவர் எல்லோரும் புறமுதுகுகாட்டியோடச் செய்வோம். நீ அவர்களுடைய நாட்டில் புகுவதற்கு முன்னர்> நாம் பெரிய குளவிகளை அனுப்பி ஏனையரையும் கானானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம். அந்த நாடுகள் பாழாய்ப் போகாதபடியும்> காட்டு விலங்குகள் பல்கி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும்> நாம் ஒராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்திவிடமாட்டோம். நீ பெருகி அந் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் வரை> அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்தி விடுவோம். (மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலித்தியரின் கடல் வரையிலும்> பாலைநிலம் தொடங்கி ஆறு வரையிலும்> உன் எல்லைகளை உங்கள் கைகளில் ஒப்படைப்போம். அவர்களோடும் அவர்களின் தெய்வங்களோடும் நீ உடன்பட வேண்டாம். அவர்கள் உன்னை எமக்கு எதிராகப் பழிசெய்யும்படி து}ண்டாவண்ணம்> அவர்கள் உன் நாட்டிலேயே குடியிருக்க வேண்டாம்" (யாத்தியர் ஆகமம் 23;-27-33)

பொருளாதார வளர்ச்சியினால் உயர் வர்க்கத்தின் (ஆழுமை கொண்ட இனத்தின்) தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் போராட தொடங்குகின்றனர். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதற்கு உண்மை எனக் கொள்ளக் கூடிய கருத்துருவத்தை உருவாக்க வேண்டியது அன்றைய காலத்தில் தேவையாக இருந்திருக்கலாம். இவ்வாறாக உருவாக்கப்பட்டதாக

இவ்விரண்டு சின்னங்கள் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கருத்துக் கொண்ட சின்னங்கள் யூத> கிறிஸ்தவத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது. இந்த இரண்டு முக்கிய கருத்துக்கள் தமிழ் மக்களை மாத்திரம் அல்ல மற்றைய இனங்கள் எதனையும் சமத்துவமான இனவகை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புறவினத்தாரிடம் சென்று நற்செய்தியைப் போதியுங்கள் என்ற கோட்பாட்டுக்கமைய தமது கருத்துருவாக்கத்தை பரப்பி மற்றைய மக்களின் உலகக் கண்ணோட்டத்தை அழித்து தமது உலகக் கண்ணோட்டத்தை பரப்பு வதன் மூலம் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதனை தமிழ் தேசிய வாதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றார் என தெரியவில்லை. யூதர்களின் இனவெறி மிருகத்தனமானதாக உருவெடுத்துள்ளது.

 


வாக்களிக்கப்பட்ட தேசம்> தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்தியலின் காரணமாக இஸ்ரேல் நாட்டவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலே ஒரு (வல்லரசுகளால் திணிக்கப்பட்ட) சமாதான தீர்வை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இஸ்ரேலிய நாட்டவரின் எதேர்ச்சாதிகாரத்தை நிலைகொள்ள வைப்பது அமெரிக்க> ஐரோப்பிய தேசத்தவர்களுடன்> கிறிஸ்தவ உலகத்தவர்களின் உதவிகளேயாகும். ஒரு இனத்தினை தாழ்த்தி> தம்மை உயர்த்திக் கொள்ளும் தேசிய உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையா என்பதை நவீன உலகில் உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுப்புகின்றது. கிறஸ்தவ இறையியலைக் கொண்டு ஏன் பல நூற்றாண்டுகளாக தொடரும் யூத-பலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை?

யூதரின் வரலாற்றை மாத்திரமே உண்மை எனக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்வதுடன்> மற்றவர்களிடத்தில் வலியுறுத்துவதை இன்னும் சாதாரண மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல> படித்த மக்களிடத்திலும் ஆழமாக ஊன்றியிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தாம் வாழ்ந்த பூமியைத் தவிர மற்றைய தேசங்கள்> இடங்கள் பற்றி அறிவு இருந்திருக்க நியாயம்

உலகின் ஒவ்வொரு முனைகளிலும் இருந்த மக்கள் தமக்கேயுரித்தான வரலாற்றைக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். நாம் ஒவ்வொரு கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் பழமையான வரலாற்றைக் கொண்டிருப்பதை அறியலாம்.

யூதர்கள் தங்கள் முன்னோர்கள் பற்றி கூறும் போது ~~இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாமிற்கு தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்> தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்> பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.~~ (பக்கம் 1.மத்தேயு> 1. அதிகாரம். 17 வசனம்) நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வது மிகபெரும் வரலாற்றுத் தவறை நாம் புரிகின்றோம்.

சியோனிசச் சிந்தனை இவ்வாறே வாக்களிக்கப்பட்ட தேசம் என்ற கருத்தமைவில் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் சிந்தனை உருவாகியது. யூத உலகக் கண்ணோட்டம்> இனப்பாதுகாப்பு> வாக்களிக்கப்பட்ட தேசத்தை உருவாக்கிக் கொள்வது> தேர்த்தெடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இவைகள் உள்ளடக்கியதே சியோனிச சிந்தனையாகும். இந்த சியோனிசச் சிந்தனையாது இஸ்ரேலிய தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்கிக் கொள்வதாக சியோனிச கொங்கிரஸ் தீர்மானம் கொள்ளவில்லை. ஆனால் இன்று உருவாகியிருக்கும் இஸ்ரேல் தேசம் என்பது மேற்கு உலகினால் கருத்திக்கப்பட்ட ஒரு சிசுவாகும்.

