03012021தி
Last updateவெ, 26 பிப் 2021 11pm

முற்றுமுழுதான பிரச்சாரத்தின்கீழ்...

அன்பு வாசகர்களே,வணக்கம்!
இன்று, தமிழீழக் கோசத்தின் போலித்தனமான அரசியல் சூதாட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சிங்களத் தரப்பாலும்,தமிழ்த்தரப்பாலும் வேட்டையாடி வரும்வேளையில்,நாம் மொழியிழந்துகிடக்கிறோம்.
"...Und eines dürfen wir auch nicht vergessen: Etwa 1,8 Millionen Georgier leben zur Zeit in Rußland. Sie arbeiten dort und überweisen viel Geld zur Unterstützung ihrer Familien. Das ist ein wichtiger wirtschaftlicher Faktor für uns. "-
Lasha Shavdia
ஒரு புறம் புலிகளின் அழிவு தமிழர்களின் அழிவெனும் வாதம்,மறுபுறம் சிங்கள அரசின் வெற்றி சிங்கள மேலாதிகத்தின் வெற்றியுமாகப் பார்க்கப்படுகிறது.
இவையிரண்டையும் இன்றைய சூழலில் மறுப்பதற்கில்லை.
ஏனெனில், சிங்கள அரசு இன்று தேசியப் போராளிகளாக இராணுவத்தை மாற்றிச் சிங்களத் தேசத்தின் இறைமைக்காகப் போராடுவதாகக் காட்டி வருகிறது.உலகப் பொருளாதாரப் போக்குகள் ஆளும் சிங்கள வர்க்கத்தை ஆட்டங்காண வைக்கும்போதெல்லாம் இந்த யுத்தமே அவர்களைத் காத்துவருகிறது.இதுவே, புலிகளின் இருப்போடும் சம்பந்தப்படுகிறது.இன்றைய நிலையில் இவற்றை மறுத்தொதிக்கிவிட்டு நமது மக்களிடம் அரசியல் செய்யப்பலர் ஆயுத்தமாகும் நிலை.சிங்கள அரசின்பின்னே சிதைக்கப்பட்ட தமிழரின் நலன்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.இதுவரை இதைச் செய்த புலிகள் தமது வரலாற்றுத் தவறைப் பதிப்பித்து வருகிறார்கள்.இது வன்னியில் அச்சாகிறது.

நமது மக்களின் சுயநிர்ணய உரிமை அழிக்கப்பட்டாச்சு.புலிகளும்,ஏனையவர்களும் இதை எப்போதோ செய்துவிட்டார்கள்.இனிச் சிங்கள ஆளும் வர்க்கம் இதை நிறுவனப்படுத்தி நமது மக்களை அடிமைகளாக்கும் பணியைச் செய்து முடிக்கப் புலிகளே உடந்தையானார்கள்.
இது, தவிர்ந்தவொரு அரசியல் இனியும் உண்டு.
அது சிங்கள முற்போக்கு சக்திகளோடு இணைந்து சிங்கள மக்களோடு மீளவும் தமிழர்கள் நட்புறவை வளர்த்தாகவேண்டும்.அதன் அடிப்படையில் எழும் ஒருமைப்பாட்டோடு ஆளும் சிங்கள அரசை வீழ்த்துவதே தலையாகக் கடமை.இது சிரமமான பணி.இதன்வழி இலங்கையில் ஒரு சமஷ்ட்டி முறையிலான தீர்வாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தற்காலிகமாகத் தீர்க்கப்படலாம்.
டொச் மொழியில் வந்த கீழ்வரும் பேட்டியை ஜேர்ச்சியாவில் சமாதானத்துக்காகச் செயற்படும் அமைப்பின் முன்னணிச் செயற்பாட்டாளர் வழங்கியுள்ளார்.இப்பேட்டியில் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த உறவே இன முரண்பாட்டையும்,தீர்வையும் சாத்தியப்படுத்துமென அடித்துக் கூறுகிறார்.இதுதாம் உண்மை.இலங்கையைவிடப் பல மடங்கு வளங்கள் நிறைந்த ஜோர்ச்சியாவே இருஷ்சியாவோடு நட்புறவை வளர்த்தால்தாம் அதன் பொருளாதார வாழ்வு நிலைக்குமெனச் சொல்லும்போது,ஒரு சைக்கிள் கட்டையையே செய்யமுடியாத ஈழத்தின் நிலை புரியத் தக்கது.இதன் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுவது நன்று.
இப்பேட்டியானது ஜேர்மனிய முன்னணி இடதுசாரியச் சஞ்சிகையான யுங்க வெல்ற்றில் http://www.jungewelt.de/2008/09-27/002.php

 

 

வெளியாகியது.அதை நான் தமிழுக்குக் கொணர்கிறேன்.அவ்வளவுதாம்.
நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.

"முற்றுமுழுதான பிரச்சாரத்தின்கீழ் ஜோர்ச்சியாவில் நாம் வாழ்கிறோம்."

 

லாச்ஷா சௌடியாவோடான உரையாடல்.மொஸ்கோவினது மிகப் பதுமையான சதுரங்க
விளையாட்டுக்கும்,அரச(ஜோர்ஜ்சிய)உளவுத்துறையின்
வேவுக்குள்ளானதுமான
சாகசங்கள்.அத்தோடு,இரஷ்சியாவோடான நட்புறவை மீண்டும்
ஏற்படுத்தவேண்டியது மிக அவசியம்.

 

லாஷா சௌடியா ஜோர்ச்சியாவின் சமாதானத்துக்கான முன்னணியின் ஒரு முன்னணி உறுப்பினர்.அவர் ஒரு புனைபெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.ஜோர்ச்சியப் புலனாய்வுத்துறையினரால் தான் இனங்காணப்பட்டு உயிராபத்தைப் பேட்டியின் பின்பான சூழல் உருவாக்குமென்பதால் அவர் தனது பெயரைப் புனைபெயராகவே தேர்ந்தெடுத்துள்ளார்.எனவே,அவரது புகைப்படம் இங்கு பிரசுரிக்கப்படாது.
கௌகசுஸ் யுத்தத்திற்குப் பின்பான காலத்தில் மேற்குலக ஊடகங்கங்கள் அநேகமாக ஜோர்ச்சியாவின் பக்கமே உணர்வுகளைத் தகவமைத்துக் கொடுத்தன.இத்தகைய ஊடகங்கங்கள் ஜோர்ச்சியத் தேசம் இருஷ்சிய வல்லாத்திக்க அரசியலுக்குப் பலியானதாகப் படங்காட்டினார்கள்.நீங்களோ அந்தத் தேசத்தின் சமாதானத்துக்கான முன்னணிச் செயற்பாட்டாளரென்றவகையில் இந்த அரசியல் சதுரங்கத்தைப் பற்றி என்ன நிலைப்பாட்டிலுள்ளீர்கள்?
முற்றுமுழுதும் அது சரியானது!இருஷ்சிய விஸ்த்தரிப்பு யுத்தத்துக்கு ஜோர்ஜ்சியா பலியானதென்பது சரியானது.எனினும்,நாமிதை சம்பிரதாயபூர்வமாக இங்ஙனமும் புரிந்துகொள்ளலாம்:ஜோர்ஜ்சியாவானது உலக ஏகாதிபத்தியக்கூட்டணிகளின் வல்லாதிக்க அரசியலுக்குப் பலியாகிவிட்டது.ஒரு புறத்தில் அமெரிக்காவும்,நேட்டோவும் நின்றபடி,அவர்களுக்குத்தெரியும் மறுபுறத்தில் இருஷ்சிய வல்லாதிக்கம் நிற்கிறதென்று.
ஜோர்ச்சிய மக்கள் எல்லோருமே ஜோச்சிய அதிபர் மிக்கேல் சாகாஸ்வில்லியின் பின்னே நிற்பதாக ஜேர்மனிய அரசு அழுத்தமான உணர்வை வெளிப்படுத்திக்கொண்டது.உண்மையில் எதிர் தரப்ப்புப்பற்றி(மாற்றுக் கருத்து) மிக அபூர்வமாகவே நாம் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது.உங்களது தேசத்தில் உண்மையில் மாற்றுக்கருத்து நிலைகள் ஏதாவது பலமாக இருக்கின்றனவா?
ஜோச்சிய மக்கள் ஒருபோதும் சாகஸவில்லிக்குப் பெரும்பான்மை அதாரவாக இருந்ததில்லை.எனினும்,நானிதை இப்படி உரைக்கிறேன்,அதாவது,சாகஸ்வில்லியின் ஆட்சியின் ஆரம்பத்தால் மக்கள் ஆறுதலடைந்தார்கள்.அரசமட்டத்தில் நிலவிய பெரும் ஊழலை எதிர்த்து நல்லாட்சி தருவதாகச் சாகஸ்வில்லி பொறுப்பேற்றார்.ஆனால்,இந்த நிலை எப்பவோ கடந்துவிட்டது.இப்போது நாம் காணும் கொடிய நிலை என்னவெனில் ஊழலென்பது அவரது ஆட்சியின்கீழ் மிகவும் நிரம்பி வழிகின்றது என்பதும்,ஜோர்ச்சியப் பெரும் நிறுவனங்கள் இவரது அமைச்சரவையால் கண்காணித்து அரசில் செல்வாக்குச் செலுத்துவது என்பதும் இன்றைய ஜோர்ச்சியத் தேசத்தின் நிலை.
ஆக, அமைச்சர்கள் தமது இலாகாவைத் தம் வருமானத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்கிறீர்கள்?
அதுதான்.அனால்,இஃதொன்றும் புதிதில்லை எனது தேசத்தில்.எட்வார்ட் சேவார்ட்நாட்ஷே ஆட்சியின்கீழும் இந்த நிறுவனங்களை அவரது அமைச்சர்களே கண்காணித்தார்கள்.சாகஸ்வில்லியின் காலத்தில் இது அவரது மந்திரிகள் கண்காணித்துப் பலனடைய ஆள் மாற்றம் நிகழ்ந்தது.
