06222021செ
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

செருப்பு

காலில் மிதிக்கும்

அந்த‌ இர‌ண்டு செருப்புக‌ளுக்கு

புனித‌ம் முழைத்துவிட்ட‌து.

பாதிப்புனிதம்..

இல‌க்கை அடைய‌வில்லையே

ஆனாலும் அது

செருப்பின் குற்ற‌ம‌ல்ல‌

செருப்பும்

 

 

 

 

சிந்தித்து செய‌ல்ப‌டுகிற‌தோ

ஒரு அசிங்க‌த்தில் ப‌டுவ‌தினின்று

த‌ப்பித்துக்கொண்ட‌தே.

கோம‌ண‌த்தையும் த‌ட‌விப்பார்க்கும்

அமெரிக்க‌ப்ப‌ய‌த்தை

செருப்பே ஆயுத‌மாவென‌

அல‌ர‌வைத்த‌

ஈராக்கிய‌ வ‌ல்ல‌வ‌ன்

அன்று

க‌வ‌ச‌ப் ப‌டைக‌ளை

த‌ன் செருப்பால் வ‌ர‌வேற்ற‌

ஒரு பிஞ்சின் ப‌ரிணாம‌ம்.

ஒன்றும் இர‌ண்டுமாய்

ஈராக்கின் ப‌திப்பிற்கு

600கோடி செருப்புக‌ள்

வ‌ரிசையில் காத்திருக்கின்ற‌ன‌.

எறிந்து பார்த்து ப‌ழ‌குவ‌த‌ற்கு

ஆயிர‌மாயிர‌ம்

ஊளையிடும் வில‌ங்குக‌ளுண்டு

செருப்புக்கா ப‌ஞ்ச‌ம்

இன்றே தொட‌ங்குவோம்

 

http://senkodi.multiply.com/journal/item/56/56&type=P&itemid=86519கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்