அமெரிக்க சமூக அமைப்பை பற்றி மக்களின் அறியாமைதான், ஓபாமா பற்றி பிரமைகளும், நம்பிகைகளும். இது ஏதோ ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்பார்புகளாகின்றது. மக்களின் செயலற்ற தன்மையும், விழிபற்ற மூடத்தனமும், ஓபாமா மீதான நம்பிக்கையாகின்றது.

 

இதை ஓபாமா மட்டும் தனது மூலதனமாக்கவில்லை. உலகின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் இதை மூலதனமாக்கி, மக்களின் முட்டாள் தனமான நம்பிக்கை மீது சவாரி செய்கின்றன. ஊடாகங்கள் ஆளும் வர்க்கங்களின் இருப்பு மீதான் நம்பிக்கையை ஊசுப்பேற்றி, மக்களை மேலும் மூடர்களாக்கின்றன. இந்த சமூக அமைப்பில் ஊடாகவியல் என்பது, மக்களின் மூடத்தனத்தையும் அறியாமையும் கட்டமைப்பதுதான்.      

 

இப்படி இவர்களால் வழிபட்டுக்கு உட்படுத்தப்படும் ஓபாமா, இந்த சமூக அமைப்பில் எதைத்தான் மாற்றமுடியும்!?

 

அமெரிக்கா என்பது, உலகை அடக்கியாளும் ஓரு ஏகாதிபத்தியம். இதுதான் அதன் அடையாளம். இதை ஓபாமா மாற்றிவிடுவரா!? அமெரிக்கா தன் இராணுவ பொருளாதாரத்தைக் கொண்டு உலகை மிரட்டி தனக்கு அடிபனியவைத்துள்ளதே. இதை ஓபாமா மாற்றி விடுவரா!? இதை மாற்றிவிட முடியாது என்பது, வெளிப்டையானது. அமெரிக்காவின் அடையளாமே இதுதான். அமெரிக்காவின் ஆளும் வர்க்கங்கள் இதை பாதுகாக்கவே, அவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. 

 

உலக நாடுகளின் சுதந்திரத்தை அமெரிக்கா தன் காலில் போட்ட மிதிக்கின்றது. தனது நலனுக்கு எற்ற ஒரு பொம்மை (இராணுவ மற்றும் பாசிச) ஆட்சியையே, அமெரிக்கா உலகெங்கும் நிறுவிவருகின்றது. இப்படிப்பட்ட அமெரிக்காவை உலக மக்கள் வெறுக்கின்றனர்,  எதிர்க்கின்றனர். இதை தடுத்து நிறுத்திவிட ஓபாமாவால் முடியுமா!?

 

இந்த அமெரிக்கா தனது இந்த எகாதிபத்திய தன்மையை கைவிட்டு விடும் என்பது, ஓபாமா அதை துறந்து விடுவார் என்பது எல்லாம் கற்பனையானது. இப்படி நம்புவது அடி மூட்டாள் தனமாகும். 

 

'கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க மக்கள் தற்போது சவால்களை எதிர்நோக்குகிறார்கள்" என்று கவலை கொள்ளும் ஓபாமா, எதையிட்டு கவலை கொள்கின்றார். உலக மக்களையிட்டா!? அல்லது மூலதனத்தையிட்டா!? 

 

அவர் சவால் என்று எதைக் கருதுகின்றார்? 100 ஆண்டுகள் இல்லாத அந்த சவால்கள் தான் என்ன?

 

ஆம் உலகம் எங்கும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது மூலதனத்துக்கு எதிரான போராட்டமாக மாறுகின்றது. மீண்டும் கம்யூனிசம் அதை தலைமை தாங்குகின்ற மிகப்பெரிய அபாயம். இப்படி ஓபாமா போற்றும் தனிப்பட்ட மூலதனத்துக்கு உலகெங்கும் அபாயம். எங்கும் போராட்டங்களும், இந்த மூலதன அமைப்பின் மீதான நம்பிக்கை தளர்வுகளும் அதிகரித்துள்ளது.

