என்னை அடிமை என்பவனும்
வைப்பாட்டி மகன் என்பவனும்
கிட்ட வரவேண்டாம்
தொட வேண்டாம் என்பவனும்,


நான் தொட்டதை சாப்பிட்டால்
என் எதிரில் சாப்பிட்டால் நரகம்
என்பவனும் அன்னியனா?

 

அல்லது -

உனக்கும் எனக்கும்
தொட்டாலும் பரவாயில்லை,
நாம் எல்லோரும் சமம் தான்
என்று சொல்லுகின்றவன்
அன்னியனா?
என்பதை யோசித்துப் பாருங்கள்.

 

 தந்தை பெரியார்.
(06-09-1931- "குடிஅரசு"- பக்கம்: 8)

 

***

 

உடல் உழைப்புச் செய்தவன்
எல்லாம் நம்மவர்கள் தான்.
இன்று கோயிலில் உள்ளே
புகுந்து கொண்டு மணியும்,
தட்டும் வைத்திருப்பவன் யார்?
பார்ப்பான் தானே?
வெளியே இருந்து
குரங்கு மாதிரி கன்னத்தில்
போட்டுக் கொண்டு
முடிச்சை அவிழ்த்துக்
கொடுத்து விட்டு
வருவது தானே நம்மவன்
வேலையாக உள்ளது.

 

நீ தொட்டால்
சாமி தீட்டாகப் போய்விடும் என்கிறான்!
அதனைக் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறீர்கள்?


தந்தை பெரியார்.
("விடுதலை" - 19-02-1963)