இவைகுறித்துப் பொதுமட்டத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதா?
ஒவ்வொருவரும் இது குறித்து அறிவார்கள்.ஜோர்ச்சிய ஊடகங்கள் நிகழ்கால ஊழல்கள் குறித்து மௌனித்துக்கிடந்தன.என்றபோதும்,அது குறித்து எங்கும் விவாதிக்கப்பட்டது.
சுயாதீனமான ஊடகங்கள் ஏதாவது ஜோர்ஜ்சியாவில் இருக்கின்றதா?
மொத்தமாக ஓரிரு நாளிதழ்-சஞ்சிகை இருக்கிறது,இவை அடிக்கடி சாகஸ்வில்லியை விமர்சித்துவந்தன.ஆனால்,வானொலிகள் தொலைக்காட்சிகள் அனைத்துமே அரசினது பாதையின்வழியே தொடர்ந்தன,கவ்காயா எனும் தொலைக்காட்சிச் சேவைவரை இதுவே கதை.இந்தக் கவ்காயாத் தொலைக்காட்சியானது குறுகியதூர ஒளிப்பரப்பையே செய்யக்கூடியது.தலைநகரமான Tbilissi நகரத்துக்குட்பட்ட வலயத்துக்குள் இது ஒளிபரப்பாகியது.யுத்தம் தொடங்குவதற்கு முன்பு இது இருஷ்சியாவரைக்குமான நீண்ட தூரத்துக்கான சேவையை வழங்கியது.இது இருஷ்சிய மொழியில் தனது சேவையை வழங்கிக்கொண்டது.இதுவொன்றே மாற்று ஊடகமாக வழங்கியது.இதுவும் நிறுத்தப்பட்டது.யுத்தம் ஆரம்பித்தபின் இருஷ்சிய மொழிகளில் வெளிவந்த அனைத்து இணையச் சஞ்சிகைகளும் ஜோர்ச்சிய அரசால் நிறுத்தப்பட்டது.
இருஷ்சியத் தரப்பின் பார்வையின்படி யுத்தமானது ஜோர்ச்சியத் துருப்புக்கள் தென் ஒசாத்தியாமீதான தாக்குதலின் விளைவாக எழுந்ததாகக்கூறப்பட்டாலும்,சாகஸ்வில்லி இதை மறுத்துச் சொல்கிறார், இருஷ்சியாவினது ஆத்தரமூட்டும் இராணுவத் தந்திரத்தின் எதிர்வினையாகவே இது நிகழ்ந்ததாக.யாரது பார்வைகள் இங்கே யுத்தத்தை முதலில் ஆரம்பித்து வைத்தன?
இரண்டு பக்கமுமே உணர்ந்துகொண்டாதான ஏதேவொரு கூட்டுக்குள் நிலைமை உருவாகி வருகிறதென்பதான சூழலில் இரு பக்கமுமே யுத்தத்துக்கான ஆயுத்தங்களைச் செய்தன.எனவே,இருஷ்சியாவும் இந்தத் துன்பகரமான யுத்தத்தின் பாத்தியத்தைப் பொறுப்பேற்கவேண்டும்.என்றபோதும், பெரும்பகுதி பொறுப்பு சாகஸ்வில்லியும் அவரது அரசையுமே போய்ச் சேரும்-தென் ஒசாத்தியாமீதான ஜோர்ச்சிய இராணுவத்தின் படையெடுப்பே யுத்தத்தை ஆரம்பிக்கும் சூழலை ஏற்படுத்தியது.
ஜோர்ஜ்சியவானது யுத்தில் தோல்வியைத் தழுவியது-இருஷ்சியாமீதான ஜோர்ச்சிய மக்களின் குரல்கள் இப்போது எப்படியிருக்கிறது.புவிகோள அரசியல் வியூகங்குறித்த மொஸ்கோ தலைமைத்துவத்தின் கவலைகுறித்தும்,அதைத்(புவிகோள வியூகம்) தடுப்பதற்கான கடப்பாடின்மீதான புரிதற்பாடு ஜோர்ச்சிய மக்களிடம் உண்டா,அதாவது,நோட்டோவானது நேரடியாக அவர்களின்(ஜோர்ச்சிய-இருஷ்சிய)வீட்டின் வாசலில் தனது இராணுவத் தளத்தை அமைக்கும்போது?
மக்கள் எண்ணங்களில் வேறுபாடுண்டு.ஜோர்ச்சிய மக்களுக்கு ஒன்றுமட்டும் நன்றாகவே புரியும்,அதாவது, இருஷ்சியா இல்லாமல்-இருஷ்சியாவின் தொழிற்சாலைகளின் பொருளாதார ஒத்துழைப்பு இன்றி ஜோர்ச்சியத் தேசத்தில் பொருளாதாரச் சுபீட்சம் ஏற்படமுடியாதென்று.90 களிலேயே இனமுரண்பாடானது கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்ததென்பதை மக்களும் அறிந்தே இருக்கிறார்கள்.கூடவே,இப்பிரச்சனையானது இருஷ்சியாவுடனான நட்பை மீண்டும் ஏற்படுத்தும்போது மட்டுமேதான் தீர்கப்படும் என்பதும் அவர்கள் அறிந்ததே.ஜோர்ச்சிய மக்களை உறுதியாக நம்பிக்கைகொள்ளவைத்தலென்பது விளங்கிக்கொண்டவரை மிகக்கடினமான பணி, தென் ஒசாத்தியாவிலும் மற்றும்அப்சாசியனிலிமிருந்து துரத்தப்பட்ட நிலையில்.