06222021செ
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

மோடியின் வருகை குறித்து ஒரு ஜனநாயக புலம்பல்

முஸ்லீம் மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவித்த, இன்று வரை அதற்காக ஒரு சிறு மண்ணிப்பு கூட கேட்காத காட்டுமிராண்டி மோடி சென்னைக்கு வர இருக்கிறான், சிறுபாண்மை மக்கள் மீதான வெறுப்பையும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அருவெறுப்பையும் கொண்டிருக்கும் இந்த பாசிச கிரிமினல், மலமள்ளினால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று பார்ப்பனீய திமிர் வழிய பேசியவன், அதனை கண்டித்து சில நாட்களுக்கு முன்பு நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.,

 

இந்த நிலையில் இந்த காட்டுமிராண்டி தமிழகம் வருவதற்கு புரட்சிகர, ஜனநாயக, தலித்திய, சிறுபாண்மையினர் அமைப்புகள் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.,

 

மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள் பிரச்சாரம், கண்டனம் என்று வீச்சாக இயங்கிக் கொன்டிருக்கின்றன. தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், த.மு.மு.க உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றினைந்து 'பாசிச எதிர்ப்பு முன்னனி' என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி போராட்டத்தை அறிவித்திருக்கின்றன.,

 

அப்பாவி மக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொண்று குவித்த கொலைகார கும்பலைச் சேர்ந்த மோடி தெஹல்கா என்ற ஆங்கிலப் பத்திரிக்கையால் சில நாட்களுக்கு முன்பு அம்பலப்படுத்தப்பட்டு அம்மணமாக நிறுத்தப்பட்டான்.

 

தெஹல்கா அவனை மட்டுமல்லாது அந்த இனப்படுகொலைக்கு உறுதுணையாய் இருந்த போலீசையும், நீதித்துறை கிரிமினல்களையும் சேர்த்தே நிர்வாணமாய் நிறுத்தியது, குற்றவாளிகளின் வாயிலிருந்தே ஒப்புதல் வாக்குமூலங்களை வீடியோ ஆதாரங்களாய் வெளியிட்டது. சட்டம், நீதி நிர்வாகம் எனும் அத்தனை துறைகளும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு பக்கபலமாய் நின்றதை உலமே பார்த்தது. இந்த நிலைமையில் மோடியின் உரிமை ப‌ற்றி சில‌ர் க‌வ‌லை ப‌ட‌த்தொட‌ங்கியிருக்கிறார்க‌ள்.,

 

இந்த நாட்டில் கோயில் கருவறைக்குள் சூத்திரர்களூம் பஞ்சமர்களும் சென்று வருவதற்கு இன்றும் உரிமையற்றிருக்கும் அவமானகரமான நிலையை பற்றி வாய் திற‌க்க‌ வ‌க்கில்லாத‌வ‌ர்க‌ள், இந்த காட்டுமிராண்டி மோடி த‌மிழ‌க‌ம் வ‌ராம‌ல‌ த‌டுக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன‌து உரிமை ப‌றிபோய்விடுமே என்று ப‌தைக்க‌ தொட‌ங்கியிருக்கிறார்க‌ள்

 

இந்த வகையில்தான் ரவி ஸ்ரீனிவாஸ் என்பவரும் “மோடியின் வருகை குறித்து” என்ற பதிவை போட்டிருக்கிறார்

 

//இந்திய குடிமகன் என்ற முறையிலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையிலும் சென்னைக்கு வருவதற்கும், பொது/தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.//

 

//அவரது செயல்கள், நிலைப்பாடுகளை ஏற்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. இது அடிப்படை உரிமைகள் சார்ந்த ஒன்று.//

 

என்றெல்லாம் மோடியின் உரிமைக‌ளை ப‌ற்றி ப‌ட்டிய‌லோடு தனது பதிவை தொடங்கும் ரவி, தடாரென்று ஒரு சம்மர் ஷாட் அடிக்கிறார்..

 

//எனவே அவரது வருகை என்னைப் பொறுத்தவரை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.//

 

'சரிதான் உரிமை இருக்கிறது' என்று நாம் அசருகின்ற நேரமாய பார்த்து ‘மோடி வருகை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல’ என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார், உரிமை இருக்கிறது என்பதற்காக எதிர்க்க கூடாது என்று சொல்வது என்ன வகை ஜனநாயகம் என்றுதான் தெரியவில்லை.,

 

பாஸ்போர்ட், விசா வைத்திருப்பதால் உலக பயங்கரவாதி புஷ்க்கு கூடத்தான் மற்ற நாடுகளுக்கு சென்று வர உரிமை இருக்கிறது. ஆனால் அவனுக்கு எங்கும் எதிர்ப்பு இல்லாமலில்லை., அவன் போகுமிடங்களில் மக்கள் திரண்டெழுந்து போராடுகிறார்கள், எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்., வெளியேறமாறு முழக்கமிடுகிறார்கள் ஆனால் அவனுக்கு செல்ல உரிமையிருக்கிறது என்பதற்காக அதனை எதிர்க்க கூடாது என்று எந்த ஜனநாயக காவலனும் விளக்கம் கொடுத்ததாக தெரியவில்லை.,

 

ஆனால் ர‌வி ஸ்ரீனிவாஸ் சொல்கிறார், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் உரிமைக‌ளை காட்டிலும் மோடியின் உரிமையே பெரிது அத‌னை காப்ப‌துதான் நாம் ஜ‌ன‌நாய‌க‌த்தை காக்கும் ஒரே வ‌ழி என்று ந‌ம‌க்கு போதிக்கிறார்.

 

ஒரு மாநிலத்தின் முதல்வனாகவே இருந்தாலும் அவன் கொலைகாரன், கிரிமினல் எனும் பட்சத்தில் மக்கள் போராடுவதற்கும் அவனுக்கு எதிராக தங்களது வலிமையான கண்டனங்களை தெரிவிப்பதற்கும் போதுமான உரிமை இருப்பதையே நாம் ஜனநாயகம் என்கிறோம் ஆனால் ரவி ஸ்ரீனிவாஸ் ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் மோடிக்கு உரிய வரவேற்பு அளிக்க வேண்டும், ‘வரக்கூடாது’ என்றெல்லாம் போராடக்கூடாது இதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் தருகிறார், அதாவது ஒரு கொலைகாரனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட அவன் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றுவதுதான் ஜனநாயகமாம்.,

 

க‌ருப்பு கொடிகாட்டுவ‌து கூட‌ ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌மாம், அது அந்த‌ நிக‌ழ்ச்சியை த‌டைப‌டுத்திவிடுமாம், அட‌டா, அந்த‌ நிக‌ழ்ச்சி இனிதே ந‌ட‌ந்தேற‌ வேண்டும் என்ப‌தில்தான் எவ்வ‌ள‌வு அக்க‌றை ர‌வி ஸ்ரீநிவாசுக்கு.,

 

இப்ப‌டி க‌ருப்பு கொடிகாட்டுவ‌து ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ம் என்ப‌த‌னால் ர‌வி ஸ்ரீநிவாஸ் மோடிக்கு க‌ருப்பு கொடியும் காட்ட‌மாட்டாராம், பூச்சென்டும் கொடுக்க‌மாட்டாராம், வேறு என்ன‌ செய்வார் என்று கேட்காதீர்க‌ள்? கேட்டால் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ம், வீட்டுல போய் மூக்கு பிடிக்க‌ தின்றுவிட்டு குப்புற‌ ப‌டுத்துக்கொள்வார், இதுதான் ஜ‌ன‌நாய‌த்தை காப்பாற்றும் வ‌ழி என்று ர‌வி ஸ்ரீநிவாஸ் க‌ண்டுபிடித்திருக்கிறார்.,

