பொருளாதாரதிர்வைக் குறித்து புவியதிர்வோடு ஒப்பிடும் நேரம் நெருங்குகிறது. கருப்புத் திங்கள் தொடரும்.1920 இல் ஏற்பட்ட பங்குச் சந்தை அதிர்வுக்கு ஒப்பாக இன்றைய நிலைமை மேலும் வளரலாம்.


வோல் ஸ்றீற்றுக்கு(Wall Street) மங்கு காலம்(Die Investmentbank Lehman Brothers hatte unter der Last von 60 Milliarden Dollar Schulden) கருத்தரித்த இன்றைய நிலைமையில் இன்னொரு யுத்தம் வருவதற்கும், அது உலக மகாயுத்தமாக மாறுவதற்கும் பல சாத்தியம் உண்டு.ஊக வணிகத்தில் பொருளீட்டிய பங்குச் சந்தைச் சூதாட்ட மேதாவிகள் பொதுச் சொத்தால்

தமது நஷ்டத்தை ஈடு செய்த இதுவரையான காலமும் மக்களின்மீது நீண்ட நெடிய வரிகளை விதித்த அவர்களின் அரசுகள் இப்போது மண்டையைப் பிய்த்துவருகிறார்கள்!வோல் ஸ்றீற்றில்(Wall Street) கொட்டிய தேள் பிரங்பேர்ட்வரையும் வீங்காது(Der Deutsche Aktienindex DAX rutschte um fast drei Prozent ab und lag zeitweise unter 6000 Punkten. Das war der tiefste Stand seit Ende 2006.) .மாறாக, உலகம் பூராகவும் வீங்கி வலிக்கும்!இன்னொரு அதிர்வைச் சந்திக்க முனைவதற்குள் ஈரானை வேட்டையாடுவதைத் தவிர வேறொரு தெரிவு நிச்சியம் அமெரிக்காவுக்கு இல்லை.


இன்றைக்கு நிகழும் இந்தப் பங்குச் சந்தைச் சூதாட்ட அதிர்வைப் பல பதிவுகளில் "பொறியும்"எனக் கூறிக்கொண்டேன்.இப்போது,158 ஆண்டுகள் பழமைவாய்ந்த அமெரிக்க கட்டுமான நிதியீட்டு வங்கி லேமான் பிரதர்ஸ்(Lehman Brothers) எட்டாங்கட்டைக்கு எழுதி விடுகிறது.6000 கோடி அமெரிக்க டொலர்களை இழந்து நடுச் சந்தியில் நிர்க்கதியாய்...லேமான் வங்கியின் அதிர்வு ஜேர்மனியப் பொருளாதாரத்தில்மட்டுமல்ல உலகம் பூராகவும் பெரும் பாதிப்பைச் செய்யும்.ஜேர்மனிய வருடாந்த பட்ஜட்டைப் பாதிக்கும் அளவுக்கு இந்த நெருக்கடி விரியும்.ஜேர்மனியப் பெரு வங்கியான டொச்ச வங்கி முதல் கொமஸ் மற்றும் போஸ்ட் பாங் வரை இந்த நெருக்கடி எதிரலையைத் தோற்றுவிக்கிறது.இதன் பிரதிபலிப்பு மேலும் தொழிலாளர்கiளின் கிழமை வேலை நேரத்தை மிகைப்படுத்தி மேலும் கடும் உழைப்பைக் கோரும்.ஆட்குறைப்பை மேலும் விரிவாக்கும்.பெரும் தொழிற்கழக அதிகாரிகள்-மனேச்சர்கள் செய்யும் கேவலமான பொருளாதாரக் குழறுபடிகளுக்காகப் பலியாவது தொழிலாள வர்க்கமாகவே இருக்கிறது.உலகத்தின் முன் இன்றைய நிலையில் எந்தத் தெரிவும் இல்லை.யுத்தம் ஒன்றேதான் இவர்களை வாழ வைக்கும்.எரிபொருள் நெருக்கடி,உணவுப் பற்றாக் குறை எல்லாம் செயற்கையாகத் திட்டமிட்ட சதி.இதன்மூலம் சரியும் தமது பொருளாதாரச் சூதாட்டத்தைக் காக்க முனைந்து தோல்விகண்ட உடமை வர்க்கம் நிச்சியம் வேற்று இன மக்களைச் சூறையாடும்.ஊக வணிகத்தின் அதிர்வுகளுக்காக மருந்து குடிக்க வைக்கப்படும் பொதுமக்களின் வாழ்வு, சிதைந்து சின்னாபின்ப்பட்டுபோகினும் அவர்களை மேலும் வரிச் சுமைக்குள் வீழ்த்தப் பொருளாதாரப் புலிகளின் திட்டமிட்ட இலக்குகள் நாளை நம்மை வருத்தும்.

