Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போலி மார்க்சியம் பேசி இந்தியாவின் வர்க்கத் போராட்டத்தை மறுதலித்துவிட்ட போலிகள், இன்று இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை மறுக்கின்றது. இதன் மூலம் இலங்கை பேரினவாதத்துக்கு கொம்பு சீவி உதவும்

 அதேநேரம், இந்திய மேலாதிக்கவாதிகளின் விஸ்தரிப்பு கொள்கைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இப்படி இதற்குள் மார்க்சியத்தை விளக்க, மார்க்சிய மேற்கோளைக் கொண்டு, இந்த சி.பி.எம் கழுதைகள் கனைக்கின்றது.

 

'இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு" என்று 'சந்திப்பு" இணையத்தை நடத்தும் சி.பி.எம் கழுதை கே.செல்வப்பெருமாள், இந்திய வர்க்கப் போராட்டத்தை தாம் எப்படி மறுதலித்தனரோ அதே பாணியில், மார்க்சிய மேற்கோள்களை திரித்து பயன்படுத்துகின்றது. வர்க்கப் போராட்டத்தை தம் சொந்த வர்க்க அரசியலில் மறுத்துவிட்ட பின், இவர்கள் பயன்படுத்தும் மார்க்சிய மேற்கோள்கள் இவர்கள் அளவில் அர்த்தமற்ற போகின்றது. இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணயத்தை மறுக்க பயன்படும் மேற்கோள்கள் கூட, மக்களின் உரிமையை மறுக்க தம் திரிபுக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.  

    

இந்த சி.பி.எம் கழுதைகள் 'இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு" என்ற பெயரில் 'மாநில சுயாட்சியை வழங்கிடவும்" என்று கனைக்கின்றது. இந்த கழுதைக்கு எந்த மார்க்சியம், எந்த மேற்கோள் 'மாநில சுயாட்சியை வழங்கிடவும்" என்று முன்வைக்கின்றது. மாறாக தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அரசியல் ரீதியாக முன்வைப்பதை மறுக்க, புலிப் பாசிசத்தை தன் துணைக்கு அழைத்து கனைக்கின்றது.

 

புலிப் பாசிசத்தை துணை கொண்டு, இலங்கை இந்திய அரசுகள் போல், ஈழத் தமிழருக்கு எதிராகவே கதை சொல்ல முனைகின்றனர். இலங்கை அரசின் இனவாதம் என்ற வரலாற்றைச் சொல்லி, 'மாநில சுயாட்சியை வழங்கிடவும்" என்கின்றது. அடியும் நுனியுமின்றி, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை புலியைக் காட்டி மறுக்கின்றனர். இதைத்தான் இலங்கையும் செய்கின்றது. சி.பி.எம் கழுதைகள் சுயநிர்ணயத்தை மறுக்கும் அதே அடிப்படையில் தான், இலங்கை பேரினவாதவும் செய்கின்றது. இதை சந்திப்பு விமர்சிப்பது தான் வேடிக்கை. 'ராஜபக்சே அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் காட்டி அரசியல் தீர்வை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையாது. எனவே காலம் தாழ்த்தாமல்" 'மாநில சுயாட்சியை வழங்கிட" வேண்டும் என்கின்றனர். சி.பி.எம் கழுதைகள் மட்டுமல்ல, இந்திய அரசின் நிலையும் இதுதான்.

 

சரி கழுதைகளே 'மாநில சுயாட்சியை வழங்கிட" முடியுமென்றால், ஏன் சுயநிர்ணயத்தை வழங்கக்கூடாது? ஆகக் கூடியது மாநிலச் சுயாட்சியைத்தான் இந்தியா அனுமதிக்கும் என்பதால், இந்தக் கழுதை அதையே கனைப்பதுடன் அதையே மார்க்சிய தீர்வு என்கின்றது.

 

இப்படி இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவுகளுடன் ஒன்று கலந்து, ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையே போலி மார்க்சியம் மூலம் முதுகில் குத்தி மறுக்கின்றது. இதை நியாயவாதம் செய்து மறுக்க 'புலிகளின் சர்வாதிகார - முதலாளித்துவ அரசு அமைவதற்காக இங்குள்ளவர்கள் சுயநிர்ணய உரிமை என்று அரசியல் பம்மாத்து காட்டுகின்றனர்" என்று பம்முகின்றனர். தமிழ்மக்கள் உரிமையை மறுக்க, தமிழ் மக்களின் உரிமைகளையே மறுத்த நிற்கும் அதே புலியையே பயன்படுத்துகின்றனர். இதில் அவர்களிடையே என்ன ஓற்றுமை. இந்த நிலைiயே, இவர்கள் மார்க்சியம் என்கின்றனர். மக்களின் உரிமையை மறுக்க, சி.பி.எம் கழுதைகள் புலியை இதற்குள் இழுக்கின்றனர்.

 

இப்படி மார்க்சியத்தை கைவிட்டு பிழைக்கும் வர்க்க விரோதிகள், தம்மை மூடிமறைக்கவே புலியை துணைக்கு அழைக்கின்றனர். தலித், முஸ்லீம் என்று தமிழன் பிரிந்து கிடப்பதாக கூறி, அதை துணைகொண்டு சுயநிர்ணயத்தை மேலும் சிறுமைப்படுத்துகின்றனர். சமூகம் முரண்பாடுகளாலும் சமூகப் பிளவுகளாலும் ஆனது என்பதையும், அதற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை மறுத்து நிற்கும் சி.பி.எம், இப்படி முரண்பாட்டை காட்டி சுயவுரிமையை மறுக்கின்றது. உலகில் சுயநிர்ணயத்தை கோரும் எல்லா நாட்டிலும், முரண்பாடுகளும், பிளவுகளும் உள்ளவை தானே. அதானால் தான் வேறுபட்ட வர்க்கங்கள் அங்கு போராடுகின்றன.

 

இதை மறுக்கும் சி.பி.எம் கும்பல்  '..எதையும் கணக்கில் எடுக்காமல் கணித சூத்திரம் போல் பிரிவினைவாதம் பேசி இனவாதத்திற்கு நெய் ஊற்றுகிறார்கள்.." என்று சுயநிர்ணயத்தை ஓரு தலைப்பட்சமாக திரித்துக் காட்டி, இதை புலிக்கு ஊடாக காட்டி கொச்சைப்படுத்துகின்றனர்.

 

மொத்தத்தில் இனம், மதம், சாதி என்று சமூகப் பிரிவினைகள் வர்க்கப் போராட்டத்தை பின்தள்ள ஆளும் வர்க்கங்கள் அதை முன் தள்ளுகின்றது என்ற அளவுகோலை முன்னிறுத்தி, சுயநிர்ணய உரிமையை மறுப்பது மார்க்சியமல்ல. இது மார்க்சிசத்தை கைவிட்டு இந்தியா வல்லாதிக்கத்தின் பின்னும், அம்மா ஜெயலலிதா பின்னும்  சி.பி.எம் அழுக்கு சுமக்கும் கழுதைகளின் திரிபுவாத அரசியலாகும்.

 

அடுத்து இன்று தமிழ் மக்களை ஓடுக்கும் இலங்கை - இந்திய அரசின் கூட்டு அழித்தொழிப்பு யுத்தத்தை எதிர்த்து போராட மறுப்பதுதானாம் மார்க்சியம்! இதுவோ இந்திய விஸ்;தரிப்புவாதக் கண்ணோட்டமாகும். இன்று இலங்கையில் இந்தியத் தலையீடும், இந்தியாவின் யுத்தத் திணிப்பும் வெளிப்படையானது. இதை எதிர்த்துப் போராடாது, சி.பி.எம் அதை பாதுகாக்கின்றது. மக்கள் மேலான யுத்தத்தை எதிர்ப்பது, புலியை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அதை ஆதரிக்கின்றது. அதை இந்த சி.பி.எம் கழுதைகள் 'பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு தடையாக இருந்துக் கொண்டிருக்கிறது." என்று கூறி நியாயவாதம் செய்கின்றது.

 

புலியை விமர்சித்துக்கொண்டு, மக்களுக்கு மேலான யுத்தத்தை எதிர்த்து போராடுவதும், அதில் இந்தியாவின் பங்கை எதிர்த்து களத்தில் இறங்கி போராடுவதைத்;தான் மார்க்சியம், தன் சர்வதேசியக் கடமையாக கூறுகின்றது. இதையா சி.பி.எம் செய்கின்றது! இல்லை. மாறாக மார்க்சிய மேற்கோளை பயன்படுத்துவது போல், பசப்பு அறிக்கைகள் விடுவதன் ஊடாக நாடகமாடுகின்றனர். ஜெயலலிதா போல், கருணாநிதி போல் பசப்புவதையே இந்தக் சி.பி.எம் கழுதைகள் மார்க்சியம் என்கின்றனர். 

 

இந்தியா பயிற்சி வழங்கியதை, அதன் மேலாதிக்க நோக்கத்துடன் பார்க்க மறுக்கின்றது. அதை '…. இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவுவதற்கு மாறாக, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு இங்கு ஆயுதப் பயிற்சி உட்பட - ஆதரவும் வழங்கியது. அதாவது இந்தப் பிரச்சனையை கொம்பு சீவி விட்டதில் இந்திரா காந்தி உட்பட முன்னாள் - இன்னாள் முதல்வர்களுக்கும் பங்குண்டு." என்று உளறுகின்றது. இலங்கையில் தலையிடுதல், அங்கு தன் மேலாதிக்கத்தை நிறுவுதல்,  அதை ஆக்கிரமித்தல் என்ற எல்லைக்குள்தான், இந்திய தலையீடு அமைந்தது. அது பங்களாதேசத்தை உருவாக்க பயிற்சி அளித்தது முதல் அண்டை நாடுகள் எங்கும் இதைத்தான் இந்தியா செய்கின்றது. இதை அம்பலம் செய்து இந்திய பாட்டாளி வாக்கத்தை அணி திரட்டிப் போராட மறுக்கும் இந்த சி.பி.எம்  கழுதைகள் கூட்டம், எம் சுயநிர்ணய உரிமையை இந்திய மேலாதிக்கத்துடன் சேர்ந்து மறுக்கின்றது. 

 

இந்திய ஆக்கிரப்பை தன் பசப்பு வார்த்தையில் மூடிமறைக்க முனைகின்றனர். 'மறுபுறத்தில் அமைதிப்படை என்ற பெயரில் இந்தியா இராணுவத்தை அனுப்பியது போன்ற செயல்கள் இந்திய அரசுக்கு எதிராக கடும் விவாதங்களைக் கிளப்பியது" இப்படி விவாதத்துடன் இந்த கழுதை கிளப்பும் தன் காலை, ஈழத்தமிழன் மேல் எட்டி உதைக்கின்றது. அமைதிப்படையின் பெயரில் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி போடும் வேஷத்தையே, தம் சி.பி.எம் மார்க்சியம் என்கின்றது.

 

இந்த கழுதைகள் 'இலங்கையிலோ புலிகள் - சிங்கள பேரினவாதி என்று வர்ணிக்கப்பட்ட பிரமேதாசாவோடு கூட்டணி அமைத்து அமைதிப்படையை வெளியேற்றினர்" என்று புலம்புகின்றது. இப்படி தம் ஆக்கிரமிப்பை தக்கவைக்க, புலிகளின் இந்த செயலை வெறுப்புக்குரிய ஒன்றாக காட்ட முனைகின்றனர். இதன் மூலம் இந்தியா ஆக்கிரமிப்பை, சரி என்று நிறுவ முனைகின்றது. 

 

இந்தியாவை வெளியேற்றியது தவறு என்று சொல்ல, இந்திய ஆக்கிரமிப்பை நியாயவாதம் செய்ய இலங்கையில் அமெரிக்காவின் தலையீடு பற்றி சிபிஎம் கழுதைகள் ஓப்பாரிவைக்கின்றனர். '..குழப்பமான நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் திருகோணமலையில் தனது கப்பற்படைத் தளத்தை அமைத்தது. (எப்போது?) தற்போது கூட அவர்கள் ஏவுகணை தளம் ஒன்றை நிறுவுவதற்கு தொடர்ந்து முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. இலங்கை அரசு மற்ற நாடுகளுக்கு எதிராக இதுபோன்ற தளம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து இலங்கையில் தனது தளத்தை அமைத்திட முயற்சித்து வருகிறது என்ற உண்மை வெளிப்படையானது. அதாவது ஏகாதிபத்தியம் இந்த இன மோதல்களை ஊக்குவித்து வருகின்றது" என்று குற்றம் சாட்டுகின்றனர். இதன் மூலம் இந்தியத் தலையீட்டை ஆதரிக்க வேண்டும் என்ற அரசியல் கபடத்தை சிபிஎம் கழுதைகள் செய்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் பெயரில், மோதல்களையும் தலையீடுகளையும் இந்தியா நடத்துவதை ஆதரிக்கின்ற வக்கிரத்தை, தம் போலி மார்க்சியத்தின் பெயரில் சிபிஎம் ஆதரிக்கின்றனர். இப்படி இலங்கையில் நடக்கும் யுத்தத்தை ஆதரிப்பதுடன், அதை 'ஏகாதிபத்தியம் இந்த இன மோதல்களை ஊக்குவித்து வருகின்றது" என்று கூறி அதை அழிக்கவே சிபிஎம் கழுதைகள் கனைக்கின்றனர்.  

