ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள்  தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற, கொடும்பாவி எரிப்பு முதலான போராட்டங்களை நடத்தி வருகின்றன.

பொதுவில் பார்க்குமிடத்து ஏதோ தமிழகம் முழுவதும் ஈழத்துக்கு ஆதரவாக உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவது போலத் தெரிந்தாலும், அவ்வாறு கூறுவது நிலைமையை பெரிதும் மிகைப்படுத்துவதாகவே இருக்கும். திமுக பிரச்சினையில் தண்ணீர் ஊற்றி அணைப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் தலைவருக்கு இந்தச் சமயம் பார்த்து முதுகு வலி!

 

அதிமுக, காங்கிரசு, பா.ஜ.க, மார்க்சிஸ்டு ஆகியோர் அனைவரின் கொள்கையும் ஒன்றே. அவர்கள் நேரடியாக ராஜபக்சேயின் ஆதரவாளர்கள். சரத்குமாரும் விஜயகாந்தும் மறைமுக ஆதரவாளர்கள். மிச்சமிருப்பது ம.தி.மு.க, பா.ம.க, வலது கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறன் ஆகியோர் மட்டுமே. இவர்கள் இந்திய அரசு குறித்து தோற்றுவித்து வரும் பிரமைகள் பற்றி இங்கே விரிவாகப் பேசவேண்டியதில்லை. அது தனிக்கதை. “போர் நிறுத்தம், அப்பாவிகளைக் கொல்லாதே” என்ற அரசியலற்ற வெற்று மனிதாபிமான முழக்கங்களாக இவர்களது கோரிக்கை சுருங்கிவிட்டது.

 

இந்நிலையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரில் இந்திய அரசு கூட்டாளியாகத் துணை நிற்பதையும், அதன் தெற்காசிய மேலாதிக்க்க நோக்கமும், இந்தியத் தரகு முதலாளிகளின் இலங்கைச் சந்தையும்தான் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை முதன்மையான நோக்கமாக கொண்டே ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

 

மேட்டூர்:

mettur-copy


சிவகங்கை: ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்கின்ற சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சிவகங்கையில் பு.ஜ.தொ.மு. ம.க.இ.க. பு.மா.இ.மு சார்பாக கண்டன ஆர்பாட்டம் 30.01.2009 அன்று சிவகங்கை பேருந்து நிலையம் ஏதிரில் நடந்தது.முத்துக்குமார் ஏன்பவரின் போராட்ட வடிவத்தை ஆதரிக்க முடியாது ஏன்றாலும் அவரது உணர்வுபூர்வமான தியாகதிற்கு மதிப்பளித்து இரங்கல் உரை நிகழ்த்தி மௌன ஆஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கப்பட்டது.

 

சிங்கள இனவெறி ஆரசின் கொடூரங்களையும், இந்திய அரசின் பிராந்திய மேலாதிக்க வெறியையும், திமுக ஆரசின் கபடநாடகத்தையும், உழைக்கும் மக்களின் பிணங்கள் மீது நின்று கொண்டு திமுகவின் பெரியண்ணன் ரௌடி அழகிரியின் பிறந்தநாள் விழா கொண்டாடும்   திமுகவினரின் வக்கிர உணர்வையும் பிற அரசியல் கட்சிகளின் சந்தர்பவாதங்களையும் அம்பலப்படுத்தி உரை நிகழ்த்தினர்.

 

photo1331


கோவில்பட்டி:


11

21

31

41

திருப்பூர்:

12

22

32

ஓசூர்:

13

23


கடலூர்: சனவரி 30 அன்று காலை கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை அருகே தோழர் ஜெயகாந்த் சிங் தலைமையில் நடத்தப்பட்ட மறியலைக் கலைப்பதற்கு போலீசு பெரிதும் முயன்றது. ஒருவரோடு ஒருவர் சங்கிலியாக கைகளைப் பிணைத்துக் கொண்ட தோழர்களைப் பிய்த்தெறிந்து கலைப்பதற்கு போலீசு அரும்பாடு பட்டது. நகரின் மையமான அந்தப் பகுதியில் மறியலின் காரணமாக போக்குவரத்து தேங்கி நூற்றுக் கணக்கில் மக்கள் கூடிய மக்களிடையே தோழர்கள் உரையாற்றினர். பின்னர் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கடலூரில் பு.மா.இ.மு தோழர்களின் முன்முயற்சியில் கடலூர் அரசுக்கல்லூரி மாணவர்களின் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. 50 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இவையன்றி நகராட்சி பள்ளியின் மாணவர்கள் 1000 பேரைத் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடத்தியது பு.மா.இ.மு. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தமிழர் கழகத்தினரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

