11292021தி
Last updateச, 09 அக் 2021 9am

சாதி ஒடுக்குமுறை இருப்பதாக சித்தரிக்கிறார்கள்" பார்ப்பனமணி சொல்கிறார்...

சாதிய‌ வ‌ர்ணாசிர‌ம‌ அடுக்கில் ம‌க்க‌ளை ஒருவர் மேல் ஒருவராக‌ க‌ட்ட‌மைத்து ஆக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுக்கக் கூடிய‌து 'பார்ப்ப‌னீயம்' என்னும் அருவெறுப்பான ஜனநாயக விரோத கொடுங்கோண்மை த‌த்துவ‌ம்.

 

இப்ப‌டிப்ப‌ட்ட ஜனநாயக விரோத‌ பார்ப்ப‌னீய‌ இந்துத்துவ‌ க‌ருத்துக்க‌ள் த‌மிழ்ம‌ணியின் த‌ள‌த்தில் விர‌விக் கிட‌ப்ப‌தைதான் சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பாக‌ எடுத்துக்காட்டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி வாய்கிழிய‌ பேசும் தமிழ்மணியின் இல‌ட்ச‌ண‌த்தை நாம் திரைகிழித்துக்காட்டினோம், அதை ப‌ற்றி இதுவரை எதுவும் பேசாமல‌ க‌முக்க‌மாக‌ இருந்து வரும் த‌மிழ்மணி த‌ற்பொழுது ஒரு ப‌திவை போட்டிருக்கிறார். அதில், தலித் மக்களும் வன்னியர் சாதியினரும் மோதிக் கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் விரும்புவதாகவும் அதற்கு எதிராக தான் "த‌லித் வ‌ன்னிய‌ர்" ஒற்றுமையை வ‌லியுறுத்துவதாகவும் ஒரு ச‌மாதான‌ தூதுவ‌ன் போல‌ புது 'கெட்டெப்'பை போட்டிருக்கிறார் தமிழ்மணி.,

 

"சிதம்பரம், ஸ்டாலின், மருத்துவர் அய்யா, தொல் திருமாவளவன், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரும் சிறந்த மக்கள் தலைவர்களே". என்ப‌தான‌ காமெடியும் வ‌க்கிர‌மும் க‌ல‌ந்த‌ ந‌ம் காதில் பூ சுற்றும் க‌ருத்துக்க‌ள‌ட‌ங்கிய‌ அப்ப‌திவு, எப்போதும் போல த‌மிழ்ம‌ணியின் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ முக‌த்தை தெளிவாக‌வே வெளிக்காட்டுகிற‌து.

 

//கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் ஒரே வளங்களுக்கு போராடுபவர்கள் என்பதாலும், வன்னியர்களது பொருளாதார நிலைமைக்கும் தாழ்த்தப்பட்டவர்களது பொருளாதார நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லையென்றாலும், வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று பரவாயில்லை என்ற நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.//

 

இப்ப‌டி எழுதியிருக்கிறார் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் வ‌ன்னிய‌ர்க‌ளும் ஒரே வ‌ள‌ங்க‌ளுக்காக‌ 'போராடுகிறார்க‌ளாம்', இருவருமே 'போராடுகிறார்கள்', அதுவும் எத‌ற்காக? ஊரில் இருக்கும் ஒரே வ‌ள‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்காக‌, த‌லித் சாதியை சேர்ந்த‌ இளைஞனான‌ முருகேச‌ன், க‌ண்ண‌கி என்ற‌ வ‌ன்னிய‌ர் சாதி பெண்ணை காத‌லித்த‌ குற்ற‌த்திற்காக‌ இருவ‌ரையும் எரித்து கொன்ற‌தோடு முருகேச‌னின் வீடு வாச‌லை அடித்து நொறுக்கி சூறையாடினார்க‌ளே, அதுதான் ஒரே வளத்தை பகிர்ந்து கொள்வதற்கான 'போராட்டமா'?, இதோ இப்போது சால‌ர‌ப்ப‌ட்டியில், த‌லித்துக‌ளுக்கு த‌னிக்குவ‌ளையில் தேநீர் த‌ருவ‌தை எதிர்த்து போராடிய‌த‌ற்காக ஆதிக்க‌ தேவர் சாதி வெறிய‌ர்க‌ளால் தாக்க‌ப்ப‌ட்டு உயிருக்கும் உடைமைக்கும் உத்திர‌வாத‌ம் இல்லாம‌ல் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார்க‌ளே "அது ஒரே வ‌ளத்துக்கான 'போராட்ட‌மா'".

