37வயதுடைய சாந்தி என்றழைக்கப்படும் லீலாவதி ஜெயராசா என்னும் நான்கு குழந்தைகளின் தாயொருவர் யாழ்குடா நாட்டில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டதாக கூறி சுட்டுக்கொல்லப்பட்டார். குறிப்பாக இந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இக் கொலை நியாயப்படுத்தப்பட்டது.

 

 

இங்கு அடிப்படையான கேள்வியே, விபச்சாரத்தில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனை தான் தீர்வா! இதைத் தான் புலித் தேசிய பிரபானிசம் வழிகாட்டுகின்றதா? ஓரு பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படையான சமூக காரணங்களை கேள்விக்கு உட்படுத்த மறுக்கும் மரணதண்டனைகளே வக்கிரமானவை.

 

விபச்சாரம் என்பது பிரபானிசம் கருதுவது போல் பெண்ணின் தெரிவல்ல. மாறாக பிரபானிசம் பாதுகாக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பினால் திணிக்கப்பட்டவை தான். இந்த சமூக அமைப்பில் ஒரு பெண் சுயாதீனமாக வாழமுடியாத வறுமையும், சமூக நெருக்கடியும் ஒரு பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்திக்கும் சமூக காரணங்களில் முக்கியமானவை. இதைத் தீர்க்க வக்கற்ற மாமனிதர்கள், மரணதண்டனையை வழங்குவதன் மூலம் இதை ஒழித்துக்கட்டலாம் என்று பிரபானிசம் பீற்றுகின்றனர். தாயை கொன்றவர்கள், அந்த தாயின் நாலு குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் வாழ்வதற்கு என்ன வழியை பிரபானிசியம் வைத்துள்ளது. அவர்கள் குழந்தை பாலியல் தொழிலுக்கு போவதைத் தவிர வேறு மார்க்கம் எதையும் தேசியம் வழிகாட்டவில்

29.08.2005