கடந்த காலத்தில்-ஓராண்டு எல்லைக்குள்,ஐரோப்பிய மத்திய வங்கியும், அமெரிக்க வங்கியும் பல் முறை வட்டியைக் குறைத்துத் தமது சகாக்களைக் காக்க முனைந்த வரலாறு வட்டிக்கு வட்டி மூலதன-நிதியீட்டைக் குறித்த அபாயத்தை நமக்கு நன்கு உணர்த்துபவை.உலக வங்கியிடம் கையேந்திய தேசங்கள் எங்ஙனம் திவாலாகிப் போயின என்பதற்கு இதை உதாரணமாகக் கொள்ளலாம்.


திருடர்களின் பொருளாதாரப் பொறிமுறைக்கு முண்டு கொடுக்கும் பொருளாதாரப் புலிகள் இன்னொரு யுத்தம் எங்கே வெடிக்குமெனத் தவங்கிடக்கிறார்கள்.ஓராண்டாக இத்தகைய திருடர்கள் இந்தப் பொருளாதாரச் சூதாட்டத்தை இட்டுக்கட்டி ஊதிப் பெருக்கினார்கள்.மக்களை முட்டாளாக்கும் தரவுகளைத் தந்துகொண்டேயிருந்தார்கள்.இன்று, அனைத்தும் சரிந்து தமது அறிவையே கேவலப்படுத்தும் பெரும் பொருளாதாரதிர்வால் தமது தலையைக் காக்கும் தந்திரத்துள் மண்டையைப் பிய்க்கும் இவர்கள் மக்களின் வரிப்பணத்தைத் தமது அடுத்த ஆயுதமாக்க முனையும் இந்தப் போக்கிரித்தனம் உலக உழைப்பாளர்களை இன்னும் நசுக்கும்.இதையும் தேசத்தின் பெயரால் மெக்கைன் பாணியில் மக்களிடம் எடுத்துவரும் அரசுகள்.உலகம் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருக்கும் இந்த ஊக வணிகச் சூதாட்டம் இன்னொரு மகா யுத்தத்தைச் செய்யும் அறிகுறிக்கு இருஷ்சிய-ஜோர்ச்சிய அரசியல் வியூகம் கட்டியம் கூறுகிறது.

ஈரானைத் தாக்கும் அமெரிக்காவின் ஒவ்வொரு ஏவுகணையும் இருஷ்சிய புவிகோள அரசியலையும் அதன் வலுவையும் பரிசீலிக்க முனையும்.இந்தப் பாத்திரம் இன்னொரு பொருளாதார மீட்சியை அமெரிக்க நிதிமுதலீட்டாளர்களுக்கு வழங்குமென அமெரிக்க அரசு கற்பனை செய்வதிலும் மேற்குலகம் இதை விரும்பி வரவேற்க்கக் காத்திருக்கிறது!

காலுடைந்துபோன லேமான் பிரதர்ஸ் அமெரிக்க அரசிடமிருந்து மூலதன ஊசியை எதிர்பார்த்துக் காத்திருக்கப் பூகம்பம் அமெரிக்க அரசியலில் உருவாகிறது.பொருளாதாரச் சிக்கலென்பது எப்பவும் யுத்தத்தால் சமன் செய்யப்படுவது வரலாறுகண்ட உண்மை.இவ் வன்முறைமிக்கப் பொருளாதாரப் பொறிமுறை பொறிந்து மக்களின் உயிரோடு விளையாடும் யுத்தத்தைத் திணிக்க முனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வாழ்கிறோம்.


அமெரிக்காவில் கிட்டத்தட்ட 85000.பேர்கள் நிச்சியம் வேலையிழக்கவேண்டி வரும்.இது உலகம் பூராகவும் பல மடங்காக உயரும்.இன்றைய பங்குச் சந்தைச் சூதாட்ட நிலைமைகள் தாறுமாறாக வீழ்ந்து நொருங்குகிறது.எனினும்,உலகப் பொருளாதாரப் புலிகள் இது பொருளாதாரத்தில் சிறு அதிர்வைத் தருலாமே தவிர பொருளாதார ஸ்த்திரத்தைக் குலைக்க முடியாதென வாதிடுகிறார்கள்.நமது கணிப்பின்படி இவர்களின் பொருளாதார ஸ்த்திரமென்பது இன்னொரு நாட்டைச் சூறையாடும்போது மட்டுமே சாத்தியமாகும்.அந்த நாடு பெரும்பாலும் ஈரான் என்பது நாளைய உண்மையாகலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
15.09.2008