ஒரு குற்றவாளி கூட அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப் படவில்லை:
குற்றவியல் நடவடிக்கை சட்டத்தின் 164வது பரிவின் படி குற்றவாளிகளில் எவருடைய வாக்குமூலமும் ஒன்று கூட பதியப்படாத நிலையைப் பார்க்கும் போது, காவல்துறை வழக்கமாக நடத்தும் விசாரணைகள் மூலமாக ஏதாவது முக்கிய தகவல்கள் பெறுவதில் தோல்வியடைந்துள்ளார்கள்(?) என்பதை காட்டுகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக விஞ்ஞான ரீதியில் நடத்தபடும் சோதனைகளான உண்மையை கண்டறிதல் அல்லது ஆழ்நிலை உறக்கத்திற்குக் கொண்டு சென்று கேள்வி கேட்டல் அல்லது மூளையின் அதிர்வுகளை கண்டறியும் சோதனை போன்றவற்றை நாடியிருக்க வேண்டும். ஆனால் காவல்துறை இந்த வழிகளில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
கற்பழிப்புகள் குறித்து ஒன்றும் குறிப்பிடப்படவில்லை:
நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகளுக்காகத் தனித்தனியாக மூன்று குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயினும், வன்முறை வெறியாட்டத்தின் போது உயிர்தப்பியவர்களில் டஜன்கள் எண்ணிக்கையிலானோர்கள், பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக சாட்சிகள் கூறிய போதிலும் ஒரு கற்பழிப்பு பற்றிக் கூட பதிவுகள் செய்யபடவில்லை. ஒரு பிரேத பரிசோதனை அறிக்கை சாவுக்குக் காரணம் பாலியல் பலாத்காரத்தால் இருக்க கூடும் என தெரிவித்திருந்தும் கூட, இந்த திசையில் ஒரு விசாரணைகளும் நடத்தப்படவில்லை. (இங்கே முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், 41 பிரேதங்களுக்குப் பிரேத பரிசோதனையே நடத்தப்படாத காரணத்தால், இவைகளில் எத்தனை பெண்களின் பிரேதம்? என்பதும், அவைகளில் பாலியல் பலாத்காரத்திற்கான வடுக்கள் ஏதும் இருந்தனவா? என்பதும் உறுதி செய்யபடவில்லை.)
சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைதொலைபேசி ஆராயப்படவில்லை:
படுகொலைகள் நடத்தப்பட்ட தினத்தன்று, உயிர் தப்பியவர்களில் ஒருவரான மிர்ஜா ஹுசைன் பீவி என்பவர் நரோடா பாட்டியாவிலுள்ள தனது வீட்டின் அருகிலிருந்து ஒரு கைதொலைபேசியைக் கண்டெடுத்துள்ளார். குற்றவாளிகளில் ஒருவன் தனது கவனக்குறைவால் தவறவிட்டு செல்லப்பட்ட இது காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் போது கூடுதல் காவல் ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு) AK சுரேலியா, இக் கைதொலைபேசி படுகொலைகளில் குற்றவாளியான அசோக் சிந்தி என்பவனுடையது என கண்டுபிடித்தார். மிகக் கடுமையாக விசாரணையை முடுக்கி விட்டு, பாபு பஜ்ரங்கி மற்றும் சிந்தி உள்பட பிறக் குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளைச் சுரேலியா சேகரித்தார். (குற்றவாளிகள் என கருதப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளைக் கேட்டு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சுரேலியா எழுதிய கடிதங்கள் தெஹல்காவிடம் உள்ளது. இன்னும் பஜ்ரங்கி எனபவனே அக்கொடிய சம்பவங்களின் "பின்னணியில் இருப்பதாக" தான் நம்புவதாக இவர் (சுரேலியா ) கைபட எழுதிய குறிப்புகளும் எங்களிடம் உள்ளது). ஆனால் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மேலே எடுத்து செல்வதற்கு முன்பே சுரேலியா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்ற பிறகு, சிந்தியின் கைதொலைபேசியின் அழைப்புப் பதிவுகளைப் பார்ப்பதையும் காவல்துறையினர் நிறுத்தி விட்டனர். குற்றவாளி ஒருவனுடைய கைதொலைபேசி குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக எந்தத் தகவலும், நரோடா பாட்டியா படுகொலைகள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றப் பத்திரிக்கைகளில் ஒன்றில் கூட குறிப்பிடப்படவில்லை.
குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளியின் கைதொலைபேசி பதிவுகள் இடம்பெறவில்லை:
விசாரணை அஹ்மதாபாத் காவல்துறையின் குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டவுடன், எல்லா குற்றவாளிகளின் கைத்தொலைபேசியின் பதிவுகளை சேகரிப்பதற்காக உதவி காவல்துறை ஆணையாளர் ராகுல் சர்மா நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். ஆனால், விசாரணை ஆரம்பித்த சில வாரங்களிலேயே, திடீரென இவர் இவ்விசாரணையை மேற்கொள்வதிலிருந்தும் நீக்கப்பட்டு, மற்றொரு உதவி காவல்துறை ஆணையாளரான DG வன்ஸாரா என்பரிடம் இவ்விசாரணை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தான் திரட்டிய தொலைபேசி அழைப்புகளின் எல்லா பதிவுகளையும் சர்மா நகல் எடுத்து வைத்துக் கொண்டதால், இவற்றை நானாவதி-ஷா ஆணையத்திடம் சமர்பித்தார். இந்தத் தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், நரோடா படுகொலைகள் நடந்தேறி கொண்டிருக்கும் வேளையிலே இக்கொடூர குற்றவாளிகள் தங்களுக்கிடையில் உணர்ச்சி வயப்பட்டவர்களாகப் பேசிக் கொண்டார்கள் என்பதை மிக வலுவான முறையில் உறுதிபடுத்தும் அத்தாட்சிகளாக அமைவதோடு மட்டுமில்லாமல், இன்னும் சம்பவ இடங்களில் அவர்கள் இருந்ததை உறுதி செய்யும் அத்தாட்சிகளாக அமைந்துள்ளது. இத்தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் எதுவும் ஆதாரங்களாக குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறவில்லை.
கைத்துப்பாக்கிகள் உபயோகிக்கப்பட்ட தகவல்களும் கூறப்படவில்லை:வன்முறை வெறிபிடித்த வெறியர்கள் கூரிய ஆயுதங்களை மட்டுமே கொண்டு சென்றதாக காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் (அவற்றில் ஒரேயொரு ஆயதம் மட்டுமே கைபற்றப்பட்டுள்ளது). வன்முறை வெறிபிடித்த வெறியர்கள் கைத்துப்பாக்கிகள் உபயோகித்தற்கான குற்றச்சாட்டுகளை காவல்துறை நிராகரித்து விட்டது. உயிர் தப்பியவர்களில் அதிகமானோர் எவர்கள் குண்டு காயங்களுக்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டார்களோ, அந்த மருத்துவ சிகிச்சைகளின் பதிவுகள் குற்றப்பத்திரிக்கையோடு இணைக்கப்படவில்லை. அதே நேரத்தில் குண்டு அடிபட்ட காயங்கள் பற்றிய குறிப்பு நான்கு மருத்துவச் சான்றிதழ்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இச் சான்றிதழ்கள் குற்றப் பத்திரிக்கையோடு இணைக்கபட்டுள்ளது. ஒரு பிரேத பரிசோதனை அறிக்கையும் மரணத்திற்கான காரணம் குண்டு காயங்களே என்று கூறுகிறது. இந்த 5 சம்பவங்களிலும், குண்டு துளைத்தால் உருவாகும் உள் மற்றும் வெளி காயங்களின் அளவுகள், இக் காயங்கள் சிறிய ரக கைத்துப்பாக்கியால் தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கியால் ஏற்பட்டவை அல்ல என்பதையும் தெளிவுபடுத்துகிறது. வன்முறையாளர்களைக் கலைப்பதற்காக காவலதுறையினர் 91 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டதாகச் சொன்னாலும், இவைகளின் போது எவரும் காயம் அடைந்ததாக ஒரு தகவலும் இல்லை. அப்படியானால் இந்த ஐந்து பேர்களுக்கும் குண்டு காயங்கள் எப்படி உருவானது? அவை குறித்து விசாரணை முழுமையும் அமைதியே நிலவுகிறது.
