Fri06052020

Last update02:08:07 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள்ளேயே முடக்கியிருக்க முடியுமா!?

கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள்ளேயே முடக்கியிருக்க முடியுமா!?

அமெரிக்கா கூறுகின்றது கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள் ...

அமெரிக்காவின் மருத்துவமும் - கொரோனாவும்

அமெரிக்காவின் மருத்துவமும் - கொரோனாவும்

அமெரிக்காவின் (முதலாளித்துவத்தின்) மருத்துவக் கொள்...

அரசியலாகியுள்ள கொரோனா மரணங்கள்

அரசியலாகியுள்ள கொரோனா மரணங்கள்

அரசும் அதன் மீதான அதிகாரமே எல்லாம், வைரஸ் என்பது க...

முள்ளிவாய்க்கால் அஞ்சலிகளும் - போலிகளின் புரட்டு அஞ்சலிகளும்

முள்ளிவாய்க்கால் அஞ்சலிகளும் - போலிகளின் புரட்டு அஞ்சலிகளும்

2009 இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளும் - அரசும் ...

கொரோனாவிலிருந்து மீள்வது குறித்து .. முதலாளித்துவ அறம்

கொரோனாவிலிருந்து மீள்வது குறித்து .. முதலாளித்துவ அறம்

செல்வந்தர்களை உருவாக்கும் உற்பத்தி நின்று போவதென்ப...

சுமந்திரனும் - சருகுப் புலிகளும்

சுமந்திரனும் - சருகுப் புலிகளும்

தமிழ் தேசியத்தை முன்வைக்கும் முதலாளித்துவ நவதாராளவ...

Back முன்பக்கம்

உழைப்பதை நிறுத்து

  • PDF

உழைத்து உழைத்து 
மாடாய் போனாய் 
வளைத்து வளைத்து 
வறுமையின் வாயில்- போதும் 
உழைப்பதை நிறுத்து

 

மூட்டை தூக்கி 
முதுகில் கூணல் 
கொக்கி மாட்டி 
கிழிந்த சட்டை -போதும் 
உழைப்பதை நிறுத்து

 

மெலிந்து சிறுத்த 
கால்கள் கெஞ்சும்
கொஞ்ச நேர ஓய்வை
கருணை இல்ல 
மனங்கள் சொல்லும் 
முதலில் முடி வேலையை- போதும் 
உழைப்பதை நிறுத்து

 

இரவு முழுவதும் 
வேலை செய்வாய் 
விடிந்ததும் கடன் 
வாசலில் நிற்கும் -போதும் 
உழைப்பதை நிறுத்து தோழனே

 

கழுத்து நோவை 
காக்கைகள் கேளா
வயித்து பசியை 
வர்க்கம் கேளா -போதும் 
உழைப்பதை நிறுத்து தோழா

 

பருத்த வயிறும் 
பகட்டில் உடையும் 
நகையும் நட்டும் 
நழுவும் புடவையும் 
உனக்கில்லையெனில் -போதும்

 

உழைப்பதை நிறுத்து

 

கொழுத்தும் வெயிலில் 
கூலி வேலை கிடைத்தும் நாளை
கிடைப்பது எளிதா -போதும் 
உழைப்பதை நிறுத்து

 

வேலை வேண்டும் 
கூலி வேண்டும் 
சோறு வேண்டும் 
கேட்டால் வராது  - போதும் 
உழைப்பதை நிறுத்து 


-- 
 
தொழிலாளர்களின் உழைப்பை இன்னும் எத்தனை நாளைக்கு இந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சமூகம்
சுரண்டி வாழும்
 
பிளாஸ்மா டிவி இருக்கும் வீடும் குடிக்க கஞ்சி இல்லாத பாட்டாளிகளும் ஒரே பூமியில் வாழ்வதை
 
கண்டு சகிக்க கூடாது , போராட முன்வரவேண்டும் பொதுவுடமை சமூகம் படைக்க எனும் ஆதங்கத்தில்
 
இந்த கவிதை எழுதப்பட்டது
 

Last Updated on Wednesday, 28 January 2009 08:17

சமூகவியலாளர்கள்

< January 2009 >
Mo Tu We Th Fr Sa Su
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 29 30 31  

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை