Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இது ஒட்டுமொத்த மக்களை ஏமாற்ற, திட்டமிட்டுக் களமிறங்குவதாகும். இது தம்மைத் தாம் மூடிமறைத்துக் கொள்கின்றது. மக்களின் நலனுடன்தான், தாம் இருப்பதாக பாசாங்கு செய்கின்றது. தனக்கு பின்னால் இடதுசாரி வேஷத்தை அணிகின்றது.

எங்கும் பாசிசம், எதிலும் பாசிசம் உள்ள நிலையில், மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதமாக தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. மக்களுக்காக போராடுதலை கைவிட்டு, அது சரிப்பட்டு வராத, உருப்படாத ஒரு விடையமாக, அதை வெறும் குறுங்குழுவாதமாக சித்தரிக்கின்றது. அத்துடன் களத்தில் பாசிசத்துடன் சேர்ந்து இயங்குவதையே, எதார்த்தமான மார்க்சியம் என்று வேறு கதையளக்கின்றனர்.  

 

இலக்கியவாதிகள், ஜனநாயகவாதிகள், 'சுதந்திர" ஊடகவியலாளர்கள் என அறியப்பட்டவர்கள், இன்று மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத நிலையெடுத்தபடி புலிக்கு பின்னால் நாயாக அலைகின்றனர். அது உங்கள் உரிமை. அதை வெளிப்படையாக நேர்மையாக  செய்ய வேண்டியது தானே.

 

இதை விட்டுவிட்டு, ஏன் எதற்கு வேஷம்!?; யாரை ஏமாற்றி, யாரின் தாலியை அறுக்க இந்த வேஷம். இந்த வேஷதாரிகள் எழுதாத எழுத்தா? மக்களின் ஆறாத் துயரை எழுதுவது கிடையாது. அப்படி ஏதாவது சொன்னால், அதை அரசு மட்டும் செய்வதாக சொல்லும் நிலைக்கு தரம் தாழ்ந்து, நாய்களின் உண்ணிகளாகிவிட்டனர்.  

 

அந்தளவுக்கு புலியை நக்கும் இந்தக் கும்பல், தன் புறம்போக்கை மூடிமறைக்க மௌனமாகவும் இரகசியமாகவும் அரசியல் செய்கின்றனர். 

 

பேரினவாத அரசுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி அம்பலப்படுத்தும் இவர்கள், புலியின் குரலாகவே அதை முன்வைக்கின்றனர். அரசுக்கு நிகராகவே தமிழ் மக்களுக்கு எதிராக புலிகள் இழைக்கின்ற குற்றங்களை இவர்கள் கண்டு கொள்வதோ, அம்பலப்படுத்துவதோ கிடையாது.

 

இதை நாம் எழுப்பும் போது, இவர் தான் மட்டும்தான் 'மார்க்சிஸ்ட்" என்று நினைப்பா என்கின்றனர். இது மார்க்சியமல்ல என்கின்றனர். இதை "அனாகிஸ்ட"; வழி என்கின்றனர். நல்லது, மக்களின் நலனை உயர்த்தி, மார்க்சியத்தை முன்வைப்பது தானே. அது புலியை ஆதரித்துக்கொண்டு சாத்தியமில்லை. 

 

புதுவேஷம் போட முனையும் பாசிசம்

 

அண்மையில் நான் எழுதிய வேஷம் போட்ட 'சுதந்திர" ஊடகவியலாளர்களும் இடதுசாரிகளும்" என்ற எனது கட்டுரை மூலம், பாசிசத்திற்காக புதிதாக குரல்கொடுக்க முனையும் நவீன பாசிட்டுக்களை இனம்காட்டி அம்பலப்படுத்தியிருந்தேன். இதை தொடர்ந்து தமிழ் 'சுதந்திர" ஊடகவியலாளரின் பேச்சாளர் சிவகுமார், ஐயோ 'தனிநபர் அவதூறு, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தனிப்பட்ட சேறடிப்பு" என்று தன்னை மூடிமறைத்தபடி, தொலைபேசி மூலம் பலருடன் உரையாடுகின்றார்.