 

அதனால் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புப‌வ‌ர்க‌ள்(மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க‌ போய் க‌டைசியில ஜ‌னநாய‌க‌த்த‌ காப்ப‌த்துற‌ வேலைய‌ ந‌ம்ம‌ த‌லையில‌ க‌ட்டிட்டானுங்க, பலே கில்லாடிங்கதான்‌) வீட்டில் போய் பேசாமல் ப‌டுத்துக்கொள்ளுங்க‌ள், ஏற்க‌ன‌வே மோடியை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் தேச‌விரோதிக‌ள் என்று இல‌.க‌ணேச‌னால் ப‌ட்ட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்டிருக்கும் நிலையில், க‌ருப்பு கொடி காட்டி எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ விரோதிக‌ள் என்ற‌ ப‌ட்ட‌ம் கொடுக்கிறார் ர‌வி ஸ்ரீநிவாஸ்.

 

"வேண்டுமான‌ல் க‌ண் காணாத‌ இட‌த்தில் போய் உங்க ஆர்ப்பாட்டத்தை வ‌ச்சுக்கோங்க‌, இங்க‌ வ‌ந்து தொந்த‌ரவு ப‌ண்ணாதீங்க‌" என்று ந‌ம‌க்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் அடுத்த‌ வ‌ழியையும் சொல்லித்த‌ருகிறார் ர‌வி ஸ்ரீநிவாஸ், அதாவ‌து ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் ஆசை கொண்ட‌வ‌ர்க‌ள், மோடி சென்னைக்கு வ‌ந்தால், சென்னிம‌லையில் போய் க‌ருப்பு கொடி காட்ட‌ வேண்டும், திருச்சிக்கு வ‌ந்தால் திண்டிவ‌ன‌த்திற்கு போய் க‌ருப்பு கொடி காட்ட‌ வேண்டும் இதுதான் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் வழி.

 

அவர் எதிர்ப்பு உள்ள மாநிலத்துக்கு வந்து செல்வதுதான் ஜனநாயகம் தழைத்திருப்பதற்கான நல்ல அறிகுறியாம்.. 3000 பேர் வெட்டியும், சிதைத்தும், கற்பழிக்கப்பட்ட பொழுதும் அதற்கு காரணமான இந்த கிரிமினலை எதிர்க்காமல், ஜனநாயகத்தை எப்படி தழைக்க வைப்பது என்றுதான் நாம் யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமாம்.

 

மோடியின் உரிமை பற்றி பேசும் இந்த சிறீநிவாஸ், இறந்து போன மக்களின் மூவாயிரம் மக்களின் உரிமை பற்றியும், அவர்களுக்கான நியாயம் பற்றியும் தனது பதிவில் எங்குமே வாய் திறக்கவில்லை.

 

இவ‌ர் ஜ‌ன‌நாய‌க‌ம் ஜ‌ன‌நாய‌க‌ம் என்று தொண்டை கிழிய‌ க‌த்தும் பொழுது, ஜ‌னநாய‌த்தை ப‌ற்றி தோழ‌ர்.லெனின் கூறிய‌துதான் நினைவுக்கு வ‌ருகிற‌து.

 

"ஜ‌ன‌நாய‌க‌ம் என்றால், ஒரு மார்க்சிய‌வாதி அது எந்த‌ வ‌ர்க்க‌த்துக்கான‌து என்று கேட்பான்"

 

பார்ப்பன பயங்கராவாதிகள், ஜனநாயகம் பாசிசம் என்று எந்த முகமூடி அணிந்து வந்தாலும் அவர்களுக்கு தோல்வியையே பரிசாய் கொடுப்போம்!!

 

பார்ப்பன பயங்கரவாதி காட்டுமிராண்டி மோடியையும் அவ‌ன‌து ப‌ரிவார கும்ப‌லையும் அடித்து விர‌ட்டுவோம்!!

 

நன்றி ஸ்டாலின்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்