05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

புலி-தமிழ் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தருணங்களில்... புலன்(ம்)பெயர்ந்த புலிகளால் ஐரோப்பிய மண்ணும் கொலைக்களமாகிறது.

புலிவால்களைச் சுரண்டுவதால் அராஜகம் ஒழிந்துவிடாது, எனவே, புலிகளது ராஜகத்தின்மீதும்,அதிகாரத்தின் மீதும் கேள்விகளை எழுப்புவோம், அவர்களது "ஈழப்போராட்டத்தில்" இதுவரைத் துரோகி சொல்லிக் கொல்லப்பட்டவர்களைக்  குறித்துக் ள்வியெழுப்வோம், இலங்கையில் சிங்களச் சமுதாயத்தோடு சேர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்நிலைகளைப் புலிகளது கட்டுப்பாட்டில் வாழ்ந்த வன்னிமக்களின் வாழ்நிலையோடு உரைத்துப் பார்ப்போம்.

 

அங்ஙனம் பார்க்குங்கால் சிங்களவர்களுக்கு நாம் அடிமை என்பதன் கருத்து நிலையைத் தமிழ்ச் சமுதாயத்துள் ஆண்ட பரம்பரைக்குள் இனங்காண முடியும். அது, புலிகளுக்குள்ளும் வேரோடி விழுதெறிந்து கொலைகளாக அரங்கேறியதை உய்துணர வாய்ப்பளிக்கும்."

 

கேடுகெட்ட தமிழ்த் தேசியம். இதுவரை காலமும் தாங்கள் சொல்வதே "தேசியம்-விடுதலை" என்ற அடக்குமுறை அராஜகத்தால் எத்தனையோ போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத்தள்ளிய புலிகள், இன்றுவரை தமிழ்மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது இருப்பதை உறுதிப்படுத்துபவன் இந்தச் சாத்திரி என்ற மூத்திரம்-அலுக்கோசு-அரைப்பனி-நரகல்! ஒரு வார்த்தை ஒழுங்காக எழுதுமுடியாத தரித்திரம்-ஊதாரி-உலக்கை ஊரார் குடும்பங்களுக்கு ஆப்பு அடிக்கும் எழுத்தை ஐரோப்பிய அவலமென எழுதத் தொடங்கி இன்று, வக்கிரமானவற்றைத் தொடக்கி முடிக்கிறான்.மற்றவர்களின் மனைவிமாருக்கு முடிச்சுப்போடுபவனின் மனைவியையும் அவன் தங்கையையும் படுக்கைக்கு அழைப்பது பற்றி அவனே பாடம் நடாத்துவதில் முன்னோடி...

 

தமிழ் பேசும் மக்களின் நியாயமான சுய நிர்ணய விடுதலையை மரணப்படுக்கைக்கு தள்ளிய புலிகளின் கொலைகள், உலகப் பிரசித்தமானது.இவர்களால் மாற்றியக்கங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைவெறித் தொடர்ச்சியின் இன்னொரு வகையான அராஜகமே இன்றைய சேறடிப்புகள்-செல்லரித்துப்போன கோணங்கித்தனமான குதர்க்கங்கள்.இந்த மக்கள் விரோதிகள் எத்தனையெத்தனை இளம் போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத் தள்ளினார்கள்?இவர்களைத் தவிர அனைத்து இயக்கங்களும் "துரோகிகளான"கதை நாம் அனைவரும் அறிந்ததே!இந்தக் கேவலமான சதியை இந்திய உளவுப்படையான ரோவ் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளின் முன்னணித் தலைவர்கள்-ஆலோசகர்கள் செய்து முடித்தபோது, நமது தேசத்தின் மிகப் பெரும் செல்வமான மனிதவளம் அழித்தொழிக்கப்பட்டது.இதை அறிவானா இந்தச் சாத்திரி என்ற சைக்கோ?பிறகெதற்கடா "புலிப்பிராண்டலும் சூனாவும் காட்டுகிறாய் நாயே?-பொறுக்கி!

