Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உறவினர்களினதும், நண்பர்களினிதும் நல்ல உறவுகளை கூட துண்டிக்க கோரும் மதம், வீட்டு கதவுகளையும், தொலை பேசிகளிலும் மற்றைய மதங்களையும், மனிதர்களையும் தூற்றி, செம்மாறியாடாக தம்மிடம் வந்துவிடும்படி கொடுக்கும் தொல்லைக்கு முடிவுகட்ட, தொடர் துண்டுப்பிரசுரம் அவசியமாகிவிடுகின்றது. இதை நீயும் உன்னால் இயன்றளவு பரப்பி பங்களிப்பது உனது கடமையாகும்.

 

பைபிளின் வசனப்படி கறுப்பு பிறப்பை சாத்தான் பிறப்பாகவும், வெள்ளை பிறப்பை கடவுளின் பிறப்பாகவும் கூட வருணிக்க தவறவில்லை. கறுப்பு செம்மறிகளை இன்று உருவாக்க அந்த வசனத்தையே பைபிளில் இருந்து அகற்றியது மட்டுமின்றி, 18 ஆகமங்களை இன்றைய காலத்துக்கு ஏமாற்ற பொருந்தாது என்பதால் பைபிளில் இருந்தே நீக்கியுள்ளனர். ஆறு நாளில் உலகத்தை பெத்துப் போட்ட கடவுள், ஆதாம் எவாளில் உருவாக்கிய மனிதனில் இருந்து, கறுப்பு வெள்ளை நிற மனிதன் எப்படி உருவானான்? பைபிளின் தீர்க்க தரிசத்தை கடவுளிடம் பெற்று எழுதியவர்கள் அனைவரும், ஏன் வெள்ளையினத்தவராக இருந்தனர்? பைபிள் வெள்ளை நிறத்தை ஏன் பிரதிபலித்தது. பைபிள் யூத மதத்தின் 12 கோத்திரங்களை மட்டும் சார்ந்து எழுதப்பட்டுள்ள அதே நேரம், மற்றைய இனங்களைத் தூற்றுவது என்? பைபிள் ஒரு இன நிற வெறி சார்ந்தது அல்லவா!

 

இதை நாம் கேட்டு விவாதிக்கவும் அம்பலம் செய்யவும், 18.3.2001 கடே மெற்றோ அருகில் கூடியிருந்த செம்மறிகளினதும் மேய்ப்போரினதும் மேய்கும் இடத்திற்கு சென்றோம். பைபிள் வாதிகளின் கடவுள் மனிதனுடன் விவாதிக்க முடியாமல், விவாதிக்க தயாரற்ற குழப்பியடித்தனர். நாம் பிரசுரம் ஒன்றை பைபிளின் வசனங்களுடன் விநியோகித்தோம். செம்மறிகள் துண்டுப்பிரசுரத்தை வாங்குவதைக் கண்டு, மேய்போரின் எடுபிடிகள் வாதிக்க கூடாது என்றனர். மனிதனின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகவே அவற்றை பறித்தனர். அத்துடன் பிரான்சின் பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிசாரை, தமது பைபிளின் பொய்யான புரட்டின் பாதுகாப்புக்கு வரவழைத்தனர். மூன்று வாகனங்களின் வந்திறங்கிய 25 ஆயுதம் ஏந்திய பொலிசாரின் பாதுகாப்பில், பைபிள் வசனங்கள் பாதுகாப்பு பெற்றது.

 