  

இதனடிப்படையில் ராஜீவ் கொல்லப்பட்டதை புலியின் வெறும் பாசிசமாக காட்டி, இந்த மானக்கேட்டையே சிபிஎம்  மார்க்சியம் என்கின்றது இந்தக் கழுதை. அமைதிப்படையின் பெயரில் இந்தியா ஆக்கிரமித்ததும், அதன் விளைவால் ஏற்பட்டது தான் ராஜீவ் படுகொலை. இதை சொல்வது மார்க்சியவாதிகளின் கடமை. இது எந்தளவுக்கு போராட்டத்துக்கு பாதகமானது என்பதை சொல்லி விமர்சிப்பதும் மற்றொரு கடமை.   

 

அதாவது இந்திய ஆக்கிரமிப்பின் விளைவுதான் ராஜீவ் படுகொலை. இதை மறுத்து சிபிஎம்  'இறுதியாக இந்த புலி பயங்கரவாதம் ராஜீவ் கொலை வரை நீண்டது" என்று இந்திய ஆக்கிரமிப்பையே நியாயப்படுத்துகின்றது. இதை மறுக்க முடியாத சிபிஎம் போலி மார்க்சியம், ஆக்கிரமிப்பை அமைதிப்படையின் செயலாக கூறி, ராஜீவை கொன்றது தவறு என்று ராஜீவுக்காக நியாயவாதம் பேசுவது நகைப்புக்குரியது. இதில் 'புலி பயங்கரவாதம்" என்று கூறும் இந்த சிபிஎம், இந்தியாவின் ஆக்கிரமிப்பு தமிழ்மக்கள் மேல் நடத்திய  பயங்கரவாதத்தை, 'அமைதிப்படை" செயலாக 'புலிப் பயங்கவாதத்தின்" பின் சிபிஎம் ஓளித்து வைக்கின்றது. இப்படி இன்றைய இந்திய விஸ்தரிப்புவாதத்தையே பாதுகாக்க, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையே சிபிஎம் மறுக்கின்றது. சிங்கள பேரினவாதத்துக்கு உதவுகின்றது. இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றது. 

 

பின்குறிப்பு : இந்தக் கழுதை தம் கருத்துக்கு நாம் கருத்துச் சுதந்திரம் வழங்குவதில்லை என்று பின்னோட்டம் விடுகின்றது. நீங்கள் எம் மீது எச்சம் போடுவதையும், அதன் பின் துடைப்பதுமா எங்களுக்கு வேலை. இது வெறும் எச்சம், அதாவது கழுதைகளின் மூத்திரம். மாற்றுக் கருத்து என்பது, ஆளும் வர்க்கத்தின் கருத்தல்ல. ஓடுக்கப்பட்ட மக்களின், அதாவது ஓடுக்கப்பட்ட வர்க்கங்களின் முரண்பட்ட கருத்துகள். சிபிஎம் போலி மார்க்சியம் பேசும், ஆளும் வர்க்கம். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் எதிரிகள். இதை நந்திக்கிராம் மக்கள் முதல் சிபிஎம் க்கு எதிராக நடத்துகின்ற மக்கள் போராட்டங்கள் காட்டுகின்றது. ஆளும்; வர்க்க கருத்தை, மக்களை ஓடுக்கும் சித்தாந்தத்தை, நாம் மாற்றுக் கருத்தாக ஓடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரலாக எப்படி அனுமதிக்க முடியும்!?

 

பி.இரயாகரன்
08.02.2009