இருஷ்சியா நீண்டகாலமாகவே இந்த இரு பிராந்தியங்களையும் ஜோர்சியாவிலிருந்து பிரிப்பதற்கான முயற்சியில் இத்தகைய முரண்பாடுக்கு ஊக்கமளித்ததென்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள்.இதன் இறுதி விளைவானது இந்தப் பிராந்தியங்களிலிருந்து 160.000.மக்கள் இடம்பெயரும் அவல நிலை உருவாகியது.இதுள் ஒருசிலர் மீளவும் இப்பிராந்தியங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர் இன்று.
இனங்களுக்கிடையிலான நட்புறவென்பது அரசியல் தீர்வைவிட மிகப் பெரியது,ஒவ்வொருவரும் இணக்கமுறுவதைக் கடைப்பிடிக்கவேண்டும்.இது, இருண்டுபக்கத்துக்குமே பொருந்தும்.இந்த நட்பார்ந்த இணக்கம் முற்றுமுழுதாகக் கோரிக்கொள்ளமுடியாது,ஜோர்ச்சியாவானது நேட்டோவில் உறுப்பிராவதையும்,தனது பிராந்தியத்தில் இந்தக் கூட்டணியின் இராணுவத்தளத்தை அமைத்துக்கொள்வதற்குமான விருப்பத்தை.ஆனால்,இருஷ்சியா கூறுவதுபோல அதனிடம் இந்த இராணுவத் தாக்குதலைத்தவிர்த்து வேறொரு தீர்வு இதற்குச் சாத்தியமில்லையென்பதை நமது மக்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.
இதற்கு எந்தவகையான மாற்றுத் திட்டம் செயற்படுத்தியிருக்கமுடியும்?
இதற்கேற்ற சரியான காலம் தவறவிடப்பட்டுப் போய்விட்டது.சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்பான காலத்தில், அதவாது,90 களின் ஆரம்பத்தில் ஜோர்ச்சியாவுக்கென்றொரு தேசிய அரசு வந்தது.இவ்வரசு உடனடியாக நேட்டோவின் நோக்கு நிலைக்கேற்றபடி நடக்க விரும்பியது.கௌகசுஸ் பிரச்சனைக்கான எந்த அரசியல் அணுகுமுறையைக் கையாள்வதுதென்பதில் ஜெல்சின் ஆட்சியின்கீழ் இருஷ்சியாவிடம் எந்தத் திட்டமும் இருக்கவில்லை,உதாரணத்துக்கு:1999 இல் "ஐரோப்பாவில் ஆயுதக்களைவுக் கூட்டு" எனும் ஒப்பந்தம் ஒன்றை ஜெல்சின் ஈஸ்ரன்பூலில் செய்து கையெழுத்திட்டார்.இதன் விளைவாக,ஜோர்சியாவில் நிலைகொண்டிருந்த பெரும்பகுதி இருஷ்சியத் துருப்புக்கள் தமது நிலைகளிலிருந்து விலகிக்கொண்டார்கள்.இறுதிப் பகுதி இருஷ்சிய இராணுவம் கடந்த ஆண்டு எமது நாட்டைவிட்டு வெளியேறின.இவ்வாண்டோ மீண்டும் இருஷ்சியப் படை நமது நாட்டை நோக்கிப்படையெடுத்தன.
அப்சாசியனுக்கும்,தென் ஒசத்தியாவுக்குமாக ஒரு சமாதான ஒப்பந்தம் இருக்கிறதே,அதை ஜோர்ச்சியாவும் உடன்பட்டுக்கொண்டது.இதன் பின்புதானே இருஷ்சியச் சமாதானப்படை அங்கே நிலைகொண்டன.
அதுசரிதான்,எனினும்,அங்கே இருஷ்சியாவினது வழமையான ஒழுங்கமைந்த இராணுவ அணி நிலைகொண்டே இருக்கிறது.இவை சமாதான ஒப்பந்தத்தின்கீழ் அடங்கவில்லை.இங்கே,அதாவது அப்சாசியனிலும்,தென் ஒசாத்தியாவிலும் இத்தகைய பிரதேசங்களின் இராணுவத்திற்கு இருஷ்சிய இராணுவக்கட்டமைப்புப் பயிற்சியளித்து வந்தது.இவ் வண்ணமே ஜோர்ச்சியாவிலும் அதனது இராணுவத்துக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வந்தார்கள்,கூடவே இது நேட்டோ அமைப்பினது அடிப்படைத் திட்டத்துக்கு அமைய"சமாதானத்துக்கான கூட்டு ஒத்துழைப்பு."
இது வெளிப்படையான நேட்டோவின் வியூகம்,நெடுக,நெடுக மிக அண்மையாக இருஷ்சிய எல்லையை நெருங்கிக்கொள்வது.இவைகளை நாம் பால்டிக்கில் மற்றும் போலந்தில்,பல்கேரியாவில் இப்போது ஜோர்ச்சியாவில் பார்க்கிறோம்.இவைகளின்வழி ஜோர்ச்சிய மக்கள் எங்ஙனம் தமது பதில்வினையை ஆற்றுகிறார்கள்,அங்கே மக்களிடம் நேட்டோவுக்கான அநுதாபம் மிகுந்திருக்கிறதா?
மக்கள் அநேகமாக நேரத்துக்கே இதற்கு எதிராகவே தமது பதில்வினைகளைக்கொண்டார்கள்.அதாவது,நமது பிரதேசத்தில் நேட்டோவானதன் வரவு மிக அபாயகரமான நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகவே புரிந்துகொண்டார்கள்.அநேகமாக அச்சப்படுவது,நடந்துமுடிந்த யுத்தமும் அவலமும் இறுதியானது அல்ல என்பதே.ஜோர்ச்சியவானது தொடர்ந்து இராணுவ முரண்பாட்டுக்கான திடலாக உருவாகிறது.இதனூடாகப் பலரும் உணருவது என்னவெனில்,இருஷ்சியாவோடான மீள் நட்பார்ந்த நிலைமைகளை உருவாக்கி உறவாடுதலுக்கு மிக நீண்டகாலமெடுக்கும் என்பது.மிக விரைவாக நேட்டோ எங்களை அடைகாத்துக்கொள்ளும்(நம்மைப் பலிகொடுக்க).ஆனால்,ஒன்றைமட்டும் நாம் எப்போதுமே மறக்கப்படாது:இன்றைய நிலையில் 18 இலட்சம் ஜோர்ச்சிய மக்கள் இருஷ்சியாவில் வாழ்கிறார்கள் என்பதும்,அங்கே அவர்கள் வேலைசெய்துவரும் வருமானத்தில் பெரும்பகுதி பணத்தை ஜோர்ச்சியாவுக்கு அனுப்பி வைத்ததுத் தமது உறவினரைக் காத்து வருகிறார்கள் என்பதையும் எப்போதும் மறந்துவிட முடியாது.இதுவொரு முக்கியமான பொருளாதார நெறிமுறைக் காரணி எமக்கு.
நேட்டோவானது தனது கரத்தை உக்கிரையின்மீதும் பதித்துவருவதை அறிவோம்.அங்கே,கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன 60 வீதமான மக்கள் நேட்டோக் கூட்டணி அமைவதை எதிர்த்துவருவதாக,இத்தகையவொரு நிலைமை ஜோர்ச்சியாவிலும் நிலவுகிறதா?
வருகிற ஜனவரி 5 ஜனாதிபதிக்கான தேர்தல் எங்கள் தேசத்தில் வருவதால்,பரவலாகச் சமாந்திரமான கேள்விகளை மக்களிடம் கொண்டு சென்று கேட்கப்பட்டது.அப்படிக் கேட்கப்பட்டபோது,நோட்டோ கூட்டணியில் இணைவது குறித்தும் கருத்துக்கேட்கப்பட்டது.79 வீதமான மக்கள் இதற்கு இசைவாகக் கருத்துக்கூறியள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவிக்கிறது.எமக்கும் தெரியும் இந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்தக் கருத்துக்கணிப்பினது முடிவுகள் யாவும் மிகப் பிழையானதென்பது.உண்மையிலேயே இந்த வீதம் என்பது மிகவும் கூட்டப்பட்டுள்ளது.எனது கணிப்பின்படி ஒவ்வொரு இரண்டாவது ஜோர்ச்சியக் குடிகளும் நேட்டோவில் இணைவதை எதிர்த்து வருகிறார்கள்.அரசினது முற்றுமுழுதான பொய்ப்பிரச்சாரமானது எங்கள் தேசத்தினது ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் தொட்டுச் செல்கிறது.
இது கவலையளிப்பது.ஆனால், இதுதான் நிலைமை.ஜோர்ச்சியாமீதான இருஷ்சியாவினது படையெடுப்போடு நோட்டோவின் பரப்புரைகள் ஜோர்ச்சியாவை ஒரு கை பார்த்தன.அமெரிக்காவே தன்னை எங்களது தேசத்தின் பாதுகாவலனாகவும்,எமது பிராந்தியங்களின் ஐக்கியத்துக்கு உத்தரவாதமளிப்பவனுமாகக் காட்டிக்கொள்கிறது.பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதையே வாந்தியெடுப்பதும்,அரசை விமர்சிப்பதைவிட நேட்டோவுக்குத் தலையாட்டுவது பெறுமதிமிக்கதாக இருக்கிறது.
நோட்டோவனது மிகவும் அடிப்படையானவொரு பிரச்சாரக் கட்டமைப்பை ஜோர்ச்சியாவில் கட்டிக்கொண்டுள்ளது,அது சுயமான பரப்புரைகளைத் தனக்குச் சார்பாகக் கட்டியமைக்கத்தக்கபடி இதைச் செய்துள்ளது.தலைநகர் Tbilissi யில் மத்திய தகவல் திணைக்கழகமொன்றை அது உருவாக்கி நடாத்துகிறது.அதுபோலவே தெற்கு மற்றும் மேற்கு ஜோர்ச்சியாவில் நேட்டோவினது இரு கிளைகளை அது அமைத்துள்ளது.இத்தகைய விளம்பர நிறுவனங்களிடம் பணம் மிகவும் கொட்டிக்கிடக்கிறது,இவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,சிறார்களுக்குமாக ஏராளமான சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகள்,நகைச்சுவைத் துணுக்குள் எனப் பெரு எண்ணிக்கையில் பதிப்பித்துத்தள்ளிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதுமல்லாது பெரும் கூட்டங்களையும் கூட்டி அவர்களே கலந்துரையாடல்களைச் செய்கிறார்கள்.இவை அனைத்தினதும் சுலோகம்:"நேட்டோவானது ஜோர்ச்சிய மக்களுக்குச் சமதானத்தையும்,மகிழச்சியையும் கூட்டிவரும்"என்பதே!
நேட்டாவானது மீளவும் ஜோர்ச்சியாவை ஆயுதமயப்படுத்துகிறது.இதன்பொருட்டு அரசினால் நல்வாழ்வுக்காகப் பணங்களைச் சேமிக்கமுடியாது.மேலும் இத்தகைய நடாத்தையின்படி மீளவும் இருஷ்சியாவுக்குத் தொந்தரவு கொடுப்பதைப்பற்றி மக்கள் உணர்ந்துள்ளார்களா?மொஸ்கோ இத்தகைய சூழ்ச்சியில் வீழ்ந்துவிடுமென எண்ணுவது மிகக் கடினமானது.
இருஷ்சியப்படையெடுப்பால் சிதறடிக்கப்பட்டுளுள்ள ஜோர்ச்சியப்படையணியை அமெரிக்காவானது முதற்கட்டமாகப் புனரமைத்துவருகிறது,இது நெருப்போடு விளையாடும் ஒரு நடவடிக்கை.சாகஸ்வில்லியும் அவரது நண்பர்களும் அமெரிக்காவோடிணைந்து விளையாடுகிறார்கள்.இருஷ்சியாவோ குறிகிய யுத்தக்காலத்திலிருந்து மிகத் தெளிவாகச் சொல்லிவருகிறது,ஜோர்ச்சியாவுக்கான இராணுவ உதவிகளையும்,யுத்த ஊக்குவிப்பையும் அமெரிக்காவே செய்துவருவதாக.எனவே, ஜோர்ச்சிய மக்கள் முற்றுமுழுதாக எந்த அபாயத்துள் நாம் இருப்பதென்பதை உணர்வார்கள்.
நீங்கள் ஜோர்ச்சியாவின் சமாதானத்துகான இயகத்தின் அங்கத்தவர்.இதன் பொருத்தப்பாடு உண்மையில் என்னவானது?மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய உங்களால் முடியுமா?
சமாதானத்துக்கான எமதிந்த அமைப்பானது இன்னும் பழமையானது அல்ல.இரண்டோ அல்லது மூன்றோ ஆண்டுகளே நாம் மிகவும் துடிப்போடு செயற்பட்டோம்.நாங்கள் அனைத்துக்கும் முன்பாக ஒரு செயற்பாட்டை முன்னிலைப்படுத்தினோம்.அதாவது,இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தென் ஒசாத்தியா மற்றும் அப்சாசியன் மக்களோடு மீளவும் நட்பினைக்கட்டி வளர்ப்பது அவசியமெனச் சுட்டிச் செயற்பட்டோம்.ஜோர்ச்சியாவின் பிராந்தியங்களின் ஐக்கியத்தை இராணுவத் தீர்வின்மூலம் ஏற்படுத்துவதை நாம் தொடர்ந்து பிழையானதெனச் சொல்லியே வருகிறோம்.எங்கள் விவாதத்துத்தகான பிரதிவினைகள் இன்றுவரை முற்று முழுதாகத் தைரியமூட்டுபவை.
