12022022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

மூன்று நகைப் பெட்டிகள்!

பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் -

நமது பாதை பழுதுபட்டது,
கொள்கை கேலிக்குரியது என்று.
உண்மையிலேயே உயர்வானதாய்
இருப்பதனால் தான்

முட்டாள்தனமானது என்ற முரசொலி.
சாயம் போகாமல் காணாமல் போகாமல்
நிலையாக நிற்கிறதே அதுதான்
அதன் உயர்வின் சூட்சமம்.

முன்னோர்கள் பயந்த
மூடக்கொள்கையாயிருந்தால்
எப்போதோ போயிருக்கும்
இடம் தெரியாமல்
என்னிடம் இருப்பதோ
மூன்று நகைப்பெட்டகங்கள்.

முதாவது, கருணை
இரண்டாவது, சிக்கனம்
மூன்றாவது, தலைவனாகத்
தன்னை முன்னிறுத்தாமை.

இன்றைய 'வீரம்'
கருணையை அறிவதில்லை.
தாராளம் சிக்கனத்தை
இழந்து நிற்கிறது.
தலைமை அடக்கத்தை மறந்து...

கருணையில்லாத துணிவு
சிக்கனமில்லாத வள்ளல் குணம்
அடக்கமற்ற தலைமைப் பண்பு
அழிவு அருகில் வருவதன் அடையாளம்.
போரில் தொடர்ந்த வெற்றிக்குக்
காரணம் கருணைதான்.

தற்காத்துக் கொள்பவனைத்
தாங்கி நிற்பது கருணைதான்.
கருணையே ஆயுதமாக -
கடவுள் காப்பாற்றுபவராக -
உலகம் உருள்கிறது.
* சீன தத்துவ ஞானி லாட்சு


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்