இன்று, இதே புரளியோடு புலிப்பினாமிகள் மாற்றுக் குரலை நசித்திடவும்,தம்மைத் தவிர வேறொரு அமைப்புப் பலம் பெற்றுவிடக் கூடாதென்ற பதவி-அதிகார வெறியால் தமிழ் மக்களில் கணிசமானவர்களைத் "துரோகி"யென்றழைத்து, எதிரிக்கு நமது விடுதலையை விலைபேசுவது மிகப் பெரும் சமூகக் குற்றமாகும்.இது நமது மக்களை இன்னும் அடிமை கொள்ளமுனையும்,இந்திய மற்றும் உலக-இலங்கைச் சிங்களக் கொடுங்கோன்மை அரசுகளுக்கு பலமான-சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நாம் இனம் காணவேண்டும்.இன்றைய வன்னி யுத்தத்துக்குப் பின்னான புலி இருப்புக்கான அரசியல்-போராட்டத்தில் புலிகளினது தெரிவு மக்களை வேட்டையாடுவதில் முடிந்தவரை பிணங்களை வீழ்த்துவதே.அது,தீக்குஞ் சரி,குண்டுக்குஞ்சரி பொதுத்தன்மை இரண்டுக்கும் பிணங்களென்பதே!இத்தகைய புலிக்கு வால்பிடிக்கும் நாய்கள், மக்களது எந்தப் பிரச்சனையில் மன சுத்தியோடு காரியமாற்றினார்கள்.அனைத்தையும் இயக்கவாதத் தன்மையுடன் அணுகும் எருமைகள் யுத்தப் பிரபு பிரபாகரனுக்காக மக்களையே சாவடிப்பதற்கு ஈழவிடுதலையின் பெயரால் நியாயம் தேடுவதில் வன்னியில் சாகும் ஒவ்வொரு அப்பாவியின் பிணத்தையும் புசிக்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.கருத்தியல் தளத்தில் ஒரு சிறு பொறிகூட மேலெழும்புவதை இந்தத் (வி)தேசியவாதச் சகதிகள் பொறுத்துக்கொள்ள முடியாது, இஞ்சி தின்ற குரங்காய் ஓடியாடித் திரிகிறார்கள்.தமது அதிகாரப் பீடத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக இவர்கள் செய்த-செய்யும் கொலைகளின்பின்னே கோரமாகக் கொட்டப்பட்ட அராஜகக் கருத்தியல்கள் நமது உரிமைகளுக்கு ஆப்பு வைத்த அதே பாணியில் தொடர்ந்து செயற்படும் புலிகளின் முகவர்கள்,இன்னும் எத்தனை பொய்களை உரைத்திடினும் ஒடுக்கப்படும் மக்கள் தமது அதிகாரத்துக்கான நியாயத்தை உயர்த்திப் பிடித்தபடி போர்க்கொடி தூக்குவது தொடரவே செய்யும்.

 

ஒடுக்கு முறைகளுக்கெதிரான மனிதச் செயற்பாடானது எப்பவும் தனிநபர் சுதந்திரத்தைத் தூண்டியபடியேதான் நகர்வது.கடந்த காலத்தில் எத்தனையெத்தனை கொலைகள்தான்"துரோகி"சொல்லி நடந்தேறியது?இருந்தும் மக்களின் குரல்களை அடக்க முடிந்ததா?

 

இன்று, இதே மக்களைச் சிங்கள அரசுக்குக் காட்டிக்கொடுத்துக் கொன்று குவிக்க வக்காலத்துவாங்கும் புலிவால்களும்-புலியும் மக்களது நலனைக் குறித்துப்பேசுவதென்பது தமது நலன் என்பதாகவே இதுவரை காணத்தக்கது.வன்னிக்குள் வாழும் அப்பாவி மக்களையும் அவர்களது குழந்தைகளையும் வலுகட்டாயமாக போராடத்தோடு இணைத்தும், அவர்களது குழந்தைகளை கட்டாயமாகக் கடத்தியும் களத்தில் பலியிட்டபடி"வன்னியில் உள்ள மக்களில் கணிசமானோர் புலிகளது பெற்றோரும்,உறவினரும்தான்"என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துப் பிணங்களை அரசியலாக்கும் தந்திரத்தோடு, புலி இயக்க நலன் அரசியல் செய்வதில் இந்தப் புலிவால்கள் தொடந்து மும்மரமாக இயங்குகிறார்கள்.இதற்காக வன்னியில் சாகும் மக்களது இந்த நிலைக்குத் தாமே காரணமென்பதை மறைத்துச் சிங்கள மக்கள்மீது வெறுப்பைக்கொட்டி இன வாதத்தைத் திட்டமிட்டுப் புலம் பெயர் மண்ணில் விதைக்கிறார்கள்.இத்தகைய விரோதிகளை வெறுத்தொதுக்குவதற்குள் வன்னியிலுள்ள கணிசமான மக்களை புலிகள் சிங்கள இராணுவத்தின் மூலமோ அல்லது தமது துப்பாக்கி-குண்டுகள்மூலமோ கொன்று வெளியுலகுக்குப் படம் காட்டிவிடுவார்கள்.இஃதிப்போது,தொடர்கதையாகத் தினமும் நடந்தேறுவதை உலகம் சிலவருடங்களுக்கு முன்னமே அறியும்.