இந்த நிகழ்ச்சி பைபிள் அதிகாரம் நிலவிய பழைய ஐரோப்பிய வரலாற்றை மீளவும் ஒருமுறை நினைவுக்கு கொண்டுவந்தது. 1789ம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி, பைபிள் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த வரலாறு, அதே பிரஞ்சு மண்ணில் முடிந்து விடவில்லை என்பதை நடைமுறை எமக்கு மீளக் காட்டியது. கடந்த வரலாற்றில் பைபிளின் வசனங்களுக்காகவும், அதை மறுத்ததுக்காவும், அதை ஒழுகி நடக்கத் தவறியதற்காகவும் பைபிள் வசனத்தினைச் சொல்லி பிழைக்கும் மேய்போர், கோடிக்கணக்கில் சிலுவையிலும், தூக்கு மரத்திலும், சிறையிலும், உயிருடன் எரித்தும் கொன்று ஒழித்தனர். மூலதனத்தை பாதுகாக்கும் ஆயுதம் எந்திய அதே பொலிசே, இன்றும் பைபிளின் மூடத்தனத்துக்கு பாதுகாப்பு கொடுக்க, பைபிள் வசனம் மக்களுக்கு எதிரான கடவுள் அவதாரமானது. இன்று வையிற் சேச் (வெள்ளை கோயில்) என்று தமிழர்களால் மட்டும் இப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு, பக்தியுடன் படியேறும் ஒவ்வொரு படிக்கட்டின் கீழும் ஆயிரம் அயிரம் மக்களின் இரத்தம் படிந்தே காணப்படுகின்றது. 1871 இல் மேய்போரையும் மூலதனத்தையும் எதிர்த்து எழுந்த உழைக்கும் மக்களின் பாரிஸ் கம்யூனை எழுச்சி, ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கி சில பத்தாயிரம் உழைக்கும் மக்களை கொன்று, அந்த வெற்றியை பைபிளின் தந்தைக்கான நினைவுச் சின்னமாக்கியதே இந்த வையிற் சேச்சாகும். இன்று கோப்பை கழுவியும், கூட்டித் துடைத்தும் வாமும் உன்போன்ற தொழிலார்களை, அன்று ஈவு இரக்கமின்றி நரவேட்டையாடி கொன்று அழித்து வெற்றி பெற பைபிள் கடவுளின் ஆசிச் செய்தியின் நினைவுகளை கொண்டே, உருவாக்கிய வையிற் சேச்சின் அத்திரவாரம் மக்களின் சதையுள்ள இரத்தமாகும். பாரிஸ் கம்யூனை இரத்த ஆற்றில் மூழ்கடித்த வலது சாரிகளையும் பைபிள் வாதிகளையும், 130 வருடங்களின் பின்பு முதன் முறையாக, பாரிஸ் நகரசபை தேர்தலில் சோசலிஸ் கட்சி அண்மையில் தோற்கடித்து அதிகாரத்தை கைப்பற்றியது, இந்த இடத்தில் நாம் அறிவு பூர்வமாக தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

 

பைபிள் கடவுள் கத்தார், மக்களின் அறிவுடன் விவாதம் செய்ய தயார்ரில்லை என்பதை பைபிள்வாதிகள் மீளவும் ஒருமுறை பறைசாற்றினர். "செக்" மதப்பிரிவுகள் மக்களை மந்தையாக்கி உலகளவில் கூட்டமான தற்கொலை மற்றும் படுகொலைக்கு நகர்த்திச் செல்லுகின்றதைப் போலவே, மேய்போர் பைபிளின் வசனங்களுடாக, பல்வேறு அடிப்படைகளில் மக்களை மந்தையாக்கி, சுயநலத்தையடைகின்றனர். பைபிளின் வசனத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும், அதை நடைமுறைப்படுத்தவும், அதை மறுத்தவர்களையும் கோடிக்கானக்கில் படுகொலைகளில் ஈடுபட்ட கடந்த வரலாற்றில், புகழ் பெற்ற சிலவற்றைப் பார்ப்போம்.

 

பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது என்று சொன்ன கியார்டனே புருனோவை, இது பைபிள் வசனத்துக்கு மாறனது என்று கூறி உயிரோடு கொழுத்தினர் பைபிள் வாதிகள். ஆனால் இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டே உலகம் முழுக்க விமானத்தில் பறந்து செல்லும் பைபிள் வாதிகள், தமது முந்தைய படுகொலைகளை இட்டு எதையும் சொல்வதில்லை. ஏன்? இன்று அதையே அறிவியலுக்கு எதிராக மூடத்தனத்துகாக பொலிசை கூப்பிட்டும், தாமே துண்டுபிரசுரத்தை பறித்தும், பைபின் பழைய வரலாற்றின் அதே அடக்குமுறையை மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தொடர்கின்றனர்.

 

வானுலகக் கோள்களின் சுழற்சியை கண்டுபிடித்து எழுதிய நூலை, கோப்பர்நிகஸ் மரணப்படுக்கையில் அதவாது 36 ஆண்டுகளுக்கு பின்புதான் வெளியிடுமளவுக்கு பைபிள் வாதிகளின் கொலைக்கு பயந்து வாழ நேர்ந்தது. ஏன்? இந்த கண்டுபிடிப்பு பைபிளின் தீர்க்க தரிசன முட்டாள் தனத்துக்கு எதிராக இருந்தது என்ற ஒரே காரணம், மரணதண்டனைக்குரிய குற்றமாகும். மனிதனுக்கு எதிரான பைபிளின் கடவுள் வாக்கியங்கள், இயற்கையை மாற்றிவிடுவதில்லை என்பதை செம்மறிகள் உணர்வதில்லை. இயற்கை, கடவுளின் தீர்க்க தரிசத்துக்கு எதிராக பைபிளின் வசனத்துக்கு முன்பிருந்தே, இருந்து வந்துள்ளது. பைபிளை எழுதிய மனிதனுக்கு இயற்கை மீதான அறிவில்லாத வரை, பைபிள் அறிவற்ற மூடத்தனத்தில் செம்மறிகளை உருவாக்கி அவர்களை ஏமாற்றுவதன் மூலம், சிலரின் பிழைப்புக்கே அது வழிகாட்டுகின்றது.

 

கலிலியோ கலிலீ என்ற வானியல் விஞ்ஞானி பூமி தன்னை தான் சுற்றி வருகின்றது என்ற சொன்ன போது, பைபிளின் தீர்க்க தரிசனத்துக்கு முரணானதாக காட்டி அவரை கொடூரமாக வதைத்தனர். கலிலியோ பைபிள் பற்றி குறிப்பிடும் போது "நான் பைபிளை அறிவியல் குறைகளை எடுத்துக்காட்டி பைபிளை இழிவுபடுத்தவில்லை ஏனெனில் பைபிள் ஒரு அறிவியல் நூல் அன்று" என்றார். பைபிள் வசனம் இயற்கையையும், இயற்கை அறிவியலையும் மாறுப்பது, எதற்காக அவசியமானது. அப்பாவி செம்மறிக்கு அல்ல, மேய்போருக்கும் அவருக்கு சம்பளம் கொடுக்கும் மூலதனத்தின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகும்.

 

செர்வெட்டல் என்ற விஞ்ஞானி இரத்தத்தையை ஆய்வு செய்தற்காக கழுகு மரத்தில் ஏற்றி படுகொலை செய்தனர் பைபிள் வாதிகள். பைபிள் வசனம் புனிதமானது என்றதால் பைபிள் வாதிகள் இதை செய்ததுடன், இதை பைபிளின் வரிகள் கொண்டே நியாப்படுத்தினர். இன்று ஜெககோவவும் மற்றைய மதப் பிரிவினரும் தமது உறுப்பினர்கள், இரத்தம் ஏற்றக் கூடாது என்ற அறிவியல் முட்டாள் தனத்தை இந்த படுகொலை வரலாற்றில் தான், நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரம் இந்த பைபிள் வசனத்துக்கு எதிராகவே, அவர்கள் இரத்த பரிசோதனைக்குட்பட்ட மருத்துவத்தை செய்ய பின்நிற்கவில்லை. பைபிளின் தீர்க்கதரிசனத்தின் முட்டாள்தனத்தின் வசனத்துக்காக, அன்றைய விஞ்ஞானியின் படுகொலையை நாம் எப்படி காண முயல்கின்றோம்? சிந்தியுங்கள்.

