தேவை 
இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில் எல்லா உணவுப் பொருட்களும் உடனடி (Instant) தயாரிப்பு நிலக்கு வந்தாகிவிட்டது. காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய வகைகள் யாவும் தனது இயற்கைத் தன்மையிலிருந்து மாறி ஒருவித செயற்கை தன்மையேடுதான் நம் கைகளை வந்தடைகிறது. இதில் பலவற்றை நாம் தவிர்க்க இயலாது. ஆனால் சிலவற்றையாவது நாமே நமக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வகையில் எளிதானதும், மன நிறைவு அளிப்பதும் வீட்டுத் தோட்டம் அமைப்பது ஆகும் . வீட்டுத் தோட்டம் நமது தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
பயன்
காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. நாம் நம் அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது.
தோட்டம் அமைத்தல்
வீட்டுக்கு அருகில் இருக்கும் காலி இடத்தை நன்கு ஆழமாக மண்வெட்டி கொண்டு கொத்திவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். தேவையான நன்கு மக்கிய தொழு உரம், தென்னை நார் கழிவு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். 4-5 நாட்கள் கொத்திவிட்ட இடத்தை ஆறவிட வேண்டும்.

மாடி வீட்டுகார்கள் கவலைப்பட வேண்டாம் http://www.verticalfarm.com/ இங்க போயிப் பாருங்க ஒரு பண்ணையே மாடியில வச்சு கலக்கராங்க. நீங்களு உங்க அளவுக்கு கலக்குங்க.

விதைத்தல் மற்றும் நடவு செய்தல்
நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது கில்லி எடுக்கப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் விதைக்க வேண்டும்.
நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.

நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும். காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

பல பருவ தாவரங்களை, மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.

தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.

பயிரிடும் திட்டம்
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)

01 தக்காளி மற்றும் வெங்காயம் ஜுன் - செப்டம்பர்
முள்ளங்கி அக்டோபர் - நவம்பர்
பீன்ஸ் டிசம்பர் - பிப்ரவரி
வெண்டைக்காய் மார்ச் - மே
02. கத்தரி ஜுன் - செப்டம்பர்
பீன்ஸ் அக்டோபர் - நவம்பர்
தக்காளி ஜுன் - செப்டம்பர்
தண்டுகீரை, சிறுகீரை மே
03. மிளகாய் மற்றும் முள்ளங்கி ஜுன் - செப்டம்பர்
தட்டவரை டிசம்பர் - பிப்ரவரி
பெல்லாரி வெங்காயம் மார்ச் - மே
04. வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி ஜுன் - ஆகஸ்டு
முட்டைக்கோஸ் செப்டம்பர் - டிசம்பர்
கொத்தவரை ஜனவரி - மார்ச்
05. பெரிய வெங்காயம் ஜுன் - ஆகஸ்டு
பீட்ருட் செப்டம்பர் - நவம்பர்
தக்காளி டிசம்பர் - மார்ச்
வெங்காயம் ஏப்ரல் - மே
06. கொத்தவரை ஜுன் - செப்டம்பர்
கத்தரி மற்றும் பீட்ருட் அக்டோபர் - ஜனவரி
07. பெரிய வெங்காயம் ஜுலை - ஆகஸ்டு
கேரட் செப்டம்பர் - டிசம்பர்
பூசணி ஜனவரி - மார்ச்
08. மொச்சை, அவரை ஜுன் - ஆகஸ்டு
வெங்காயம் ஜனவரி - ஆகஸ்டு
வெண்டைக்காய் செப்டம்பர் - டிசம்பர்
கொத்தமல்லி ஏப்ரல் - மே

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

பலவருட பயிர்கள்
முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.

மேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரையும் குறுகிய கால பயிரையும் இணைக்கப்பட்டுள்ளன.

தகவல் ஆதாரம் : இந்திய முன்னேற்ற நுழைவாயில்http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/i2020201a-ea3153ep-abia32020i2039/ என்ற இணையதளத்திலிருந்து

http://vayalveli.blogspot.com/search/label/காய்கறிகள்