09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

உங்கள் இணைய இணைப்பு பாதுகாப்பானதுதானா?

இணையத்தில் நாம் எப்போதுமே இணைந்துள்ளோம். எத்தனையோ பறிமாற்றங்களை இணையத்தின் ஊடாக நாம் தினம்தோறும் செய்து வருகிறோம். நம்மில் பலருக்கு இணையத்தின் சேவை எப்போதுமே தேவைப்படுகிறது. 

 

மடிக்கணினி முதல் மேசைக்கணினி வரையில் இப்போது இணையம் பரந்து விரிந்து இருக்கிறது. இதில் உங்களது பாஸ்வர்ட்களைக் கொள்ளையடிக்க எத்தனையோ 

இணையத்திருடர்கள் , ஸ்பைவேர்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி? 

 

உங்களது இணைய இணைப்பின் பாதுகாப்புத்தன்மை / நம்பகத்தன்மையின் அளவுகோலை அறிய ஒரு எளிய சோதனை. இதை முயன்று பார்க்கலாமே?

 

இந்த வழிமுறைகளைக் கையாண்டு பார்க்கவும்.

1. விண்டோஸ் RUN உரையாடல் பெட்டியில் CMD என்று தட்டெழுதவும்

2. DOS திரையில் netstat -b 5 > suspect.txt எனத் தட்டெழுதவும்

3. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு Ctrl + C ஐ அழுத்தவும்

4. உங்களது வழமையான Text Editor அல்லது Notepad மூலம் suspect.txt கோப்பைத் திறந்து பார்க்கவும். 

5. உங்களது கணினியின் கடைசி இரண்டு நிமிடங்களில் இணைய வழியாக நடந்த பறிமாற்றங்களை இந்த suspect.txt கோப்பு பிரதிபலிக்கும். 

6. இதில் இணைய வழிப் பறிமாற்றமானது உங்களது instant messenger , downloader, outlook ஆகிய எந்தவிதமானதாக இருந்தாலும் அதை அறியலாம்.

 

7. யாகூ, கூகிள் போன்ற பிரபலாமன் தள முகவரி இந்த suspect.txt கோப்பில் காட்டப்பட்டிருக்கும். 

8. மேலும் சந்தேகத்துக்கு இடமான தளமுகவரி ஏதேனும் உங்களது கணினியுடன் தொடர்பிலிருப்பின் அதுவும் இந்த suspect.txt கோப்பில் இடம்பெற்றிருக்கும். பொறுமையாகக் கவனிக்கவும்.

 

9. அப்படி ஏதேனும் உங்களின் பார்வையில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் தளமுகவரியிருப்பின் உடனடியாக Task Manager, Process Explorer மூலம் அந்தத் தளத்தின் வேரை அறிந்து அதை அகற்றும் நடவடிக்கையில் நீங்கள் இறங்கலாம்.

 

10. நம்பகத்தன்மையற்ற தளமானது உங்களது கணினியுடன் இணைப்பிலிருப்பின் அதன் காரணத்தை, வேரை அறிந்து அதனை நீக்கிவிடுங்கள். ஏதேனும் EXE Application இருப்பின் அதை அழித்துவிடுங்கள்.

http://mahanathi.blogspot.com/search/label/கம்பியூட்டர்