 

19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸ்ன் குளோராஃபார்ம் என்னும் மயக்க மருந்தை கண்டுபிடித்த போது பைபிள் வாதிகள் அதை எதிர்த்தனர். "கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்" என்ற பைபிளின் வசனம் படி, பிரசவத்தின் போது பெண்கள் மயக்க மருந்தை பாவிக்க கூடாது என்று எதிர்த்தனர். தாய் கஷ்டப்பட்டு குழந்தையைப் பெறவிட்டால், தாய்ப்பாசம் இருக்காது என்றனர் பைபிள்வாதிகள். மயக்க மருந்தின் அவசியத்தையும் தேவையையும் நடைமுறையில் மனிதன் இன்று அறிவான். ஆனால் அந்த தீர்க்கதரிசன முட்டாள் கடவுளுகோ, இது தனது அதிகாரத்தின் தகர்வாகிவிடுகின்றது. கஸ்டப்பட்டு குழந்தை பெறுவாய் என்ற வசனத்தை, பைபிள்வாதிகள் நடைமுறையில் இன்று பின்பற்றுகின்றனரா? எல்லா மிருகங்களும் கூட இப்படித் தான் பிரசவிக்கின்றது? ஏன்? இது அந்த முட்டாள் கடவுளுக்கு தெரியாமல் போனது, அதிசயமானதல்ல. இல்லாத கடவுளின் பெயரில், தீர்க்கதரிசனமாக காட்டி பைபிளை எழுதியதே முட்டடாள் மனிதன் அல்லாவா!

 

நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த போது, பைபிள்வாதிகள் அவருக்கு பைத்தியம் என்றனர். ஏனெனின் கடவுள் முக்கி தக்கி ஆறு நாளாக பெத்துப் போட்டு ஒய்வொடுக்க போன பூமியில் ஒரு புவியிர்ப்பு என்பது, அதுவும் பைபிள் சொல்லாத அந்த கண்டுபிடிப்பு பூமியின் பிறப்பையே கேவலமாக்குவதாகியது. இன்று பைபிள்வாதிகள் இந்த விதிக்குள் தான் பைபிளை அச்சு அடித்து வெளியிடுகின்றனர். புவியீர்ப்பின் இயற்கைவிதி அனைத்து உற்பத்தியிலும் அடிப்படையானது நிபந்தனையாகவும் உள்ளது. ஆனால் பைபிள் வாதிகள் இதை பைபிள் வசனத்துக்கு எதிரானதாகவும், இதை கண்டு பிடித்தவரை பைத்தியம் என்று சொன்னர்கள். உண்மையில் பைத்தியம் பைபிள் வாதிகளுக்கே என்பது, நீங்களே இன்று சுயமாக புரிந்த கொள்ளக் கூடியவைதான.

 

யேசுவின் போர்க்குணமிக்க சிந்தனைகளையும், போராட்டத்தையும் ஆள்வோர் தனது நலன் சார்ந்து திரித்து, அதையே தமது ஆளும் வர்க்க சித்தாந்தமாக்கியது முதல், இதற்கு தடையாக இருந்த அனைத்தையும் யேசுவின் பெயரால் பைபிளின் பெயரால் அளித்தனர். கி.பி 370 இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்து வைக்கப்பட்டிருந்த நூல்களையும், அருங்காட்சியத்தையும் பைபிள்வாதிகள் பைபிளின் பெயரால் நெருப்பிட்டு கொளுத்தினர். அதற்கு பொறுப்பாக இருந்த பெண் விஞ்ஞானியான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து உயிருடன் வக்கரித்து கொளுத்தினர். இப்படி அறிவியலை அழித்து படுகொலைகள் நடத்திய படியே பைபிளின் வசனங்கனைக் கொண்டே, உலக ஆதிக்கத்தையே நிறுவினர். அமெரிக்க நாடுகளுக்கு பைபிளின் செய்தியை எடுத்துச் சென்ற மூதாதையர்கள், அங்கு அதை எப்படி தொடங்கி இன்றைய செய்தி வரை எப்படி உருவாக்கினர்?