அவர் மீதான எமது விமர்சனத்தை அவர் மறுக்க உரிமையுண்டு, அதை நாம் பிரசுரிக்க தயாராக உள்ளோம். அவர் தன்னை அரசியல் ரீதியாக வெளிப்படையாக தெளிவுபடுத்துவதன் மூலம், தன் மீதான அவதூறாக கருதும் எதையும் மறுக்கமுடியும், இதை துடைக்கவும் முடியும். 

 

நாங்கள் தெளிவாக குற்றம் சாட்டுகின்றோம். நீங்கள் உங்கள் போன்ற பலர் புலிப் பாசிசத்தை ஆதரிப்பதையும், அதற்காக குலைப்பதையும் இனம்கண்டு, அதனால் நாங்கள் உங்களை விமர்சிக்கின்றோம். வேறு எந்த தனிப்பட்ட காரணத்துக்காகவும் உங்களை நாம் விமர்சிக்க முற்படவில்லை. இப்படி விமர்சிப்பதை தான் நீங்கள், தனிநபர் தாக்குதல், தனிநபர் அவதூறு என்றால், நீங்கள் ஆயிரம் ஆயிரம் மக்களின் படுகொலை மேல் படுத்து விபச்சாரம் செய்வதை நாங்கள் மக்களுக்கு மூடிமறைக்க முடியாது. எமது முன்னாள் தோழர்கள், நண்பர்கள் என்பதால், எந்த சலுகையையும் நாம் வழங்க முடியாது. அரசியலுக்கு வெளியில், நாம் வேறுவிதமான உறவை கையாள்வது கிடையாது.

 

நீங்கள் மீண்டும் மக்களுடன் மக்களுக்காக நிற்பீர்களேயானால், நாம் விமர்சிக்க மாட்டோம். தோழமையை பேணுவோம். எம்மை நாம் சுயவிமர்சனம் செய்வோம்.

 

பலருக்கு யாரை நோக்கி, ஏன், எதற்கு இந்த விமர்சனம் என்ற ஒரு சந்தேகம் உண்டு. மூடிமறைக்கப்பட்ட வகையில் திரைமறைவில் நடத்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதிரான சதியை இனம் கண்டு, அதை முன் கூட்டியே முறியடிக்கும் போராட்டம் இது.

 

புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த, இன்றைய புலிப் பாணி கருத்துக்கு மாறாக அறிவுப+ர்வமாக செய்ய பலர் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியை புலிகள் தான் அழைத்து வந்துள்ளனர். உதாரணமாக ஒரு பேப்பர் ரவி, முன்னாள் என்;.எல்.எவ்.ரியைச் சேர்ந்த இவரை கொழும்பில் இருந்து லண்டன் வரை அழைத்து வந்த முழுந் செலவையும் புலிதான் கொடுத்தது. இதில் என்னுடைய வீட்டில் மூன்று நாள் தின்றும், குடித்ததுமான செலவைத் தவிர அனைத்தும், அவர்கள் செலவு தான். இப்படிப் பலர்.

 

இப்படி இங்கு வந்து திடீர் வேஷம் போடுவர்களை அம்பலப்படுத்த எழுதியதுதான் 'புலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள்" என்ற கட்டுரை.


   
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் மூலம், புலிப் பாசிசத்தை பாதுகாக்க அரசியல் விபச்சாரம் செய்ய முனையும் உங்கனைப் போன்றவர்களின், தொடர்ச்சியான சதிகளின் மேலான தாக்குதல் தான்.

