Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொய்யையும், புனைவையும் பாசிசம் 'வோட்டர் மார்க்"காக அடிக்கின்றது. இதை நாம் சொல்லவில்லை. புலிகளே சொல்லுகின்றனர், செய்கின்றனர். மனித அவலத்தை உருவாக்கி, அதை 'வோட்டர் மார்க்" அடித்து, தமிழனின் உணர்ச்சியை தட்டியெழுப்புகின்றனராம். உலகத்திலேயே ஆக படித்த முட்டாள்களைக்; கொண்ட சமூகத்தின், தமிழன் என்ற உயிர் துடிப்பு இப்படி 'வோட்டர் மார்க்" வழியாகத்தான் புலிகள் உருவாக்குகின்றனர். 

இதற்கு இங்கு மனித அவலம் பிரச்சாரப் பொருளாகின்றது. இதனால் மனித அவலம்  உற்பத்தி செய்யப்படுகின்றது. அதன் மேல் கற்பனைகள், புனைவுகள், இட்டுகட்டல்கள், பொய்கள் என்று பொழியப்படுகின்றது. இந்த வகையில் இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் நம்பும் வண்ணம், அவர்களை ஏமாற்றும் வண்ணம் 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்ப"தை புலிப் பாசிசம் மறுக்கவில்லை, அதைச்செய்கின்றது. அதைச் செய்யவும்; கோருகின்றது!  

 

நடந்த ஒரு நிகழ்ச்சி, அதையொட்டி புலியின் 'வோட்டர் மார்க்" பிரச்சாரத்தையும் அதில் உள்ள 'மனித அக்கறையையும்"  பார்ப்போம். விசுவமடு இடைத்தங்கல் முகாமில் மக்களுடன் மக்களாக வந்த புலிகள், நடத்திய தற்கொலை தாக்குதலை எடுங்கள். இங்கு இதைப்பற்றி புலிகள் எப்படி 'வோட்டர் மார்க்" அடித்து சொன்னார்கள் என்பதையும், இதற்கு பலியானவர்கள் எப்படி நியாயவாதம் செய்தார்கள் செய்கின்றார்கள் என்பதையும் போகிறபோக்கில் பலரும் அறிந்ததுதான். ஆனால் அதன் உள்ளடக்கத்தை உடைத்து பார்த்தால், எம் படித்த அறிவிலித்தனம் புலிக்கூடாகத் தெரியும். மஞ்சள் காமாலை நோய் மாதிரி, எல்லாம் புலிக்கூடாக பார்க்கும் மனிதவிரோத மனநோய் தெரியும். எப்படிப்பட்ட மனித விரோதிகள் நீங்கள் என்பதையும், சிங்கள பேரினவாதம் தமிழ்மக்களை கொன்று குவிக்கும் ஈனச்செயலுக்கும் உங்கள் செயலுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை இது அம்பலமாக்குகின்றது. 

 

தற்கொலை தாக்குதலை ஒட்டி மூன்றுவிதமான செய்திகளை, காலநிலைமைக்கு ஏற்ப 'மனிதாபிமான" புலிகள் பிரச்சாரம் செய்தனர். முந்தைய செய்தியை, பிந்திய செய்தி மறுத்;தது.

 

1. தாக்குதல் தாமே நடத்தியதாக முதலில் பெருமையாக கூறினர். ஆகப் பெரும்பான்மை சிங்கள் இராணுவம் கொல்லப்பட்டதை மகிழ்ச்சியாக கொண்டாடினர். மக்கள் கொல்லப்பட்டது தவிர்க்க முடியாதது, இப்படி ஏற்படுவது இயல்பு என்றனர். (பாசிட் ஜெயலலிதா பாணியில் யுத்தம் நடந்தால், மக்கள் கொல்லப்படுவார்கள் என்று கூறியது போல்) இப்படி இதற்கு தர்க்கம். கீறிய ரெக்கோட் மாதிரி ஒன்றையே திரும்பத் திரும்ப சொன்னார்கள்.

