01162022ஞா
Last updateஞா, 16 ஜன 2022 1pm

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

குற்றவாளிகளும், கிரிமினல்களும், கொள்கைக்காரர்களும் கூட்டாக கொள்ளையடிக்க நடத்திய நாடகம் தான், சதாம்குசைன் மீதான நீதி விசாரணை. அமெரிக்காவின் பாசிச கேலிக் கூத்தே, சதாமின் மீதான மரணதண்டனை. முன்கூட்டியே தண்டனை தீர்மானிக்கப்பட்டு,

அமெரிக்காவின் தேர்தல் வெற்றிகளை அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வெளிவருகின்றது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பாளன் நடத்துகின்ற தொடர் கொலைவெறியாட்டத்தில், சதாமின் உயிரும் அடங்குகின்றது. கடந்த மூன்று வருடத்தில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மரணத்துக்கு காரணமான ஆக்கிரமிப்பாளன் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் உரிய தண்டனையைத் தான், சதாமுக்கு வழங்கப்படுகின்றது. ஈராக் எண்ணை வயல்களை சூறையாடும் ஆக்கிரமிப்பாளனின் கொலைவெறியாட்டம், சதாமின் மீதாக பாய்கின்றது. அப்பட்டமான ஒரு படுகொலை தீர்ப்பாகின்றது.

 

கூலிக்கு மாரடிக்கும் கைக்கூலி பொம்மை நீதிமன்றங்களில், சர்வதேச நீதிக்கு புறம்பான வகையில் தான் சதாம் விசாரணை செய்யப்பட்டார். ஏகாதிபத்தியம் தான் உருவாக்கிய சர்வதேச நீதிமன்றத்தில் கூட, சதாம்குசனை விசாரி;க்க மறுத்தது. நீதிக்கு புறம்பான ஒரு சதியை நீதியாக நடத்தியது. கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் நீதிபதியாக இருக்கவே, இந்தக் கேலிக் கூத்து அரங்கேறியது.

 

சதாம்குசைனை ஓரு சர்வாதிகாரியாக, மனித விரோதியாக ஈராக்கில் ஆட்சியில் ஏற்றியதே இந்த அமெரிக்கா தான். 10 இலட்சம் பேரைக் கொன்ற ஈரான் யுத்தம் முதல் அனைத்தையும் வழிநடத்தியது இந்த அமெரிக்கா தான். இரசாயன ஆயுதங்களையும், அழிவுகரமான ஆயுதங்களையும் அள்ளியள்ளி வழங்கி, கொலையெறியாட்டத்தை ஊக்குவித்து நடத்துவித்ததும் இந்த அமெரிக்கா தான். மிகப்பெரிய மனிதப்படுகொலைகளை சதாம் நடத்திய போது, அதை உலகுக்கு மூடிமறைத்து பாதுகாத்ததும் அமெரிக்கா தான்.

 

குற்றவாளிகள் ஜனநாயக வேஷம் போட்டு படுகொலைகளை ஈராக்கில் நடத்துகின்றனர். ஈராக்கில் கற்பழிப்பு முதல் படுகொலைகள் வரை நடத்தும் அமெரிக்கா எந்த நீதி மன்றத்தின் முன்னாலும் நிறுத்தப்படுவதில்லை. இன்றைய பொம்மை ஆட்சி நடத்தும் கொலைகள் அனைத்தும் ஜனநாயக கொலைகளாக சித்தரிக்கப்படுகின்றது.

 

ஈராக்கில் அமெரிக்கா பிரிட்டிஸ் எண்ணைக் கம்பனிகள், அந்த மக்களின் தேசிய வளத்தை சூறையாட நடத்தும் பாசிச நாடகங்களே இவை. இந்த எண்ணைக் கம்பனி முதலாளிகளும், ஆயுதக் கம்பனி முதலாளிகளும் தான், அமெரிக்காவின் அதிகாரத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள். அவர்கள் தமது நலன் சார்ந்து ஈராக்கை ஆக்கிரமித்து யுத்தம் செய்கின்றனர். இதில் சதாம் மீதான விசாரணை ஒரு கேலிக் கூத்தாகின்றது.

 

சதாம் மீதான விசாரணை மூலம் சதாமின் குற்றங்கள் மூடிமறைக்கப்படுகின்றது. சதாம் தியாகியாகி தண்டனையில் இருந்து தப்பிச் செல்லமுடிகின்றது. சதாமின் குற்றத்தினை தூண்டி, அதற்கு துணையான பிரதான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர். சதாமுக்கு மரணதணை;டனையை வழங்கி, குற்றத்தை எண்ணி வருந்துவதற்குரிய அனைத்துச் சூழலையும் இல்லாததாக்கிவிடுகின்றனர். மக்கள் நீதிமன்றங்கள் மட்டும் தான், உண்மையான நேர்மையான விசாரணையை நடத்தி தண்டனையையும் வழங்கும். இது அல்லாத அனைத்தும் அமெரிக்காவின் எண்ணைக் கொள்ளைக்கான கேலிக் கூத்துதான்.

 

ஈராக்கில் என்ன நடக்கின்றது? அமெரிக்காவின் ஜனநாயகம் அங்கே எப்படி செயற்படுகின்றது. இதைத் தெரிந்து கொள்ள உள்ளே செல்லுங்கள்.

பி.இரயாகரன்
06.11.2006

1. வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்

http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2006/july_2006/bam_july_2006_01.html

2 .வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்

http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2005/dec_2005/dec_05_2005.htm

3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்

http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/dec_2005/Dec_17_05.htm

4.அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!

http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/sept_2005/sept_01.htm

5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்

http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/june_2005/puthi_13.htm

6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்

http://tamilcircle.net/puthiyakalasaram_usa/abu_grib.htm

http://tamilcircle.net/iraq/iraq_photos.htm