"................."

அடிப்படை நேர்மை?

அப்படி ஏதாவதொன்று இந்தப் பொருளுலகத்துக்கு உண்டா? உண்டென்று நான் நினைக்கவில்லை!

 

கேரளாவில் பிறந்தவள் ஐரோப்பியச் சந்தையில் தனது பக்தர்களுக்குப் பாதணிப் பூஜையைக் கற்றுக் கொடுக்கிறாள்.அவளது பாதணிக்குப் பால்வார்க்கும் விளம்பரத்தைக் கள்ளன் கருணாநிதியின்"கலைஞர்"தொலைக்காட்சி விளபரஞ் செய்கிறது.

இலண்டனுக்கு வந்த அந்தச் சாமிக்காரி தன் படத்தை 200 பவுண்களுக்கு விற்கிறாள் புலன்(ம்)பெயர்ந்த தமிழர்களுக்கு.இங்கே,எந்த"அடிப்படை நேர்மை" இருக்கிறது.இது கருணாநிதியின்"கலைஞர்"தொலைக்காட்சியிடம் இருக்கா?கள்ளர்களின் உலகத்தில் கதைகள் ஆயிரம்.அவை காரணங்களை அடுக்கியே நம்மைக் கடாசுவதை நாம் பார்க்கிறோம்.

 

"அடிப்படை நேர்மை" பொதுப் புத்திக்கு இது தூய்மையான தியானம்!புள்ளி ராஜாவுக்குத் தெரியும் கொள்ளி எங்கே வைப்பதென்று!வைக்கக் கூடிய இடங்களை அவர்கள் தெரிவு செய்ய விட்டுவிடும் நமது பொதுபுத்திக்குச் சாவுமணியை அடியுங்கோடா எந்தக் கள்ளிப்பால் பசங்களாவது!

 

பாருங்கோடா அதி மேதாவிகளே, வந்ததே உங்களுக்கு "அடிப்படை உரிமை","படைப்புரிமை"!

 

அட போடா புண்ணாக்கு.உன்ர தேசத்திலே நீ படுத்துறங்கும் அடிப்படை உரிமையே இல்லாதபோது,இந்த"உரிமைகள்"பற்றி எவன்டா கத்துறான்.எப்பவோ தனக்குச் சங்கு ஊதினமாதிரி"கம்மண்டு"இருப்பவன் "அடிப்படை நேர்மை"பேசுறான்டா!இதுதான் சகிக்க முடியேல்ல!

 

மிக அடவாடித்தனமான இந்தக் குவிப்புறுதிச் சமுதாயத்தில் அப்பாவி மக்களையே ஏதேதோ காரணஞ் சொல்லிக் கொன்று குவிக்கும் வர்த்தகச் சதிகாரர்கள் ஈராக்கிலும்,அவ்கானிஸ்தானிலுமாகப் பயங்கரவாதத்தைக் கண்டுபிடித்து, இன்றுவரை என்ன செய்கிறார்கள்?

 

இந்தியாவில் வர்த்தகச் சினிமாவின்வழி எத்தனையுள்ளங்களை இந்த"அடிப்படை நேர்மை"இன்றி அழித்துப் பெண்ணுடலைப் பண்டமாக்கி-பணமாக்கி நம்மைத் தலையைப்பிச்சுக் காமப் பேய்களாக்கியுள்ளார்கள்!

 

பெண்தொடையையும்,தொப்பிளையும் விட்டால் இன்றைய தமிழ்ச் சினிமாவில் என்ன "படைப்பு"இருக்கிறது?

 

அப்பாவி மக்களை முட்டாளாக்கி அவர்களைப் பட்டுணிபோட்டுக் காசு பண்ணுபவன் எந்த "அடிப்படை நேர்மை"கொண்டு இங்ஙனம் "சமூகத் தொண்டு"செய்கிறான்?