 

2. இதற்கு எதிராக சர்வதேச ரீதியாக கண்டனம் வரவும், இலங்கை அரசுக்கு எதிராக முன்னின்ற அப்பாவிகள் 'இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை" இட்டு புலம்ப, உடனே செய்தியை 'மனிதாபிமான" புலிகள்  திரிக்கத் தொடங்கினர். தாக்குதலே நடக்கவில்லை என்றனர். எங்கே இறந்த இராணுவம் என்றனர்? கொல்லப்பட்ட  மக்கள், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் என்றனர். மற்றொரு பகுதி இராணுவம் மீது நடத்த தாக்குதலை அடுத்து, இராணுவம் சுட்டதில் தான் மக்கள் இறந்ததாக கதை சொன்னார்கள். இப்படி ஓரே நாளில் இந்தக் குத்துக் காரணம். இது என்னடா என்று கேட்டால், 'நீங்கள் துரோகிகள்" என்றனர். நீங்கள் 'சிங்களவனுக்கு பிறந்தனீங்கள் என்றனர்". அதில் கொல்லப்பட்ட குழந்தையுமா! என்று கேட்கத் தூண்டியது. இந்த இணையங்கள், ஊடகங்கள் தான், மனித அவலம் பற்றியும் உலகத்துக்கு செய்தி சொல்லுகின்றது. புலிகள் அன்றும் இப்படித்தான் 'வோட்டர் மார்க்" அடித்தனர்.

 

3. அடுத்த நாள் 'இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம்." என்று புலிகளின் அறிக்கை வெளிவருகின்றது. அவர்கள் இப்படி 'வோட்டர் மார்க்" அடித்து, இதை புனிதப்படுத்த முனைந்தனர். உடனே உலகில் அதிகம் படித்த முட்டாள்கள், மீண்டும் பழசை மறுத்து புதிய பல்லவி. புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ஆயிரக்கணக்கில் ஃபாக்ஸ் செய்கின்றனர், புலிகள் செய்யவில்லையென்று.  

   
 
36 மணி நேரத்துக்குள் புலிகள் எப்படி இதை 'வோட்டர் மார்க்"  பிரச்சாரம் செய்தனர் என்பதையும், நூற்றுக்கணக்கான இணையங்கள் எப்படி தலைகீழாக மாறின என்பதையும், அதன் விசுவாசிகள் எப்படி தலைகீழாக நடந்தனர் என்பதையும் நாம் சொல்லி தெரியத் தேவையில்லை. இதுதான் தமிழ்நாடு முதல் புலம்பெயர் தமிழன் வரை சந்திக்கும் பிரச்சாரம். இதற்குள்தான், ஈழம் பற்றிய கருத்துக்களை உற்பத்தி செய்கின்றனர். ஈழத் தமிழன் மனித அவலம் பற்றி செய்திகள் முதல் அதன் மேலான அக்கறை வரை இந்த பொதுவான நேர்மையீனத்தின் பொது வெளிபாடாகிவிடுகின்றது .

 

பொதுவில் இதைச் சுற்றி இவர்களின் வாழ்க்கை முறையே இப்படி மாறிவிட்டது. நேர்மையற்ற, உண்மையற்ற பக்கச்சார்புடன் புலிக்கு ஏற்ப அனைத்தும் திரிகின்றது. மக்களின் நிலைபற்றி எந்த அக்கறையும், இங்கு இருப்பதில்லை.

 

ஓன்றன் பின் ஓன்றாக இந்த சம்பவங்கள் அனைத்தும், புலியினதும் – அரசினதும் பிரச்சார எல்லைக்குள் உட்பட்டு, மனிதம் மிதிக்கப்படுகின்றது. நாங்கள் செம்மறிகளாக மாறி, படித்த முட்டாள்தனத்ததை மக்கள் மேல் பீச்சியடிக்கின்றோம். 

 

உண்மையில் என்ன நடந்தது என்பதை அறியவும், அந்த மக்களுக்கு யார் இந்த நிலையை ஏற்படுத்தினர் என்பதை தெரிந்து கொள்ளவும், அந்த மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் என்ன செய்திருப்பார்கள்?

 

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பது, அவர்களுக்கு நன்கு தெரியும். அதை வெளிக்கொண்டுவரும் வண்ணம், அதற்கான முயற்சியை செய்ய முன்வந்திருப்பார்கள். எந்த 'மனிதாபிமான" நாய்களுக்கும் அது பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. அதைக் கோரி அமெரிக்கா தூதரகத்துக்கு  பக்ஸ் செய்யவில்லை. ஏனென்றால் 'இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை" செய்தவர்களை பாதுகாக்க வேண்டியவர்களின் கையில், 'மனிதாபிமானம்" சிக்கி தமிழினம் அழிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் 'வோட்டர் மார்க்" பிரச்சாரம் மூலம் 'இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயல"; மூடிமறைக்கப்பட்டு நியாயப்படுத்தப்படுகின்றது. ஆனால் வரலாறு பாதிக்கப்பட்ட மக்கள் ஊடாக, உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.

 

பி.இரயாகரன்
12.02.2009

 

தொடரும்