Your Excellency,

in the last weeks Sri Lanka’s civil war that has
already cost more than 70,000 lives escalated. Both Sri Lanka’s army and the
Tamil freedom movement LTTE violate the security of the civilian population. Sri
Lanka’s government relentlessly tries to crush the Tamil resistance with


military means. Innocent Tamil civilians increasingly become hostage of the
conflict parties, thus paying a terrible price of total war. I urge you to work
for a truce and the start of negotiations between the warring parties. -Gesellschaft für bedrohte Völker

இலங்கைப் பாசிச அரசு, சாட்சிகளே இல்லாதபடி பாரிய கொடும் இனவழிப்பு யுத்தைத்தை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டுப் புலிகளைப் பூண்டோடு அழிப்பதுபற்றி, இப்போது உலகம் மெல்லப் புரிந்துவருகிறது.

இன்றும், பலபத்துப் பொதுமக்களைச் சிங்கள இராணுவம் கொன்று குவித்திருக்கிறது.

புலிகள் மக்களைப் பிலிக்கடாவாக வைத்து அறுவடை செய்வதில் முனைப்புடன் இருப்பது மிகவும் வேதனையானது.சிங்களப் பாசித்துக்கு எதிரான புலம் பெயர் மக்களின் ஊர்வலங்கள் மிகவும் உணர்வு பூர்வமாக எழுகின்றன.இதுள் அரசு,புலிகள் இரு பிரிவினது மனிதவிரோதப் போக்கு மெல்லஅம்பலப்படுத்தப்பட்டுவருகிறது.

இத்தகைய சூழலில்,உலகம் நமது மக்களின் ஆர்ப்பாட்டவூர்வலங்களை பெரிதாகக் கவனிக்கவில்லையெனினும்,நமது மக்களின் அழிவுகுறித்துப் பரவலாகப் பார்த்துவருகிறது.இலங்கை அரசின் மிகக் கொடூரமான இனவழிப்புப் போரை மிகவும் கண்டித்துவரும் சர்வதேசப் பொது அமைப்புகள் இலங்கை அரசையும்,புலிகளையும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றன.

இன்று, பேர்ளினில் தமிழ்பேசும் இலங்கை மக்களால் செய்யப்பட்டவூர்வலத்தை ஜேர்மனிய ஊடகங்கள்பல கவனிக்கவேயில்லை!ஒருசில பிராந்தியப் பத்திரிகைகள் பெட்டிச் செய்தியுடன் தமது கடமையை முடித்துவிட்டன.

 


ஜேர்மனியப் பொலிசினது செய்தியின்படி இன்று பேர்ளினில் 4000 தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டதாகச் சொல்லப்படுகிறது!எனினும்,அண்ணளவான தகவலே இது.

எமது மக்களது யுத்தவாழ்வை ஜேர்மனிய அரசுசார அமைப்புகள் மிகக் கவலையோடு பதிவு செய்வதுமட்டுமல்ல,ஐ.நா.சபைக்கும் அப்பீலிடுகின்றன!

இது, சமீபத்தைய மாற்றம்.நல்ல சகுனமாகுமா?

எமது மக்களினது துன்பகரமான போர்வாழ்வை, இத்தகைய அமைப்புகளால் ஓரளவேனும் உலக அரங்குக்கு எடுத்தவரமுடிகிறது.குறிப்பாக, ஜேர்மனிய இடதுசாரியவூடகங்களே இதுள் மிகப்பெரிதாகக் கவனத்துக்குள்ளாகின்றன.அவை,நமது மக்களுக்காக் குரல் கொடுப்பதை,ஜேர்மன் காசல் நகரத்துப் பல்கலைக்கழகத்தின் உலகசமாதான முன்னெடுப்பு,ஆய்வு மையம் பெரும்பாலும் தொகுத்து வருகிறது.அதுள் அடங்கியுள்ள அனைத்துக்கட்டுரைகளும் ஜேர்மனிய இடதுசாரிப்பத்திரிகைகளில் வெளிக்கொணரப்பட்டவையே!

