05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழனின் தாகம்...

ஒப்பாரியும்...
புலம்பலுமாக... 
ஈழத் தமிழனின்... 
நெடிய பயணம்...!  கொலை, கொள்ளை... 
கற்பழிப்பு, இரத்தம்... 
கதறல்களில்... 
தொய்த்து எடுத்த... 
விடுதலை தாகத்தில்... 
இரத்தம் வற்றிய... 
குற்றுயிராய் துடிக்கிறது...!

ஆசுவாசப்படுத்த... 
நிறுத்தப்பட்ட... 
யுத்த நிறுத்தம்... 
முடிவுக்கு வந்தது..!

யுத்த நெறிகளை... 
மீறிய வண்ணமாய்...
மனித உயிர்களை... 
வேட்டையாட...!
 
பதுங்குழி வாழ்க்கையில்...
தாகத்திற்கு தண்ணீரில்லை...
சூடான உதிரங்கள்... 
தாகத்திற்கு கிடைக்கலாம்...!

பிணங்களின் சதைகள்... 
அவர்களுக்கு... 
உணவாக கிடைக்கலாம்...!

மானத்தோடு வாழ... 
உரிமை மட்டும்... 
கிடைக்காதாம்... 
தமிழனாக பிறந்ததால்...!


தமிழச்சி
11/01/2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்