இதனூடாகத் தென் ஒசாத்தியா மற்றும் அப்சாசியவோடு நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி மேலும் விருத்திக்கிட்டுச் செல்வதை மிகவும் முயற்சிசெய்கிறோம்.நாங்கள் புலம் பெயர்ந்த அகதிகளுக்கும் அவர்களது முன்னைய தெரிந்தவர்கள்,அயலவர்களுக்குமிடையிலான நட்பார்ந்த தொடர்பை-புரிந்துணர்வை மேலும் வளர்ப்பதற்காக அவர்கள் மத்தியில் உதவிகளைச் செய்து, இவைகளை மேலும் விருத்திக்கிட்டு வருகிறோம்.இத்தோடு,எமக்கு இன்னுமொரு முக்கியமான வேலைப்பணி மிக அவசியமானது.அதாவது,கௌகசுஸ்சின் அரசியல் சூழலை ஆராய்தல்.இங்கே,கவலையளிக்கத்தக்க விடயம் என்னவெனில்,நமக்கக் கிடைக்கக்கூடிய தகவல் அனைத்தும் ஒருபக்கச்சார்பானவை.ஒன்று அமெரிக்காவினது பக்கச்சார்பானது அல்லது இருஷ்சியாவினது பக்கஞ்சார்ந்தது.எமக்குத் தேவை இந்தச் சூழலின் புறநிலையானவொரு உண்மைப் படமே.
ஜோர்ச்சியாவின் அரசு உங்கள் நடவடிக்கைகள் குறித்து எங்ஙனம் பதில்வினையாற்றுகிறது?
இது அளவுக்கதிமாகவே நடந்தேறுகிறது.நான் இவை குறித்துச் சொல்வதென்றால்,எங்களது இந்த அரசியல் சூழலானது ஜனநாயத்தோடு சம்பந்தப்பட்டது.இருஷ்சியாவோடான மற்றும் அப்சாசியன்,தென் ஒசாத்தியாவுடனான மீள் நட்புறுவு வளர்பதன்ற குரல்கள் யாவும் உடனடியாகவே நசுக்கப்படுக்கின்றன.இவ்வண்ணமே நேட்டோவோடான கூட்டணி அமைப்பதற்கு எதிரான மக்களின் குரல்களுக்கும் அடக்குமுறைகள் நடந்தேறுகின்றன.
அங்கு எப்படியான உறுதிப்பாடுள்ளது? ஏதாவது பழிக்குப்பழி நடவடிக்கையுண்டா?
முதலாவதாகச் சொன்னால் நோட்டோவின் மிகக் காட்டாமான பிரச்சாரத்தைச் சொல்வேன்.இரண்டாவதாச் சமாதானத்துக்கான அமைப்பின் செயற்பாட்டாளர்களின் வெளிப்படையான கஷ்டம்.கைதுகள்,ஜோர்ச்சிய அரசின் புலாய்வுத்துறையினதும் அவர்களது முகவர்களதும் அச்சுறுத்தும் தொலைபேசியழைப்புகள்,வீதியோரத்தில் நின்று தரும் அபாயகரமான சூழல்களால் செயற்பாட்டை முடக்க முனைதல்.உள்நாட்டமைச்சகத்தின்கீழ் இயங்கும் உளவுப்படையினால் நமது உறுப்பினர் கைது செய்யப்பட்டு ஆறு மணி நேரம் தடுத்துவைத்து அவமானப்படுத்தப்பட்டும்,ஏசியும் பின்பு,நான்கு உளவுப்படை உறுப்பினர்களினால் நகைப்புடைக்கப்பட்டுள்ளார். இன்றுவரை இதுவொரு ஈனத்தனமான செயல்.இத்தகையதோடு மேலும் சொன்னால், அனைத்துச் செய்திகளையும் தடுத்துவிடுவது,இவை அரசின் உத்தியோபூர்வமான பரப்புரைகளைக் கேள்விக்குட்படுத்தினால் அல்லது நேட்டோவோடு இணைவது பற்றிய விவாதங்களை வெளிப்படுத்தினால்.அத்தோடு நேட்டோவை எதிர்த்துக் கருத்தாடுபவர்களின் எத்தக்கருத்தும் வார்த்தையில் வரவாய்ப்பேயில்லை.பத்திரிகை ஆசிரியர்களின் முடிவின்பின்னேதாம் இவை வரமுடியும்.அப்படி வந்தாலும் பத்திரிகைக் கடைகளிலோ அல்லது பெட்டிக்கடைகளிலோ இவற்றை வைத்து விற்பதற்குத் தயங்குவார்கள்.இவைகள் அரச காரியாலங்களைக் குறித்துக் கருத்து வெளிப்படுத்துவதால் அவர்களால் விற்க முடிவதில்லை.
குறைந்தபட்சமாவது இணையத்தின்வாயிலாகவாவது இச் செய்திகளை உங்களால் வெளிப்படுத்த முடியாதா?
அடைப்படை ரீதியாக ஆம் எனலாம்.எனினும்,அது மிகக் குழப்பகரமாகிக்கிடக்கிறது.நாங்கள் அந்த நோக்கில் முனைகிறோம்,ஒரு சில இணையத் தளங்களை உருவாக்கிக்கொள்ள.ஆனாலும்,இத்தகையதைக் கடைப்பிடிப்பதென்றால் அரசியல் சூழலில் மாற்றங்கண்டாகவேண்டும்.சாகஸ்வில்லியின் அரசு மக்களைத் தொடர்ந்து அடக்கியாள்வதென்பது தொடர்ந்து நடக்கக்கூடிய காரியமில்லையென்றே நாம் கருதுகிறோம்.
சாகஸ்வில்லியை எத்தகைய குணவியில்புக்குள் அடக்குகிறீர்கள்?,தீர்க்கதரிசனமிக்க அரச தலைவர்?அல்லது சூதாட்டக்காரன்?