உலக மக்கள் யூதர்கள் மீது கொண்ட அனுதாபம் நாசிச அழிவின் எதிர்வினையாக உருவாகியது. இதனால் யூதர்களை தமது தேசங்களில் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு அன்று பிரித்தானியாவசம் இருந்த பலஸ்தீனத்தை துண்டாக்கி இஸ்ரேல் தேசத்தை உருவாக்கிக் கொண்டனர். இவர்கள் இன்று பலஸ்தீனர்களை உலகின் பலபாகங்களுக்கும் அகதிகளாக செல்ல காரணமாகி இருக்கின்றது.

திராவிடத்தின் வரலாறு 5500 வருடங்கள் பழமையானது சிந்து வெளி நாகரீகத்தினை உருவாக்கி பெருமையுடன் வாழ்ந்த இனம். தமிழினம் தன்னை கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி என பெருமைப்பட்டுக் கொள்கின்றது. லெமூரியா கண்டத்தில் பிறந்த மனித இனம் என்று பெருமை கொள்கின்றது. விவிலியம் பரவுவதற்கு முன்னரே இயக்கர்> நாகர் ஆகிய இனங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் தமக்கென தனியான கலாச்சாரத்தைக் கொண்டு இருந்திருக்கின்றனர்.

யூதர்களின் சிந்தனையே மதமாற்றுத்திற்கு உட்பட்ட சமூகத்தில் புரையோடிப் போய் உள்ளது எம்மவர்கள் தமது சொந்த சரித்திரத்தை தெரிந்து வைத்திருப்பதிலும் பார்க்க யூதர்களின் வரலாற்றை பக்கம் பக்கமாக தெரிந்து வைத்துள்ளனர். கிறிஸ்தவ உலகத்தின் சிந்தனை மேலேடி இருப்பதினால் பலஸ்தீனர்களின் அலவத்திற்கான காரணம் விவிலியத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை அறிய முயற்சிக்காது இருக்கின்றனர். பலஸ்தீனத்தின் அவலம் இன்னும் தொடர்ந்தவண்ணமாக இருக்கின்றது. ஏன் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நோட்டே நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும்> அவர்களின் செயற்பாட்டிற்கும் ஆதரவைத் தெரிவுத்துக் கொண்டது கிறிஸ்தவநாடுகளைக் கொண்ட நோட்டே அமைப்பு. இதேவேளை கமாஸ் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

புலிகளின் ஆதரவாளர்> ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர்ஜிரிவியில் மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி> மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.) யூதர்கள் பொருளாதாரத்தில் வலிமையாக இருந்தார்கள்> இருக்கின்றார்கள். இவர்கள் போல தமிழர்களின் மூலதனம் வளர முடியுமா? இதற்கு பொருளாதார அமைப்பு இடம் கொடுக்குமா? சரி இன்றைக்கு தமிழ் முதலாளிகள் இருக்கின்றார்கள் இவர்கள் கொடுக்கும் சம்பளம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது. தமிழ் முதலாளிகளே தமிழ் தொழிலாளிகளை சுரண்டுவதை அனுமதிகக் கோருகின்றனர்.

தமிழ் மக்களிடையேயும்> சிங்கள மக்களிடையேயும் இருக்கும் வரலாற்று உண்மைகள் பற்றி மயக்கம் என்பது ஆழ வேர் ஊண்றி இருக்கின்றது. இவற்றினை போக்குவது என்பது ஆழமாக சிந்தித்து உருவாக்கப்படும் வேலை முறைகளின் மூலமே இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்க முடியும்.

இதேவேளை அன்னிய வரலாறே மனித குலத்தின் வரலாறாக கற்பிக்கும் கிறிஸ்தவ> யூத வரலாற்றை தமிழ்தேசியம் எவ்வித கேள்வியும் முன்வைக்கவில்லை.
இதேபோல ஆரியக் கடவுள்கள் திராவிடக்கடவுகள்களை அகற்றிவிட்டு ஆரியக் கடவுகள்கள் முன்வருவதையும் தமிpழ் தேசியத்தைப் போற்றுபவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஆரியச் சிந்தனையாகிய வண்ணாசிரமச் சிந்தனை எம்மீது ஆழவேர் ஊண்றியுள்ளது.

இன்று இராம வழிபாட்டின் மூலமாக ஆரியச் சிந்தனை மென்மேலும் ஆழமாக வேர் ஊண்றுகின்றது. இவ்வாறு எம்மிடம் எமது வரலாற்றைத் தவிர மற்றைய சிந்தனைகளை உள்வாக்குயிருக்கின்றோம். இந்த சிந்தனையில் எதுவும் முற்போக்கான சிந்தனை இருக்கின்றனவா?

 

http://udaippuu.blogspot.com/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்