 

அமெரிக்காவிலேயே மக்கள் திவாலாகி நிற்கின்றர். இந்தியாவிலில் பூச்சி கொல்லி மருந்தைக் குடித்த தற்கொலை செய்து போல், அமெரிக்காவில் தூப்பாக்கி மூலம் அன்றாடம் தற்கொலை செய்கின்றனர். அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் மீதான, அமெரிக்கா மக்களின் நம்பிககைகளை அவர்கள் இழந்துவிட்டனர். அமெரிக்கா உலக மேலாதிக்க தன்மையை இழந்த விடுமளவுக்கு, அது சந்திக்கின்ற தொடர் நெருக்கடிகள் தான், கடந்த 100 வருடத்தில் இல்லாத புதிய சவாலாக ஓபாமா காண்கின்றார்.   

 

அமெரிக்கா மக்கள் முதல் உலக மக்கள் வரை, இந்த ஜனநாயகத்திலும் சுதத்திரத்திலும் நம்பிகை இழந்து வரும் காட்சியைத்தான், ஓபாமா உலகின் புதிய சாவல் என்கின்றார். உலகெங்கும் நிலவும் ஜனநாயகத்திலும் சுதந்திரத்திலும் நம்பிகை கொண்ட பிழைத்த நடுத்தர வர்க்கமும், அதற்கு மேல் உள்ள வர்க்கமும் ஓபாமாவை விடிவெள்ளியாக காண்கின்றனர். இழந்துவரும் தம் சொர்க்கத்தை, ஓபாமா எப்படியாவது பழையபடி மீட்டுத்தருவார் என்ற நம்பாசை கற்பனையான பிரமையாக பிரமிப்பாக மாறுகின்றது. 

 

ஓபாமா முன் உள்ள மிகப்பெரிய சவால், இந்த நம்பிக்கையை அறுவடை செய்வதுதான். இந்த ஜனநாயகத்திலும் சுதத்திரத்திலும் நம்பிக்கை இழந்துவரும் போக்கை தடுத்து நிறுத்துவதுதான். தன் மீதான நம்பிக்கை ஊடாக, இதை அடுத்த 10 வடங்களுக்கு எப்படி மழுங்கடிப்பது, முறியடிப்பது, எப்படி ஏமாற்றுவது என்பதுதான் அவர் முன் உள்ள சவால்.

 

கறுப்பு அடையாளங்கள் முதல் சீர்திருத்தங்கள் வரை அவர் கொண்டுள்ள ஆயுதங்கள் மூலம், உலகை அமெரிகாவின் முன் மண்டியிட வைக்கமுடியும் என்று கனவு காண்கின்றார். அமெரிக்காவின் திருட்ட மூலதனத்தைக் கொண்டு, தொடர்ந்து உலகை ஆளக் கனவு காண்கின்றார். 


 
இதன் மூலம் உலகை சூறையாடும் முதலாளித்துவம் மீதான புதிய நம்பிக்கையை உருவாக்கி, பழைய உலகை மீள நிறுவதற்காகத்தான் ஓபாமா ஆளும் வர்க்கங்களால்  தெரிவாக்கப்பட்டள்ளார். இதன் அடிப்படையில் மாற்றங்கள் பற்றி பிரமிப்பை, ஊடாகவியல்  மூலம் உருவாக்க முனைகின்றனர். இதற்கு அமைய சீர்திருத்தங்கள், சலுகைளை எப்படி வழங்குவது என்பதையே, அவர் சவால்கள் மாற்றங்கள் என்கின்றனர்.

 

இந்த ஒபாமாவோ அமெரிக்கா மூலதனத்தின் விசுவசமுள்ள ஏகாதிபத்திய நாய்தான். அது குலைக்கும் போது, எப்படி குலைக்கின்றது என்று பாருங்கள். “உலகத்தை துண்டு துண்டாக கிழிக்க முனைபவர்களே உங்களை நாங்கள் தோற்கடிப்போம். சமாதானத்தையும் ஜக்கியத்தையும் விரும்புபவர்களே நாங்கள் உங்களுக்கு கரம் கொடுப்போம்" என்கின்றது இந்த ஏகாதிபத்திய நாய். உலகமயமாதலை கிழிப்பதையும், எதிர்ப்பதையும் அமெரிக்கா தோற்கடிக்கும் என்கின்றார். மாறாக உலகமயமாதலை விசுவசமாக நக்குபவர்களையே கரம் கொடுத்து உதவும் என்கின்றார்.

 

மூலதனத்தின் நாயான ஒபாமாவோ, உலக உழைக்கும் மக்களின் முதல்தரமான எதிரிதான்.

 

பி.இரயாகரன்
07.11.2008

தொடரும்