 

1492 இல் வெள்ளையினவாதிகள் உருவாக்கிய பைபிளின் துணை கொண்டு, பைபிள்வாதிகள் தமது காலனியாதிக்க நோக்கத்துக்காக, அமெரிக்காவை தற்செயலாக (பைபிள் உருவாக்கிய கடவுளுக்கு அமெரிக்கா இருந்தது தெரியாது) பைபிள் வாதியான கொலம்பஸ் கண்டுபிடித்தன். பைபிளுக்கு வெளியில் இருந்த ஐரோப்பிய அறிவியல் வரை படங்களில் அமெரிக்கா உள்ளிட்ட உலக வரைபடம் இருந்தும், பைபிளின் ஆசி பெற்ற படுகொலை காலனிய செய்திதான், அமெரிக்க வரலாறும் நினைவுகளுமாகியது. இதற்கு முன்பே, அங்கு மக்கள் இருந்த வரலாற்றையே இவர்கள் மறுத்தனர். அவர்களை காட்டு விலங்குகள் என்ற சித்தரித்தனர். பைபிள் இந்த மக்கள் கூட்டத்தைப் பற்றி என்றும் பேசியதில்லை. அவர்களை மனிதர்களாக கூட எற்றுக் கொள்ளவில்லை. ஒரு கையில் பைபிளும் மறு கையில் ஆயுதமாக அந்த மக்களை வேட்டையாடிய பைபிளின் விசுவாதிகள், அங்கு துப்பாக்கியின் அதிகாரத்தில் சபைகளை உருவாக்கியதுடன், 340 தூக்கு மேடைகளை நிறுவி 50000 பேரை கழுவேற்றி படு கொலையும் செய்தானர். துப்பாக்கியின் பாதுகாப்புடன் பைபிளை தூக்கியபடி 1492 இல் இறங்கிய ஹெத்தி மற்றும் டொமினிகள் தீவில் வாழ்ந்த 30 லட்சம் பேரை, 40 வருடங்களின் பின்பு அதாவது 1532 இல் வெறும் 300 மக்களைத் தான் உயிர் வாழ விட்டுவைத்தனர் பைபிள் சபையினர். மிகுதி அனைவரையும் வலுக்கட்டயமாக படுகொலை செய்து கத்தாரிடம் அனுப்பி வைத்தனர். இன்று அமெரிக்கா என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் அன்று வாழ்ந்த இரண்டு கோடிப் பேரை, இன்று வெறும் 16 லட்சமாக்கினர் பைபிள்வாதிகளும் பைபிள் சபையினரும். மெக்சிக்கோவில் பைபிள் வாதிகள் பைபிளுடன் புகுந்த போது வாழ்ந்த 2.5 கோடி மக்களில் இன்று எஞ்சியிருப்போர் வெறும் 20 லட்சம்தான். கொன்று பரலோகம் அனுப்பிவைத்தது போக 4000 பேராக மட்டும் எஞ்சியிருந்த "சேயன்" இனமக்களை காயடித்தனர் பைபிளின் சபையைச் சேர்ந்த பைபிள்வாதிகள். வேர்ஜினிய பழங்குடி மக்களின் குழந்தைகளை பைபிளின் பெயரில் கட்டயமாக பறித்துச் சென்றனர். பைபிளின் ஆசிபெற்று போர்வையைக் கொடுத்தே, அம்மக்களின் நிலங்களை ஏமாற்றி ஏழுதி வாங்கிக் கொண்டனர். இதை எல்லாம் செய்த பைபிள் சபையைச் சேர்ந்த அதன் பாதுகாவலனான கொலம்பஸ் சொன்னான் ".. புதிய ஜானுக்கு இறைவன் கூறிய புதிய உலகம், புதிய சொர்க்கம் ஆகியவற்றுக்கு என்னையே துதனாக்கியிருக்றார். அதை கண்டுபிடிக்கவும் அவரே எனக்கு வழி காட்டினர்." என்றான். அற்புதங்களையும், அதிசயங்களையும் ஈவு இரக்கமின்றி உருவாக்கி பைபிள் செய்தியை உலக முழுக்க காலனியாதிக்கத்துடன் விரிவாக்கி, சாட்சியங்களைக் கூட கொலம்பாஸ் மூலம் கடவுள் வெளியிட்டுள்ளார். இதுவே கொலம்பஸ் படு கொலை வரலாறும் செய்தியுமாகும். இன்று உலக முழுக்க பைபிளைக் கொண்டு சென்று பரப்பிய வரலாறுகள் எங்கும், துப்பாக்கியின் முனையில் உருவான காலனிய வரலாற்றின் அடக்குமுறையிலான அதிகாரத்தில் தான, பைபிள் உலகச் செய்தியானது.