14

24

33

42

 

விழுப்புரம்: சனவரி 30 அன்று அதே நேரத்தில் சென்னை திருச்சி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ள விழுப்புரம் நகரில் தோழர் அம்பேத்கர் தலைமையில் காலை 10 மணியளவில் மறியல் நடைபெற்றது. பேருந்துகள் தடைபட்டு போக்குவரத்து ஸ்தம்பித்த போதிலும், போலீசார் பேச்சாளரின் உரையைக் கேட்பதிலேயே கவனமாக இருந்தனர். அதே நேரத்தில் நகரின் இன்னொரு பகுதியிலும் இணையாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

வீடியோ:

விருத்தாசலம்: இளைஞர் முத்துகுமாரின் தீக்குளிப்பை ஒட்டி சனவரி 30 ம் தேதியன்று அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தி பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் இணைந்து ஒரு ஊர்வலத்தை நடத்தினர். கிளர்ச்சி நடவடிக்கையாகவும் மக்களின் உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும் அமைய வேண்டிய இந்நிகழ்ச்சியை மவுனமாக நடத்துதல் கூடாது என்பதால், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தை நடத்தினர்.

 

தஞ்சாவூர்: சனவரி 29ம் தேதியன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 1000 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து, கண்டனப் பேரணி நடத்தினர். தஞ்சை ரயில் நிலையத்தின் முன் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமகிருஷ்ணா பாலிடெக்னிக், நல்லி குப்புசாமி கலை அறிவியல் கல்லூரி, ந.மு.வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து 6 கி.மீ தூரம் ஊர்வலமாக வந்து மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துடன் இணைந்து கொண்டனர். சுமார் 3000 மாணவர்கள் பங்கேற்ற அந்த ஆர்ப்பாட்டம் தஞ்சை நகரையே தன்னை நோக்கி ஈர்த்தது.

 

சனவரி 30 அன்று தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, பாரத் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து காலை 9 மணி முதல் 12 மணி வரை பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். போரை நிறுத்தும் போராட்டத்தைத் தொடருவோம் என்று முழங்கினார்கள் மாணவர்கள். இந்திய அரசின் சதிச் செய்லகளையும், போர்நிறுத்த அறிவிப்பு ஒரு மோசடி என்பதையும், பிரணாப் முகர்ஜி விஜயத்தின் உண்மை நோக்கத்தையும் விளக்கி காளியப்பன், பரமானந்தம் ஆகிய தோழர்கள் மாணவர்களிடையே உரையாற்றினர்.

 

அன்று மாலையே தஞ்சை சிவகங்கைப் பூங்காவிலிருந்து ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு அமைப்புகள் இணைந்து நடத்திய ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் உள்ளூர் ம.திமுக வினரும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தோழர் பரமானந்தம் தொடங்கி வைக்க, தோர் காளியப்பன் நிறைவுரையாற்றினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் நல்லதுரை காங்கிரசின் உண்மை முகத்தைத் திரைகிழித்தார்.  குடந்தை நுண்கலை கல்லூரி மாணவர் பாஸ்கர், சரபோஜி மாணவர் வரதராசன் ஆகியோரும் உரையாற்றினர். காங்கிரசை அம்பலப்படுத்தி நல்லதுரை.

 

தஞ்சை நகர வழக்குரைஞர்கள் 29ம் தேதியன்று சாலை மறியலிலும், 30 அன்று ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.

 

31 ம் தேதியன்று தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

15

25

34

 

திருவாரூர்: அம்மையப்பன் என்ற சிறு நகரில் பு.மா.இ.மு தோழர்களின் தலைமையில் அவ்வூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

திருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசு பின்வாங்கியது. காலை 10.15 முதல் நான்கு வழிச்சாலை மறிக்கப்பட்டதால் நகரின் போக்குவரத்து பாதிக்கப் பட்டதெனினும் மக்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. நூற்றுக்கணக்கில் கூடி நின்ற மக்கள் மத்தியில் தோழர்கள் உரையாற்றினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