 

தமிழ்மணம் துவக்கிவைத்திருக்கும்"உரிமை"பெறுதல் என்பது இணையத்தில் கட்டுரையாளரின் பெயரோடு மீள்பதிவிடும் ஆக்கங்களை கருத்துக்களுக்காப் பரவலாக்கும் நோக்குக்கு லாடம் கட்டுவதாக இருக்கும்.என்னய்யா பெரிய உரிமை?உங்களது உடலில் உயிரை தேக்கி வைக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?நாளைக்கு நாம் உயிரோடு இருப்பதைத் தீர்மானிப்பவர்கள் எவர்?

 

உயிர்வாழ்வதற்கே போராட்டமாகப்போன இந்த உலகில் மகாப்பெரிய"படைப்புரிமை"-"அடிப்படை நேர்மை"எல்லாம் கொடிகட்டிப் பறக்குதாடா நம்ம முற்றத்திலே,பாழும் மானுட உயிரோ படுக்கையிலே குண்டடிக்குப் பறிக்கப்படுகிறது.கேட்டாச் சொல்லுறான் பாகிஸ்தான் போடருக்குள் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்குகிறார்கள்,நாங்கள் அவர்களுக்குப் போடும் குண்டில் பொதுமக்களும் சாகிறார்கள்!

 

யாரடா இவன்கள்?

இன்னுஞ் சொல்லுங்கோடா தம்பிமாரே"அடிப்படை நேர்மை"யை காஞ்சிக் காமக்கோடி பாணியில்.அல்லது நம்ம ஜேர்ச் புஷ் பாணியில்.


"........................."

அப்பாவி மக்களின் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு பேயாய் அலையும் மேற்குலகமும்,அமெரிக்காவும் உலகத்தில் சொல்லும் ஜனநாயகம் போன்றதே இந்த"அடிப்படை நேர்மை"யும்-இல்லை?

 

"நேர்மை" மண்ணாங்கட்டி!

எவன் இதற்கு இசைவாக நடக்கிறான்?

 

இந்த உலகத்தில் இத்தகைய சொல்லாடலைப் புரியாதபடி இதோ "விட்டுத் தொலைக்கிறேன்" பாணியில் "அடிப்படை நேர்மை"சின்னக் குட்டியைக் கொன்று போடுகிறது!

 

ஐயோ பாவம்!

சின்னக் குட்டியார்,கொஞ்சம் நம்ம தேசத்தைப் பாருங்கள்.எந்த "அடிப்படை நேர்மை"யோடு நம்மைக் கொன்று குவிக்க உலகம் சிங்கள அரசின் பின் நிற்கிறது?

இந்த இலட்சணத்தில்:"உரிமை","அடிப்படை நேர்மை",வர்த்தக உரிமம்" குறித்துக் குரல் விடுகினம்...

 

போங்க,போய் ஈரச்சாக்கில படுங்க.

இந்த உலகத்தில்"அடிப்படை நேர்மை"குறித்துப் புலம்பும் கள்ளர்களை நம்பத்தான் வேண்டுமா?அப்படியாயின் உலகத்தை வேட்டையாடும் வர்த்தகச் சூதாடிகளிடம் மனுப்போடுவதற்கும் தயாரா?

 

ரை கட்டிய கள்ளர்களும்,காவி கட்டிய கள்ளர்களும் இன்னும் அங்கிகள் தரித்த கொலைக்காரர்களும் இந்த"அடிப்படை நேர்மையை"க் குறித்து எழுதுவார்கள்.இதையும் சின்னக் குட்டிபோன்றார் கர்தருக்கு விசுவாசமாக நடக்கும் பாணியில் மனம்கொள்வார்கள்!

 

நல்லகாலம் பிறக்கிறது "அடிப்படை நேர்மை"கொண்டு,அவசரப்படாதீர்கள் எல்லோரும் பரதீசில் பக்குவமாக வாழப்போகுறோம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
18.09.2008
வூப்பெற்றால்