 

எப்படி இந்த நிலையை அடைந்தீர்கள்? மண்ணில் நீங்கள் இருந்த வரை சூழலை அடிப்படையாக கொண்டு, உங்கள் மேலான விமர்சனத்தை நாம் செய்யவில்லை. உங்கள் கருத்தின் வெளிப்படையற்ற தன்மையின் பின், மக்கள் நலன் இருப்பதாக கருதினோம். மௌனத்தையே எமக்கு இடையிலான உறவாகவும், சம்பந்தமில்லாத வகையில் தனிப்பட்ட நட்பை அரசியலாக எமக்கு வெளிப்படுத்திய நீங்கள், இதன் பின்னால் நழுவி விழும் மீன் மாதிரி  புலிசார்பு அரசியல் செய்து வந்தீர்கள். இதை நாம் உங்கள் சூழல் சார்ந்தும், எம்மை புரிந்து கொள்வதில் உள்ள தடை காரணமாகவும் இருக்கும் என்று ஒரு காரணத்தை, நாம் கற்பித்துக் கொண்டோம்.

 

ஆனால் காரணம் இதுவல்ல என்பதும், நீங்கள் புலியாக உறுமுவதையும் இன்று பார்க்கின்றோம். அதை வெளிப்படையற்ற வகையில், மூடிமறைக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பவாதமாக கையாள்வதைப்  பார்க்கின்றோம். மக்களுக்காக முன்பு போராடியவர்கள், எப்படி இன்று பாசிட்டுகளாக குலைக்க முடிகின்றது என்ற கேள்வி எம்முன் எழுகின்றது.   

 

இந்த வகையில் நாம் முன்பு எழுதியதை மீள சுட்டிக்காட்ட முனைகின்றேன்.  'கொள்கை கோட்பாடு எதுவுமற்ற ஒரு பாசிச இயக்கம், தனக்கு பிரச்சாரம் செய்யும் ஆட்களை பலவிதத்தில் விலைக்கு வாங்கமுடிகின்றது. அதற்கு அமையவே, புலிகள் இவர்களை தனிப்பட்ட பலவீனங்களை அற்பத்தனத்தையும் இனம் கண்டு அணுகுகின்றது. ஆசைகாட்டியும், உழைக்காது சொகுசாக வாழ மாதச் சம்பளத்தைக் கொடுத்தும், மிரட்டியும், பணத்தைக் கொடுத்தும், போத்தலைக் கொடுத்தும், பெண்ணைக் கொடுத்தும் கூட விலைக்கு வாங்கியுள்ளது. இதில் இவர்களில் ஒரு சிலரின் கூத்தை, வீடியோ பண்ணியும் வைத்துள்ளது. இப்படி புலிக்கு பிரச்சாரம் செய்யும் இந்திய அரசியல்வாதிகள் வரை, இந்த வலைக்குள் அடங்கும். இவர்கள் தான் தமிழ் தேசியத்தை பாசிசமாக்கி, அதைப் பிரச்சாரம் செய்;கின்றனர்."

 

இப்படி கூறியது, இன்று புலிக்கு பின்னால் நின்று குலைக்கும் பலரின் கதை இது. இது சிவகுமாருக்கு பொருந்துமா இல்லையா என்பது எமக்கு தெரியாது. யார் யார் எப்படிப்பட்ட வலையில் சிக்கி, எப்படி தம் வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு குலைக்கின்றனர் என்று எமக்கு தெரியாது. அதை ஆராய்வது எமது வேலையல்ல. புலிப் பாசிசத்தை ஆதரிக்க வெளிகிட்ட பின், எந்த அரசியல் ஒழுக்கக்கேட்டை நீங்கள் நடத்தி இப்படி பினாமியாக குலைக்கின்றீர்கள் என்பது அக்கறைக்குரியதல்ல. 

 

நீங்கள் புலிப்பாசிசத்தை எப்படி, எந்த காலத்தில், ஏன் ஆதரிக்க தொடங்கினீர்கள்? நீங்கள் 'சுதந்திர" ஊடகவியலாளராக இருந்த போது, இந்த வேஷம் பின்னால் இருந்தது, இன்று தெளிவாக புலனாகின்றது.

 

உங்கள் நண்பர் குரு (குருபரன்) நோர்வே அரசு பணம் வழங்க, உலகம் சுற்றும் ஊடகவியலாளராக விமானத்தில் பறந்ததை நாம் நன்கு அறிவோம். இன்று புலிக்காக நவீன புதிய ஊடகவியல் வைத்து, குலைக்க தொடங்கியுள்ளதையும் அறிவோம்.

