Active Image

தேவையான பொருட்கள்

மட்டன் -11/2 கிலோ

பிரியாணி அரிசி-1 கிலோ

எலுமிச்சம் பழம் - 1,

வெங்காயம்1/2 கிலோ

Image

பிரியாணி மசலாப்பொடி-1 மேஜைக்கரண்டி 

மிளகாய்ப்பொடி - 2மேஜைக்கரண்டி 

மல்லி பொடி--1 தேக்கரண்டி

3 கலர் கேசரி பவுடர்- 1 சிட்டிகை 

தக்காளி-1/2 கிலோ

மிளகாய்-4

கொத்தமல்லி தழை- 1/2 கப் 

புதினா-1/2 கப் 

மஞ்சள்-1 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை- 3 முந்திரி-10

தயிர்-400ml

 Image

நெய்-100ml

ஆயில்-150ml

இஞ்சி-100கிராம்

பூண்டு -75கிராம்-

உப்பு -தேவையான அளவு 

பட்டை-கிராம்புஏலம்-

Image

பாதி வெங்காயத்தை நெய்யில் பொரித்து வைக்கவும

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூண்டு,இஞ்சியை அரைத்து வைக்கவும்.வெங்கயம்,தக்காளி,பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி

 வைக்கவும்.

Image

கறியை சுத்தம் செய்துபாதி தயிர்.இஞ்சி,பூண்டு,,பச்சை மிளகாய்,மிளகாய்தூள்,உப்பு,சிறிது 

கொ.மல்லிபுதினாபோட்டு 30 நிமிடம் கலக்கி வைக்கவும்.

Image

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் எண்னைய்  ஊற்றி பட்டை-கிராம்புஏலம்-இஞ்சிபூண்டு 

தாளித்து தயிர் போட்டு நன்கு கிளரவும்,

Image

அதில் வெங்காயம் போட்டு பாதி வதங்கியவுடன்

Image

 கறி போட்டு அந்த எண்ணையில் வேகவிடவும் பாதி வெந்தவுடன் அதில் தக்காளியை சேர்க்கவும்

Image

தண்ணீர் சேர்க்காமல் அப்படியே கிளரவும் முக்கியமாக அடிபிடிக்காமல் பார்க்கவும்

{தேவையிருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்}

Image

உகிழங்கை சேர்த்து கிளரவும் இப்போது கறி மசால் ரெடி

Image

மற்றொறு  பாத்திரத்தில் பட்டை-கிராம்புஏலம்-இலை,உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி

கொதிக்க விடவும்

Image

தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு மூடி வைக்கவும்

Image

அரிசி 3/4 பதம் வெந்தவுடன், வடிக்கட்டவும்.

Image

 வேகவைத்த அரிசியை  கறியில் போடவும்,{கறி கீழ் இருக்குமாறு பார்க்கவும், கிளர வேண்டாம்}

Image

ஓர் கரண்டியை கொண்டு சமமாக தேய்க்கவும் அதில் எலுமிச்சம் பழம்  பிழியவும்

Image

சட்டியின் மேல் காட்டன் துணீயை விரித்து மூடியை வைத்து மூடவும்

Image

கேஸ்அடுப்பில்சமைப்பவர்கள்தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி 

பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து மூடி  தம்மில் போடவும்

விறகு அடுப்பில் சமைப்பவர்கள் கீழ் உள்ள தீகங்குகளை சட்டியின் மூடியில் போடவும்

Image.

அப்படியே 45 நிமிடம் வைக்கவும்{அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்}

Image

வாணலியில் எண்ணெய்யை விட்டு,காய்ந்த திராசை,முந்திரியையும் பொன்னிறமாகவறுக்கவும்

Image

அதனை பிரியாணியில் போடவும், 3 கலரையும் தணித்தனியாக தண்ணீரில் கலக்கவும்

Image

படத்தில் பார்ப்பது போல் ஊற்றவும்

Image

அதன் மேல் செர்ரி பொரித்த வெங்காயம் போடவும்

Image