 

உலகம் முழுக்க ஒரு கையிலும் பைபிளும், மறு கையில் ஆயுதத்துடன் புகுந்த பைபிள்வாதிகள் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை படுகொலை செய்தனர். அடக்கியாள படு கொலை மூலம் உருவாக்கிய இரத்ததையும் உயிருள்ள சதையையும் உரமாக்கி, அதில் வறுமையை விதைத்து உலகைச் சூறையாடி மூலம், வெள்ளையினத்தவனின் நாடுகளை செல்வங் கொழிக்கவைத்தனர். பைபிள் வசனங்களை உலகச் சட்டமாக கொண்டு, அதற்கு கட்டுப்பட மறுத்த மக்களை மிருகத்தனமாக வேட்டையாடினர். தொடர்ச்சியாக வன்முறை அல்லாத வகையிலும் பொருளாசை காட்டியும், வேலை கொடுத்து மக்களை ஏமாற்றியும், பைளின் செய்தியை சபைகள் மூலம் கொண்டு சென்று காலனியாதிக்கத்தின் எடுபிடிகளை உருவாக்கினர். இன்றும் பைபிள் வாதிகள் விசுவாசத்துடன் அதன் பின் தான் தமது உலகமயமாதலை விரிவாக்கின்றனர். மக்களை மந்தையாக்குவதன் மூலம், மூலதனத்தின் விரிவாக்கம் மக்களை தாழ்த்தி அடிமையாக்கின்றது. தாழ்வுக்காக, எந்தளவுக்கு மக்கள் தங்களைத் தாங்கள் அடிமையாக்கி தாழ்த்துகின்றார்களோ, இதுவே கடவுளின் செய்தியாக ஆசியாக்கி விட, மேய்போர் இதை உலகமயமாதலின் செய்தியாக்கின்றனர்? மக்கள் தங்களைத் தாங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்த்துகின்றனரோ, அந்தளவுக்கு சொத்துகள் சிலரின் கையில் குவிந்து செல்ல அதுவே அவர்களின் பைபிளின் ஆசியாகின்றது. இதன் விளைவாக மக்கள், பைபிளின் ஆசி பெற்ற பரதேசியாகின்றனர். இதுதான் பைபிள் வாதிகளின் அடிப்படையானதும் கிறிஸ்துவின் நவீன ஆசிர்வாதமாகும்.

 

1384 இல் 39 புத்தகத்தில் இருந்த பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியை லத்தினில் இருந்து, ஆங்கிலத்தக்கு மொழி பெயர்த்த போது வைக்கிப்பின் ஹஸ்ஸக்கு ஏன் கொல்லப்பட்டார்? பைபிள் வாதிகள் இயேசுவை திரித்து நடத்திய அடிமைத்தனத்தை அடக்கு முறையையும் அம்பலம் செய்த போதும், அதை மொழி பெயர்ப்பின் ஒரு பகுதியூடாக கொண்டுவந்து ஆயுதம் எந்திய போராட்டத்தை நடத்தியதாலும், நயவஞ்சமாக பைபிள் சபையினரால் 1415 இல் கழுமரத்தில் ஏற்றி எரிக்கப்பட்டார். பழைய ஏற்பாட்டின் திருத்திய மொழி பெயர்ப்பு என்பது படு கேலமான கடவுளின் மூடத்தனங்களை தகர்ப்பதில் தொடங்கியது. கடவுளின் பைபிள் வாசங்கள் காட்டுமிராண்டித்தனமாக இருந்ததால், பைபிள் சபையினரின் அதிகார வர்க்கத்தை தகர்ப்பதற்கு, பைபிளை திருத்திய மொழிபெயர்ப்புக்கூடாக நடைமுறையில் வழிகாட்டி பைபிள் வாதிகளுக்கு எதிராக ஆயுதம் எந்தினர்.

