நாட்டுல எப்படியெல்லாம் போராட்டம் நடத்துவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது. சு.சாமி சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை மேற்பார்வையில் வைத்திருக்க அளித்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதி

 மன்றத்துக்கு மனுதாக்கல் செய்ய வந்த வீராதி வீரன்  சு.சாமிக்கு முட்டையடி, ´பளார்´ அறைகளால் மரியாதை செய்து வழக்கறிஞர்கள் கௌரவித்தது ஒருபுறம் இருக்க, வெளியே வந்த சு.சாமிக்கு அங்கிருந்த பெண்களில் சிலர் புடவையை தூக்கி காட்டி தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அதை குறித்து, "சு.சாமிக்கு இதைவிட கேவலமான முறையில் அவமதிப்பு செய்துவிட முடியாது" என்று அங்காங்கே புல்லரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். சு.சாமிக்கு இப்படி புடவையை தூக்கிக் காட்டுவது முதல் முறை அல்லவாம். இப்படியொரு அவமதிப்பு சு.சாமிக்கு கிடைத்தது போல் யாருக்கும் கிடைக்காது என்று மெச்சிக் கொள்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன். புடவையை தூக்கி காட்டும் போராட்டத்திற்கு என்ன அர்த்தம்?

 

எனக்கென்னமோ சு.சாமிக்கு எங்கேயோ மச்சம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இப்படி தூக்கிக்காட்டிக் கொண்டிருப்பதால் தான் சு.சாமி கேணயன் போல் உளறுவதை நிறுத்தவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

அதென்ன ஆண்களும் பேண்டை கழற்றி காட்ட வேண்டியதுதானே? அவர்களுக்கு மட்டும் முட்டை, செருப்பு, உதை என்பதில் போய் கொண்டிருக்க பெண்களுக்கு என்ன புடவையை தூக்கிக் கொண்டு காட்டுவது? இதில் என்ன அரசியல் குறியீடு இருக்கிறது? இதையும் மெச்சிக் கொள்ள ஒரு கூட்டம். த்தூ...

 

புடவையை தூக்கிக் காட்டி அதிருப்தியை தெரிவிக்க விரும்பும் பெண்கள் வீட்டில் அந்த முறையை கையாண்டுக் கொண்டு போகட்டும். பொது இடங்களில் புடவை தூக்கும் தைரியம் இருக்கும் போது, செருப்புக்களையும், தொடப்பக்கட்டைகளையும், உருட்டுக் கட்டைகளையும் ஏன் உங்களால் தூக்க முடியவில்லை? புடவையை தூக்கிதான் உங்கள் போராட்டம் நடக்க வேண்டுமா? உங்களுக்கே உங்கள் ´யோனி´ அருவெருத்துப் போய்விட்டதா? அது உங்களை இழிபடுத்துவதாக இல்லையா?


தமிழச்சி
23ஃ02ஃ2009