பொறுப்புணர்வற்ற ஒரு சாகசக்காரன்.அவர் ஒரு வெற்று வேட்டு.மற்றவர் முன் தன்னைச்சுற்றிய அழுத்தத்தைச் செய்யத் தாவித்திரியும் மனிதர்.நான் நினைக்கிறேன் இவரது செயற்பாடுகள் குறித்து இவர் அடிப்படையில் சிந்தித்துக்கொள்வதில்லை என்று.நிச்சியமாக அவர் செய்யவேண்டிய கடமைகள்குறித்து அவருக்குத் தெரியும்.முற்றுமுழுதாக நியாயமான முடிவெடுக்கும் தளம்-சூழல் அவருக்கு நிறையவே உண்டு.ஆனால்,அவரிடமிருந்து வருவதோ அநீதியான முடிவுகளே, இது கவலைக்குரியது.இத்தோடு அமெரிக்க வெளிநாட்டமைச்சர் கொண்டிலீசா றைஸ் கூட இந்த மனிதரை எச்சரிகை செய்துள்ளார்-தென் ஒசாத்தியாமீதான இராணுவப்படையெடுப்புக்குறித்து-ஆனால், இவை எல்லாம் அவரைப் பாதிக்காது.
சாகஸ்வில்லி தனது தொலைக்காட்சி உரையை ஆங்கிலத்திலேயே செய்வதாகக் கதை உலாவுகிறது...
அது உண்மையில் ஒரு சிரிப்புக்கதை,அவரிடம் இதுகுறித்தொரு அடிப்படைக் கருத்திருக்கிறது.எனவே,அப்படிப் பேசுவதில்லை.அவர் இத்தகைய உரைகளை ஜோர்ச்சிய மொழிமூலமே ஆற்றுவதுண்டு.
அதுசரி.அவரும் நீண்டகாலமாக அமெரிக்காவில் வாழ்ந்தவர்.அத்தோடு அமெரிக்கக் குடியுரிமைபெற்று,அமெரிகக்கடவுச்சீட்டோடு அமெரிக்கக் குடிமகனாகவுள்ளார்.அவரது அமைச்சரவையிலுள்ள மொத்தம் ஏழு மந்திரிகளும் வெளிநாட்டுக்கடவுச் சீட்டுவைத்திருக்கிறார்கள்.
இது குறித்து எனக்குத் தெரியாது.ஆனால் எங்கள் மந்திரிகள் எல்லோரும் பெருந்தொகையான செல்வத்தை வெளி நாடுகளில் குவித்து வைத்திருக்கிறார்கள்.இதுகூட உண்மை, எங்கள் மந்திரிகள் எல்லோரும் இந்த ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்தம் நடைபெற்றபொழுதுகளில் வெளிநாடுகள் நோக்சிச் சென்றார்கள் அல்லது ஜோர்ச்சிய எல்லைப் புறங்களில் நேரடியாகத் தங்கி இருந்தார்கள்.இது நிச்சியமாகத் தற் செயல்தான்!
விளாடிமேர் பூட்டினையும்,இட்மிற்றி மெட்வேடையையும் எந்தக் குணவியல்புக்குள் அடக்குகிறீர்கள்,இருஷ்சியாவின் பிரதமராகவும்,ஜனாதிபதியாகவும்?
இருவருமே பொறுமையான(ஐஸ்ப் போன்ற குளிர்மையுடைய) சதுரங்க ஆட்டக்காரர்கள்.இவர்கள் ஜெல்சின் படையணியின் வாரீசுகள்.இருஷ்சியாவில் ஒல்காரிய பூர்ச்சுவாக்களின் பிரதிநிதிகள்.இவர்களின் சர்வதேச உறவுகள்,தொடர்புகள் யாவும் கோடிஸ்வரர்களின் கண்கொண்டு பார்ப்பதே.ஒல்காரியக் கோடிஸ்வரர்களின் நலன்களைப் பாதுகாப்பதே இவர்களது முதற்கடமை.இரண்டாவதுதான் சாதரண இருஷ்சிய மக்களது நலன்கள் பற்றிய கவனமெல்லாம்.இந்த வகைப்பார்வை இவர்களால் செய்யப்பட்ட ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்த முரண்பாட்டுக்கும் பொருந்தும்.
ஜேர்மனிய ஊடகமொன்றிற்கு ஜோர்ச்சிய அரசை விமர்சித்துப் பேட்டியளித்ததற்காக, நீங்கள் உங்களது தேசத்துக்கு மீளச் செல்லும்போது அந்த அரசின் புலனாய்வுத்துறையினால் உங்குளுக்குப் பிரச்சனைகள்-எதிர்வினைகள் வருவதைக் குறித்துக் கணிப்பிடவில்லையா?
இது முற்றுமுழுதாக நடக்கலாம்.இதன் காரணத்திலேயேதான் நான் அநாமதேயமாக இந்தப் பேட்டியைத் தர விரும்பினேன்.

 

 

Peter Wolter :http://www.jungewelt.de/2008/09-27/002.php

 

தமிழில்:
ப.வி.ஸ்ரீரங்கன்
05.10.2008

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்