 

நீங்களும் சரி உங்கள் நண்பனும் ஊடகவியலாளராக வன்னிவரை சென்று, வன்னியில் விருந்துண்டதையும் நாம் அறிவோம். முன்பு புலிகள் என்னைக் கைது செய்ய காரணமாக இருந்த நீங்கள் இருவரும், அவர்களின் சித்திரவதைகளை அனுபவித்ததனால் தான் எனது கைது நிகழ்ந்தது எனபதையும் நாம் மறுக்கவில்லை.

 

இன்று அதே புலிக்காக குலைக்கும் நீங்கள், தனிப்பட்ட உங்கள் மேலான சித்திரவதையை மறந்து போனது எப்படி? நீங்கள் அன்று சித்திரவதையை அனுபவித்தது, மக்களுக்காக போராடியதால் தான். இன்று அதை மறுப்பது எப்படி? அப்படியென்றால் அன்று என்னை புலியிடம் காட்டிக்கொடுத்தது சித்திரவதையினாலா அல்லது சித்திரவதையைத் தொடர்ந்து மக்கள் விரோத நிலை எடுத்ததாலா? உங்கள் இன்றைய மக்கள் விரோத நிலை, அன்று உங்கள் நிலையல்ல. அன்றும் நாம் உரையாடியது மக்களுக்காக, அதன் பின் உரையாடலையே நீங்கள் மறுத்து நின்றது, ஏன் என்ற சந்தேகம் இப்போது எழுகின்றது!?  

 

நாம் மேல் குறிப்பிட்டது போல், மக்கள் அரசியல் பேசியவர்கள் புலியின் வலையில் சிக்கிய பின்புலம் எப்படிப்பட்டது என்பதை நாம் அறியோம். ஆனால் குறிப்பிட்டது போல், ஏதோ ஒரு காரிய காரணங்கள் உண்டு. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்துடன், உங்கள் பின்புல நகர்வுகள் மக்களுக்கானதல்ல, அது புலிக்கானதே.

 

உங்கள் தனிப்பட்ட உரையாடலை நாம் பயன்படுத்தியதாக கூறும் நீங்கள், அது முழுமையல்ல என்கின்றீர்கள்;. நல்லது, இதை நீங்கள் மறுக்க முடியும். அதற்கான சுதந்திரத்தை நாம் தருகின்றோம்;. புலியை மக்கள் விரோத இயக்கமாக, பாசிட்டுக்களாக நீங்கள் வெளிப்படையாக கூறுவீர்களானால், உங்கள் தோழமையில் இழைத்த தவறுக்காக நாம் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராகவுள்ளோம்.

 

அதைச் செய்வீர்களா? இதை செய்ய முடியாது. நீங்கள் புலிக்காக குலைப்பதோ வெளிப்படையானது. தனிப்பட்ட உரையாடல் என்பது, பிரச்சார வடிவம் தான். 1984 களில் இப்படித்தான் எம் உறவே ஆரம்பமானது. உள் இயக்க போராட்டமும் இப்படித்தான் ஆரம்பமானது. பழசை மறந்து இருக்க மாட்டீர்கள். இன்று நீங்கள் புலிக்காக செய்வது அதைத்தான். உங்களைச் சுற்றியுள்ள பலர் தனிப்பட்ட நபர்களைச் சந்திப்பதும், புலிக்காக அவர்களை அணிதிரட்ட முனைவதையும் நாம் அறிவோம்.