அடையாள அணிவகுப்புகள் நடத்தப்படவில்லை:
குற்றவாளிகளைப் பார்த்தால் நாங்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று, இரண்டு நரோடா படுகொலைகள் சம்பவத்தின் போது உயிர் தப்பிய டஜன்கள் எண்ணிக்கையிலான சாட்சிகள் கூறினர். ஆனால் அசோக் சிந்தியைத் தவிர வேறு குற்றவாளிகள் எவரையும் காண காவல்துறையினர் அடையாள அணிவகுப்புகள் நடத்தவில்லை. கும்பலாக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணைகளில், அடையாள அணிவகுப்பு நடத்துவது மிக முக்கியமானதாகும்.
கண்ணுக்குப் புலப்படாதக் கைகள்:மனித இன அழிப்பு கொடூரத்தின் போது காவல்துறையினரின் பங்களிப்பைப் பற்றியும் இன்னும் மத்திய உள்துறை இணையமைச்சராக அப்போது பணியாற்றிய கோர்தான் ஜடாபியரா உள்பட சங்பரிவாரில் உள்ள முதன்மையானவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தெஹல்காவுடன் உரையாடிய சமயத்தில் அவர்களை வெகுவாக புகழ்ந்துரைத்தார்கள்.
அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள பல்வேறு கைகள் சம்பந்தபட்டிருக்கும் போது, இந்த அரசாங்கத்தை தலைமையேற்று நடத்தியவனும் அக்கொடூரங்களில் பங்கு பெற்றானா?
இந்தக் கேள்வியை தெஹல்கா பஜ்ரங்கியிடம் கேட்டது. நரோடா படுகொலை சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங்கி இதற்கு பதில் அளித்த போது, படுகொலைகள் நடந்து முடிந்தப் பிறகு இரண்டு முறை முதலமைச்சர் நரேந்திர மோடி நரோடாவிற்கு வருகை புரிந்தான் - படுகொலைகள் நடந்து முடிந்த மாலையில் முதல் தடவையாக வந்த போது அவன் நரோடாவின் உள்ளுக்குள் வரமுடியவில்லை; மறுநாள் இரண்டாவது முறையாக வந்த போது நரோடா பாட்டியாவின் உள்ளே சென்றான். இவ்விரு வருகைகளின் போதும் மோடி, இதுவரை செய்தவைகள் அனைத்தும் நன்று என்றாலும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் எனக் கூறி, கொலையாளிகளை உற்சாகப்படுத்தியதாகவும் பஜ்ரங்கி கூறினான்.
படுகொலைகள் நடந்து முடிந்த மாலையில் ச்சாரா நகருக்கு மோடி வருகைபுரிந்து வன்முறை வெறிபிடித்த வெறியர்களுக்கு மாலை அணிவித்துப் பாராட்டியதாக சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் உறுதிபட அறிவித்தான். மோடி மட்டும் காவல்துறையினரைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் படி கூறாது இருந்திருந்தால், இப்படுகொலைகளை நடத்துவது சாத்தியமாகி இருக்காது என பஜ்ரங்கி கூறினான். ஆனால் வன்முறை வெறிபிடித்த வெறியர்களுக்கான மோடியின் ஆதரவு, கொலைகளை எளிதாக செய்ய வழிவகை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. நரோடா கொலைகளுக்குப் பின் 4 மாதங்களுக்கும் மேலாக தான் மறைந்திருப்பதற்கும் பிறகு கைது செய்யும் நாடகத்தை நடத்துவதற்கும் மோடி உதவியதாக பஜ்ரங்கி கூறினான். இதுவோடு மட்டும் மோடியின்உதவிகள் நின்றுவிட்டதா? என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து சாதகமான நீதிபதியை நியமித்து பஜ்ரங்கியைப் பிணையில் விடக் கோரும் மனுவை விசாரிக்க வைத்து பஜ்ரங்கி சிறையிலிருந்து வெளியில் வரவும் மோடி உதவினான்.
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...20.
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode