05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

புலியெதிர்ப்பு கூட்டத்தின் மெளனம்..?

ஈழம் முழுவதும் ரத்தக்களறியாக மண்கள் சிவந்து, குருதி மணத்தில் ஆக்ரோஷமாக சுவாசித்து பெண்களைப் புணர்ந்து, குழந்தைகளை கொன்று முதியவர்களையும் ஒருஇடமாய் தங்கவிடாமல் துரத்தி துரத்தி வன்மம் செய்யும்

 குருரத்தின் எச்சத்தில் உலகத்தமிழர்கள் பதைப்புடன் கதற புலியெதிர்ப்பு கூலிக்கூட்டம் மௌனமாக அங்கீகரதித்துக் கொண்டிருக்கிறது. தலீத்தியம், பெரியாரியம், பெண்ணீயம் பேசும் தறுதலைக் கூட்டம் இந்திய, இலங்கை அரசுக்களின் இனஅழிப்பைக் கண்டும், "உண்மையான விசுவாசிகளாக நாங்கள் இருப்போம்" என மௌனங்களால் அரசியல் மொழி பேசுகிறார்கள் தரம்கெட்டவர்கள்.

 

ஈழத்தமிழர்களுக்காக ஜனநாயகம் பேசிய இவர்களின் சுயருபங்கள் அடிக்கடி அம்பலப்பட்டுப் போவது தங்களுடைய செயல்பாடுகளால் தான். மீண்டும் தமிழ்சமூகத்தின் முன் இனம் காணப்பட்டு அம்மணாகி நிற்கும் கூலிப்படைகளுக்கு பெரியாரியம் பேசும் போலிகூட்டத்தை பார்க்கும் போது... 

 

"நம்மவர்கள் யார் என்பதும்

எனக்கு விளங்கவில்லை.
எனது கொள்கையை,
அபிப்பிராயத்தை ஒப்புக்
கொள்பவர்கள்தான் நம்மவர்கள் என்று
நான் கருதியிருக்கிறேன்.

 

மற்றவர்களை லட்சியம்
செய்ய வேண்டிய அவசியமில்லாதவர்கள்,
சாதாரணமானவர்கள், எதிரிகள்
என மூன்று பிரிவாகத்தான்
கருதவேண்டியவனாக இருக்கிறேன்.

 

இதற்குமுன் நம்மை விட்டுப் பிரிந்து,
நமக்கு எதிரியானவர்கள் எல்லாம்
ஜென்ம விரோதிகளா? இல்லையே,
நம்முடன் கூடவே ஒத்துழைத்து
அபிப்பிராய வேறுபாட்டால்
´நமக்குள் பிளவு ஏற்பட்டு´
வேறுபட்டவர்களே ஒழிய வேறு யார்?

 

அதுபோலவே, இப்போதும்
அபிப்பிராய வேறுபாட்டால் பிளவு ஏற்பட்டு,
விரோதியாகவோ, சாதாரண நண்பர்களாகவோ,
லட்சியஞ் செய்ய வேண்டியவர்களல்லாதவர்களாகவோ
ஆவதில் நாம் ஏன் கவலைப்படவேண்டும்?

 

அப்படிப்பட்டவர்கள் எதிர்ப்பையோ,
ஒத்துழைப்பு மறுப்பையோ, அலட்சியத்தையோ,
அபிமானமின்மையையோ சமாளிக்க
நமக்குச் சக்தியிருந்தால்தானே
ஏதாவது செய்யமுடியும்?


ஏனெனில், எப்படியானாலும்
இப்படி ஒரு கூட்டம் நிரந்தரமாய்
இருந்து கொண்டுதான் இருக்கும்.
மற்றொரு கூட்டம் ஒருபுறம்
நம்மை விட்டுப் போய்க் கொண்டும்,
நம்முடன் புதிதாக வந்து
சேர்ந்து கொண்டும் தான் இருக்கும்.

 

இதைப் பர்த்தி பண்ணிச் சரிப்படுத்திக் கொண்டும்,
எதிர்ப்புக்குச் சமாளிப்பு செய்து கொண்டும்
இருக்கத்தான் வேண்டும். ஆதலால்,
இந்த நெருக்கடியான சமயத்தில்
மௌனம் சாதிப்பதென்பது


சற்று கஷ்டமான காரியமல்லவா
என்று கருதுகிறேன். ஆனபோதிலும்,
தங்கள் யோசனையை எவ்வளவு தூரம்
நமது கொள்கைக்கு இடையூறு இல்லாமல்
பின்பற்றக்கூடுமோ அவ்வளவு தூரம்
பின்பற்றுகிறேன், பின்பற்றிக் கொண்டும் இருக்கிறேன்."

 

ழூ 21-04-1930-ல், ஒரு தோழருக்கு பெரியார் எழுதிய கடித்தில் இருந்த சில வாக்கியங்கள் போலி பெரியாரியம், தலீத்தியம், பெண்ணியம் பேசும் "ஜனநாயக கூலிப்படை" கூட்டத்திற்கும் பொறுந்திப் போகிறது.


தமிழச்சி
23.02.200


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்