 

அப்படி உங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியை எடுத்து உங்களை அம்பலப்படுத்த பயன்படுத்தினோம். நீங்கள் செய்வதோ மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல்;. இதனால் தான் நாம் உங்களின் வெளிப்படையற்ற நீண்டகால மக்கள் விரோத செயல்களை, பொறுமையாக இனம் காண பொறுத்திருந்தோம். நீங்களும் உங்கள் கூட்டமும், கடந்த 20 வருடத்தில் எப்படி மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள்? அரசை விமர்சிப்பது மட்டுமா மக்கள் நலன், அரசுக்கு எதிராக போராடிய புலிகள் இழைத்த மனித விரோத குற்றத்தை பாதுகாத்த நீங்கள் எல்லாம் 'சுதந்திர" ஊடகவிலாளர்கள். இந்த ஊடக 'சுதந்திரத்தை" செருப்பால் அடிக்கவேண்டும்.

 

நாம் இவ்வளவு காலமும் சூழல் என்று யோசித்தோம். இன்று தான் புரிகின்றது, நீங்களும் புலிகளாக இருப்பது. இதை அம்பலப்படுத்தினால், இதை தனிநபர் தாக்குதல் என்கின்றீர்கள். உங்கள் பாதுகாப்பு என்கின்றீர்கள். ஆயிரம் ஆயிரம் மக்களின் படுகொலைகளையும், அந்த அவலத்தையும் நியாயப்படுத்திக்கொண்டு, உங்கள் பாதுகாப்பை பற்றி மட்டும் கதைப்பது வெட்கமாய் இல்லை.

 

இந்த கொடுமையையும் கொடூரத்தையும் நியாயப்படுத்தும் உங்கள் நிலையைப் பற்றி நாம் எழுத, உங்களிடம் கேட்ட வேண்டும் என்கின்றீர்கள். வேடிக்கையான தர்க்கம். இதைத்தான் புலியும் சொல்லுகின்றது. உங்கள் 'சுதந்திர" ஊடகவியலும்; இப்படி எமக்கு உபதேசிக்கின்றது. 

                 
 
இதற்குள் மார்க்சியம் பற்றி பாடம் எடுக்க முனைகின்றனர். புலியை ஆதரித்துக்கொண்டு, எமது நிலையை மார்க்சியமல்ல என்கின்றீர்கள்;. என்ன கொழுப்பு. புலியை ஆதரிக்கின்ற சந்தர்ப்பவாத மௌனத்தையும், இரகசியமான உங்கள் அரசியல் நடத்தைகளையுமா, நாம் மார்க்சியமாக ஏற்றுக்கொள்வது.

 

மக்கள் அரசியலை முன்வைக்க முனைகின்றவர்களுடன் உரையாடுவது கிடையாது, ஆனால் பாசிட்டுகளுடன் பலமட்ட உரையாடல்களை நடத்தும் உங்கள் அரசியல் இழிவுகளை,  பொறுக்கித்தனம் என்றும் அயோக்கியத்தனம் என்றும் சொல்வதில் எந்தத் தப்பும் கிடையாது. மக்கள் அரசியலை துறந்தோடி, இறுதியில் சரணடைந்த 'சுதந்திர" ஊடகவியல் மொத்தத்தில் விபச்சாரம் செய்தது.

 

மக்களையிட்டு அக்கறையற்ற புலிப்பிரச்சாரத்தை அது செய்தது. இதற்கு இவர்கள் வைத்த பெயர் 'சுதந்திர" ஊடகவியல். உண்மை, நேர்மை, உளச் சுத்தியின்றி பிரமுகர்களாக பவனி வந்தவர்கள், மார்க்சியம் பற்றி போதிக்க முற்படுகின்றனர். எழுத்து பண்பு பற்றி, சூழல் சார்ந்த நடைமுறை பற்றி உபதேசிக்க முனைகின்றனர். நாங்கள் அரசியல் பிரமுகராக, எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் அரசியல் விபச்சாரத்தை உங்களைப் போல் செய்பவர்களல்ல. நாங்கள் மக்கள் நலன் சார்ந்த வர்க்கப் போராட்டத்தை பற்றி பேசுகின்றோம்.

 

இதற்கு வெளியில் நண்பர்கள், தோழர்கள் என்று யாரையும் நாம் கொண்டிருப்பதில்லை.

 

பி.இரயாகரன்
18.12.2008