 

த‌ங்க‌ளுக்கு த‌னிக்குவ‌ளை வைக்க‌க்கூடாது என்று த‌லித் ம‌க்க‌ள் போராடுவதும், அவ‌னுக்கு த‌னிக்குவ‌ளையில்தான் தேநீர் த‌ர‌வேண்டும் என்று ஆதிக்க‌ சாதியினரும் சண்டித்தனம் செய்வதும் "ஓரே வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான 'போராட்டம்'" என்கிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி, "ஈன‌ ஜாதி ப‌ற‌ப்ப‌ய‌லுக்கு ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் ப‌த‌வியா" என்று ஆறு பேரின் க‌ழுத்தை அறுத்து கூறு போட்ட‌ன‌ரே ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் அது "வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌ 'போராட்டம்' என்கிறார் இந்த தமிழ்மணி ஆதிக்க சாதியினரான வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவதும் 'போராட்ட‌மாம்', அதற்கு எதிராக‌ தாழ்த்த‌ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்துவ‌தும் 'போராட்ட‌மாம்' கூறுகிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி.


இந்த மோசடித்தனமான கருத்தை வைத்துக்கொண்டுதான் ஜனநாயக பஜனை பாடக் கிளம்பியிருக்கிறது தமிழ்மணி கும்பல். ஒருவேளை இப்படி உரிமைக்காக போராடுவதையும், உரிமையை மறுத்து ஒடுக்குவதையும் ஒன்றாக 'ஒரே' செயல் போன்று பார்ப்பதுதான் ஜனநாயகம் என்று சொல்லவருகிறாரா தமிழ்மணி.

 

//பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குபவர்களாக வன்னியர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

 

ஆனால், திருமாவளவனும் பாமகவும் கொண்ட ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி, அப்படிப்பட்ட போட்டிகளை குறைத்து அதன்மூலம் வரும் வன்முறையை குறைத்து ஒரு கூட்டணியை கிராம அளவில் ஏற்படுத்த முயன்று வருகிறது.//

 

அதே ச‌ம‌ய‌த்தில் வ‌ன்னிய‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஒடுக்கிறார்க‌ள் என்ப‌தும் உண்மையாம், வ‌ரலாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ "திருமா இராம‌தாசின்" கூட்ட‌னிக்கு பிறகு வ‌ன்முறையை குறைக்க‌ முய‌ல்கிறார்க‌ளாம்.

 

இந்த "வ‌ர‌லாற்று முக்கியத்துவமான‌ கூட்ட‌னி" வ‌ன்முறையை எப்ப‌டி குறைக்கிறார்க‌ள் என்ப‌தற்கு மிக‌ச் சிற‌ந்த‌ உதார‌ண‌ம்தான் "க‌ண்ணகி-முருகேச‌ன் காத‌ல் ச‌ம்ப‌வம்", க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம் புதுக்கூரைப்பேட்டை கிராம‌த்தை சேர்ந்த‌வ‌ர் முருகேச‌ன், பொறியிய‌ல் ப‌ட்ட‌ ப‌டிப்பு முடித்த‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட சாதியைச் சேர்ந்த‌ இளைஞ‌ர், அதே ஊரின் ஊராட்சி ம‌ன்ற‌ த‌லைவ‌ரின் ம‌க‌ள் க‌ண்ணகி வன்னிய சாதியை சேர்ந்தவர், இவ‌ர்க‌ள் இருவ‌ரும் சாதி மீறி காத‌லித்த‌ கார‌ண‌த்தால் க‌ண்ண‌கியின் த‌ந்தையான‌ துரைசாமியும், அவ‌ர‌து அண்ண‌ன் மருதுபாண்டியனும் ம‌ற்றும் சில‌ரும் முருகேச‌னையும் அவ‌ர‌து த‌ந்தையையும், சித்த‌ப்பாவையும் ஊருக்கு வெளியே இருக்கும் முந்திரிக்காட்டுக்கு க‌ட‌த்திச் சென்ற‌ன‌ர் அங்கே கைக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தையின் க‌ண் முன்னாலேயே முருகேசன் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ விஷ‌ம் கொடுத்து ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார், அத‌னை பார்த்து க‌த‌றிய‌ழுத‌ க‌ண்ணகிக்கும் சாதி பெருமையை குலைத்த‌ குற்றத்திற்காக க‌ட்டாய‌மாக‌ விஷ‌மூற்ற‌ முய‌ன்ற‌ன‌ர் சாதிவெறிய‌ர்க‌ள் அவ‌ர் ம‌றுக்க‌வே அவ‌ர் காதிலும் மூக்கிலும் விஷ‌த்தை‌ ஊற்றி சாக‌டித்துவிட்டு, இறுதியாக‌ இருவ‌ரையும் எரித்து சாம்ப‌லாக்கிவிட்ட‌ன‌ர்.

 

இது ந‌ட‌ந்த‌து, 8.7.2003ல், சாதி வெறிபிடித்த‌ ம‌னித‌த‌ன்மைய‌ற்ற‌ இந்த‌ ப‌டுகொலையை கேள்விப்ப‌ட்ட‌ திருமாவள‌வ‌ன் முருகேச‌ன் த‌ந்தை சாமிக்கண்ணுவை தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டு ஆறுத‌ல் தெரிவித்த‌தோடு, அவ‌ரை சென்னைக்கு அழைத்து வ‌ந்து ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பை ந‌ட‌த்தி இந்த‌ கொடும் நிக‌ழ்வை வெளி உல‌குக்கு தெரிய‌ச் செய்தார்.

 

இருப்பினும் கூட‌ இந்த‌ 'ஜ‌ன‌நாய‌க‌' நாட்டின் காவ‌ல்துறை வ‌ன்னிய‌ர் சாதி வெறிய‌ர்க‌ளுக்கு ஆதரவாகவே‌ செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌து, முருகேச‌னை த‌லித்துக‌ளே கொலை செய்துவிட்ட‌தாக‌ வ‌ழ‌க்கு ப‌திந்த‌ காவ‌ல்துறை, பிள்ளையை பறிகொடுத்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தைக்கு கொலைகார‌ ப‌ட்ட‌த்தையும் கொடுத்த‌து. இத‌னை அறிந்த‌ சென்னை உய‌ர்நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் இரத்தின‌ம்(மேல‌வ‌ள‌வு வ‌ழ‌க்கை ந‌ட‌த்திய‌வ‌ர்) இந்த‌ வ‌ழ‌க்கை சி.பி.ஐ விசாரிக்க‌ வேண்டும் என்று ம‌னுதாக்க‌ல் செய்தார்.

 

இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளினிடையேதான் "த‌மிழ் பாதுகாப்பு இய‌க்க‌ம்" என்ற‌ பெய‌ரில் திருமாவும் இராம‌தாசும் இணைந்த 'வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' 2005ல் அமைந்த‌து. இத‌ன் பிற‌கு திருமாவின் போக்கில் மாற்ற‌மேற்ப‌ட்ட‌து.

 

முருகேச‌னின் சித்தாப்பாவிற்கு தொலைபேசி செய்த‌ திருமா "கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்" என்று ச‌மாதான‌ம் பேசினார். மேலும் "அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்" என்று கூறி 'வரலாற்று சிறப்புமிக்க கூட்டனியின்' இரகசியத்தையும் விளங்கவைத்தார் திருமாவளவன்.

 

ஆனால் இராம‌தாசு எப்ப‌டி ந‌ட‌ந்து கொண்டார்? இதோ கூறுகிற‌து த‌லித் முர‌சு..

//பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் தலைவர் மருத்துவர் ராமதாசும் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். மறுபுறம் சாதி மறுத்து காதலித்த தலித் இளைஞரை கொலை செய்த வன்னியர்களுக்கு அடைக்கலமும் அரவணைப்பும் தருகின்றனர்.//

 

எவ்வ‌ள‌வு 'வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' இந்த‌ வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னிக்குத்தான் வ‌க்கால‌த்து வாங்குகிறார் த‌மிழ்மணி.

 

அதுவும் எதற்காக‌? சாதி ஒழிய‌ வேண்டும் என்கிற‌ அக்க‌றையினாலா? நிச்சயமாக இல்லை ஒரு பார்ப்பன வெறியன் சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பானா என்ன? நமது அம்பலப்படுத்தல்களுக்கு பிறகு சரிந்து போன தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி, முற்போக்காளர்களை மோதவிடும் தனது திட்டத்தில் தொடர்ந்து ஈடுபடத்தான் இப்படியொரு பதிவே தவிர வேறு எந்த சிறப்புக்காரணமும் இல்லை."அய்யங்கார் என்று சொல்லிக்கொள்வ‌த‌ற்கு என‌க்கு உரிமையில்லையா?" என்று இணைய‌த்தில் அங்க‌லாய்க்கிறார்க‌ளே ந‌ங்க‌ந‌ல்லூர் நாம‌க‌ட்டிக‌ள், அது போன்ற பார்ப்பன கொழுப்பை வடிய வடிய காய்ச்சுவதற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து கைகோர்த்து நிற்கிறார்களே பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அவர்களை உடைத்து மோத‌விட்டு த‌ன‌து ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்காகத்தான் இப்படி அதிர்வேட்டுக்களை கொளுத்திக் கொண்டிருக்கிறார் பார்ப்பனமணி. அத‌ற்கென‌தான் பார்ப்ப‌ன‌ வெறி பிடித்த பாசிஸ்ட் ஜெய‌லலிதாவை கூட‌ ம‌க்க‌ள் த‌லைவ‌ர் என்று சொல்லி ஒரு க‌த‌ம்ப‌க்கூட்ட‌னியை க‌ட்டிய‌மைக்க‌ முய‌ல்கிறார் த‌மிழ்ம‌ணி.