 

வைக்கிப்பின் பழைய ஏற்பாட்டின் பல விடயங்கள் மாற்றவேண்டிய அளவுக்கு அதுவே மூடத்ததனத்திலும் அடக்கு முறையை இயேசுவின் பெயரால் அரங்கேற்றிய போது, அதை மறுக்க சீர்திருத்த பழைய ஏற்பாட்டை திருத்தி புதிய ஏற்பாட்டை 1526 இல் எழுதிய டின்டேல் பைபிள் வாதிகளாலும் சபையாலும் படுகொலை செய்யப்பட்டார். எல்லா நிலையிலும் யேசுவின் போராட்ட உள்ளடக்கம் மீட்கப்படும் முயற்சியும், யேசு திரிக்கப்பட்டு அதிகார வர்க்கத்தின் நயவஞ்சகத்தின் ஆயுதமாக இருந்த பைபிள் திருத்த வேண்டிய வரலாற்று கட்டத்தில், பைபிள் யேசுவின் சிந்தனை மேல் தன்னை சீர்திருத்தி ஒரு பகுதியை திருத்திக் கொண்டது. தொடர்ந்து யேசுவின் கடவுள் மறுப்பு நாத்திக உள்ளடக்கம் என்றும் உண்மையாக சொல்லப்படவேயில்லை.

 

எமது பிரசுரம் ஒன்றில் யேசுவின் பிறப்பு, தாய்வழிச் சமூகத்தின் எச்சத்தில் தந்தை யாரென்று தெரியாது என்பது முதல், பைபிள் வசனத்தின் படி பெண்கள் கற்பழிப்பை யேசு செய்தியாக்கினரா என்ற கேட்டு, அவற்றை குறிப்பிட்டு இருந்தோம். அவை எண்ணாகமம் 31: 32-40, 2 சாமுவேல் 12:11, மத்தேயு 1:22,23, இசை 14, லூக்கா1-1:.34-38, ஆதியரகமம் 17: 15-22 லூக்கா 1:5-10, ரூத்து 4:13-22 என்பவற்றை ஆதாரமாக காட்டியிருந்தோம்.

 

இன்று பிரச்சாரத்தில் இறங்கும் யெகேவா முதல் மூலைக்கு மூலை மேய்த்துக் கொண்டிருக்கும் நாய்கள் ஈறாக, பலியிடுவதை காட்டுமிராண்டி மதமான இந்து மதத்துக்கு எதிராக நிறுத்தியே தம்மை நவீன அறிவுள்ள மதமாக காட்டுகின்றனர். ஆனால் பலியீட பைபிள் எண்ணாகமம் 28:1-5, யாத்திராகம் 34:28, ஓசியா 8:11 இல் மல்கியா 1:1,783:8-10 எல்லாம் இவை கோரப்படுகின்றது. இதை பின் மறுப்பதும் நிகழ்கின்றது. தனக்கு கோயில் கட்டச் சொல்லி 2 சாமுவேல் 7:5-7 இல் கோரப்படுகின்றது, ஏசாயா 66:1 இல் இது மறுக்கப்படுகின்றது. இது போன்ற கடவுளால் எழுதப்பட்டதாக கூறப்படும் ஒரே பைபிளில் முரண்பட்ட ஏமாற்றுகளை தொடர்ந்து அடுத்த பிரசுரத்தில் விரிவாக பார்ப்போம். யேசுவுக்கு ஒரு தந்தை இருந்தைதைப் பற்றியும், யேசு பிறந்த தினம் யாருக்கும் தெரியாது இருந்த நிலையில், கி.பி -313 இல் ரோமப் பேரரசனான கான்டன்டைன் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பின்பு, ரோமானியருடைய பேகன் மதத்தின் சூரிய கடவுளின் திருநாளையே (டிசம்பர்-25) யேசுவின் பிறந்த நாளாக கொண்டாடும்படி கட்டளையிட்டான். இவைகளை எல்லாம் அடுத்த பிரசுரத்தில் பார்ப்போம்.