இதுவரை, நமது மக்கள் ஜேர்மனிய வலதுசாரிய அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்தவர்கள்.எனினும்,அத்தகைய அமைப்புகளோ அன்றிச் செய்தியூடகங்களோ நமது போர் வாழ்வைக் கவனிக்கவேயில்லை!இருந்தும்,தமிழ்பேசும் மக்களுக்காக் குரல் கொடுக்கும் ஜேர்மனியப் பொது அமைப்புகள் ஜேர்மனிய அரசை இதுவரை அழுத்தங்கொடுத்து இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக்கொணரும் முயற்சியை மேற்கொள்ளவில்லை!

 

எனினும்,ஜேர்மனியச் சிறு நகரங்களில் வாழும் இளைய தலைமுறைத் தமிழ் இளையோர், நமது மக்களின் அவலத்துக்காக ஆங்காங்கே குரல்கொடுத்து,நகரத்தின் மேயரிடம் மகஜர் கையளித்து ஜேர்மனிய அரசின் மூலமாகவொரு அழுத்தத்தைச் ஸ்ரீலங்கா அரசுக்குச் செய்யலாமென எண்ணுகிறார்கள்.அந்த வகையில் தர்சினி சிவகுமாரன் இளையவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவது இங்கு காணத்தக்கது.

பேராசிரியர் இமானுவேல் உலகத்தமிழர் பேரவையின் தலைவராக இருந்தாலும் அவரது குரலையும் இடதுசாரியப் பத்திரிகையே கொணர்ந்தாகவேண்டும்.

இன்றைய தினத்தில் புலம் பெயர்ந்த புலி விசுவாசிகளுக்காக இதை எழுதவில்லை.நமது மக்களினது அழிவுக்கு எவர்-எங்கே-எப்படிக் குரல் கொடுப்பதில் யார்-யாரோடு நமது தோழமை விரிந்தாகவேண்டுமென்பதற்கே இந்தத் தகவல்கள்.

நமது மக்களின் அழிவைத் தடுத்து நிறுததுவதற்குப் புலிகள் ஓட்டுக் கட்சிகளை நம்பும்போது-நாம்,இத்தகைய அமைப்புகளை வேண்டிக்கொண்டோம்.இங்கேயும் நமக்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.

இலங்கைச் சர்வதிகாரி இராஜபக்ஷ, இன்னும் சிலதினத்தில் யுத்தம் முடிவுக்குக்கொணரப்படுமென்று திமிரோடு குரல் கொடுக்கிறான்.இதன் அர்த்தம் வன்னியில் சிக்குப்பட்ட மக்கள் அனைவரும் புலிகளின் குடும்பத்தவர்கள்-பெற்றோர்கள்,சகோதரர்கள் என்று புலிகளின் விசுவாசிகளே ஒப்புதல் கொடுத்ததுக்கமைய, அனைவரையும் வேட்டையாடுவதற்கு 48 மணித்தியால யுத்தவோய்வு அரசியல் வியூகத்தோடு, உலகைத் தனக்குள் வென்றதான வெற்றியில் இதைக் கூறுகிறான்.

நமது மக்களைக் காப்பதற்கு என்ன முயற்சி எடுத்தாலும் அது,புலிகளை மக்கள்சார்ந்து சிந்திக்க வைத்து,அவர்களை விடுவிக்கும்படி வேண்டியே அடுத்த நகர்வைச் செய்தாகவேண்டும்.இதையேதாம் உலகப் பொது அமைப்புகளும் வேண்டுகின்றன.

இதைவிட வேறு மனிதாபிமான நடிவடிக்கை இன்றைய நிலையில் இல்லை.

ப.வி.ஸ்ரீரங்கன்
04.02.2009