மேலும் எழுதுகிறார் த‌மிழ்ம‌ணி..

 

//ஏன் ஒருவரை ஒடுக்குபவனாகவும் மற்றவரை ஒடுக்கப்படுகின்றனவராகவும் சித்தரிக்கின்றனர்?//

 

மேலே வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவ‌து உண்மைதான் என்று எழுதிய‌ த‌மிழ்ம‌ணி நாம் அச‌ந்துவிடும் நேர‌மாக‌ பார்த்து "ஒடுக்குப‌வ‌னாக‌வும், ஒடுக்கப்ப‌டுகிற‌வ‌னாக‌வும் சித்த‌ரிக்கின்ற‌னர்" என்று எழுதுகிறார், அதாவது தலித் ம‌க்க‌ள் உண்மையில் ஒடுக்கப்படவில்லை கம்யூனிஸ்ட்கள்தான் அவர்கள் ஒடுக்கப்படுவதாக சித்த‌ரிக்கிறார்கள் என்று கூறுகிறார் பார்ப்பனமணி. எவ்வ‌ள‌வு வ‌க்கிர‌ம் பிடித்த‌ க‌ருத்து இது என்று நான் உங்க‌ளுக்கு சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. இந்த பார்ப்பனமணிக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் 'பார்ப்பன ஆதிக்கம்' இருப்பதாக சித்தரிக்கின்றனர் என்று கூட சொல்வார். இதனை அவருக்கு நாம் கேள்வியாக கூட எழுப்பலாம், தமிழ்மணி கூறட்டுமே இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கிறதா இல்லையா, அதனை எப்படி எதிர்கொள்வது என்று, அவரை புரிந்து கொள்வதற்கு நமக்கு அது ஏதுவாக இருக்கும்.

 

இப்ப‌டி நீண்டு கொண்டு போகும் க‌ட்டுரையில் இந்த‌ நாட்டில் அமைதி த‌வ‌ழுவ‌தாக‌வும் ஜ‌ன‌நாய‌க‌ம் பூத்துக் குலுங்குவ‌தாக‌வும், அத‌னை குலைக்க‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஆயுத‌ம் ஏந்த‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் தூண்டுவ‌தாக‌வும் "அமைதி குலைந்து விடுமென்று" பார்ப்ப‌ன‌ம‌ணி துடித்துப்போகிறார்.

 

உண்மைதான் இன்று சால‌ர‌ப்ப‌ட்டி கிராம‌த்தில் கூட‌ அமைதிதான் நில‌விக்கொண்டிருக்கிற‌து, தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்களை அடித்துவிர‌ட்டிவிட்டு ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் தான் ம‌ட்டும் த‌னியே அனுப‌விக்கும் அமைதி... இந்த‌ அமைதியைத்தான் விரும்புகிறார் போலும் த‌மிழ்ம‌ணி, எம‌து ம‌க்க‌ளை ஊருக்கு வெளியில் விர‌ட்டி சேரியில் அடைத்த‌ பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறிய‌ன் வேறு எதை விரும்புவான்.

 

இந்த பதிவின் பின்னிணைப்பாக, அமைதி, அஹிம்சை தவழும் இந்த ஜனநாயக நாட்டின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் மேலவளவு கொலை பற்றிய, தலித் முரசுவின் நீண்ட செய்தி கட்டுரையை கீழே இணைத்திருக்கிறேன்.

 

அதன் முன்னுரை மட்டும் கீழே இருக்கிறது, கட்டுரையை இணைப்பில் சென்று படிக்கவும்!!

 

ஜாதி இந்துக்கள் எறும்புக்குக்கூட தீங்கிழைக்காதவர்கள்; தாங்கள் போடும் கோலங்கள்கூட எறும்புகளுக்குத் தீனியாக வேண்டும் என்று நினைப்பவர்கள்; தாங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் காகத்திற்கு சோறு ஊட்டிவிட்டே சாப்பிடுவார்கள்'' "இந்து இந்தியா'வின் புகழ் இவ்வாறு வெளியுலகில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், "காந்தி தேச'த்தில் தீண்டத்தகாத மக்களின் உண்மை நிலை என்ன என்பதற்கு ஒரு சான்றுதான் மேலவளவு படுகொலை.

 

ஆம், இனவெறி இந்தியாவின் "அகிம்சை' முகம் இது!படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரையும் எந்தளவுக்கு சாதி இந்துக்கள் மூர்க்கத்தனமாக வெட்டிக் கொன்றனர் என்பதை, இச்சமூகத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் நீதிமன்றத் தீர்ப்புரைகளை (முருகேசன் வெட்டப்பட்டதை மட்டும்) அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.

நன்றி சம்பூகன்