பொதுவாகவே...
இன்றைய உலக கொள்கையானது
ஒவ்வொரு நாடும்
பெரும் பரந்த ஜனத்தொகை


எல்லை ஆகியவற்றின்
பிடிப்பினிலிருந்து பிரிந்து
சிறு சிறு அளவான
சிறு நாடாக இருந்து
அந்தந்த எல்லையின்
சமூதாயத்தின் தேவைகளையும்,
முன்னேற வழிகளையும்
கவனிப்பது தான்
பொதுஜன சமூதாய முதலிய
முன்னேற்றத்திற்கு அனுகூலமான
வழி என்ற கொள்கை (டிசென்றலேஷன்)
என்று தெரியவருகிறது.

 

தனி மனிதனுக்கோ
ஒரு தனி சமூதாயத்திற்கோ
முன்னேற்ற உணர்ச்சி வரவேண்டுமானால்,
அதை தூண்டும் அவசியம் ஒன்று
இருந்தே ஆகவேண்டும்.
இன்றைய நிலைமையில் 
இந்தியா முன்னேற்றமடைய வேண்டும்
என்கின்ற உணர்ச்சி
நமக்கு ஏற்பட வேண்டுமானால்
அதைத் தூண்டும் அவசியம்
நமக்கு என்ன  இருக்கிறது? 

இதுவரை  இந்தியா அடைந்த
முன்னேற்றத்தில் அல்லது 
இதுவரை  இந்தியாவுக்குக் கிடைத்த
லாபகரமான சாதனத்தில்
யார் என்ன பலனை அடைந்தார்கள்?
குறிப்பாக நமக்கு திராவிடத்துக்கு
அதனால் என்ன நன்மை ஏற்பட்டது?
அல்லது எந்தவிதமான கஷ்டம் ஒழிந்தது?
என்று பார்த்தால் நம் போன்றவர்கள்
வெட்கப்பட வேண்டியவர்களாக 
இருக்கிறோமே அல்லாமல்
திருப்தி அடையத்தக்க
சமாதானமாவது உண்டா
என்று கேட்கிறோம்.


ழூ தந்தை பெரியார்.