12022022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

பேடியிடம் ஒரு கோரிக்கை!

அடச்சே!
சலிப்பாய் இருக்கிறது... 
தெடர்ச்சியான யுத்தம்...!  
சொச்சம் சொச்சமாக...
ஒழித்துக் கொண்டிருக்கிறான்... 
முட்டாள் ராஜபட்சே...!
மொத்தமாக ஒழித்துவிட்டு... 
ஆகவேண்டிய... 
வேளையைப் பாரடா... 
பொறம்போக்கு...! 
 
தினசரி செய்திகளை பார்த்து... 
மீண்டும் சலிப்பாய் நான்.000

சுரணை!

சமையலறையில்... 
விரலை சுட்டுக் கொண்டேன்... 
தீக்குளிப்பு ஞாபகம் வந்தது...!

பிரிஜ்ஜில்... 
இருந்த முட்டைகள்... 
முட்டையடியை... 
ஞாபகப்படுத்தின...! 
முட்டையை பார்த்து... 
மெல்ல சிரித்தது உதடு...! 

சட்டைக்கு மேட்சாக... 
செருப்புக்களை தேடினேன்...! 
செருப்படிகளை... 
நினைத்துக் கொண்டு...!

மாமிசத்தை... 
சாப்பிடும் போது... 
பிணக்குவியல்களை... 
நினைத்துக் கொண்டேன்...!
ச்சே! ச்சே! கன்றாவி...!

எவன் எக்கேடுகெட்டால்... 
நமக்கென்ன...! 
எனக்குள் பேசின... 
உணர்வுகள்...!

நவரச பாவணைகளைக்... 
காட்டிய உணர்வுகளில்... 
சுரணையுள்ள உணர்வை... 
மட்டும் தொலைத்துவிட்டு...!


தமிழச்சி
21/02/2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்