10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

"மானங்கெட்ட மன்மோகன் சிங் பேசுகிறேன்"

வாழ்வழியில்லாமல் வறுமையில் உழல்பவரே
பத்துபேர் வாழ்ந்திட லட்சம் பேர் வாடிட
ஆதரிப்பீர் சோனியாவின் வளர்ப்பு நாயான என்னை
ஆட்ம் ஸ்மித்தின் அடியேன் நான்
மக்களே 'மார்க்ஸை மறுத்து ஆடம் ஸ்மித்தை
நெஞ்சில் நிறுத்து !

தொழிலாளி மாளலாம். முதலாளி வாடலாமா?
ஆட்டு மந்தைகளே ஆதரிப்பீர் வறுமை
கொட்டகையில் உங்களை அடைத்திட முயலும்
மன்மோகன் சிங்காகிய என்னை

மகாராஷ்டிராவில் விவசாயிகள் 1 லட்சம் பேர்
வறுமையில் தற்கொலை செய்து கொண்டார்களாமே
நல்லது மிகவும் நல்லது. அப்போதுதான்
மக்கள் தொகை குறைந்து பொருளாதார வளர்ச்சி
ஏற்படும்
பொய்யில்லை, சீனாவில் பல மணி நேரம்
வேலைவாங்கியே மக்களை கொல்கிறது அரசு
நாங்கள் அப்படி செய்யாமல் இளைஞர்களை
கனவு காண சொல்லித்தான் சாகடிக்கிறோம்
சந்தேகம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்
அப்துல்கலாமை அற்புதம் அற்புதம் என்பார்

மக்களே "பங்கு சந்தை சரிவாம்
பதறுகிறது என் நெஞ்சம்
என் எஜமான் அம்பானியின்
கோடிகள் குறைந்திடுமே

என் தியாகமே விலைவாசியை தாங்கிடும்
சகிப்புத்தன்மை உன்னிடம் உண்டு
அதனை மேலும் மேலும் உயர்த்திடும்
சூத்திரம் என்னிடம் உண்டு

வாங்க வக்கில்லாமல் நீ இருக்கலாம்
வக்கிருக்கும் அம்பானியின் பெரும் இலாபம்
குறையலாமா?

ஒரு லிட்டர் பெட்ரோலை சுத்திகரிக்க சில லிட்டர்
கச்சா எண்ணெய்யை பயன்படுத்தும் நாம்
அதில் தவறு காண்பதில்லை.
ஓர் அம்பானியை உருவாக்கிட 7 ஆயிரம் ஏழைகளை
உருவாக்குவதை தவறு எனலாமா?

தவறு என்கிறார்கள் நக்சல்பாரிகள்
என்ன அநியாயம் பாருங்கள்
முட்டாள் மக்களே! ரஷ்ய நாட்டில் லெனின் என்ற
பயங்கரவாதி அப்பாவி பணக்காரர்களின் சொத்துக்களை
பறித்து கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கொடுத்தானாம்
அந்த அநியாயத்தை காட்டுமிராண்டிதனம் என்றும்
லெனின் ஒர் முட்டாள் என்றும் மகாகவி பாரதியார்
முழங்கினார்.

லெனினை போன்றே இந்த நக்சல்பாரிகள், அப்பாவி
முதலாளிகளான டாடா, பிர்லா, ரிலையன்ஸ் அம்பானி
போன்றவர்களின் சொத்துக்களை பறித்து கஞ்சிக்கு
இல்லாதவர்க்கெல்லாம் கொடுக்க போகிறார்களாம்.

இன்று இதனை பழிக்க பாரதியார் இல்லாமல்
போகலாம், ஆனால் சி.பி.எம் இருக்கிறார்கள்
ஆகையால் ஜெனங்களே! ஜனநாயகத்தை காத்திட
பணநாயகர்களை வளர்த்திட ஆதரிப்பீர்
பார்ப்பன-பனியாக்களின் பிரதிநிதியான என்னை!

ஏமாளி கூட்டமே! என் ஆசை காதலன்
கொலைகார ஜார்ஜ் புஷ் நம் தேசத்தின் மீது
தீரா காதல் கொண்டிருக்கிறார்.
காரணம்? வேறொன்றுமில்லை.
சந்தை பொருளாதாரத்தின் சொர்க்கமாய் இந்தியாவை
அவர் பார்க்கிறார்.
பார்த்துக்கொள்ளுங்கள், புஷ் மாதிரியான நல்லவர்களுக்கு
சொர்க்கம் பிடிக்கத்தானே செய்யும்

ஏ... தலையாட்டி மொம்மைகளே! சந்தை பொருளாதார்
சொர்க்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்யமே இந்திரன்
டாடா, பிர்லா, அம்பானி பொன்ற தேவர்களும் உண்டு
இவர்களுக்கு சேவை செய்யவெ உங்களை
இறைவன் படைத்திருக்கிறார்.
சந்தேகம் என்றால் கேட்டுப்பாருங்கள் அப்துல்கலாமை
அற்புதம் அற்புதம் என்பார்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
அமெரிக்காவை பிடிக்காதவர்கள் நரகத்தில் வாடுகிறார்கள்.
ஆம், குவாண்டநாமோ, அபுகிரைப் சிறைசாலைகள்தான்
நகரம்.

அடிமைகளே! வரலாற்றை புரட்டி பாருங்கள்
கம்யூனிச பூதம் படம் எடுத்து ஆடிய சோவியத்
யூனியனில் 30 ஆண்டுகளில் 5 கோடி
பயங்கரவாதிகளை கொன்றோம்
அதன் தொடர்ச்சியாய் அப்பூதம் ஆடிய
வியட்நாமில் 20 லட்சம் பயங்கரவாதிகளை கொன்றோம்
வடகொரியாவில் 30 லட்சம் பயங்கரவாதிகளை கொன்றோம்

மங்கு மக்களே! ஈராக்கை பாருங்கள் 20 லட்சம்
பெண்களை விதவைகளாகி விட்டோம்.
ஆப்கானை பாருங்கள் அடித்து நொருக்கி விட்டோம்
புரிந்துகொள்ளுங்கள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமே இவ்வுலகின் தலைவன்
ஏற்காவிட்டால் உங்களுக்கும் எமன்!

சுமைதாங்கிகளே! அடிமை சாசனம் எழுதிதந்துவிட்டேன்
அமெரிக்காவிற்கு பெருமையாய் இருக்கிறது.
என் முன்னோர்கள் காந்தியும், நேருவும் போட்ட துரோக
பாதையில் நான் சரியாக போகிறேன் என்பதை
நினைக்கும் போது.

இப்படியே போனால் 2020 ல்
இந்தியா வல்லரசாய் ஆகிவிடும்.
சந்தேகம் கேட்டுப்பாருங்கள் அப்துல்கலாமை
அற்புதம் அற்புதம் என்பார்.

கடைசியாக,
ஏகாதிபத்தியம் வாழ்க,
அவற்றின் ஒட்டுண்ணி தரகு முதலாளி வர்க்கம் வாழ்க,
தாராளமயம், தனியார்மயம், உலகமையம் என
என் பிள்ளைகள் வாழ்க, ஏகாதிபத்திய மூலதனம் வீங்கி பெருக,
அவற்றினால் இந்த்ய ஏழைகளை ஒழித்து
பணக்கார இந்தியாவை உருவாக்க ஆதரிப்பீர்
ஆளும்வர்க்க நாயான என்னை!


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்