மக்களின்மீதும்,அவர்களின் நலன்கள்மீதும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்த முனையும் புலி-தமிழ் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தருணங்களில்,அந்த மக்களையே"துரோகி"என அழைத்து ஒடுக்கும் சூழ்நிலைகள், ஏலவே பற்பல நாடுகளின் சிறுபான்மை-பெரும்பான்மை இனங்களுக்குள் நடந்தேறியபோதும் புலிகளினது அரசியல்-அராஜகமே நம்மை இன்னும் கிலிகொள்ள வைப்பதாகும்.இவர்கள், தமிழ்பேசும் மக்களின் சிங்கள ஆளும்வர்க்க எதிரியைத் தொடர்ந்து நண்பராகவும்,எதிரியாகவும் சித்தரித்துத் தமது நலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் போராட்டத்துள் முழுமொத்த மக்களையும் எதிர் நிலைக்குத்தள்ளித் தமது கொலைக் கரத்தைத்"தேசிய விடுதலை"சொல்லி மறைப்பதற்கெடுக்கும் எல்லா வகைக் காரணிகளும் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானதாகத் திரும்புகிறது.இன்றிவர்கள் செய்யும் பிரச்சாரத்துள் மலினப்படுத்தப்பட்ட இழி அரசியல் கொலைகளாக மாறுகிறது.இக்கொலைகளுக்கு தியாகம்-துரோகம் சொல்லி மக்கள் மத்தியில் நியாயப்படுத்தும்போது சாதாரண மக்களும் புலி சொல்லும் நியாயத்தை நம்பிவிடுவதாகப் புலி இறுமாந்திருக்கிறது.இதன் தொடர்ச்சியில் அதன் அழிவு ஆரம்பமாகி, இன்று பூண்டோடு துடைத்தெறியப்படுகிறது.இதையிட்டெவர் மனம் வருந்தவேண்டும்?அராஜகத்தின் முடிவு மக்களுக்கு விடிவைத் தராதுவிட்டாலும் கொலைகள் வீழ்வதைத் தடுத்துவிடும்.இதுவே, அவசியமாக நமக்குள் இருப்பதால் முதலில் எது அவசியமோ அதை துரிதப்படுத்தவது அவசியத்திலும் அவசியமாகிறது.மக்கள் படையோ,புரட்சிகர கட்சியோ புலிகள் அல்ல.எனவே,ஒரு மாபியாக் குழு வீழ்வதையொட்டி எவரும் புலம்பத் தேவையில்லை.இந்த அமைப்பினது தலைவனே அடிமட்டப் படைகளை அம்போவெனவிட்டு எங்கோ மறைந்த நிலையில், அதன் "மக்கள் போராட்டம்" நன்றாகவே மக்களுக்குப் புரிந்துவிட்டது.

 

அன்று யாழ்ப்பாணத்திலிருந்த முழு மொத்த இஸ்லாமிய மக்களையே தமிழர்களுக்கு எதிரிகள்-சிங்களக் கைக்கூலிகளென வர்ணித்து,அவர்களின் பூர்வீக யாழ்மண்ணிலிருந்து வதைத்து வெருட்டியடித்த புலிகள்,இப்போது அதே கதையோடு மாற்றுக் கருத்தாளர்கள்-இயக்கங்கள்-கட்சிகள் இருப்போடு விளையாடுகிறார்கள்.இதற்காக,வன்னி யுத்தத்துக்குள் சிக்குண்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகைகளை-இலக்கியகர்த்தாக்களை,மனித மேம்பாட்டாளர்களைச் சிங்கள இனவாத அரசின் கைக்கூலியாக வர்ணிக்கும் கயமையான அரசியலோடு, முழுமொத்தத் தமிழினத்துக்கே ஆப்பு வைத்துத் தமது அரசியல் ஆதிக்கத்தை-ஏக பிரதிநித்துவத்தை நிலைநாட்ட முனைகிறார்கள்.இதற்காக எவரையும் "துரோகி,கைக்கூலி"என்ற மிகக் கொடுரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்கள் தள்ளி,அவர்களை தொலைத்துக்கட்டுவதற்காக முனைகிறார்கள்.இதற்காகப் புலிகள்போடும் எச்சிலை உறிஞ்சும் சாத்திரிகள்,பூசாரிகள்,தேவன்கள் கட்டும் மடத்தனமான கருத்துக்கள் மிகவும் மலினப்பட்ட புலியின் நெட்டூரம் நிறைந்த அராஜகத்தையே நிலை நாட்டுகிறது.இது, புலம் பெயர் சூழலில் மிகவும் ஆபத்தானது.மிகப் பெரும் அராஜகச் சூழலும்,கொலைக் கரமும்,மாற்றுக் கருத்துகளின் குரல்வளையை நெரிக்க முனையும் தருணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