அதே நேரத்தில் திருச்சி மலைக்கோட்டை வாசலில் உள்ள காங்கிரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் வாயிலில் மன்மோகன், ராஜபக்சே ஆகியோரின் “திருவுருவப் படங்களை” நிறுத்தி வைத்து அவற்றைச் செருப்பால் அடித்து மண்ணெண் ஊற்றி கொளுத்தினார்கள் தோழர்கள். ம.க.இ.க கிளைச் செயலர் தோழர் ராமதாசு தலைமையில் நடைபெற்ற இந்த செருப்படி வைபவத்தில் பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். மன்மோகன் சிங் செருப்படி பட்ட இடம் நகரின் மையமான கடைவீதிப் பகுதி என்பதால் அந்தக் காட்சியைக் காண கூட்டம் அலை மோதியது. மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் இந்நிகழ்ச்சிகள் அரங்கேறின. அனைத்தும் தொலைக்காட்சிகளின் படம் பிடித்து ஒளிபரப்ப பட்டன. மன்மோகனின் கொடும்பாவி கொளுத்தப்படும்போது காங்கிரசுக் கட்சி அலுவலகத்திலிருந்து அதனைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு கேட்க தைரியமில்லை. பிறகு போலீசு வந்து கைது செய்து தோழர்களைக் கொண்டு சென்றனர். போராட்டம் உள்ளுர் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்ப பட்டது. இதற்கு மேலும் கேட்காவிட்டால் மானக்கேடாகிவிடும் என்பதாலோ என்னவோ, 20,30 ஆட்களைத் திரட்டிக் கொண்டு ம.க.இ.க வுக்கு எதிராக தங்கள் கட்சி ஆபீசு வாசலிலேயே மறியல் நடத்தினார்கள் காங்கிரசுக்காரர்கள். “ம.க.இ.க வைத் தடை செய்! குண்டர் சட்டத்தில் கைது செய்! காங்கிரசு காரர்களுக்கு போலீசு பாதுகாப்பு கொடு” என்பவையே அவர்கள் எழுப்பிய முழக்கங்கள்.

 

இந்தக் கேலிக்கூத்தை போலீசுக் காரர்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் மிகப்பெரும் நகைச்சுவை. “மறியலில் ஈடுபட்ட காங்கிரசு போராளிகளை” கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். “ம.க.இ.க வினர் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடுகிறார்கள். நீங்கள் அவனை ஆதரித்து போராடுகிறீர்களா?” என்று ஒரு போலீசுக்காரர் காங்கிரசுக் காரர்களைக் கேட்க, கதர் சட்டைகளுக்கு ரத்தக் கொதிப்பு கூடி விட்டது. “அவர்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தினார்கள்” என்று கூச்சலிட்டார் ஒரு கதர்ச்சட்டை. காங்கிரசுக்காரர்களின் கேவலாமான நிலைமையைக் கேள்விப்பட்டு நகரின் காங்கிரசு மேயர் சாருபாலா தொண்டைமான் (கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்த அதே தொண்டைமான் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்) போன்ற பிரமுகர்கள் திரண்டு விட்டனர்.

 

அதன் பிறகும் தோழர்களை சிறைக்கு அனுப்ப போலீசுக்கு மனமில்லை போலும். “நாங்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தவில்லை. ராஜபக்சேயைத்தான் கொளுத்தினோம். என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போங்களேன். எதற்காக அனாவசியமாக ஜெயிலுக்குப் போகிறீர்கள்?” என்றார் ஒரு போலீசு அதிகாரி. “நாங்கள் மன்மோகனைத்தான் கொளுத்தினோம். இனியும் கொளுத்துவோம்” என்றார்கள் தோழர்கள். முடிவு மூன்று பெண் தோழர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு திருச்சி மத்திய சிறை!

 

திருச்சியில் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் ஏற்கெனவே கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மீண்டும் மாணவர்கள் போராடி அந்த நீக்கத்தை ரத்து செய்தனர். இப்பதோது சட்டக்கல்லூரியில் போராட்டத்தை பு.மா.இ.மு தொடர்கிறது. 27 மாணவர்கள் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

படங்களை காண இங்கே சொடுக்கவும்

 

சென்னை: சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

தமிழகமெங்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் திரட்டுவதற்கும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குமான எமது முயற்சி தொடர்கிறது. வெற்று மனிதாபிமான முழக்கங்களாலும், ஓட்டுக்கட்சிகளின் சமரசவாத அரசியலாலும் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது மக்களின் அரசியல் உணர்வு. ஊடகங்களோ திட்டமிட்ட இருட்ட்டிப்பு வேலையையும், திசை திருப்பலையும் செய்கின்றன. ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமை, இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்ற இரு முழக்கங்களையும் மக்கள் முழக்கங்களாக்குவதே தற்போது நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் நோக்கம்.