 

இத்தகையவொரு வலிய-கொடிய அடக்குமுறை தமிழ் பேசும் மக்களின் உரிமையைச் சொல்லி அரங்கேறுகிற சந்தர்ப்பங்களில்,இன்னும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள்"துரோகி"சொல்லிப் பறிக்கப்படும் அபாயம் நெருங்குகிறது.இதை ஏலவே செய்து இதுவரைத் தமது ஏகத் தலைமையைத் தக்க வைத்த புலிகள்,இனிமேலும் அதைத் தொடரவே முனைவர்.அதன் தொடர்ச்சியாகப் புலிகளின் பினாமிகளால், ஜனநாயக ரீதியாகச் செயற்படும் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்-சேறடித்தல் முதல்கட்டமாக நடாத்தப்பட்டு,மக்களை மூளைச் சலவை செய்து,தாம் செய்யப்போகும் கொலைகளுக்கு மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதிருப்பதற்கான முன்னெடுப்பே இந்தச் சாத்திரி,பூசாரிகள்,தேவன்கள் அள்ளிப் போடும் அவதூறுகள் என்பதில் நாம் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.

 

இது,நமது குரல்வளையைமட்டும் நெரிப்பதில்லை.தமிழ் பேசும் முழு மொத்த மக்களையும் அடிமைப்படுத்த முனையும் சிங்கள இனவாத மற்றும் உலக அரசுகளுக்காக இவர்கள் கூலிக்குக் கொலை செய்யும் அமைப்பாகச் சிதைந்ததையே காட்டுகிறது.இத்தகைய அரசியலை விளங்குவதற்கு ரெலோ அமைப்புமீதும் மற்றும் ஏனைய தோழமைக் குழுக்கள்மீதும் புலிகள் நடாத்திய கொலைவெறியே சாட்சியாகும்.பல் வகை இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடும்போது,மக்களின் உரிமைகளைச் சிங்கள இனவாத அரசு ஏமாற்றிவிட முடியாது.ஆதலால்,இத்தகைய நோக்கிலிருந்து தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது அமைப்புக்களையும் நரவேட்டையாடும் ஒரு அமைப்பாகப் புலிகளை அன்னிய நலன்கள் வளர்தெடுத்து,இன்றுவரையும் அமைப்பு ரீதியாகவும்,இராணுவரீதியாகவும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உலாவவிட்டிருந்தார்கள்.இப்போது, இந்த ஏவற் பிராணிகளை வேட்டையாடும் வன்னி யுத்தத்தில்,தமது இருப்புக்காக மக்களின் குரல்வளையைக் கடிக்கும் இந்தப் பாசிசப்புலி, ஐரோப்பிய மண்ணிலுள்ள தமது உறுப்பினர்களைவைத்து மேலும் கொலைகளைகளைத் திட்டமிட்டு நடாத்தப்போகிறது.

இங்கே, பற்பல தளங்களில்,தீக்குளிப்பு,சுட்டுக்கொல்லுதலெனும் வடிவங்களில்(ஏலவே ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியர் கஜன் மற்றும் நாதன் போன்ற தமது பிரமுகர்களையே கோஷ்டிப் பேராத்தால் கொன்றொழித்த புலிகள்-சபாலிங்கத்தை வேட்டையாடிய புலிகள் இதைச் செய்துவிடுவார்கள்) கொலைகள் வீழ்ந்துவிடும்.இவற்றை நாம் தேசத்தினதும்,தேசியத்தினதும் பெயரால் மௌனமாக அங்கீகரிக்கும்போது புலிகளது அழிவோடு கணிசமான மக்களையும் புலிகள் அழிப்பதற்கு உடந்தையாகவே இருந்துவிடுவோம்.இது, மனித மறுப்புக்கு உடந்தையாவதைமட்டுமல்ல மக்களது உரிமைகளை உலகுக்குத் தாரவார்த்த புலிகளது வரலாற்றுத் தவறுகளைத் நாமே பொறுப்பெடுப்பதாகவும் இந்த அங்கீகரிப்புக்கு நேர்ந்துவிடும்.

 

இதனால் புலிகளும் அதன் வால்களும் தமிழ் பேசும் மக்களின் எந்த நியாயமான குரலையும்"துரோகி" என்றே குரைத்துக் குதறும் சூழலைப் புலம்பெயர் மண்ணிலும் உருவாக்கும்.இந்தக் குரைப்புக்கு சாத்திரிகளோ அல்லது பூசாரிகளோ அன்றி தேவன்களோ தலைமை தாங்குவதில்லை.புலிகளே நேரடியாக இவர்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.இது குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

 

"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"

 

ப.வி.ஸ்ரீரங்கன்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்